Advertisement

ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை!

புதுடில்லி : ரபேல் விமானம் விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் தான் என்று டசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் கூறியுள்ளார்.


பிரான்ஸ் விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் நிறுவனமான டசால்ட், இந்தியாவின் ரிலையன்ஸ் டிபென்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் விரைவில் இணைக்கும் பொருட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஓரங்கட்டப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், விமான கட்டுமானத்தில் சிறிதும் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


இந்நிலையில், ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டசால்ட் சி.இ.ஓ. எரிக் டிராப்பியர் கூறியதாவது, ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக, இணைந்து பணிபுரிய இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 100 நிறுவனங்களை தொடர்பு கொண்டோம். அவைகளில் 30 நிறுவனங்களை இறுதி செய்தோம்.


இதில் சிறந்து விளங்கிய நிறுவனங்களில் இருந்து ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை, தங்களது விருப்பத்தின் பேரில் தான் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில், ரிலையனஸ் டிபென்ஸ் நிறுவனத்திடம் தான் ஏர்போர்ட் ரன்வேயை எளிதில் தொடர்புகொள்ளும் தகவமைப்புடன் போதிய அளவு நிலங்களும் அவர்களிடத்தில் இருந்ததே, இந்த விமான தயாரிப்பில் இணைந்து செயல்பட தீர்மானித்தோம். ரபேல் போர் விமானம் தயாரிப்பில், ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் பங்கு வெறும் 10 சதவீதம் மட்டுமே என்று அவர் கூறினார்.


இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மறை கருத்துக்கள் எழுந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. செயல்பாடுகள் சிறந்தமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (65)

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  //இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 100 நிறுவனங்களை தொடர்பு கொண்டோம். அவைகளில் 30 நிறுவனங்களை இறுதி செய்தோம். இதில் சிறந்து விளங்கிய நிறுவனங்களில் இருந்து ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை, தங்களது விருப்பத்தின் பேரில் தான் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில், ரிலையனஸ் டிபென்ஸ் நிறுவனத்திடம் தான் ஏர்போர்ட் ரன்வேயை எளிதில் தொடர்புகொள்ளும் தகவமைப்புடன் போதிய அளவு நிலங்களும் அவர்களிடத்தில் இருந்ததே, இந்த விமான தயாரிப்பில் இணைந்து செயல்பட தீர்மானித்தோம்//

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  //இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மறை கருத்துக்கள் எழுந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. செயல்பாடுகள் சிறந்தமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன// மிகுந்த கரகோஷத்துடன் வரவேற்கிறோம் சார்.

 • Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அதெப்படி, இதுநாள் வரை மத்திய அரசு இதை பற்றி பேசவில்லையே. நமது அமைச்சர் அங்கு சென்ற உடன் இப்படி சமாளித்து விடலாம் என்கிற உடன்பாடு ஏற்பட்டதா.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Defense minister madam has performed very during her visit New statement, (confession?) coming o

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  நுனிப்புல் மேயும் கைப்புள்ளைக்கு மீடியா முக்கியத்துவம் தருவதை தவிர்த்தால் நலம். யாரோ எழுதி தருவதை அப்படியே வாசிக்கும் ராகுலை நினைத்தால் கஷ்ட்டமாக உள்ளது. நாட்டை ராகுல் எப்படி வழி நடத்த முடியும்?

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  இந்த நாட்டை முன்னேற விடாமல் சீரழிப்பதே இந்த பொது நிறுவனங்கள் தான். தொலைத்தகவல் தொடர்பு - பி எஸ் என் எல் . முதல் ஹெச் ஏ எல் , பி ஹெச் ஈ எல் , மாநில மின்சார துறைகள், பொதுப்பணித்துறை என்று அணைத்து அரசு நிறுவனங்களும் கம்யூனிச தொழிற்சங்க வாதிகளின் பிடியில் உள்ளது. அவை அனைத்திலும் உள்ளவர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி தின்னும் அயோக்கியர்கள். எள்ளளவும் சமுதாய பொறுப்பு, கடமை உணர்வு, தொழில் பக்தி, நாட்டு நலனில் ஆர்வம் என்று எதுவுமே கிஞ்சித்தும் கிடையாது இவர்களிடம். இந்த கம்யூனிசம் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த போதிலும், அந்தஇரண்டு சதவிகிதம் பேரும் இருக்குமிடம் மிகவும் முக்கியமான இடம். வங்கிகள் , பொது நிறுவனங்கள் இவற்றில் இருந்து இந்த பொறுக்கிகள் முற்றிலும் ஒழிக்கப்படும்போது மட்டுமே நாடு வளர்ச்சி பாதையில் செல்ல துவங்கும்

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  I want to share a news item I read in Times of India a few weeks back. It is a known fact that Reliance Industries was the favourite corporate of Indira Gandhi during her premiership and Reliance under Dhirubai Ambani enjoyed lot of largesse under her government. But when Rajiv was PM the senior Ambani fell out of favour and many of his proposals were stalled and stuck up in Government departments. The senior Ambani was angry and waited. In one public function he stumbled upon Rajiv and allegedly whispered to him that Indira Gandhi had entrusted with him Rs 25 crores and asked Rajiv as to how to dispose the amount and left. ( In 1980s Rs 25 crores is a big amount ). After a fortnight all the pending proposals of Reliance were cleared. Mukesh Ambani asked his father when did Indira Gandhi gave him Rs 25 crores and why he did not inform him. The wily Senior Ambani told Mukesh he has not received any amount from Indira and hence he did not tell him. But he used this as a tactic to get in to the favour of Government. This story went round corporate and bureacratic circles in those days. Perhaps Rahul is peeved the junior Ambanis have not followed the steps of their father and hence he is targeting Reliance.

 • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

  These questions must be asked to HAL staff who are meeting Rahulji. 1. If HAL insisting on Rafael to give guarantee for the fighters manufactured by HAL, are they themselves giving guarantee for Tejas , Sukoi and other aircraft assembled by them to IAF? 2. Why a simple trainer aircraft ( these have no weapons , radar and advanced avionics , these are used for new trainee pilots) manufactured by them (with foreign collaboration) wre grounded for the past three years? Who paid for these aircraft? Has HAL refunded the cost to IAF? If HAL takes 20 years to develop the Kavery Engine ( which is also a proven failure), how many decades they will take for Rafael engine? Now coming to spare parts for Rafel which HAL is reportedly side lined, will HAL publish the spare parts produced and handed over to IAF for Tejas so far? Why Tejas is still positioned in HAL premises and flown only by experienced Test pilots? Can IAF afford to have all its fighters piloted only by Test pilots during war? Even the products claimed to be manufactured at HAL are basically assembled by procuring parts from outside vendors like Tatas and others. Will they not also procure the same from Ambani's firm if his offer is cheaper and of good quality? What non sense these people are talking about?

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  நிம்மி மேடத்தின் கோரிக்கையை ஏற்று தாஸால்ட் தனது 10 வது அறிக்கை வெளியிட்டது. இனமும் அறிக்கை மேல் அறிக்கை வரும். ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

 • yusuf - chennai,இந்தியா

  போட்டு உடைத்து உண்மையை.- தலைப்பு. welldone தினமலர்.

 • dinesh - pune,இந்தியா

  Kaasapottu company thirakkira dassalt kaaranukku yaarudan oppantham podanumnu vetti ubathesam seiya intha veenaai ponavargal niraiya peru irukaanga

 • கதை சொல்லி -

  அப்போ கைனெடிக், மஹிந்த்ரா, மைனி, சாம்டெல் போன்ற நிறுவனங்களுடன் அன்றே ஒப்பந்தம் செய்து கொண்டது போல் இன்று முடிவு செய்து அன்றய தேதியில் கையொப்பமிட்டார்களா... ஹும்ம்... காங்கிரசுக்கு சிங்கிகள் முட்டு கொடுத்து கொண்டே இருக்கின்றதுகள். டஸ்ஸால்ட் ன் சிஇஓ பொய் சொல்றாரு, அதுவும் பாதுகாப்பு மந்திரி, இல்லை... இல்லை... அம்மிணியின், நிம்மியின் விஜயத்தால் பொய் சொல்கிறார், சரி. ஆனால் லெ மோண்ட் எனும் பிரென்ச் பத்திரிக்கையின் தெற்காசிய செய்தி தொடர்பாளர் ஜூலியன் தவறு ஏதும் நடக்கவில்லை ராகுல் காந்திக்கு பிரஞ்சு மொழி பெயர்ப்பில் பிரச்சனை என்று சொல்லி இறுக்கிறாராமே... அந்த பத்திரிகை என்ன பிஜேபி யின் முரசொலியா..?

 • Siva - Chennai,இந்தியா

  இங்கே கருத்து எழுதுபவர்கள் ஒரு சில விஷயங்களை படித்து தெரிந்துகொண்ட பின்னர் எழுதுவது நலம். அதைவிடுத்து எழுதவேண்டும் என்பதற்காக செய்யக்கூடாது. மொத்த ஒப்பந்தம் 59000 கோடி, அதில் 30000 அளவிலான உபகரண வேலைகள் இந்தியாவில் தான் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த பணிகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் உள்ளன, ரிலையன்ஸ் அதில் ஒன்று. TCS , Capgemini , L & டீ, மஹிந்திரா, விப்ரோ உட்பட. மேலே சொன்ன 30000 கோடியில், 9000 கோடி ரூபாய் DRDO க்கு தான் செல்லப்போகிறது. எனவே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் லாபம் என்பது முற்றிலும் தவறு. அடுத்து வரக்கூடிய வாதம், பதிவு செய்யப்பட்டு 10 நாட்களே ஆன ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எப்படி ஒப்பந்தம் தரலாம் என்பது. இதுவும் தவறு. 2012 ல் வேறு ஒரு நிறுவனத்திற்கு இந்த பணிகள் வழங்கப்பட்டன, முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தது. பின்னர் முகேஷ் அம்பானி தனது மற்ற தொழில்களில் கவனம் செலுத்தும் பொருட்டு, இந்த நிறுவனத்தில் இருந்து விலகியது 2013 வாக்கில். அந்த நிறுவனம் 2016 ல் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய முன்வந்தது. இதை அணில் அம்பானி வாங்கி, புதியதாக நிறுவனத்தை பதிவு செய்தார். அந்த நிறுவனத்திற்கு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பெயரளவில் புதுசு என்றாலும், தொழில்நுட்ப அனுபவம் உள்ள நிறுவனமே. நான் சொல்வதை நம்புங்கள் என்று சொல்லவில்லை, நீங்களே இது பற்றி பல்வேறு தகவல்களை படித்து அறிந்துகொள்ளுங்கள். முகநூல், வாட்சப், மீம்ஸ் வச்சு எதையும் நம்பாதீர்கள்

 • M.S.Jayagopal. - Salem,இந்தியா

  போர் விமானங்களை தயாரிக்கும் நிறுவனம் அவற்றை விற்பனை செய்ய, வாங்கும் நாட்டின் நேரடி அல்லது மறைமுக நிபந்தங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஒன்றும் யோக்கியமான கட்சி அல்ல. இப்பொழுது அவர்கள் அரசியலுக்காக பிரச்னை செயகின்றனர். அடுத்து காங்கிரஸ் உள்ளடக்கிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி மத்தியில் ஏற்பட்டால், காங்கிரஸ் ரிலையன்ஸை நீக்கி விடாது. ரிலையன்சும் சும்மா இருக்காது.காங்கிரசுக்கு ,மிரட்டல் செய்யாமலேயே , கமிஷன் வந்து சேரும். அதற்காகத்தான் இந்த இரட்டை வேட சத்தம்.மக்கள் இதை அறியவேண்டும். காங்கிரஸ் மக்களுக்காக இதில் ஒன்றும் குரல் கொடுக்கவில்லை.

 • Suresh Ponnusamy -

  HAL, ISRO,BHEL, BEL, BSNL, ONGC,NTPC எல்லாத்தையும் வித்திட்டு அப்புறம் தனியாரிடம் கொடுங்க... நாடு நல்லா முன்னேறும்....

  • Anbarasan Kandasamy - muscat

   அவ்வளவு எளிதில் விற்று விட முடியாது STRIKE பண்ணுவாங்களே.பெரும்பாலான அரசு ஊழியர்கள் 08 மணி நேரத்தில் 04 மணி நேரம் கூட வேலை செய்வதில்லை.அப்படி இருந்து எளிதில் சம்பளம் வாங்கி பழகி போனவர்கள் .நீங்கள் குறிப்பிட்டுள்ள கம்பெனிகளில் ஒரு சில கம்பெனிகள் மட்டுமே லாபத்தில் இயங்குபவை. தவிர HAL நிறுவனம் "தேஜாஸ்" போர் விமானத்தை இது வரை 27 மட்டுமே தயாரித்துள்ளது.IAF கொடுத்த ஆர்டர் 40 விமானங்கள் 2001 லிருந்து தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ரீதியில் தயாரித்தால் 125 விமானங்களை எப்போது தயாரித்து IAF இடம் ஒப்படைப்பார்கள் .

  • HARIPRASAD - chennai

   சுரேஷ், நீங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் எந்த தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்திகிறீர்கள் என்று, எந்த தொலைக்காட்சியை அதிகம் பார்க்கிறீர்கள் என்று அல்லது உங்கள் உடம்பு சரியில்லை என்றல் எந்த மருத்துவமனைக்கு செல்கிறீர்கள் என்று. பிஸ்னல், தூர்தர்ஷன், அரசுமருத்துவமனை என்று தயவுசெய்து பொய்ச்செல்லாதீர்கள் நண்பரே.

  • sumutha - chennai - Chennai

   பிரதர் இங்க இப்ப நம்ம அரசு போக்குவரத்து கழகங்கள் நிர்வாகம் நடத்தும் லச்சனத்தை வெளிப்படையாக நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அவங்க நாம அன்னாடம் பயன்படுத்திற பஸ்ஸை சும்மா ஜெகஜோதியா எல்லா தனியார் பஸ்க்காரங்களும் மூக்கிலே விரலை வைக்கிற மாதிரி நிர்வாகம் செஞ்சுவர்ரதை பார்த்தும் நீங்க இப்பிடி அடம்பிடிச்சி சொல்றீங்கன்னா?......ஒன்னும் சொல்றதுக்கில்லை.

 • neo - Nagercoil,இந்தியா

  அதெப்படி, இதுநாள் வரை மத்திய அரசு இதை பற்றி பேசவில்லையே. நமது அமைச்சர் அங்கு சென்ற உடன் இப்படி சமாளித்து விடலாம் என்கிற உடன்பாடு ஏற்பட்டதா. பிஜேபி செய்கிற அனைத்து பொய் பித்தலாட்டங்களையும் நம்பிவிட மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. எல்லாவற்றையுமே குறுக்கு வழி கண்டுபிடித்து ஜெயிப்பது எப்படி என்று நாட்டு மக்களுக்கு பாலபாடம் நடத்தி கொண்டிருக்கிறது இந்த பிஜேபி அரசு.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அங்கு போன அம்மையாரின் டியூஷன் அப்படி.

 • A.Robet - chennai,இந்தியா

  எந்த இடத்தில் விமானம் பறக்க கூடிய வசதியுடன் ஓடுதளம் ரிலையன்ஸ்க்கு சொந்தமாக உள்ளது என்று சொன்னால் தங்கள் சொன்ன உண்மையை உறுதிசெய்ய எதுவாக இருக்கும் அணில் அம்பானி கம்பெனியை பதிவு செய்த பத்து நாளில் எப்படி ஓடுபாதையை தயார் செய்தார் எல்லாம் தேசபக்தர்கள் இரு கொள்வார்கள் என நம்பிக்கையா அல்லது நிர்மலா அம்மாவின் அதிரடி ஆலோசனையா எப்போதும் உண்மையை சொல்லமாட்டீர்கள்

 • karupanasamy - chennai,இந்தியா

  ஹெச் ஏ எல், ஆவடி டேங்க் பாக்டரி, என் எல் சி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் அரசு ஊழியர்கள் எவரும் வேலை செய்வதே இல்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். பெரும்பாலான ஒப்பந்தங்கள் காங்கிரஸ் கரனோ ( சோனியாவின் பினாமி பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி) , ஊழல் பெருச்சாளி முக வாரிசுகளோ தான் எடுத்துள்ளனர். எனவே தனியார்வசம் செல்வதுதான் சிறந்த வழி. ஆவடி டேங்க் தொழிற்சாலையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து முட்டை போண்டா செய்து அங்கு விற்பனை செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அனைத்து அரசு தொழிற் சாலைகளும் தனியார் வசப்படுத்தவேண்டும்.

  • sumutha - chennai - Chennai,இந்தியா

   பிரதர் இங்க இப்ப நம்ம அரசு போக்குவரத்து கழகங்கள் நிர்வாகம் நடத்தும் லச்சனத்தை வெளிப்படையாக நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அவங்க நாம அன்னாடம் பயன்படுத்திற பஸ்ஸை சும்மா ஜெகஜோதியா எல்லா தனியார் பஸ்க்காரங்களும் மூக்கிலே விரலை வைக்கிற மாதிரி நிர்வாகம் செஞ்சுவர்ரதை பார்த்தும் நீங்க இப்பிடி அடம்பிடிச்சி சொல்றீங்கன்னா?......ஒன்னும் சொல்றதுக்கில்லை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ரபேல் விமானம் விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் தான் என்று டசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் கூறியுள்ளார்.... ஏதோ நடந்து இருக்கிறது... பி ஜெ பி மறைந்தது...

 • rajan. - kerala,இந்தியா

  பப்புவுக்கு ரபேல் இருட்டுக்கடை அல்வா கொடுத்துட்டாங்க. ஆனாலும் பப்பு வுடம விசில் அடிச்சுக்கிட்டே சுத்தி சுத்தி வருவான். எப்படியாச்சும் ஊழல் பண்ணியாச்சும் ஆட்சி படி ஏறணும்னு அலையாய் அலை மோதுறான் பப்பு.

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   . நீ மோடிக்கு எவ்வளவு முட்டு கொடுத்தாலும், அடுத்த தேர்தலில் ஆப்பு தான்.

 • rajan. - kerala,இந்தியா

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அப்பாடா. ஒரு வழியாக அம்மணி யின் பிரான்சு விஜயம் வெற்றி.

 • ராமகிருஷ்ணன் - ,

  பூனை என்ன யானை குட்டியே வெளியில் வந்து விட்டது கமிஷன் கிடைக்காத விரக்த்தியில் கதறியவர்கள் தூக்கில் தொங்கலாம்

 • அரசு -

  ஹா ஹா.. சிரிப்பா வருது.

 • Kounder Bell - Kodambakkam

  பரவாயில்லையே நிம்மி போன வேகத்தில் பிரான்சு காரனும் உளற ஆரம்பிச்சுட்டானே அதென்ன பத்து சதவீதம் மட்டுமே நாற்பதாயிரம் கோடியா அப்போ தொன்னூரூ சதவீதம் என்பது எவ்வளவு தொகை இப்பொழுதே கண்களை சுற்றுதே பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லக்கூடாதா

  • Sridhar - Jakarta

   யோவ் லூசு, மொத்த ஆஃப்செட் மதிப்பே 30000 கோடி தான். அதில் பத்து பெர்செண்டு 3000 கோடி. இந்த பிசாத்து அமோன்ட்டுக்கு இவ்வளவு அலம்பலா? ஒரு விவரமும் தெரியாமலே நாட்டில் ஒரு பெரிய லூசு கும்பல் அலைஞ்சுக்கிட்டு இருக்கு. அதோட இல்லாம பத்ரிக்கைல கமெண்ட் வேற போடுதுங்க

 • siriyaar - avinashi,இந்தியா

  Most government departments are useless, example tamilnadu government school they get monthly salary average easily 70000 per teacher. In private school they pay just 15000. But public prefers private schools since government school teaching is very poor. Most government institution are cancer cells in india they eat our GST with out work. Union tem is there they belongs to political parties. Stalin gives protest menu forJagto Jio for monthly protest.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எந்தத்தொழில் நுணுக்கத்தையும் தீவிர முயற்சி செய்யாமல் கற்று தேர்ந்து விட முடியாது என்பதற்கு HAL ஒரு நல்ல உதாரணம்... சுதந்திரம் வாங்கியபின்னர் ஒரு எலிக்காப்டர் கூட ஒழுங்காக டிசைன் செய்து உற்பத்தி செய்யும் திறன் பெறாத ஒரு அரசுத்துறை... இவர்களை வைத்து F35 கூட தயாரிக்க கனவு காணலாம்... ஆனால் வேலைக்கு ஆகாது...

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  2012டில் ரபேல் ஒப்பந்தத்தில் (முகேஷ் அம்பானியின்) ரிலையன்ஸ் நிறுவனத்தை அனுமதித்த காங்கிரஸ் (இங்கிருக்கும் காங்கிரஸ் அன்பர்களும்) இன்று ரபேலில் அணில் அம்பானியை எதிர்க்கிறது (றார்கள்). இன்று அணில் அம்பானிக்கு இல்லாத அனுபவம் அன்று முகேஷ் அம்பானிக்கு எப்படி இருந்தது என்பது இவர்களுக்கே வெளிச்சம். அன்று தனியார் நிறுவனத்தின் பங்கை ஆதரித்த இதே காங்கிரஸ் இன்று எதிர்ப்பது வினோதம். எனது நிலைப்பாடு இதுதான். மத்தியில் இன்று காங்கிரஸ் இருந்தாலும், போர்விமான கட்டுமானத்தில் இந்திய தனியார் நிறுவனங்களின் பங்கை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் (ஆதரித்திருக்க வேண்டும்). இந்திய அரசு என்பது நிறுவனங்களை நடத்துவதை கழிந்து, வரையறைகளை இயற்றுவதிலும், அவற்றை கண்காணித்தலிலும், காலத்திற்கு ஏற்றவாறு அவற்றை நெறிப்படுத்துதலிலுமே கவனம் செலுத்தவேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு மக்களுக்கு உட்கட்டமைப்புகளை வழங்கவேண்டும், அவை தனியார் வாயிலாகவே இருக்கவேண்டும், சரியாக அவைகள் சென்றடைகிறதா என்பதனை மட்டுமே அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் திட்டங்கள் காலம் தாழ்த்தி மக்களுக்கு சென்றடையாமல் நேரத்திற்கு முடிக்கப்படும், தொழிற்சாலைகள் பெருகும், ஊழியர்களின் மெத்தனப்போக்கு களையும், வேலைவாய்ப்பும் பெருகும், மக்களின் பொருளாதாரமும் உயரும்.

 • ஆப்பு -

  ஐயய்யோ....ரிலையன்சுக்கே 10% தானா? அப்போ மேக் இன் இந்தியா என்ன ஆச்சு? விமானங்களை நிறுத்த நிலமும், துடைக்க துணியும் ரிலையன்ஸ் டிபன்ஸ் வழங்கும்... அதை ஹெச்.ஏ.எல் செய்ய முடியாதா?

  • N.Purushothaman - Kuala Lumpur

   அதை செய்ய கூட வக்கு இல்லாமல் தான் இருக்கு HAL நிறுவனம்....அது கூட தெரியாமல் பல பேரு உளறி கொட்டி இருக்காங்க...

 • Balasubramanyan S - chennai,இந்தியா

  These commentators are commenting that they Have seen everything. One person told that after starting the company is in same condition Has he gone to Reliance industry.

 • Anandan - chennai,இந்தியா

  எல்லா விஷயத்திலும் பிஜேபியின் முகத்திரை கிழிஞ்சுதொங்குது. அவர்களின் நிர்வாக திறமையின்மை ஊழல் எல்லாம் வெளிவருது.

  • KKsamy - Jurong,சிங்கப்பூர்

   அதாவது திறமையா ஊழல் செய்யத்தெரியல?

 • Anandan - chennai,இந்தியா

  அனுபவமே இல்லாத நிருவனத்தை தேர்ந்தெடுத்து விட்டு இப்போ எப்படியெல்லாம் முட்டு குடுக்க வேண்டி உள்ளது. இதில் பிஜேபி காரங்க இன்னும் நாங்க யோக்கியனுங்கனு சுயபட்டம் வேற. சகிக்கல.

 • Anandan - chennai,இந்தியா

  அமைச்சர் பிரான்ஸ் போனதற்கு அப்புறம்தான் இந்த பேச்சு. எல்லாத்திலேயும் பொய் பேசும் பிஜேபியின் சாமர்த்தியம் நமக்கு தெரியாதா? மலைமுழுங்கிகள்.

  • HSR - Chennai,இந்தியா

   ISD பாணி பேச முடியாதோ?இதுக்கு அங்க போய்த்தான் பேசனுமா

 • kmathivanan - Trichy ,இந்தியா

  ஏன்உங்களுக்கு மனசாட்சி இல்லையா , உங்கள் ராகு காலத்தை PIL ( பப்ளிக் interest litigation ) கோர்ட்ல potrugngale அங்கே poi ஆதாரத்தை தரச்சொல்லு . அதை விட்டுட்டு எப்போப்பார்த்தாலும் பொய் பேசறது . இதுக்கு ஊரிலுள்ள எல்லா வஹாபியும் வக்காலத்து . BHEL , HAL , HMT , HAPP , BHPV , BSNL போன்ற govt கம்பெனிகள் இத்துணை ஆண்டுகளுக்கு பிறகும் பெரிசா வளர்த்துச்சா , அதேசமயம் L &T , ரிலையன்ஸ், Tata , பிர்லா இன்னும் எத்தனையோ கம்பெனிகள் மிக பெரியதாக வளர்த்தது . முன்னே சொன்ன அரசாங்க கம்பெனிகள் இந்தமாதிரியான வேகமான திட்டங்களுக்கு saripattuvarathu , மேலும் அவை அரசங்க வேலைக்கு பழக்கமான லஞ்சத்தில் ஊரியவை, இதனால்தான் வெளிநாட்டு கம்பெனிகள் தனியார் கம்பெனியுடன் தான் கூட்டுசேரும் அதுதான் சரியும் கூட. அந்த அடிப்படியில் 2012 , 2013 UPA congi கூட்டணி இருந்தப்பவே இதற்கான ion பிராஸில் ரிலையன்ஸ் மற்றும் 30 பிற கம்பெனிகள் தேர்வு செய்யப்பட்டன .இங்கு வஹாபிகள் சொல்வதுபோல் அல்லாமல் 40000 கோடி ஆர்டரில் வெறும் 4000 (10 %) தான் ரிலையன்ஸ் ஆர்டர் . உண்மை இதுதான் , இதை மறைத்து ராகு காலம் அரசியலிலும், அவரை சப்போர்ட் செயும் வஹாபி , வாடிகன் கும்பல்கள் வலை தளத்திலும் மிக கடுமையான முயற்சி செய்கிறார்கள் . அது நடக்காது அது கான் கிராஸிஸை படுகுழியில் தள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை .

 • நக்கல் -

  மோடி எதிர்ப்பாளர்கள் அண்ணாந்து பார்த்து மேலிருந்து ஏதாவது விழும்னு பார்த்தாங்க.. காக்கா போற்றுச்சு.. வாய தொறந்து புடிச்சிகோங்க...

 • kmathivanan - Trichy ,இந்தியா

  வகாபி பாய்ஸ் கதருங்க . நீங்க என்ன கதறினாலும் Indian airforcekku plane வந்திரும் , உங்கள் Pakistan அம்பேல் . ஜனவரி இந்த விமானம் படையில் சேர்ந்திடும். நீங்களோ , அமெரிக்காவோ , பாகிஸ்தானோ , சீனாவோ ஒன்னும் panna mudiyathu. உங்கள் கான் கிராஸிக்கு கமிஷன் போபோர்ஸ் போல கிடைக்காது.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   தயாரிச்சா தானே ? செல்போன் வியாபாரி 30000 கோடி வங்கி கடன் வச்சி மூடின மாதிரி இதையும் மூடிவிடுவான் . சீனா பாகிஸ்தான் இந்தியாவை செய்யும் டேமேஜ் விட மோடி அரசு டேமேஜ் அதிகம் .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இவரு நம்மூரு நிர்மலா மாமா மேஸ்திரி மாதிரி இருக்காரு . வடை பார்ட்டியிடம் வாங்கிகிட்டு கூவுற்றார் போலிருக்கு .

  • nicolethomson - bengalooru,இந்தியா

   தமிழர் என்று பெயர் வைத்த பாலைவனத்தார் என்று கத்த தோன்றுகிறது, எவ்ளோ நாளுக்கு தான் குல்லாய் போட்டு ஏமாற்றுவார்கள்?

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தை விட சிறந்தது என்றால், 54 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்தியாவில் தேவைதானா?

  • Changes - Pkt,இந்தியா

   எல்லா அரசுடமை ஆக்கப்பட்ட நிறுவனமும் கவர்மெண்ட் (அரசு) பஸ், கவர்மெண்ட் ஸ்கூல் மாதிரிதான். எல்லாம் சமூக நீதியால் / இட ஒதுக்கீட்டால் வந்த பிரச்சனை.

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   ரபேல் போர்விமானங்களை கட்டுவது ரிலையன்ஸ் அல்ல, அவை டஸ்ஸால்ட் நிறுவனத்தினால் பிரான்சிலேயே கட்டப்படுகிறது. HAL ஏற்கனவே தேஜஸ் மார்க் II விமான கட்டுமானத்தில் பிசியாக இருக்கிறது. மேலும் Advanced Medium Combat Aircraft (AMCA) உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. இணையத்தில் தேடிப்பாருங்கள். இந்தியா விரைவாக முன்னேற defense துறையிலும் தனியாரின் பங்களிப்பு அவசியம் தேவை

  • jagan - Chennai,இந்தியா

   தேவையில்லை ...அதை தனியாருக்கு விற்பதே நல்லது

  • Anand - chennai,இந்தியா

   தனியாருக்கு விற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  நீங்க என்ன சொன்னாலும் சரி எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஏனிந்த கதறல் சப்தம். முழு பூனைக் குட்டியும் வெளியே வந்து விட்ட பயமா.......என்ன ஸ்க்ரூ கொடுத்தாலும் நிலைமை கைமீற ஆரம்பித்து விட்டது. ராகுலை ஆஃப் செய்தால் மட்டுமே வேகம் தணியும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  10 % தான் ரிலையன்ஸ் மீதி, 2ஜி போல 90 % ரெலைன்சின் பினாமி கம்பெனிகள்

  • sumutha - chennai - Chennai,இந்தியா

   அதுல ஒண்ணு ஒன்னிது இன்னொன்னு என்னிது.

 • HSR - Chennai,இந்தியா

  இல்ல இப்போ 50% இருந்தா என்ன தப்பு ? உங்களுக்கு தேவை அவங்க கடின ,விரைவான உழைப்பு + மூலதனம் நீங்கள் தெரிவு செய்யும் இன்ஜினியர்கள்.அவ்வளவுதான்.அதை ரிலையன்ஸ் குழுமம் ஈடுசெய்யும்.. CARRY ON..

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  அம்மணி பிரான்ஸ் விஜயம் EFFECT பார்த்தேர்களா டசால்ட் நிறுவனம் விளக்கம் ரோட்டில் வந்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டான் , அதாவது 40000 கோடி என்றார்கள் ரபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் பங்கு 10 சதவீதம் மட்டுமே அதாவது 10 சதவீதம் = 40000 கோடி அப்போ 100 % எவ்வவளோ """ஈஸ்வரோ ரட்சை " . அம்மணி பிரான்ஸ் ஓடியபோதே ஏதோ அறிக்கை வரும் என்று நினைத்தோம் பூனை குட்டி வெளியே வர தொடங்கியுள்ளது .

  • Anandan - chennai,இந்தியா

   இப்படி பண்ணிட்டீங்களே ராமகிருஷ்ணன், பக்தர்களின் கோவம் இன்னைக்கு உங்க மேலதான்.

 • sams - Palakkad,இந்தியா

  Angheyum vayila vada suduranugha.rafel thirudan

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ எப்டி மோடி ஜி இதை மட்டும் பரிந்துரைத்தார் ? அது எப்புடி உங்களோட டாக்குமென்டில் ரிலையன்ஸ் ஒரு கைம்மாறு, கட்டாயம் வேறு வழியில்லாம ஒப்பந்தம் செய்யப் பட்டதுன்னு எழுதி இருக்காமே.. அங்குள்ள பத்திரிக்கை"களும்" ஒப்பந்தம் செய்த பிரான்ஸ் அதிபரும் அதைத்தானே சொல்றாங்க ? ( அங்கே அக்கா நல்லாவே காதை புடிச்சி திருவுது)

  • Ray - Chennai,இந்தியா

   ( அங்கே அக்கா நல்லாவே காதை புடிச்சி திருவுது) - முற்றிலும் தவறு தலைகீழ்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  12 நாளுக்கு முன்னால கம்பெனி ஆரம்பிச்சி... இடத்தை வளைச்சுப்போட்டு ரெண்டு வருஷமாகியும் அது அப்புடியேதான் இருக்கு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement