Advertisement

சினிமா கதையா, சீரியஸ் பிரச்னையா? கள்ள ஓட்டு தடுக்குமா 49பி?

சர்கார் படத்தில் கூறப்படும், சட்டப்பிரிவு, '49பி' என்பது, சினிமா கதையா அல்லது சீரியஸ் பிரச்னையா என்ற, விவாதம் எழுந்துள்ளது. 'இந்த சட்டப்பிரிவு, ஓட்டுரிமையை நிலைநாட்டுவது உண்மை. ஆனால், கள்ள ஓட்டை தடுக்காது; தவிர்க்காது' என்கின்றனர், தேர்தல் அதிகாரிகள். அதேநேரத்தில், இந்த பிரிவை, ஏராளமானோர் பயன்படுத்த துவங்கினால், ஓட்டு எண்ணிக்கையில் சச்சரவு உருவாகி, திடீர் குழப்பம் ஏற்படும் என்பதால், கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.


நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள, சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின், கதாநாயகனான விஜய், தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து, இந்தியா வருகிறார்.

தடுக்காது:அவர் ஓட்டை, ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விடுகிறார். நீதிமன்றம் சென்று, தேர்தலை நிறுத்துகிறார், விஜய். பின், தேர்தலில் போட்டியிட்டு, தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக, ஆட்சி அமைக்கிறார்.படத்தில், நம் ஓட்டை, யாரேனும் கள்ள ஓட்டாக போட்டிருந்தாலும், '49பி' பிரிவின் கீழ், நாம் ஓட்டளிக்க முடியும் என்பதை, எடுத்துக் கூறியுள்ளனர்.படத்தில் கூறியுள்ளது போல, நம் ஓட்டுரிமையை நிலைநாட்ட, '49பி' பிரிவு இருப்பது உண்மை தான். ஆனால், அந்தப் பிரிவு, கள்ள ஓட்டை தடுக்காது. அந்த பிரிவை பயன்படுத்தி போடும் ஓட்டால், எந்த பயனும் கிடையாது என்பதே உண்மை. வாக்காளர், ஓட்டளிக்க செல்லும் போது, அவரது ஓட்டை, ஏற்கனவே பதிவு செய்திருப்பது தெரிய வந்தால், அவர் ஓட்டுச்சாவடி அலுவலரிடம், சட்டப்பிரிவு, '49பி'யின் கீழ் ஓட்டளிக்க விரும்புவதாக கூறலாம்.

'49 என்':ஓட்டுச்சாவடி அலுவலர், அவரது அடையாளம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து விட்டு, அவருக்கு ஓட்டுச்சீட்டு கொடுத்து, ஓட்டுப் போட அனுமதிக்கலாம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.
இதுபோன்ற ஓட்டுக்களை, தனி கணக்கு வைத்து, தனி உறையில், 'சீல்' வைத்து, ஒப்படைக்க வேண்டும். இந்த வகை ஓட்டுகள், 'பதிவான ஓட்டு' என, அழைக்கப்படுகின்றன.


அதேபோல, மாற்றுத் திறனாளி வாக்காளர், தன் சார்பாக ஓட்டளிக்க, ஒருவரை நியமிக்கலாம். அவரிடம் கையெழுத்து பெற்று, ஓட்டு அளிக்க அனுமதிக்கலாம். ஓட்டு போடும் நபரின் நடுவிரலில், மை வைக்கப்படும். இதை, சட்டப்பிரிவு, '49 என்' அனுமதிக்கிறது.

குழப்பம்:சட்டப்பிரிவு, '49பி'யின் கீழ் ஒருவர், தன் மனதிருப்திக்காக ஓட்டளிக்கலாம். அவரது ஓட்டு, கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. அவருக்கு பதிலாக, மற்றொருவர் போட்ட ஓட்டு, கள்ள ஓட்டாகவும் கருதப்படாது; ஓட்டு எண்ணிக்கையில் சேர்ந்து விடும். அதேநேரத்தில்,
ஏராளமானோர், சட்டப்பிரிவு, '49பி'ன் கீழ், ஓட்டு பதிவு செய்தால், கள்ள ஓட்டுப் பதிவுக்கு எதிராக, திடீர் சிக்கல் எழலாம். இது, ஓட்டு எண்ணிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் கட்சிகளிடம், கலக்கம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: சட்டப்பிரிவு, '49பி' என்பது, 1961ல் கொண்டு வரப்பட்டது. தன் பெயரில், ஏற்கனவே யாரேனும் ஓட்டு பதிவு செய்திருந்தால், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் கூறி, தன் ஓட்டை பதிவு செய்யலாம். ஆனால், இந்த ஓட்டு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இது, கள்ள ஓட்டை ஒழிக்கவும் உதவாது.

போலி வாக்காளர்கள்:தற்போது, அனைவருக்கும், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்தால், கள்ள ஓட்டை முற்றிலும் ஒழித்துவிட முடியும். இதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கியது. ஆனால், நீதிமன்ற தடை காரணமாக, அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்து விட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம்பெற இயலாது. கள்ள ஓட்டு, அறவே இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (54)

 • Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ

  கூடிய சீக்கிரத்தில் கள்ளஉறவை போல கள்ள ஓட்டும் குற்றம் இல்லை என்று 'நீதி அரசர்கள்' சொல்லக்கேட்கலாம்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கமிஷனர், சிட்டி போலீஸ், மகாத்மா என்றெல்லாம் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் அரசியலும் ஓபனாக காட்டப்படும். படத்தை படமாக பார்ப்பவர்கள் கேரள ரசிகர்கள். இப்போது வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் காயங்குளம் கொச்சுன்னி என்ற படத்தை பாருங்கள். எத்தனை அப்பட்டமான சரித்திர காட்சிகள் என்று தெரியும். அதிர்ந்து விடுவீர்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரு சாதாரண மசாலா படத்துக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி கொந்தளிப்பு ஏன் என்று தெரியவில்லை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக, ஆட்சி அமைக்கிறார்.// இது தவறு. படத்தில் விஜய் ஆட்சி அமைக்கவில்லை. மீண்டும் படத்தை கவனமாக பார்க்கவும்.

 • Gopi - Chennai,இந்தியா

  //ற்போது, அனைவருக்கும், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்தால், கள்ள ஓட்டை முற்றிலும் ஒழித்துவிட முடியும். இதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கியது. ஆனால், நீதிமன்ற தடை காரணமாக, அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்து விட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம்பெற இயலாது. கள்ள ஓட்டு, அறவே இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.// இன்டர்நெட் காரன் குழியிலிருந்து ஓடினேன், மாநகராட்சிக்காரன் வெட்டிய குழிலிருந்து ஓடினேன், கடைசியாக நீதிமன்றத்துக்கும் ஓடினேன். பொறுப்பில்லாமல் நீதி உரைத்து ஆக்கபூர்வமான யாரையும் வாழவிடவில்லை . இது நம் இன்றைய தேசத்தின் நிலை . நீதி அரசர்களும் நீதிமன்றமும் பெரும்பான்மையான சமூக நன்மையை நோக்கி நடுநிலை தீர்ப்புகளை வழங்கவேண்டும்

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  கதையை சுட்டவன் எல்லாம், படத்தில் குடிமகனின் ஓட்டை சுடக்கூடாது என்று தத்துவம் போதிக்கின்றன. 50 ரூபாய் பட டிக்கெட்டை 500-க்கும் 1000-க்கும் விற்கும் கொள்ளையை தடுக்க முடியாதவன் தான், இந்த நாட்டை கொள்ளை அடிப்பவர்களிடம் இருந்து ரட்சிப்பேன் என்று வீர வசனம் பேசுகிறான்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒருவன் வோட்டு போடவில்லையென்றால் தேர்தலை நிறுத்துவார்களாம்??? இப்படி காட்சிகளை சினிமா என்னும் மாய லோகத்தில் காட்டி காட்டி சினிமா ஹீரோ என்றால் அப்படி இப்படி என்ற ஒரு பெரிய மாயையை உருவாக்கி???? அதனால் மக்களுக்கு என்ன லாபம்???அந்த நடிகர்கள் சம்பளம் 1 கோடியிலிருந்து 20 கோடி வரை ஏறும் அது அவர்களுக்கு தான் லாபம். 50 வருடங்களாக அம்மா இதை இலவசமாக கொடுத்தாராம், அதை இலவசமாக கொடுத்தாராம். ஒங்க நாக்கிலே தீயை வைக்க. 50 வருடமாக ஏழைகள் ஜனத்தொகை தான் பெருகியது, ஏழைகள் ஏழைகளாகத்தான் இருக்கின்றார்கள். மடிக்கணனி வாங்கியவர்கள் பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஈ.எஸ்.ஐ.ஆர்.எஸ். ஆக ஆகி விட்டார்களாம். வெளியில் கஷ்டப்பட்டு உழைத்து வீட்டுக்கு வரும் ஏழையின் உள்ள வீட்டில் மிக்சியும், கிரைண்டரும் இருப்பதால் சமையல் எளிதாக நடக்கிறதாம். இலவசமாக மீன் கொடுக்காதே மீன் பிடிக்க கற்றுக்கொடு அவன் வாழ்க்கை சிறக்கும் என்பது ஆங்கில பழமொழி. அதே போல எவருக்கும் இலவசம் கொடுக்காதே, அவர்கள் வாழ வகை செய்து கொடு. ஆமா நான் தெரியாம தான் கேட்கின்றேன் இது என்ன அவர் சேர்த்து வைத்த 5 .2 லட்சம் கோடியிலிருந்து வந்ததா இலவசம் என்று இல்லவே இல்லை. மக்களின் வரிப்பணம் + டாஸ்மாக் விற்பனை பணம். ஏழை மனிதன் சம்பாதிக்கிறான் அவன் டாஸ்மாக் சரக்கில் அதை செலவளிக்கின்றான். என்ன ஒரு கேவலமான அரசு இது. டாஸ்மாக்கை விரிவு படுத்திக்கொண்டே இருப்பார்களாம், ஆனால் விளம்பரம் மட்டும் குடி குடியை கெடுக்கும் என்று சொல்வது. ஒரு காலத்தில் பிஹார் போன்ற மாநிலத்தில் தான் மோசமான அரசு என்று சொல்லுவோம். 1967 லிலிருந்து இந்த அரசு கேவலத்திலும் கேவலமாக மக்கள் சேவையை மறந்தது தன் பை நிறைய மட்டும் வழி பார்த்துக்கொண்டு இருக்கும் அரசு டாஸ்மாக் நாட்டில் நடக்கின்றது.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  49 ஓ மூலமும் பெரிய பயன் ஏதும் இதுவரை இல்லை 49 பி மூலம் ஏதாவது பயன் கிடைக்குமா என பொறுத்திருந்தே பார்க்கலாம் சராசரியாக 60 % மக்கள் மட்டுமே வாக்களிக்கின்றனர் மீதமுள்ள 40 % மக்கள் வாக்களிக்க விரும்பாதவரை பயன் ஏதும் இல்லை

 • Mohan Vijayakumar Murugesan - Thiruchirapalli,இந்தியா

  ஒருவரும் ஒட்டு போடாமல் வரக்கூடாது. அவர்களது ஒட்டு ஏற்க்கனவே பதிவு ஆகி இருந்தால் நமது அடையாளத்தை நிரூபித்து டெண்டர் வோட்டு பதிவு செய்ய வேண்டும். இது ரொம்ப முக்கியம். அதிக அளவில் டெண்டர் ஒட்டு பதிவானால் அந்த வாக்கு சாவடியில் நிச்சயம் மறு வாக்கு பதிவு நடக்கும்

 • Mohan Vijayakumar Murugesan - Thiruchirapalli,இந்தியா

  In a particular polling station if more number of tendered votes are polled i.e. more than certain percentage then the polling will be cancelled and repolling will be conducted. Accordingly if there is a tie then the tendered votes will be taken into count.

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  49 பி , என்றொரு தேர்தல் சட்ட விதி இருக்கிறது என்று இப்படம் மூலமாக பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து இருக்கிறது , உண்மையில் செங்கோல் என்கின்ற சர்க்கார் " MAKERS OF QUALITY MASTERED IN CHENNAI " தான் ...ஆனால் கதையை திருடியது சோகமே

  • Basic Instinct - Coimbatore,இந்தியா

   கதை/கரு திருடியது என்பது தவறான கருத்து ஏன் என்றால். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட உழைக்கும் மக்களிடம் இதை போன்று பல எண்ணங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மை. வேண்டும் என்றால் "Cinematography" உரிமை கோரலாம். அது தான் கடினம். உதாரணத்திற்கு வேதாளம் விக்ரமாதித்தன் முதுகில் உட்கார்ந்து செல்வதை மெய்யமாக வைத்து கூட படம் எடுக்கலாம். ஆனால் அதை மக்களின் என்ன ஓட்டத்திற்கு ஏற்ப "சினிமாட்டோகிராபி" செய்வது தான் கடினம்.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  இந்த செய்திக்காகத்தான் காத்திருந்தேன் இதை பதிவு செய்ய. இப்போது டிவிக்களில் விவாதத்தில் செய்திகளில் சர்க்கார் படத்தை பற்றி எதோ நாட்டுக்கு மிக முக்கியமான விஷயம்போல் தலைப்புசெய்திகளில் தீயாய் அலசிக்கொண்டிருக்கிறர்ர்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் இந்த படத்தில் வந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கும் ஒரு காட்சியில். நீதிமன்றம் போல் உள்ள அமைப்பில் விவாதத்தில் தலைமை நீதிபதி என ஒருவரையும் தலைமை தேர்தல் கமிஷனர் என ஒருவரும் மற்றும் நீதிக்கு? போராடும் கதா நாயகனும் அவருக்கான வக்கீலும் மற்றும் சில வக்கீல்கள் இருப்பது போல ஒரு காட்சி. அதில் கதாநாயகன் தேர்தல் முடிவை தள்ளிவைக்க கேட்கிறார் அதற்க்கு தலைமை நீதிபதி தேர்தல் கமிஷனரிடம் இது சாத்தியமா என கேட்கிறார். இதில் தலைமை நீதிபதியாய் இருப்பவர் சட்டப்பிரிவை படித்து புரிந்து சட்டப்படி தீர்ப்பு சொல்கின்றார்கலா? அல்லது ஆலோசனை கேட்டுத்தான் தீர்ப்பு சொல்கிறார்களா? என மக்கள் குழப்பமடைவார்களே. இது மட்டுமல்ல சட்டப்பிரிவு 49P எனும் பிரிவை கதாநாயகன் குறிப்பிட அதற்க்கு தலைமை நீதிபதி "இப்படி ஒரு சட்டப்பிரிவு இருப்பதாக யாருக்குமே தெரியாது" என பதிலுரைப்பார். இப்படித்தான் "சட்டப்பிரிவை அறியாமல் தலைமை நீதிபதியாய் இருப்பவர்கள் இருக்கின்றார்களா?" எனும் சந்தேகம் அந்த காட்சியை காண்பவர்களுக்கு வருமா வராதா? நீதித்துறையை சார்ந்தவர்கள் தீர்ப்பு வழங்குபவர்களாகட்டும் வழக்கறிஞர்களாகட்டும் இதை கவனிப்பார்களா? கவனத்தில் எடுத்து கொள்வார்களா? இதற்க்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? இதை மதிப்பிற்குரிய நீதியரசர்கள் வழக்கறிஞர்கள் பார்வைக்கு தெரியப்படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். எடுத்து சொன்னதில் பிழையிருப்பின் பொறுத்தருள்க. நன்றி.

 • KSK - Coimbatore,இந்தியா

  வெளி நாட்டில் இருப்பவர்கள் ஓட்டு போட இந்தியா (நேரில்) வர வேண்டுமா? தபால் ஓட்டு முறை என்று ஒன்று இருப்பது எதற்காக? NRI - ஆக இருப்பவர்கள் அனைவரும் இப்படி தான் தேர்தலுக்கு நேரில் வந்து ஒட்டு போட்டு விட்டு செல்கிறீர்களா? யாராவது தெளிவு படுத்தினால் நலம்.

 • southindian - chennai,இந்தியா

  இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் உலகிலே இந்த இந்தியாவிலே . இதை விட ஒரு வெட்கக்கேடான சட்டம் இன்னும் இந்தியாவில் எத்தனை உள்ளது என்று அதற்கும் ஒரு சினிமா எடுக்கவேண்டுமா. உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து இந்த பிரிவிவை நீக்க வேண்டும் அல்லது மாற்றவேண்டும் . கள்ள ஒட்டு போட்டால் உடனடியாக தேர்தலை ரத்து செய்யவேண்டும் அல்லது அந்த பூத்தில் மறு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் . இந்த கள்ள ஒட்டு தி மு க வினர் காமராஜரை தோற்கடிக்க பயன்படுத்தி இப்போது அது முடிவேதும் இல்லாமல் வெற்றிகரமாக நடந்து கொண்டு உள்ளது

 • sridharan - chennai,இந்தியா

  ஆனால், இந்த ஓட்டு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்பது முழு உண்மையில்லை. இது தனியாக சீலிடப்பட்ட கவரில் வைக்கப்பட்டு சம ஒட்டு வரும் பட்சத்தில்( டை ) பிரிக்கப்பட்டு வெற்றி தோல்வியை முடிவுசெய்ய உபயோகப்படுத்தப்படும்

 • Jose - Thoothukudi,இந்தியா

  49பி சட்டத்தை பயன்படுத்தி ஓட்டுபோடலாம் ஆனால் அந்த ஓட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது அது வாக்காளர்களின் மனதிருப்திக்கு மட்டுமே என்றால் பின் அந்த சட்டத்தினால் என்ன பயன், இவ்வளவு முட்டாள்தனமாக இந்த சட்டத்தை இயற்றினது யார்?

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  சட்டப்பிரிவு, '49பி'யின் கீழ் ஒருவர், தன் மனதிருப்திக்காக ஓட்டளிக்கலாம். அவரது ஓட்டு, கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இதுதான் நமது சட்டத்தில் உள்ள சிக்கலே. எல்லாமே பெயரளவிற்குத்தான். அதற்க்கு இந்த 49பி ஒரு மிகச்சிறந்த உதாரணம். என்றைக்கு மாறப்போகின்றனவோ இந்த உளுத்துப்போன போலி சட்டங்கள். மாறினால்தான் நாடு உருப்படும்.

  • Mk cbe - covai,இந்தியா

   அது கண்டிப்பாக மாறாது மாற்ற ஆளுங்கட்சி நினைத்தாள் எதிர்க்கட்சி எதிர்க்கும். நம் சட்ட புத்தகமே ஓட்டை எனும் பொது அந்த ஓட்டையை அடைக்க எந்த கட்சியும் முன்வராது

  • Ramesh M - COIMBATORE,இந்தியா

   மொத்தத்தில் சிஸ்டம் சரியில்லை என்கிறீர்களா.

 • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

  நான் சென்ற தேர்தலில் கூட இந்த 49P எனும் Tered vote தான் போட்டேன். ஆனால் இதனால் பயன் கிடையாது என்பதும் தெரியும்.

 • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

  சென்னை சைதை தொகுதியில் முழுக்க முழுக்க கள்ள ஓட்டு மூலமே ஜெயித்த ராதாரவியும் இந்தப்படத்தில் நடிக்கிறான்.

  • KSK - Coimbatore,இந்தியா

   அது தான் சார் நம்ம ஊர் சினிமா நடிகர்களின் சாமர்த்தியம், ஆனால் இது போன்ற போலிகளை நம்பி ஒரு கூட்டம் பின்னால் அலைவதை போன்ற கேவலம் வேறு எந்த நாட்டிலும் காண கிடைக்காதது.

 • Vijay - Bangalore,இந்தியா

  , கள்ள ஓட்டும் குற்றம் இல்லை என்று தீர்ப்பு வந்தால் சரியாகிவிடும் ..

 • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

  ஆதார் இருந்தால்தான் ஓட்டுப்போட முடியும் என்று ஒரே ஒரு சட்டம் போடுங்கள். அனைத்து கட்சிகளும் இணைந்து நூறுசத மக்களும் ஆதார் கார்டு பெற ஏற்பாடு செய்து விடுவார்கள். பிறகு கள்ள ஓட்டும் ஒழிந்து விடும்.

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  "ஏராளமானோர், சட்டப்பிரிவு, '49பி'ன் கீழ், ஓட்டு பதிவு செய்தால், கள்ள ஓட்டுப் பதிவுக்கு எதிராக, திடீர் சிக்கல் எழலாம்." இது, சர்கார் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  சந்துவாழ் மேட்டுக்குடி விஜய் விசிறிகளே உங்களிடம் உள்ள வசதிகள் கடைமட்ட ரசிகனிடம் இருக்காது. படத்தை பார்த்து இதுதான் நிஜம் என நினைத்து தன் வீட்டில் வாங்க இயலாத மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை உடைத்தால் சப்போர்ட் பண்ணாதீங்க.அவன் குடும்பத்தால் அதை இன்ஸ்டால்மென்ட்ல கூட வாங்க வசதியிருக்காது

  • pattikkaattaan - Muscat,ஓமன்

   சரியாதான் சொன்னீங்க அதான் மொத்த வருமானத்தையும் கொண்டுபோய் டாஸ்மாக் கடையில் கொடுத்துவிடுகிறார்களே..சரி அந்த மிக்சி , பேன் எல்லாம் நல்லா வேலை செய்கிறதா ?.. ( நான் எந்த இலவச பொருளையும் பெறவில்லை என்பது கூடுதல் தகவலுக்கு )

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  Mixie, fan தமிழ் நாடு அரசு தந்தது..... அதில் ஜெயலலிதா படம் மட்டுமே இருக்குன்னு நினைச்சியா???? தமிழ் நாட்டின் அரச முத்திரையும் இருக்கு...... அரச முத்திரை அவமதிப்புன்னு வழக்கு தாக்கல் செய்தால் நீ காலி....... (கருணாநிதியே சட்ட நகலை எரிக்கவில்லை வெற்றுத்தாளைத்தான் எரித்தோன் என்று அறிவித்தது ஒடுங்கிய வரலாறு உண்டு)....

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  இனி இவனோட படத்தை இப்படி தான் ஓட்ட முடியும்னு முடிவுக்கு வந்துட்டான், அதான் எல்லா படத்துலயும் உரண்டை இழுத்துகிட்டு திரியுறான்

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  நாங்களெல்லாம் ஏமனையே தின்னுட்டு ஏப்பம் விடுற ஆளுங்க , 49 பி , 49 ஜே னு படம் எடுத்துட்டா மாறிடுமா - இப்படிக்கு வெள்ள வேஷ்டி வெள்ள சட்டை

 • VOICE - CHENNAI,இந்தியா

  ஆதார் அட்டையோடு வாக்காளர் அட்டை இணைக்க என்ன தயக்கம் அரசியல் காட்சிகளுக்கு மற்றும் திருட்டு கமிஷனுக்கு

 • tamil - coonoor,இந்தியா

  கைநாட்டுடன் கூடிய அடையாள அட்டை மூலம் தேர்தலை நடத்தினால் கள்ளஓட்டு முற்றிலும் ஒழிக்கலாம், அரசு நினைத்தால் செயல்படுத்த முடியும்

 • ravisankar K - chennai,இந்தியா

  ஆதார் தகவல்களை திருடிவிடுவார்கள் , ஆதார் கேட்பது மனித உரிமை மீறல் , ஆதார் இல்லை என்று கூறுவது என் உரிமை என்று ஒரு கும்பல் கேஸ் போட்டது . அதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இந்த வழக்கு தொடுத்தது போராளிகள் , மனித உரிமை ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் அதே கும்பல்தான் .

 • ஆப்பு -

  ஏதோ அமெரிக்க தேர்தல்கள் நேர்மையின் சிகரமாக நடத்தப் படுவதாக ஒரு பாவனை விதைக்கப் படுகிறது. அங்கே நடக்கும் அடாவடிகளில் சில இதோ: 1. gerrymandering எனபடும் தேர்தல் தொகுதி எல்லைகளை மாற்றி அமைத்துக் கொள்வது. அதாவது தமக்கு சாதகமாக ஓட்டளிபவர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தொகுதியாக்கி வெற்றி பெறுவது. 2. ஏழைகள் வாழும் கிராமாந்தர பகுதிகளில் ஓட்டுச் சாவடிகளை வெகு தூரத்தில் வைப்பது. இதனால் அங்கு கிராமங்களில் பலர் ஓட்டளிப்பதில்லை. 3. கறுப்பினத்தவர்களை பயமுறுத்தி வாக்களிக்கச் செய்யாமல் வைத்தல் 4. பணக்காரர்கள் எல்லோரும் செலவு செய்து ரேடியோ, டீ.வி, விளம்பரங்களில் தங்கள் ஆட்களுக்கு ஓட்டளிக்கச் சொல்லுதல் 5. தேர்தல் கணிப்புக்களை தங்கள் ஆட்களுக்கு சாதகமாக வெளியிடுதல் - இதெல்லாம் தெரியாத இந்திய மங்குணி கார்ப்பரேட் சி.இ.ஓ இந்தியா வர்ராராம்...தேர்தல் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுந்து தேர்தலை நிறுத்தி பொறவு இவரே ஜெயிச்சு ஆட்சி அமைக்கிறாராம். மொதல்ல இந்த அமெரிக்க கார்ப்பரேட் இந்தியாவுல ஓட்டு போட முடியாது...பொறகு எந்த வித கெவர்மெண்ட் தேர்தலிலும் நிக்க முடியாது...கூடாது.. அப்பிடியே இவுரு ஓ.சி.ஐ கார்ட் வெச்சிருந்தாலும், அமெரிக்க குடிமகன் இவுரு.. இல்லேன்னா அமெரிக்காவுல கார்ப்பரேட் சி.இ.ஓ ஆக முடியாது. அப்பிடி ஆயிருந்தா அமெரிக்காவுலேயே ஆப்பு அடிச்டிருப்பாங்க... 30 வருஷம் ஜெயிலும் உண்டு. நம்ம சென்சாருக்கு மூளைங்கறது இருக்கான்னே தெரியலே...மக்களுக்கு ? கேக்கவே வேணாம். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் விசிலடித்த கூட்டத்தின் அடுத்த பரிமாணம் ரஜினிக்கும், கமலுக்கும் விசிலடிச்சு இப்போ விஜய்க்கு விசிலடிக்கிற அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்கு. ஆளும் கட்சியோ, சொல்லவெட் வேண்டாம். கூத்தாடிக்கு நூற்றாண்டு விழா எடுக்குது. கிரிமினலுக்கு மணிமண்டபம் கட்டுது. எதிர்க்கட்சியோ இன்னும் மோசம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு படம் இவ்வளவு பின் விளைவுகளை ஏற்படுத்துமா ...?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கள்ள ஓட்டை தடுக்காது தவிர்க்காது'...மு க அதற்காகவே ஏற்படுத்திய கள்ளவாக்கு வங்கிகள் தாம் கூவம், பக்கிங்காம் கால்வாய், மக்கீஸ் கார்டன் போன்ற இடங்கள்.. இதை இனி தவிர்ப்பது எப்பிடி...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  திமுக அதிமுக பலமே தொகுதியில் சமீபத்தில் இறந்த வாக்காளர்கள். வெளியூர் மாற்றலாகிப் போன வாக்காளர்களின் லிஸ்ட். தான் . முன்கூட்டியே கள்ளவோட்டுப் போட ஆள் தயார்பண்ணுவது வேறு யாருக்கும் வராத கலை .மாநிலம் விட்டு மாநிலம்போய் கள்ளவோட்டுப்போட லாரியில் ஆளனுப்பும் கலை திமுகவினுடையது. .புதுசேரியில் ஒரு பலம்வாய்ந்த கல்வியமைச்சரையே லாரிலாரியாக தமிழக குண்டர்கள் கள்ள ஒட்டுமூலம் தோற்கடித்த பெருமை அவர்களுடையது

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அந்த 49-B பிரிவை பயன்படுத்தி போடும் ஓட்டால், எந்த பயனும் கிடையாது என்பதே உண்மையாம்... ஆனால் கள்ள ஓட்டை தான் எண்ணும் நமது கேடு கேட்ட அரசமைப்பு.

  • Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா

   அது 49 B இல்லை. 49 P .

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  அடக் கிறுக்கனுங்களா..... மனத் திருப்திக்காகத் தான் ஓட்டுப் போட முடியுமா.....??? அதுவும் கவுண்டிங்ல சேராதா.....இது அந்த முட்டாப்பயலுக கூத்தாடி கூட்டத்துக்குத் தெரியாதா....???

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   அவங்க காப்பி அடிச்ச கதையிலே இந்த சிக்கலை பத்தி ஒண்ணும் சொல்லவில்லையாம்..........அதனாலே அவங்களுக்கு அது தெரியாம போயிடுச்சாம்.........இப்போ அந்த கதாசிரியருக்கு குடுத்த பணத்தை திருப்பி கேட்டு கேஸ் போடறாங்களாம்.....................

 • Velu Karuppiah - Chennai,இந்தியா

  முதலில் குற்ற பின்னணி அதாவது முதல் குற்ற அறிக்கை பதிவு செய்தாலே அவனுக்கு தேர்தலில் நிற்க கூடாது என்ற சட்டம் கொண்டு வரபட வேண்டும். குற்றம் தான் சுமத்தப்பட்டுள்ளவது அவன் குற்றவாளி இல்லை என்ற சல்ஸாப்பு எல்லாம் கூறக்கூடாது.. தான் குற்றமற்றவன் என்று நிரூபித்தால் மட்டுமே அவன் தேர்தலில் நிற்க தகுதி பெறவேண்டும் இந்த தேர்தல் சீர் திருத்தத்தை முதலில் கொண்டு வந்தாலே முதல் படியாக யோக்யர்களை நாம் தேர்வு செய்ய முடியும். உடனே எல்லார் மேலும் பொய் வழக்கு போடுவார்கள் அதை எப்படி நிரூபிப்பது என்று கேள்வி கேட்பார்கள். பொய் வழக்கு என்று நிரூபணம் ஆனால் வழக்கு பதிவு செய்தவன் மேல் தக்க தண்டனை வழங்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

  • Darmavan - Chennai,இந்தியா

   தற்காலத்தில் நல்லவர்கள் போட்டியிடாமல் தடுக்கவும் இது பயன்படும் பொய் கேஸ் மூலமாக.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  கள்ள ஒட்டு பதிவு செய்வது கடினம்.

 • Truth Teller - chennai,இந்தியா

  அத பண்ணறத்துக்கு தான இந்த போராளீசுக்கு வெளிநாட்டுல இருந்து காசு வருது ...

 • HSR - Chennai,இந்தியா

  அப்போ ஆதாரை இணைக்க நீதிபதி ஏன் தடைபோட்டார்? யாரும் கேஸ் போட்டாங்களா யாரு போட்டா என்று உடனே விசாரியுங்கள்..

 • sriram - chennai,இந்தியா

  முதலில் ஆதார் அணைத்து மக்களிடமும் உள்ளதா என்று இந்தியா முழுவதும் தெரியவேண்டும் அப்பொழுதுதான் ஆதார் பயன் பெரும். சினிமாவாவின் மூலம் அரசியல் செய்ய தகுதியும் திறமையும் வேண்டும் இவை இரண்டும் யாரிடமும் (ரஜினி, கமல், விஜய், விஷால்) இப்போது இல்லை..ஜெயலலிதாவின் ஆளுமையும் கருணாநிதியின் மதிநுட்பமும் இப்பொழுது யாருக்கும் இல்லை .....எனவே இந்த 49 ஓ அல்லது 49 பி எல்லாம் உதவாது..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  நல்ல ஒட்டு போடும்போது அது கணக்கில் எடுத்து கொள்ள படாது ஆனால் கள்ள ஓட்டு கணக்கில் எடுத்து கொள்ள படும் என்றால் என்ன டாஸுக்கு அவன் கஷ்டப்பட்டு ஓட்டு போடணும்? அத படத்துல காட்டுனா மட்டும் இவனுங்களுக்கு கோபம் பொத்துக்கிட்டு வரும்? தேர்தல் கமிஷன் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தா அதுக்கு தடை போடற நீதிபதிக்கு அறிவு வேண்டாமா? அரசியல் சிபாரிசுல பல லட்சம் பணம் கொடுத்து தான் நீதிபதி ஒதுக்கீடு கூட இப்போ நடக்குது ...அதனால தான் இப்போ எல்லாம் நீதிபதிகள் தீர்ப்பு வித்தியாசமா இருக்குது குமாரசாமி கணக்கு மாதிரி............

 • ravisankar K - chennai,இந்தியா

  வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைப்பது உச்ச நீதி மன்றம் ஏன் நிறுத்தியது ?? கள்ள ஓட்டை வளர்ப்பதற்காகவா ??

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  நானும் விஜய் ஏதோ பெரி கண்டுபிடிப்பு செய்து விட்டார், கள்ள வோட்டே போட முடியாது என்று...அப்படியே ஸ்தம்பித்து போய் விட்டேன். கடசியில் பூ என்றாகி விட்டது. எல்லாத்திலும் அரை-குரை

  • Jothi - PUDUCHERRY,இந்தியா

   அவர் என்ன கண்டுபுடித்து கிழித்தார்.....கதை இயக்குனர்களின் சிந்தனை மற்றும் தேடல் தான்

  • Endrum Indian - Kolkata,இந்தியா

   அந்த விஜய் செய்தது என்ன தோழா காட்டி, கை காட்டி, கால் காட்டி, குரல் காட்டி (இப்போ நிறைய பேர் அதுக்கும் தனியாக இருக்கின்றார்கள்) அவ்வளவு தானே செஞ்சது????பணம் போட்ட தயாரிப்பாளர் ஒருத்தர், டைரெக்ஷன் ஒருத்தர், காமெராமன் இன்னொருத்தர், கதை வசனம் எழுதியது இன்னொருத்தர், பாட்டு எழுதியது இன்னொருத்தர், பாடியது இன்னொருத்தர், இசை அமைத்தது இன்னொருத்தர், எடிட் செய்தது இன்னொருத்தர், இதை விற்பனை செய்தது இன்னொருத்தர். அப்புறம் ஹீரோ என்ன தான்ய செய்றான், தோல் காட்டுகின்றன, கொஞ்சம் கை கால் காட்டுகின்றான், குரல் கொடுக்கின்றான், அதற்கு அவனுக்கு சம்பளம் ரூ.20 கோடி???? கேட்டா எம்.ஜி. ஆர் பாட்டு, எம்.ஜி.ஆர் வசனம், ரஜினி வசனம், ..........இன்னும் இப்படி பலப்பல.

 • Siva Kumar - chennai,இந்தியா

  அரசு எல்லா நல்லதும் செய்யணும். ஆனா செய்யும்போது நாங்க லூசுத்தனமா கோர்ட்ல கேசு போட்டு தடை வாங்கிடுவோம். அப்பறம் அரசு ஒன்னும் செய்யலேன்னு புலம்புவோம். இதுதான் நாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement