Advertisement

'டவுட்' தனபாலு

கொங்கு இளைஞர் பேரவை கட்சி, எம்.எல்.ஏ., தனியரசு: எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்க தீர்ப்பு, லோக்சபா தேர்தல் ஆகியவற்றால், கட்சிகள் அணி மாறும் சூழல் உள்ளது. இருப்பினும். கொங்கு இளைஞர் பேரவை,அ.தி.மு.க., அரசை முழுமையாக ஆதரிக்கும்.


டவுட் தனபாலு: ஆரம்பத்தில், நீங்களும், தினகரன் பக்கம் ஓவராகச் சாய்ந்தீங்க... அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள், அ.தி.மு.க., அரசுக்கு சாதகமாக அமைந்து வருவதால், இந்த முடிவை எடுத்திட்டீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதுதே...!


---


தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தல்களில், பா.ஜ., தோல்வியை தழுவியது. இதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அலை வீசுவது, மிகத் தெளிவாகத் தெரிகிறது.


டவுட் தனபாலு: காங்., - ம.ஜ.த., இரண்டும் கூட்டணி வைத்ததால், இந்த வெற்றி சாத்தியமாச்சு... இவர்கள் தனித்தனியே நின்றிருந்தால், நிலை என்னவாகி இருக்கும்னு யோசித்தீங்களா? அது கிடக்கட்டும்... இப்பவாவது, தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கா... இதை ஏன் சொல்ல மறுக்குறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'


---


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: கடந்த, 10 ஆண்டுகளாக, பணத்துக்கு தான் ஓட்டுபோடுவது என்ற மனோபாவம் வந்துவிட்டது. நம்மை விலைக்கு வாங்குவது தானே பணம். நம்மை விற்கலாமா? எந்த கட்டத்திலும் நம்மை விற்கக்கூடாது.


டவுட் தனபாலு: ஓட்டுப்போட மட்டும் தானா... கோடி கோடியா, 'வாங்கிட்டு' தான், கூட்டணியே அமையுதுங்கற விமர்சனமும் தான் இருக்கு... அதை விடுங்க... 10 ஆண்டுகளாக, பணத்தால் தான், ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், அது, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்களுக்கும் பொருந்துமா என்ற, 'டவுட்' வருதே...!
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    திருமங்கலம் formulavin aathi naayakarkalai maranthuvittup pesukiraare

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement