Advertisement

பக்க வாத்தியம்

'சீன்' போடும் அமைச்சர் உதயகுமார்!


வட கிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், தமிழ் வளர்ச்சித்
துறை அமைச்சர், பாண்டியராஜன் கூட்ட அரங்கில் அமர்ந்தனர். தன் எதிரே எதையோ, அமைச்சர் உதயகுமார் தேடினார். பின், தன் உதவியாளரை அழைத்து, காதில் ஏதோ, 'கிசுகிசு'த்தார். சிறிது நேரம் கழித்து, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் புகைப்படம், அமைச்சரின் இருக்கைக்கு எதிரே வைக்கப்பட்டு, அப்படத்திற்கு முன்பாக, மல்லிகை பூ வைக்கப்பட்டது.கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர், 'ஜெயலலிதா இறந்தாலும், அவர் மீது, தான் பாசமாக இருப்பதாக, ஊர் ஊராக அமைச்சர், 'சீன்' போடுறாருப்பா...' எனக் கூற, அருகில் இருந்த மற்ற அலுவலர்கள், நமட்டு சிரிப்பு சிரித்தனர்.


Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement