Advertisement

ராஜஸ்தான் காங்.,முதல்வர் வேட்பாளர் யார் ?

புதுடில்லி: ராஜஸ்தானில், டிச. 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்., வெற்றி பெற்றால், முதல்வர் பதவியில் அமர முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராகுலின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் சச்சின் பைலட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.


இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்க காங்., திட்டமிட்டு வந்தது. இதன் மூலம் கட்சி ஒன்றாக இருக்கும். யாரும் எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ள மாட்டார்கள். இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து செயல்படுவார்கள் என மேலிடம் கருதியது.


ஆனால், இந்த திட்டத்தில் மாற்றம் செய்து, சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ராகுல் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இது அவரின் தேர்தல் பிரசாரம் மற்றும் பேரணியின் போது தெரிந்தது. அவர் பேசும் போது, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, மக்கள் மற்றும் தொண்டர்களின் குரல்களை கேட்கவில்லை. அடுத்த முறை அவ்வாறு நிகழாது என்றார்.


கடந்த 1998 முதல் 2003, 2008 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியின் போது அசோக் கெலாட் முதல்வராக இருந்தார். ராகுலின் பேச்சு மூலம், அக்கட்சி மாநிலத்தில் ,புதிய தலைமை மற்றும் நிர்வாகத்தை நோக்கி நகர்வதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
பைலட்டை முதல்வராக்க மேலும் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, தேர்தல் தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் அனைத்தும் காங்., அதிக இடங்களில் பெறும் என்று கூறுகின்றன.


இரண்டாவது, மாநிலத்தில் பிரபலமான தலைவராக சச்சின் பைலட் உருவெடுத்துள்ளார். இவருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. இதனால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  தறி கெட்டு ஓடி கொண்டிருக்கும் ராஜஸ்தான் அரசாங்கத்தை சரியான திசையில் செலுத்த நல்ல "பைலட்"தான் தேவை. .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இளைமைக்கும் முதுமைக்கு போட்டியா...

 • Ambika. K - bangalore,இந்தியா

  முக்கந்தமைந்தனும் முக்கி முக்கி கருத்து பதிகிறார். இந்தியா உருப்படாமல் போக நினைக்கிறார் pola. வாழ்த்துக்கள்

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  அசோக் கெலாட் ஒன்னும் செய்யவில்லை. பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் க்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது நிரூபணம் ஆகிக்கொண்டு வருகின்றது.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  பரூக் அப்துல்லாவின் மாப்பிள்ளை இந்த சச்சின் பைலட் ...

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  சச்சின் பைலட் தான் சரியான தேர்வு . ராஜஸ்தானில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெறும்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The aged people should give way to the young generation for the development of the state in state assembly election.The Congress party should not give seats to the aged candidates for the state assembly election to avoid the Major problem after the election result.If the Congress project the CM candidate before and after the election also the impact is same to the party .So precaution is better than cure always.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அசோக் கெலட்டின் ஆட்கள். Pilottukku குழிபறிக்காமலிருக்கணும்

  • Arasu - Ballary,இந்தியா

   கண்டிப்பாக செய்வார்கள், ராஜஸ்தானில் சில வருடம் பணி புரிந்திருக்கிறேன், ஜாதி வெறி மிக அதிகம், இரண்டாவது கட்சியில் மூத்த குறுநிலமன்னர்கள் தமிழ்நாட்டை போலவே அதிகம். பிராமின் 7 % வாக்குகள் சிதற வாய்ப்புண்டு, தாழ்த்தப்பட்ட சமூகமான மீனா இனத்தவரும் சற்று அப்செட் ஆக வாய்ப்புண்டு, ஆனால் இஸ்லாமிய வாக்குகள் முழுவதுமாக கிடைக்கும். இவர் பாரூக் அப்துல்லாவின் மாப்பிள்ளை

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ராசஸ்தான BJP ட்டேந்து மீட்டெடுத்து பழயபடி நல்லெ நெலைக்கி கொண்டார Congress க்கு minimum ஒரு பத்து வருஷம் புடிக்கும்...

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   நீங்க சொல்லுவதை வாதத்திற்கு சரி என்று கொண்டால், காங்கிரஸ் 70 வருஷமா கெடுத்த இந்தியாவ 5 வருஷத்துல சரி செய்யணுமா?? ... சூப்பர் நியாயம்... தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி...

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   இந்தியாவெயும் BJP ட்டேந்து மீட்டெடுத்து பழயபடி நல்லெ நெலைக்கி கொண்டார Congress க்கு minimum ஒரு பத்து வருஷம் புடிக்கும்... What is applicable to Rajasthan is the same for India as well...

  • Muruga Vel - Chennai,இந்தியா

   வைரமுத்து முகத்தை பார்த்து அவர் குணாதிசியங்களை சொன்னீங்க ...கொஞ்சம் உங்கள பத்தியும் சொல்லுங்க ..

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்தெ மோடி இல்லென்னா அமித் ஷாவ போடலாம்..... ராசஸ்தான சுத்தெமா தொடச்சி எடுத்திடுவாங்க....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement