Advertisement

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தெளசன்ட் ஒக்ஸ் என்ற பகுதியில் உள்ள நடன விடுதியில் ஆட்டம், பாட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒருவர் துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு தள்ளினார். இதில் பாதுகாப்பிற்கு இருந்த ஒரு போலீஸ்காரர் உள்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

காரணம் தெரியவில்லை




காயமுற்ற 10க்கும் மேற்பட்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர் நடன விடுதியில் இறந்து கிடந்தார். அவர் யார் என்ன காரணத்திற்காக சுட்டார் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

    இன்னும் எத்தனைபேர் இறந்தாலும் நூறு பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடக்கும் துப்பாக்கி சந்தையை மட்டும் நிறுத்த மாட்டார்கள்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நாகரீகம் வளர வளர துப்பாக்கி கலாச்சாரமும் வளருகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement