Advertisement

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி விளக்கம்

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்தவே கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும், இதனால், ஏற்பட்ட பலன்கள் குறித்தும் விளக்கமளித்து உள்ளார்.



கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்று கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.


அரசின் நடவடிக்கை



இந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டு நிறைவு பெறுகிறது. பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகும். வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை குறிவைத்து அரசு முதலில் நடவடிக்கைகள் துவங்கின. அந்த பணத்தை இங்கு கொண்டு வந்து உரிய அபராதத்தை செலுத்த அறிவுரை வழங்கப்பட்டது. அதனை செய்யாதவர்கள் மீது கறுப்பு பணச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டன. வெளிநாட்டில் கறுப்பு பணம் மற்றும் சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைத்ததை வைத்து நடவடிக்கைகள் தொடர்ந்தன.

வரி ஏய்ப்பு கடினம்



வரி முறையை விரிவுபடுத்தவும், நேரடி மற்றும் மறைமுக வரியை செலுத்துவதை எளிமைபடுத்தவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஏழை மக்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜன்தன் கணக்குகள் மூலம், ஏராளமான மக்கள் வங்கி சேவையுடன் இணைக்கப்பட்டார்கள். அரசின் மானியம், பயனாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வந்து சேரும் வகையில், ஆதார் சட்டம் அறிமுகபடுத்தப்பட்டது. வரி மற்றும் மறைமுக வரி நடைமுறைகளை ஜிஎஸ்டி மேலும் எளிமைப்படுத்தியது. தற்போதைய முறையில், வரி ஏய்பபு செய்வது கடுமையாகியுள்ளது.


நடவடிக்கை



ரொக்கம் பயன்பாடு அதிகமுள்ள பொருளாதாரத்தை கொண்டது நம் நாடு. இந்த பரிமாற்றத்தில், பணம் குறித்த கணக்குகள் யாருக்கும் தெரியாது. வங்கி முறையை தாண்டி, வரி ஏய்ப்பு செய்யவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், பணத்தை வங்கியில் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதன் மூலம், முறையற்ற வகையில் கிடைத்த பணத்தை டெபாசிட் செய்யப்பட்ட 17.42 லட்சம் வங்கிக்கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. விதிகளை மீறியவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். அதிகளவு பணம் வந்ததால், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரித்தது. ஏராளமான பணம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்டது.


முக்கிய நோக்கம்



அனைத்து பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்ய வைக்கப்பட்டதாக தவறாக குற்றம் சுமத்தப்படுகிறது. பணத்தை பறிமுதல் செய்வது மட்டும் ரூபாய் நோட்டு வாபசின் நோக்கமல்ல. முறையான பொருளாதாரத்திற்குள் மக்களை கொண்டு வருவதும், வரி செலுத்த வைப்பதுமே முக்கிய காரணம். ரொக்கத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.இதனால், வருமானம் அதிகரிக்கும். வரி அமைப்பு பெரிதாகும்.


டிஜிட்டல் மயத்தின் பலன்



இரண்டு வங்கிக்கணக்குகளுக்கு இடையே மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கடந்த 2016 ல் யுபிஐ(Unified Payment Interface) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 2016 அக்டோபரில் 50 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு( 2018) செப்டம்பர் மாதத்தில் 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 'பிம்' ஆப்பை தற்போது 1.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசுக்கு முன்னர் ரூபே கார்டு மூலம், ரூ. 800 கோடிக்கு இருந்த பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு(2018) செப்டம்பரில் ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.
தற்போது, இந்தியாவில் யுபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பயன்பாடு காரணமாக விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் சந்தை மதிப்பு வீழ்ந்து வருகிறது.


நேரடி வரிகள் மீதான பலன்கள்



ரூபாய் நோட்டு வாபஸ் மூலம், வரி வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும், இந்த நிதியாண்டு(2018- 19) ல் 20.2 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. கார்பரேட் வரியும் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபசிற்கு முந்தைய இரண்டு ஆண்டில் வரி வசூல் முறையே, 6.6 சதவீதம், 9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு பின் வரி வசூல் 14.6 சதவீதம், 18 சதவீதம் அதிகரித்தது. 2017 - 18 நிதியாண்டில், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 6.86 கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டு, 31.10.18 வரை 5.99 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், புதிதாக 86.35 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2014 மே மாதம் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது, 3.8 கோடி பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தனர். அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 6.86 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மறைமுக வரியில் ஏற்பட்ட பலன்கள்



ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் காரணமாக ரொக்க பரிமாற்றத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது. டிஜிட்டல் பரிமாற்றம் பயன்பாடு உயர்ந்தது. பொருட்கள் மற்றும் சேவை நுகர்வு அதிகரித்ததால், பொருளாதாரத்தில் மறைமுக வரி வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பயனடைந்துள்ளன. ஜிஎஸ்டிக்கு பின்னர் மாநில அரசுகளின் வரி வசூல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால், வணிகர்கள் தங்களது வரவு செலவை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மறைமுக வரியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், வருமான வரி செலுத்த வேண்டிய நிலையையும் ஏற்பட்டுள்ளது. 2014 - 15ல் ஜிடிபியில் மறைமுக வரி விகிதம் 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஒருசதவீதம் உயர்ந்து 5.4 சதவீதமாக உள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டாலும், வரி வசூல் அதிகரித்துள்ளது.

மக்கள் பயன்



இந்த வருமானத்தை, சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கவும், சமூக திட்டங்களுக்கும், கிராமப்புற இந்தியாவுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது. இதனை நாம், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரமான சாலைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 8 கோடி பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.1.62 லட்சம் கோடி, மானிய உணவிற்காக செலவு செய்துள்ளோம். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. பயிர் காப்பீடு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒன் ரேங்க் ஒன் பென்சன் அமல்படுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (75)

  • S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா

    இவர் விளக்கியிருக்கும் காரணங்களை பண ஒழிப்பு இல்லாமலே நிறைவேற்றலாம். இத்திட்டத்தால் பலன் பெற்றது பணக்காரர்கள் பாதிப்படைந்தது பாமர மக்கள்.

    • R Anantha Padmanabhan - chennai,இந்தியா

      அமைச்சர் சொன்னதை புரிந்து கொள்ள வக்கில்லாத இந்த அரேபியாக்காரர், தான் ஒரு பெரிய பொருளாதாரவாதி என நினைத்துக் கொண்டு கருத்தை இட்டுள்ளார். G S T அதிகமாகச் செலுத்துவது பணக்காரனா, பாமரனா? பெரிய கரன்சி நோட்டுகள் ஒழிந்ததை நினைத்து கோடிகளில் பதுக்கி நஷ்டமடைந்த பணக்காரன் தான் இப்படி கருத்தைப் பகிர்வான். எந்த பாமரனும் பெரிய கரன்சிகளைப் பதுக்கி நஷ்டமடைந்திருக்கமாட்டான், ஏனெனில் அவன் ஏழை மற்றும் பாமரனாயிற்றே.

    • Htanirdab S K - Hyderabad,இந்தியா

      சார் சவுதிலயே நிறைவேத்துங்க போதும்.. இங்க நாங்க பாத்துக்கறோம்

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    டெமோனிடைசஷன் பிறகு பெட்ரோல் விலை 50 ரூபாய் ஆகும் என்றார் புனியாவான் அன்று விலை 67 ருபாய் இன்று என்ன நிலை இது தான் பணமதிப்பீட்டின் உண்மை வெற்றி பாராட்டுவோம் வந்தே மாதரம்

    • Kadhar - Nagai,இந்தியா

      என்ன நடேசா எந்த உலகில் இருக்கிறாய்? ஜெட்லியா பெட்ரோல் கம்பெனிகளின் owner? அரபியர்கள்தான் பெரும்பாலான பெட்ரோல் கம்பெனிகளின் முதலாளிகள். அவர்கள் உலக நிலவரப்படி உற்பத்தியும் விற்பனையும் செய்வார்கள். அதாவது, விலை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள், ஜெட்லி அல்லது மோடி இல்லை. உழைப்பினால் தான் நம் நாட்டு பணத்தின் மதிப்பு உயரும். இனம் வாங்கி திண்ணாமல், உழைத்து நாட்டுக்கு நல்லது செய், தானாக நம் நாட்டின் பணத்தின் மதிப்பும் உயரும் அதனால் பெட்ரோல் விலையம் குறைந்து காணப்படும்.

  • rsudarsan lic - mumbai,இந்தியா

    மாயாவதி லாலு முலாயம் ஆகியோரை கவிழ்க்க பண ப்புழக்கத்தை ஒழித்தார்கள். கொசுவைக்கொல்ல ஊரை கொளுத்தினா மாதிரி. ஏழைகளின் வருமானத்தில் விழுந்த ஓட்டை பற்றி இந்த மேதாவிக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியாது. நாடு இதே நிலையில் சூறையாடப்பட்டால் கொதித்து எழும். அப்போது வக்கீல் தொழிலுக்கு பொய் விடுவார்.

  • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

    ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு தேர்தல் நடந்த எல்லா மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் அந்த திட்டத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதோ சில இடைத்தேர்தலில் பாஜக தோற்றாலும் அதன் ஸ்திரத்தன்மையை ஒன்றும் செய்ய முடியவில்லை. இது தான் உண்மை நிலை.

    • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

      இடைத்தேர்தலில் பாஜக தோற்றாலும் ஆமாம் 25 இடை தேர்தல்களில் 20 தான் தோல்வி 5 இல் வெற்றி ஐந்து பெரிசா 20 பெரிசா சப்ப கட்டறது ன்னு ஆயிடுது

    • MIRROR - Kanchipuram,இந்தியா

      வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க தயவு செய்து

  • INDIAN - Mamallpuram ,இந்தியா

    ரூ '13,000 கோடி கருப்பு பணத்தை பிடி‌க்க ரூ. 2,00,000 கோடி செலவு செய்த ஒரு புத்திசாலி பிரதமர். வாழ்க

    • Ramesh - Bangalore,இந்தியா

      GOI won't be able to reveal all the truth of demonetization and its impact. For CLEAN ECONOMY at any point in time we require a starting point. That is DEMONITIZATION...Grey Economy has SHRINKED OFF...

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    ‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு என்ன சொல்ல எது சொல்ல

  • INDIAN - Mamallpuram ,இந்தியா

    ரூ '13,000 கோடி கருப்பு பணத்தை பிடி‌க்க ரூ. 2,00,000 கோடி செலவு செய்த ஒரு புத்திசாலி பிரதமர். வாழ்க

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    வயிற்றுவலி வருவதால் வரும் பயன்களையும் மங்குனி அமைச்சர் விளக்க வேண்டும்.

  • ஆப்பு -

    இவிங்க கருப்பு பண ஒழிப்பாலே பயங்கர வாதம் ஒழிஞ்சுதாம். அப்புறம் ஏண் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பண்ணுனீங்க? பயங்கர வாதம் குறைய முக்கியமான காரணங்கள் இரண்டு. 1. எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவூதி மற்றும் பிற மார்க்க நாடுகளில் வருமானம் வீழ்ச்சி. அதனால் பக்கிகளுக்கு பணவரவு குறைந்தது. 2. சவூதி, சிரியா, இரான், ஏமன் நாடுகள் தங்களுக்குள்ளேயே அடிச்டிக்கிட்டு சாவுறாங்க. இந்தியா மேல கவனம் குறைஞ்சு போச்சு. நீங்க ஆட்சிக்கு வந்து நாலரை வருஷம் ஆச்சு...2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புன்னீங்க? எத்தனை பேருக்கு வேலை குடுத்தீங்க? அதையாவது சொல்லுங்க. எதுக்கெடுத்தாலும் காங்கிரசை குத்தம் சொல்றதை நிறுத்துங்க. நடுவுல மொரார்ஜி தேசாய், வாஜ்பாயீ கூட ஆட்சி செஞ்சாங்க அப்போ என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்கோ.

  • bal - chennai,இந்தியா

    15 லட்சம் கொடுத்தாச்சு...இப்போது இது மாதிரி பொதுவான பேச்சு... வெட்கம்....இந்த நிதி அமைச்சர் தான் உலகிலேயே மட்டமான நிதி அமைச்சர்.

    • Ramesh - Bangalore,இந்தியா

      We , TN People, were electing totally corrupted people for last 50/30 years who have accumulated 20 laksh crores /5 laksh crores...How do you see ourselves who are running behind Corrupted people or Cinema Stars and people are voting for money...

  • Indian -

    காசா பணமா எடுத்து விடு

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    பதுக்கி வைத்த பழைய நோட்டுகள் நாத்தம் தாங்காம அதை புது கருப்பு பணம் நோட்டா மாத்த கொண்டுவந்த திட்டம் .

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    Removed pl refresh the pages

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பலன் பலன் பலன் என்று சொல்லறீங்களே... அது எங்கேன்னு சொல்லுங்க

  • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

    உங்க நண்பர் சிதம்பரத்திடம் கூறுங்களேன்? இல்லை இருவரும் பேசி வைத்துக்கொண்டு மக்களை முட்டாள்கள் ஆக்குகிறீர்களோ? ஒருவர் கருப்பு என்பதும் மற்றவர் அதையே வெள்ளை என்பதும் இருவரின் மீதும் சந்தேகம் வருதா, இல்லையா?

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    எங்களுக்கு சில ஆயிரங்கள் மாற்ற படாமலேயே பழைய கரீன்சிகள் பல்வேறு தேசத்து நாணயம் கரன்சிகள் சேர்ப்பதில் இதையும் சேர்த்து விட்டோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல என்பார்கள் இவர்கள் எப்படியோ மாற்றி புரிந்து விட்டார்கள். ஏறத்தாழ அனைத்து நோட்டுக்களுமே ரிசெர்வ் வங்கிக்கு வந்து விட்டது. எங்களை போன்ற சில வெளிநாடு வாழ் இந்தியர்களின் நியாயமான பணம் மட்டுமே செல்லாததாகி விட்டது. பெட்ரோல் பங்க் மூலம் சில நாட்களுக்கு பரிமாற்றி கொள்ளலாம் என்பது தான் மிகவும் தவறாக தெரிந்தது. அந்த தொழிலில் இருப்போருக்கு அது ஆதரவாக இருந்ததாக சொல்கிறார்கள். எது எப்படியோ இவர்கள் அதை சாதனையாக பேசி கொள்ள வேண்டாம். ஏமாற்றப்பட்டவர்கள் சாமானியர்கள் கஷ்டத்திற்கு உள்ளானவர்களும் அவர்களே, அதை பேசாமல் மக்கள் மறந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவது தான் உசிதம்.

    • sumutha - chennai - Chennai,இந்தியா

      //எங்களுக்கு சில ஆயிரங்கள் மாற்ற படாமலேயே பழைய கரீன்சிகள் பல்வேறு தேசத்து நாணயம் கரன்சிகள் சேர்ப்பதில் இதையும் சேர்த்து விட்டோம்// சகோதரி நீங்கள் இப்படி சொல்வதில் சிறு வருத்தம் தோன்றுகிறது. முதலில் அவை ஏன் மாற்றம் செய்யப்படவில்லை? நேர்மையாக உழைத்து சேமித்த பணத்தை மாற்றிக்கொள்வதில் என்ன சிரமம் என எனக்கு புரியவில்லை. இந்த அறிவிப்பு வந்தபின் எத்தனை இடத்தில் பெரும் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுக்கள் மூட்டையாக கட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்டதை படித்தீர்கள் தானே? அப்படி கணக்கில் காட்டப்படாமல் எத்தனை ஆயிரக்கணக்கான மூட்டைகள் யார்யாரிடம் (பெரிய கருப்புப்பண முதலைகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசையும் மக்களையும் ஏய்க்கும் மிகப்பெரிய வியாபாரிகள்) இருந்தனவோ யாருக்கு தெரியும்? (அவ்வளவையும் ஒரே அறிவிப்பில் வெற்றுக்காகிதமானதை அதை மறைத்து வைத்திருந்தோர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஜீரணிப்பார்கள்.) அவர்களே இதில் முழுவதுமாக நஷ்டப்பட்டிருப்பார்கள். இதை செய்ததில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகுந்த சிரமம் இருந்ததை மறுக்கவில்லை. நடைமுறை கோளாறுகள் இருந்ததையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இது மிக தேவையான ஒன்றே என்பதை கருப்பு பணத்திற்கு எதிரான மனநிலை கொண்டோர் அனைவரும் வரவேற்பார்கள். சகோதரி புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  • HSR - Chennai,இந்தியா

    அப்படியெண்ண செலவு உங்களுக்கு? 4 ஆயிரம் ஒரு நாளைக்கு எடுத்தா நாலு நாள் வராதா? புறம் பெட்ரோல் வேறு பெரிய செலவுக்கு டேபிட் கார்டு கிரெடிட் கார்ட் ஆன்லைன் எவ்வளவு இருக்கு? பப்புய பாருங்க..ரெண்டு வருஷம் முன்னாடி 4 ஆயிரம் எடுத்தான்.. இன்னிக்கி வரிக்கும் அதை வெச்சி சூப்பரா ஓட்ரான்..ஹிஹிஹி...

  • ramanathan - Ramanathapuram,இந்தியா

    //கிராமப்புற இந்தியாவுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது. இதனை நாம், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரமான சாலைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம்//எங்கள் ஊர் சாலைகளில் இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட கழகங்களின் ஆட்சி லட்சணம் தெரிகிறது.

  • venkatesan - chennai,இந்தியா

    இதன் பலனை மிக அருமையாக விளக்கியதற்கு நன்றி

  • Guru india - Chennai,இந்தியா

    7 வது சம்பள கமிஷன் பரிந்துரை படி ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் இரண்டுவருடங்களாக இன்னும் உயர்த்தப்படவில்லை

    • JSS - Nassau,பெர்முடா

      சம்பளத்தை உயர்த்துவதாவது. கொடுக்கும் சம்பளமே உங்கள் வேலை தரத்திற்கு அதிகம். இதில் இன்னும் அதிகம் வேண்டுமாம். உங்கள் லஞ்ச பணம் எந்த கணக்கில் சேருகிறது? யோவ் பேசாமல் கொடுக்கிறதை வாங்கிக்கொண்டு போங்கள். பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் நாட்டுக்கு செய்த சேவை போதும்.

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

    நோட்டு ஒழிப்பு என்பது ஊரில் உள்ள அனைவரையும் ஒரே நாளில் வெளியேற்றி விட்டு. ஊரை சுத்தம் செய்துவிட்டு மறுபடி ஒவ்வொருத்தரா செக் பண்ணி குப்பை ஏதாவது இருக்கான்னு பார்த்து உள்ள விடுறது போன்றதான ஒரு நடவடிக்கை. வெளியேத்துறப்ப எல்லோருக்கும் கஷ்டம் ஆனது நிஜமே, ஆனால் திரும்ப உள்ள விடுறப்ப பல புதிய சட்டங்கள், மாற்றங்கள் இந்த அரசு கொண்டு வந்து இருப்பதால் இனிமே ஊர் சுத்தமா இருக்கும். முன்பைப்போல சட்டப்பூர்வமா யாரும் குப்பை போட முடியாது. வேறு வழி இல்லை நேர்மையாக இருந்தே ஆக வேண்டும் என்ற நிலை இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் தேவை. ஊரை விட்டு வெளியேத்துனப்ப எதுவுமே நடக்கலையேன்னு கேக்கறது அபத்தம். அது வெறும் தொடக்கமே, இப்போது கொண்டு வந்திருக்கும் புதிய சட்டங்கள்-மாற்றங்களே கருப்பு பணத்துக்கு எதிரான உண்மையான-நிலையான மாற்றம் கொண்டு வரும். பணமாற்று எந்தவொரு ஆதாயமும் இல்லை என்பது சுத்த பொய். அதனால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது. பணமாற்று நடவடிக்கை மட்டும் தனியாக பார்த்தால் தோல்வி போல சுலபமாக சித்தரிக்க முடியும், ஆனால் அதனுடன் சேர்த்து மோடி அரசு எடுத்த மற்ற நடவடிக்கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். ஜந்தன், புதிய ஐ பீ சி கோட், ரெரா(ரியல் எஸ்டேட் ரெகுலேட்டர்), ஷெல் கம்பெனி மற்றும் பினாமி சட்டம், ஆதார் லிங்கிங், புதிய kyc வங்கி ரெகுலேஷன்ஸ், புதிய ஐடி-கருப்பு பண-கார்ப்பரேட் சட்டம் தொடர்பான மாற்றங்கள், ஜீ எஸ் டி போன்ற அத்தனையும் சேர்த்து பார்க்க வேண்டும். முன்பு கருப்பு பணம் லீகலாகவே வெள்ளையாக்க வழிமுறைகள் இருந்தது, இப்போது அது இல்லை. இனிமேல் அதை செய்தால் கையும் களவுமாக பிடிபடுவார்கள். ஏன்னா எல்லா இடத்துலயும் டாடாவும் லிங்கும் உள்ளது. உள்நாட்டு கறுப்புப்பணம் மட்டுமே 25 % ஜீ டீ பீ வரை இருந்து வந்தது(கிட்டத்தட்ட 1 ட்ரில்லியன் டாலர்), இப்போது அது பெருமளவு குறைந்து உள்ளது. பணமாற்று உட்பட எல்லாமும் சேர்ந்து உருவாக்கிய சாதனை இது.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    அய்யா . உங்களுக்கு புத்தி கூடுதலாக இருந்ததால்தான் வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லிவிட்டு ஒருமாதம் கழித்து ரூபாயை செல்லாது என்று அறிவித்தது உலகுக்கே தெரியும் இதில் சிதம்பர ரகசியம் இல்லை . ஆக யாருக்ககாவோ அரசாங்கம் நடக்கிறது என்பதும் உண்மை .. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் 70% சதவீத மக்களை நசுக்கியதையும் சொல்லி இருந்தால் மிக்க நன்றாக இருக்கும் ..பணமதிப்பிழப்பு ஒரு நல்ல நடவடிக்கையே அல்ல என்பது உலகத்திலுள்ள அனைத்து பொருளாதார நிபுணர்களும் புழுதிவாரி தூற்றுகிறார்கள்.. உலகத்திலுள்ள அனைவருமே அறியாதவர்கள் மோடியும் ஜெட்லீயுமே அறிவாளிகள் என்றால் உலகம் ஏற்குமா ? எங்கே ஒரே ஒரு சம்பவம் கூறி இதனால் இத்தனை கோடி ரூபாய்கள் அரசுக்கு ஆதாயம் என்று நிரூபிக்க வக்கற்ற நீங்கள் செய்த ஒரு பெரிய தவறை மறைக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகி விட்டது .. சூரியனை கையால் மறைக்கவே முடியாது

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    இரண்டு ஆண்டுகள் கடந்த்து பணப்புழக்கம் சரியாகியும் அரசியல் பண்ணும் அரசியல் வியாதிகள். ஏனென்றால் அவர்கள் வீடுகளில் இறும் அடுக்கி வைத்டுள்ல 1000 , 500 ரூபாய் நோட்டுகட்டுகளை கான் கிராஸ் ஆட்ச்கிக்கு வந்து செல்லும் என் அறிவிக்கும் என் ஒரு நம்பிக்கை உள்ளதாம்.

  • srikanth - coimbatore,இந்தியா

    இந்த திட்டத்தை கொண்டு வந்த போது நம்ம பின் சொன்னாரு , யார் யார் அதிகமா செலுத்தி இருக்காங்களோ அவங்கள கண்காணிச்சு நடவடிக்கை எடுப்போம் அப்படின்னு. இந்த ரெண்டு வருஷத்துல Demonetisation திட்டத்தால் ஒருத்தரு மேலயும் நடவடிக்கை எடுக்கவே இல்லை . இந்த வாக்குறுதியும் இவர் சொன்ன பல வாக்குறுதிகள் போல கத்தோட காத்த போயிடுச்சி. . ATM ல 2000 ரூபாய்க்கு மேல எடுத்தா கண்டிப்பா 2000 நோட் தான் வருது. ஆனா 2000 கு சில்லறை கிடைக்க மாட்டேங்குது. நம்மள எல்லோரையும் சொந்த பணத்தை எடுக்க பல மணி நேரம் நடு ரோட்டுல நிக்க விட்டது தான் இந்த திட்டத்தோட பலன்.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    சிறு.குறு .கிராம த் தொழில்கள் விவசாயம் அழிந்து அவர்கள் நகரத்திற்கு இடம் பெயர்ந்து கட்டட தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். அதற்கும் ILFS ஆப்பு வைத்த விட்டது

  • ramanathan - Ramanathapuram,இந்தியா

    //அனைத்து பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்ய வைக்கப்பட்டதாக தவறாக குற்றம் சுமத்தப்படுகிறது. பணத்தை பறிமுதல் செய்வது மட்டும் ரூபாய் நோட்டு வாபசின் நோக்கமல்ல. முறையான பொருளாதாரத்திற்குள் மக்களை கொண்டு வருவதும், வரி செலுத்த வைப்பதுமே முக்கிய காரணம். ரொக்கத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.//மிகச் சரியான நடவடிக்கை. மத்திய அரசு சரியான பாதையில் பயணிக்கிறது. பதுக்கல் காரர்கள் பதறுகிறார்கள். காங்கிரஸ் இதில் அரசியல் செய்கிறது.ராகுல் அரசியல் தெரியாமல் உளறுகிறார்.

  • Suri - Chennai,இந்தியா

    30 லோக்சபா தொகுதிகளுக்கு இடை தேர்தல் நடந்தது கடந்த 4 ஆண்டுகளில். வெறும் 6 தொகுதிகளில் பீ ஜெ பீ வென்றுள்ளது. இதில் இருந்து தெரியவில்லையா இவர்கள் ஆட்சி நடத்தும் லட்சணம்? அதிலும் பீ ஜெ பீ ஆண்டுகொண்டிருக்கும் மாநிலங்களில் நடந்த இடை தேர்தல்களில் படு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆனால் வெத்து மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்னமோ மோடி அலை அடித்துக் கொண்டிருந்தது என்று. வெறும் மீடியாவை வைத்துக் கொண்டு IT செல் துணை கொண்டு எதிர் கட்சிகளை எல்லாம் கேவலமாக சித்தரித்து , மோடியை ஒரு பெரிய ஹீரோ போன்ற மாயை whatsapp forward உருவாக்கி அதை கொண்டு ஒரு பிம்பத்தை கட்டமைத்து நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெல்லாரியில் இவர்கள் மண்ணை கவ்வியது மறக்க முடியாதது. இப்பொழுது பீ ஜெ பீ ஒரு மைனாரிட்டி அரசு. வெறும் 270 எம்பீக்களை மட்டும் கொண்ட ஒரு மைனாரிட்டி அரசு. இந்த மைனாரிட்டி அரசு தான் இங்கு தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி அரசை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. மட்ட ரகமான அரசியல் நடத்தும் பீ ஜெ பீ ஒழிக.

    • Azhagan Azhagan - Chennai,இந்தியா

      கான்கிராஸ் ஆதரவாளர்கள் நேர்மையை மறந்து நீண்ட காலம் ஆகிபோச்சு. சரியான நேரத்தில் நாட்டு நலன் கருதி அதிரடிமுடிவுகள் எடுக்கப்பட்டது அவர்களுக்கு வேப்பிலையாய் கசக்கிறது. நாட்டின் வளர்ச்சி மக்கள் வரிசெலுத்துவதால் மட்டுமே செயல் படுத்த முடியும். இந்த துணிச்சலான முடிவை தேர்தலில் ஓட்டை எதிர் பாராமல் பிஜேபி எடுத்தது. இந்த துணிச்சல் கான் கிராஸ் கு கிடையாது. நேர்வழியை நம்புபவர்கள் பிஜேபியை அடுத்த தேர்தலிலும் ஆதரிப்பார்கள். இனி காண் கிரேஸுக்கு சங்குதான்.

  • Chellapandiyan - ,

    well done Modi ji

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

    நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவர். நிதித்துறை உங்களின் கீழ் உள்ளது. இதில் வங்கியை இருந்தாலும் அடங்கும். நீங்கள் நாளும் உழைத்து பல திட்டங்கள் தீட்டி பணத்தை வரியாகவோ, கட்டனமாகவோ, அதிகப்படி வரியாகவோ கொண்டுவருகிறீர்கள். அந்த பணம் எங்கு செல்லும் ? மத்திய அரசுக்கு செல்லுமா அல்ல து வங்கிகளுக்கு செல்லுமா ? வங்கிகளுக்கு தான் செல்லும். இப்போது நிறுவனத்தின் தலைவரான நீங்கள் சில திட்டங்களை தீட்டுகிறீர்கள். அதற்க்கு பணம் வேண்டும். யாரை கேட்பீர்கள் ? வங்கிகளை அதன் தலைமையை. தலைமை தரமாட்டோம் என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? அதற்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது தரமாட்டார்கள். நான் வசூலித்து கொடுக்க தான் இருக்கிறேன் என்று கூறி அமைதியாக இருப்பீர்களா ? அல்லது உங்களின் திட்டத்தினை நிறைவேற்ற முயலுவீர்களா ? எனக்கு இப்படி ஒரு நிலைமை நேர்ந்தது. பணம் தரமாட்டேன். என் அதிகாரத்தில் அப்படித்தான் உள்ளது என்று. நான் ஒரே வார்த்தை சொன்னேன். ரோட்டில் இறங்கி பணம் வசூலித்து வரும் பொறுப்பையும், வராக்கடனை வசூலிக்கும் பொறுப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதை இருந்தால் நான் கேட்கவில்லை. அது போல நான் கேட்கும் போது எனது திட்டங்களுக்கு வேண்டிய பணத்தை ஒதுக்க வேண்டும். என்று இரண்டு கண்டிஷன் போட்டேன். நிதித்துறை ஓடி விட்டான். இனி எல்லாம் உன் பொறுப்பு எவ்வளவு கேட்கிறாயோ கொடுக்கிறேன் என்று சரணடைந்து விட்டான். ஏனென்றால் அவர்களுக்கு தேவையான பணத்தை கொண்டு வருபவனே நான் தானே. இங்கே அரசின் திட்டங்கள் மூலம் பண சுழற்சி நடைபெறுகிறது. வங்கிகளுக்கு துண்டு விழும் போது அரசு கொடுக்கிறது. தள்ளுபடி செய்யும் போதும் அரசு தான் அந்த இழப்பீடுக்கு பணம் கொடுக்கிறது. பணமதிப்பீட்டிழப்பில் வங்கிகளுக்கு பணம் மீண்டும் வந்தது ரிசர்வ் வங்கியாலா ? முந்தைய அரசு மிரட்ட மிரட்ட நீரவ் மோடிக்கு, மல்லையாவுக்கு பணத்தை ஏன் கொடுத்தார்கள் ? இப்போது மீட்பது ரெசர்வ் வங்கியா அல்லது அரசா ? பல மிகப் பெரிய நிறுவங்கள் இப்போது தங்களின் பல்லாயிரம் கோடி கடனை தங்களின் சொத்தை வித்தாவது திரும்ப கட்டுவது ரெசர்வ் வங்கியாலா ? அரசின் கடும் சட்டங்களினால் தான். நாளை பணம் இல்லை என்றால் அதை கொடுக்க போவது நிதி அமைச்சகம் தான். உங்களை போன்றவர்கள் கொம்பு சீவி விடுவதன் மூலம் வீண் பிடிவாதம் பிடித்தால் மக்களுக்கு தான் நஷ்டம்.

  • ஆப்பு -

    ரொக்க பறிமாற்றம் போய் டிஜிட்டல்ல இவிங்களுக்கு எல்லா விவரமும் தெரியுது தவிர வேற எந்த பிரயோஜனமும் இல்லை. டிஜிட்டலுக்கு மாறிடோம்னு சொன்னாலும் இவிங்க நோட்டடிக்குறது ஒண்ணும் குறையல...டிஜிட்டலுக்கு போனாலும், ஏ.டி.எம் ல பணம் இருக்கறதில்ல. டிஜிட்டல் மூலம் சேவைக் கட்டணம் குறையணும்...ஆனா, இவிங்க கணக்குல இருக்குற பணத்தையே சில்லறையாக உருவிடறாங்க. 1000, 500 கள்ள நோட்டு அடிக்கிறவன் இப்போ 50, 100 கள்ள நோட்டு அடிக்க ஆரமிச்சுட்டானோ என்னவோ?

  • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

    எந்த ஒரு அதிரடி நடவடிக்கையையும் மோடி சாதாரண மக்களின் நலனுக்காகவே எடுத்தார். கருப்பு பணம் அதிகம் இருந்தது என்பது உண்மை. இந்த கருப்பு பணத்தால் பயங்கர வாதிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தி வந்தது உண்மை. கள்ள நோட்டுகளை வெளிநாட்டில் அடித்து அதை பயங்கரவாதிகள் உபயோகித்தது உண்மை. இந்த இரண்டு வருடங்களில் பயங்கரவாதம் குறைந்தது உண்மை. ரூபாய் நோட்டுகளில்3 வருட EXPIRY date அடித்து வெளியிடவேண்டும். அதுவும் 2000 ரூபாயிற்கு 2 வருடம் தான் என்று இருந்தால், பணத்தை 3 /2 வருடங்களுக்கு ஒருமுறை வங்கியில் மாற்றவேண்டும் என்றாகினால்,கண்டைனர்இல் வைத்து சேர்க்கும் கருப்பு பணம் குறையும். DEMONITIZATION ஐ நீர்த்து போகவைத்ததில் பெரும் பங்கு வங்கி நிர்வாகிகளே. அவர்கள் உதவி இல்லாமல் முதலைகளின் கருப்பு பண மலைகள் மாற்றப்பட்டது சாத்தியம் இல்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்தது கருப்பு பணமும் கள்ள நோட்டும் வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கி திருப்பி தராத NPA முதலை முதலாளிகளும். இவை அனைத்திற்கும் காரணம் , ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை சரியாக நிர்வாகம் பண்ணாததே. அப்படி இருந்தும் ரிசர்வ் வங்கி வருட கடைசியில் ஆயிரக்கணக்கான கோடி லாபான் ஈட்டியது எப்படி? யாருடைய பணம்? பண முதலாளிகளின் பணம் அல்ல, மக்கள் பணம். அது மக்களுக்கே போய் சேரவேண்டும். லாபம் ஈட்டுவது ரிசர்வ் வங்கியின் கடமை அல்ல. அது ரெகுலேட்டரி BODY . அந்த கடமை தவறி விட்டது. முன்பு பணக்கார பெரு முதலாளிகள் கையில் வங்கிகள் இருந்தன. வங்கிகளில் பொது மக்கள் போட்ட பணத்தை இந்த முதலை முதலாளிகள் தங்கள் இஷ்டம் போல் உபயோகப்படுத்தினார்கள். சாதாரண நடுத்தர மக்களுக்கு உதவவே இந்திரா காந்தி வங்கிகளை மோடி போல அதிரடியாக nationalise செய்தார். அந்த அதிரடி நடவடிக்கையையும் நீர்த்து போக செய்தது யார்? ரிசர்வ் வங்கி control சரியாக இல்லாததால் இன்றும் பண முதலைகள் வங்கிகளிடம் ஆயிரம் கோடிகள் பணம் வாங்கி திருப்பி தராமல் ஓடி விட்டனர். UK இல் வீடு வாங்க கடன் வாங்கினால் 2 இலிருந்து 3 % கூட இல்லை. இங்கு 8 /10 12 ஏன்? அவர்கள் வங்கி ஆளுமை DEMONITISATION இங்கு முன் கருப்பு பணம் இருந்தபோது வீடு கட்டி விற்பது ஒரு நல்ல business . பின் வீடு விற்பது கடினமானது . விலை வாசி குறைந்தது . வாங்க ஆள் இல்லை. என் கருப்பு பணமில்லை. அரசு தன கைங்கர்யமாக GUIDELINE value ஐ குறைத்தது. இதன் விளைவு கருப்பு பணம் GENERATION .

  • J.Isaac - bangalore,இந்தியா

    கனம் கோட்டார் அவர்களே நாங்கள் பேசுவது உண்மை , உண்மையை தவிர வேறல்ல: ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வரவு, அயுஸ்மான், 59 நொடிகளில் ஒரு கோடி கடன் , 2022 குள் அனைவருக்கும் வீடு, சிறு குறு தொழில்கள் பாதிப்பு இல்லை. பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு அரசாங்கம் பொறுப்பல்ல . மருந்துகள் விலை ஏற்றம் இல்லை, தொழிற்சாலைகளை தனியார்களுக்கு தாரை வார்ப்பதில்லை .

  • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

    தேள் கொட்டு வாங்கிய திருடன் கத்தமுடியாத நாள் இன்று... அந்த காண்டுல மக்கள் Q வில் நின்றதை பரிதாபப்படுத்தி தன் வலியை மறைத்துக் கொள்கிறான்.... நான் Q வில் நின்றபோது பலரும் நாட்டின் நல்லதுக்காக இதை ஒரு தியாகமா தான் பார்த்தாங்க.....

    • srikanth - coimbatore,இந்தியா

      உங்க தியாகத்துக்கு ஏதாவது பலன் கிடைச்சுதா . இது வரைக்கும் டெமொநெட்டிசத்தின் திட்டத்தால் இந்த இந்த கருப்பு பண முதலாளிகள் பிடிபட்டங்களா? கிடையாது . உங்கள மாதிரி பக்தர்களுக்கு என்ன சொன்னாலும் விளங்க போறதில்லை ....

  • Suri - Chennai,இந்தியா

    இன்னுமா இவர்களை கூறும் பொய்களை நம்புவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்களுக்கே இது அசிங்கமாக தெரியவில்லையா? நாட்டின் முன்னேற்றத்தை 10 ஆண்டுகள் பின் நகர்த்திய சாதனையை தவிர வேறு ஒரு ஆணியும் இவர்கள் பிடுங்கவில்லை. MSME செக்டரையே அழித்த பாவம் இவர்களை சும்மா விடாது.

    • Azhagan Azhagan - Chennai,இந்தியா

      அசிங்க படவேண்டியது காண் கிராஸ் மற்றும் அதன் கொள்ளை கூட்டணியும் அதை ஆதரிக்கும் நீங்களும் தான். நாடு நன்றாக தான் இருக்கிறது. வரிஏய்ப்பு, ஹவாலா கொள்ளை காரர்களுக்கு தான் பொழப்பு நாண்டுக்கிச்சு.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சாதாரணமக்கள் நாறிப் போனாங்களே அதற்கு முதலில் மன்னிப்புகேட்டாரா இவரு

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    "CURRENCY EXCHANGE MELA" வ கொண்ட்டு வந்தப்பெ "கருப்பு பணத்தெ ஒழிக்க" அப்டீன்னானுவ, பொறவு "ஊழெல ஒழிக்க" ன்னானுவ, பொறவு "cashless transaction "னுக்காவனுன்னானுவ, பொறவு "digital மாத்தம்"னானுவ, பொறவு "பொருளாதாரத்த முன்னேத்த"னானுவ, இப்டி கலர்கலரா வாரம் ஒரு கதைய சொல்லிட்டுவர்றானுவ "ஆள கொஞ்சமும் லாயக்கில்லாதவனுங்க...." மொத்தத்துல இவுனுங்க utter failure ....

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      பசி, மைனோ, பப்புவை தலைவனா ஏத்து கொண்டவர்களுக்கு நல்லது என்னன்னு தெரியாது...

  • ஆப்பு -

    //விசா, மற்றும் மாஸ்டர்கார்டுகளின் பங்குச் சந்தை மதிப்பு விழுந்து வருகிறது// இது ஒண்ணே போதும் இவர் அவிழ்த்து விடுவது புளுகு மூட்டைன்னு. விசா பங்கின் மதிப்பு ஜனவர் 1 ந்தேதி, 2016ல 74.49 டாலரா இருந்தது நேத்திக்கு 144.78 டாலரா முடிந்துள்ளது. மாஸ்டர் கார்டு ஜனவரி 1, 2016 ல 89.03 டாலரா இருந்தது நேத்திக்கி 208.25 டாலரில் முடிந்துள்ளது. மேலதிக விவரம் வேண்டுவோர் யாஹு ஃபைனான்ஸ் அமெரிக்க இணையதளத்தில் பார்க்கலாம். இந்த லட்சணத்துல, இன்னும் 1.20 லட்சம் கோடி பேங்குகளுக்கு அச்சடிச்சு தரணுமாம். உர்ஜித் பட்டேலும் ஓடிப் போகப் போகிறார்.

    • anand -

      correct and well said

    • N.Purushothaman - Cuddalore

      ஆப்பு ... புழுகறது நீங்க தான்....அவர் சொன்னது விசா மற்றும் மாஸ்டர் கார்டு இந்தியா நிறுவனங்கள்...இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் இந்திய வாடிக்கையாளர்களுக்கான Data Center வைக்க சொல்லி அவர்கள் அதை இழுத்தடித்ததால் இந்தியாவின் அட்டையான ரூ பெ ( Ru Pay ) வை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அணைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டதால் அவர்களின் டப்பா டான்ஸ் ஆடியது.......ரூ பெ கார்டுகள் வரலாறு காணாத அளவில் 100 மில்லியன் அட்டைகளை கடந்து சாதனை படைத்து உள்ளது....விளைவு மேற்கூறிய இரண்டு நிறுவனங்களும் புனேயில் இந்தியர்களுக்கான டாட்டா சென்டர் அமைக்க பணிகளை ஆரம்பித்து நடந்து கொண்டு உள்ளது....பேருல தான் உண்மை இல்லைன்னா பார்த்தால் கருத்து அப்படிதான் போல....அடிச்சி வுடுங்க... ஜன் டி.வி செய்தியை கேட்டு கருத்து எழுதுனா இப்படி தான் ஆகும்..

  • rsb - Chennai,இந்தியா

    நாங்க பட்ட பாடு எல்லாம் கானல் நீரா போய்விட்டதே ... எனக்கு எந்த அரசியல் பொருளாதார நிலையும் தெரியாது ஆனால் ஆனால் அணைத்து பொருள் விலை உயர்வின் வேதனை வாட்டுவது மட்டும் நன்றாக தெரிகிறது..

  • இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து

    சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்குப் போயிருந்தேன். அப்போது கஸ்டமர் எனக்கு சரியாய் வேகாத சிக்கனை மதிய உணவாகக் கொடுத்தார். எனது முகமாற்றத்தை கவணித்த மற்றொருவர் வேகமாக என்னிடம் வந்து "கவலைப்படாதீர்கள் வேறு உணவை பரிமாறச் சொல்கிறேன்" என்று கூறிவிட்டு தனது ஊழியர்களிடம் ஏதோ கூறினார். மறுநிமிடமே ஒவ்வொருவரும் கையில் ஒவ்வொரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஏதேதோ தயாரித்தனர். நானும் 'ache khaana aane wala hai' என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். விளைவு: தவளை, மண்புழு மற்றும் நத்தை போன்ற அறுசுவை உணவுகள் என் எதிரில் வைக்கப்பட்டன. எனது அன்றைய நிலைமைதான் இன்றைய இந்திய மக்களின் நிலையும். அந்த வேகாத சிக்கன் (காங்கிரஸ்) எவ்வளவோ பரவாயில்லை என்பது

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    பலன் அடைந்தது மார்வாடி குஜராத்தி கும்பல் தான் .

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      நீங்க என்ன கோயம்பேடுல காய்கறி விக்கறீங்களா??

  • srikanth - coimbatore,இந்தியா

    இந்த செய்தில மக்கள் பயன் அப்படின்னு கடைசியில போட்டிருக்கும் போதே தெரியலையா , இந்த திட்டத்தால் சாதாரண மக்களுக்கு ஒரு பயனும் இல்லை அப்படிங்கறது .

  • Ganesan - Karaikudi,இந்தியா

    அதுக்கான ஆப்பு ரெடி ஆகிட்டுருக்கு , 2019 தேர்தல்ல நல்லா அடிப்பாங்க .

  • Ganesan - Karaikudi,இந்தியா

    பண மதிப்பிழப்பு என்பது ஒரு மாபெரும் பாவம் அதை செய்தவனை பிடித்து ஆயிரம் கசையடி கொடுத்து விசாரணையின்றி தூக்கில் போடவேண்டும்

    • Sanjay - Chennai,இந்தியா

      இதனால் உனக்கு ஏகப்பட்ட பிரச்சனை போல அதுக்கு தான் இந்த புலம்பல்.

    • சிற்பி - Ahmadabad,இந்தியா

      கணேசன், ரொம்ப நஷ்டமோ ? கணக்கு காண்பித்து வரி கட்டி மீதியை எடுத்துக் கொள்ள வேண்டியது தானே. திருட்டு கணக்கு எழுதி, மக்களிடம் வசூலித்த வரியை அரசிடம் கட்டாத எல்லா கடைகாரர்களும் புலம்புவது தான் இது. உங்களை போன்று நாட்டை ஏமாற்றுபவர்களுக்கு வரியை மட்டுமல்லாது ஆயிரம் கசை அடியுடன் வரியை வசூலிக்க வேண்டும்.

    • N.Purushothaman - Cuddalore,இந்தியா

      சிற்பி ஜி... அவரோட ஊரு அப்படி...சிவகங்கை சீமானோட பினாமியோ என்னவோ...

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    அரசிற்கு வரி கட்டாமல், செய்யும் தொழிலை அரசிடம் பதிவு செய்யாமல் ஒரு கருப்பு பொருளாதாரத்தையே நடத்தி வந்தவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்கள் எல்லாம் இன்று வங்கியில் கணக்கு வைத்து , தொழிலை பதிவு செய்து அதற்க்கு வரி கட்ட வைத்தததால் தான் இதற்க்கு இவ்வளவு எதிர்ப்பு ...தற்போது கருப்பு பொருளாதாரம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு அனைத்தும் அரசை ஏமாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது ..கருப்பு பொருளாதாரத்தில் அரசியல் வியாதிகளின் பினாமியே அதிகம் ...அது தான் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு காரணம் ...

  • P.Rengaraj - maduai,இந்தியா

    சொல்வதெல்லாம் சரிதான். ரிசர்வ் வங்கியை குறி வைத்து செய்யப்படும் நடவடிக்கைகளை என்ன சொல்வது. ஒரு பரஸ்பரம் புரிதல் இரண்டு அமைப்புகளுக்கும் வேண்டாமா? ரிசர்வ் வங்கி, ஊழல் மற்றும் ஏமாற்றியவர்கள் பட்டியலை நிதி அமைச்சகத்துக்கு சமர்ப்பித்ததே? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதை ஏன் நாட்டுமக்களுக்கு தெரிவிக்கக்கூடாது? நாணயம் தவறிய கடனாளிகள் என்று ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் , கடனை திருப்பி தராதவர்களின் போட்டோக்களை தங்களுடைய வங்கி கிளைகளின் வாசலில் பேனர் வைத்து பட்டியலிட்டனர். பத்திரிகைகளிலும் வெளியிட கடன் தரும்போதே வங்கிக்கு அந்த அதிகாரத்தை எழுதி வாங்கிவிடுகின்றனர். திரும்ப திரும்ப ஊழல், வராக்கடன் என்று சொல்வதற்கு பதிலாக அதிக கடன் வாங்கி அதை திருப்பி தராதவர்களின் விவரங்களை ஏன் பத்திரிகைகளுக்கு தந்து வெளியிடக்கூடாது? அந்த அந்த வங்கிளின் இணையத்திலும் இந்த விபரங்களை பட்டியலிட்டு மக்களுக்கு தரரக்கூடாது.? யார் பணத்தை யார் எடுத்து யாருக்கு கொடுத்து மக்களை முட்டாளாக்குவது? ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தில் தன்னுடைய அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி இருக்கிறதா? தற்போது தனக்கு இன்னும் அதிகாரம் வேண்டும் , மத்திய அரசு தலையிடக்கூடாது என்று ஏன் கூக்குரல் எழுப்புகிறது? எச்சரிக்கை மணி ஓசை எழுப்பும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு எப்போதும் உண்டு. வராக்கடன் ஆனவுடன் தான் அதை எழுப்ப வேண்டுமா? சும்மா லிஸ்ட் மட்டும் பிரதம மந்திரியிடமோ அல்லது நிதி மந்திரியிடம் தந்துவிட்டால் போதுமா? ரிசர்வ் பேங்க் தன்னுடைய அதிகாரத்தை முறையாக பயன்படுத்தாமல் இருந்துவிட்டு தற்போது அழுகிறது. கவர்னரும் ரிசைன் பண்ணுவதாக சொல்லி இருக்கிறார். ரிசர்வ் பேங்க் அரசுக்கும் பேங்க் தான் ஆலோசனை சொல்லி நாட்டை சீர்திருத்தும் பணியில் அதற்கும் பங்கு இருக்கிறது. அரசை குற்றம் சொல்லி அடிபணிந்து நிற்க வேண்டிய அவசியம் அதற்கு கிடையாது. வானளாவிய அதிகாரம் அதற்கு என்றுமே இல்லை. எப்படி ஒரு நிறுவனத்திற்கு பேங்க் கடன் தந்து அதை தூக்கி நிறுத்த உதவி செய்கிறதோ அதே போல் நாட்டிற்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் ரிசர்வ் பேங்க் கடமைப்பட்டு இருக்கிறது.

  • thiru - Chennai,இந்தியா

    ஆம்.. இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிரது.. மக்களுக்கு வேலை வாய்ப்ப இல்லாமல் திண்டாட ஆரம்பித்து..

    • Azhagan Azhagan - Chennai,இந்தியா

      ஐயா எந்த பஸ்டாண்டுல பிச்சை எடுத்துகிட்டு இருக்கீங்க சொன்னா எல்லா காண் க்ரோஸ் மற்றும் திராவிட அல்லக்கைகளும் அங்கே உங்களுக்கு துணையா வருவாங்க

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    என்னுடைய கேள்வி எதற்காக 2000 RS கொண்டுவந்தீர்கள் .உள் கட்டமைப்பு ரோடு போடுறதுக்குத்தான் வரிசையாக டோல் கேட் இருக்கிறதே இந்த வருமானம் எங்கே போகிறது ? அரசாங்கத்துக்கு அதிக வருமானம் வருகிறது எந்த திட்டம் கொண்டு வந்தீர்கள் ? எய்ம்ஸ் மருத்துவமனை எல்லா ஸ்டேட் இல்லம் கட்டுமானம் தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது எதற்கு தமிழ் நாட்டுக்கு நிதி தரவில்லை ? எதற்கு தமிழ் நாட்டுக்கு மட்டும் 11000 கோடி நிதி பாக்கி வைத்து உள்ளேர்கள்?எதற்கு பொருளாதாரம் ஏற வில்லை ? என்ன திட்டம் இது வரை செயல் படுத்தினீர்கள் .தலை நகர் டெல்லி யில் இன்னும் மாசு கட்டுப்படுத்த வில்லை ஏன் ?டோடல் ஸிரோ ..................

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    வளவளா கொழகொழா . இந்த ஆள் எப்படி மோடி அரசில் இடம்பிடித்தார் என்பது ஆச்சர்யமான விஷயம். இவரும் ப சிதம்பரம் இருவரும் பழைய நண்பர்கள். காங்கிரஸ் அரசில் இருக்கவேண்டியவர் இவர். இவரால் காங்கிரஸ் அரசுக்கு பெரு ஆதாயம். அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பதே இவர்தான். ரிசர்வ் வங்கி தலைவர்களுடன் இவர் எப்போதுமே எதிர்பதம் பேசுவதே இதுவரை இவர் எடுத்த நடவடிக்கை. அன்று ரகுராம் ராஜன் , இன்று உர்ஜித்படேல் இருவரும் இவருடன் ஒத்துப்போகாமல் தங்களின் பதவியை விட்டு விலக இவர் ஒரு முக்கிய காரணம். சாதாரண மனிதனின் பழக்கவழக்கங்கள் இவருக்கு எள்ளளவும் தெரியாமல் இருக்கும் மேட்டுக்குடி மனிதர்.

  • Ramarajan - chennai,இந்தியா

    Good Job

  • N.Murugan - Nagercoil,இந்தியா

    பயிர் காப்பீடு மூலம் பயன் அடைந்த கம்பெனி ரிலையன்ஸ், 400 ரூபாய் காஸ் 1000 ரூபாய்க்கு மேல் விற்கிறது, ஆயுஷ்மான் திட்டம் மூலம் பயன் அடைய போகும் கம்பெனி ரிலையன்ஸ், இதுவரை எத்தனை கோடி வெளிநாட்டு முதலீடு கண்டு பிடிக்கப்பட்டது, மக்களை முட்டாள் ஆக்க கூடாது

    • சிற்பி - Ahmadabad,இந்தியா

      ஆயிரம் ரூபாய் விற்கும் காசுக்கு மானியம் எவ்வளவு உங்கள் வங்கியில் வந்துள்ளது என்று சிலவு செய்யும் போது யோசியுங்கள். எல்லாவற்றுக்கும் நோட்டை நொள்ளை சொல்லும் நீங்கள் என்றாவது ஒரு நாள் ஊழல் செய்த காங்கிரச்சை, ஊர் பணத்தை ஆட்டைய போட்ட திமுகாவை கேள்வி கேட்டதுண்டா ? உலகமே சிரித்ததே. நெருப்பு கோழி போல உங்கள் தலையை தண்ணீருக்குள் அமுக்கி வைத்திருந்தீர்களா ? அல்லது நீங்கலும் ஊழல் செய்ய முடியவில்லையே என்று வெதும்பும் வியாபாரியா ? எதிர்கட்சியின் மேடை பேச்சை மட்டும் கேட்டுவிட்டு இங்கே பதிவிடாதீர்கள்.

  • நக்கல் -

    என்ன எடுத்து சொன்னாலும் எதிர்ப்பவர்கள்ர்ளுக்கு இந்தியா எங்கயாவது மோடி/BJP ஆட்சியில் நன்றாக முன்னேறி மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவார்கள் என்கிற பயம்..

    • Rajasekar K D - Kudanthai

      ஆமாமாம் நியூஸ் சேனல்ல சொல்லிக்கிட்டாங்க

  • GladsOn John - Manama,பஹ்ரைன்

    The finance minister says one of the benefits of demonitization was to inactivate ( demonitize)the money deposited out side the country which is deposited in Dollars then he should demonitization the US dollars no IRS. Is there any sense in this nonsense act

  • Sivagiri - chennai,இந்தியா

    ஐயோ . . . படிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்திருச்சு . . .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement