Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் ஆலோசனை

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.


தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்கப்பட்டது. மாநில அரசுகளும் இதே அளவு குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று பா.ஜ., ஆளும் மாநிலங்கள் விலையை குறைத்தன.


இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, 2வது முறையாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (64)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மனசாட்சியே இல்லாத ஒரு கட்சி தலைவர்களை இப்பொழுதான் சுதந்திர இந்திய மக்கள் காண்கிறார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேர்தல் பயம்... கடைசி நேர சலுகைகளில் மக்கள் ஏமாற மாட்டார்கள்...

 • Sandru - Chennai,இந்தியா

  தேர்தல் வரும் பின்னே , பெட்ரோல் விலை குறைப்பு முன்னே. இதுதான் கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது இந்த டீ கடைக்காரர் செய்தது. மக்கள் நலனை பின் தள்ளி அதானி, அம்பானி , அமித் சேட்டு, அணில் அகர்வால் போன்ற கொள்ளையர்களின் நலன் காக்கும் இந்த முன்னாள் தேநீர் கடைக்காரரை விரைவில் பதவியில் இருந்து தூக்கி ஏறிய வேண்டும்.

 • Anandan - chennai,இந்தியா

  தேர்தல் வருது அதான் விரிந்த மார்பு கொண்டவருக்கு பயம் வந்துடுச்சு.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "எல்லோரும் அடுத்த தேர்தலில் ஓட்டு போட உயிருடன் இருக்க வேண்டும். அதனால் கொஞ்ச காலம் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்ற வேண்டாம். தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தி ஒட்டு மொத்தமாக நடுத்தர, ஏழை வர்க்கத்தை சாகடித்து விடலாம்".

 • Kumar Toronto -

  மோடிஜி! நீங்க பேசாம எல்லா ஜனங்களுக்கு ம் பெட்ரோலியம் பங்கை ( crude oil share) ஆளுக்கு 10 ன்னு ஆதார் கார்டு மூலமா டெபாசிட் பண்ணி உட்ருங்க...அப்புறம் எல்லாரும் பெட்ரோல் விலை ஏறுனா சந்தோஷம்தான் படுவாங்க..

 • Viswanathan - karaikudi,இந்தியா

  நாங்களும் ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறோம் . ஒரு மாநிலத்தில் காலி செய்யலாமா இல்ல மொத்தமாவே பாஜகவை வீட்டுக்கு அனுப்பலாமா என்று .

 • Nellai Thambi - Tirunelveli,இந்தியா

  There are so many intelligents in India who doesn't have any nation in such cheap. At the same time so many cracks in the world which is more in India than in any nation. Try to figure out which is correct and which is wrong. Try to maintain the economy for all. In the current scenario, either Modi or jetley failed to save country from inflation.Either they should nominate a correct economist or should leave from sarkar.which is good for common man.

  • rajan - erode,இந்தியா

   bjp do not want common man. only vote to win in the election. vote bank politics

 • Christopher -

  போண் ஒயர் பிஞ்சு 6 மாசம் ஆச்சு

 • Laser Eyes - Chennai,இந்தியா

  ஆண்டிகள் ஒன்று சேர்ந்து மடம் கட்டிய கதைதான்

 • Kumar - Chennai,இந்தியா

  தேர்தல் உறுதிமொழிகள் யாவும் அடுத்த 2019 தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்படும். அதற்கான முயற்சியே இது. ஏன், 15 லட்சம் கிடைக்க கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் தேர்தல் முடிந்ததும் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறும்.

 • Madhavan Nagarajan -

  மோடி ஜி Petrol disal. விலை யால நீங்க தோக்க போரது உறுதி 👎

 • rmr - chennai,இந்தியா

  விலை வாசியை கட்டுப்படுத்தாது அரசு வீண் மக்களுக்கு அது தேவை இல்லை தகுதி அற்ற அரசியல் வாதிகள் தேவை இல்லை

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  பெட்ரோல் டீசல் விலை 40 ரூபாயாக குறைக்கப்பட வேண்டும்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்டியே "டீ"யோட வெலய கொறப்பாரா அந்தெ டீ master ரூ...?

 • சிவம் -

  இங்கு சில அரை வேக்காடுகள் மோடி ஜிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்றும் அவர் வெளிநாட்டு பயணம் பற்றியும் உளறுகின்றன. மளிகை பொருட்கள், பருப்பு வகைகள் பாதிக்கு பாதி குறைந்துள்ளதே? எந்த தேர்தலை மனதில் வைத்து மோடிஜி குறைத்துள்ளார். பெட்ரோல் டீசல் 20 ரூபாய் குறைத்து, அதை சரிக்கட்ட மானியம் வழங்கி, அதன் மூலம் உங்களிடம் நற்பெயர் எடுத்து, 2019 ல் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகி மோடிஜிக்கு என்ன லாபம். பல லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்க்கவா? அப்பழுக்கற்ற அந்த நல்ல மனிதருக்கு அந்த எண்ணம் இருந்தால் அவர் எப்போதோ செய்திருப்பாரே. இந்த சின்ன விஷயம் உங்களுக்கு தோன்றவில்லையா? எந்த நியூஸ் சேனல்களும், பத்திரிகைகளும் மோடிஜி அரசின் பல சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இல்லை. ஏனென்றால் அவைகளில் பாதி மெஷினரி விசுவாசிகள், மற்றவை கான் க்ராஸ் விசுவாசிகள். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. உங்களிடம் நன்மதிப்பை பெற்று மானியம் வழங்கி பெட்ரோல் விலையை குறைக்க அரசுக்கு ரொம்ப யோசனை தேவையில்லை. சர்வதேச விலை, மற்றும் டாலர் மதிப்பு போன்றவை இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். பளுவை அரசு சுமக்காததின் விளைவு, நம் நாடு கடன் சுமையை தவிர்ப்பது. ராணுவத்திற்கு தளவாடங்கள், அதிக கருவிகள் போன்ற பல பலன்கள் உண்டு. சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு வேளை உங்கள் இஷ்டபடி மோடிஜி இல்லாமல் வேறு ஒருவர் ( ராகுல் கூட இருக்கலாம்) பிரதமரானால், அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள். 60 ஆண்டுகள் வரலாற்றை புரட்டுங்கள். வல்லரசுகள், மற்ற நாடுகள் முன் தலை நிமிர்ந்து நிற்கும் நம் நாட்டை தலை குனிய செய்வது, IMF, உலக வங்கிக்கு சலாம் போடுவது, செயற்கையாக பெட்ரோல் விலை குறைப்பு, இலவசங்கள், மானியங்கள் போன்ற எலும்பு துண்டுகளை நாய்க்கு (மக்கள் ) வீசிவிட்டு, சிதம்பரம் போன்ற புத்திசாலிகள் கோடி கோடியாக கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். மெஷினரிகள், மதமாற்று வியாபாரிகள் புத்துணர்ச்சி பெற்று இந்தியாவை முழுமையாக இத்தாலியாக மாற்ற டார்கெட் செட் செய்வார்கள். தேச த்ரோகிகளுடன் விட்டு போன உறவை புதுப்பிக்க இஸ்லாமிய இந்தி நடிகர்கள் மூலம் தூது விடுவார்கள். எவையெல்லாம் 5 வருடம் மூடிவைக்கப்பட்டுள்ளனவோ அவைகள் புதிய அரசின் ஆசியுடன் துவக்கப்படும். பல காண்ராவிகள் அரங்கேறும். நாமும் பெட்ரோல் டீசல் விலை ஏறவில்லை என்று புளகாங்கிதம் அடைவோம். நாட்டு பற்று அல்லாத செயல்கள், நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல்கள் அரங்கேறும். பாரதத்தை பிடித்த புற்றுநோய் சிறிது சிறிதாக கொல்லும் என்பதை நாம் உணரும்போது நாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு இருக்க மாட்டோம். இன்னும் சொல்லப்போனால், நடுநிலை, மதசார்பற்ற, - போன்ற தத்துவங்களை பேசி நாசமாகி போய் விடுவோம்.

  • Narayan - Zurich

   சூப்பர் கருத்து. நம்ம மக்களுக்கு காமன் சென்ஸ் இல்லை. இப்போ இருக்கும் சூழ்நிலையில் பாஜகவுக்கு எதிராக போடும் ஒவ்வொரு ஓட்டும் தேசத்துக்கு எதிரான ஒட்டு.

  • K. Shanmugasundararaj - Tirunelveli

   நம்ம ஆளு இந்துமதகாவலன் இனியவர் வல்லவர் பிரதமரான பின்பு சாதாரண ஏழை எளிய மக்கள் அடைந்த பலன் என்ன. ஒரு பலன் அடைந்துள்ளார்கள். வங்கியில் குறைந்த பட்ச டெபாசிட் இல்லாது கணக்கு துவங்கி , பணம் மதிப்பு இழப்பு மோடி செய்த பொழுது , மோடி துவக்கிய ஏழை எளிய மக்களின் கணக்கான ஜன் தன் கணக்கில் ஏகப்பட்ட பணம் 40000 கோடிக்கு மேல் ஒரே மாதத்தில் போடப்பட்டுள்ளது.வேற யாருக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.பருப்பு , எண்ணெய் விலை குறைந்ததும் காரணம் மழையால் ஏற்பட்ட நல்ல விளைச்சல் .பெட்ரோல் விலை குறைந்த பொழுது மக்களை கொள்ளை அடித்து விஜய் மல்லையா , நீரவ் மோடி ஆகியோருக்கு மக்கள் பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி அவர்களை போன்ற பணக்காரர்களுக்கு தான் மோடி நன்மை செய்துள்ளார். வேலைவாய்ப்பு குறைவு ,தொழில்கள் அதிகமாக துவக்கப்படவில்லை.பெட்ரோல் விலை ஏற்றத்தால் விலை வாசி உயர்வு ஆகியன தான் சாதாரண மக்கள் அடைந்துள்ள நன்மை. ஆனால் மோடி இந்து மதத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்த பின்பு இந்துக்களுக்கு நன்மை இல்லை. மோடி கட்சிக்கு பி ஜெ பி க்கு , ஆர் எஸ் எஸ் க்கு அவங்க அமைப்புகளுக்கு அதிக நிதி என்றும் இல்லாத அளவில் வந்துள்ளது.இந்துக்கள் நன்மை அடையவில்லை .மோடியும் , பி ஜெ பி யம் , ஆர் எஸ் எஸ் ம் நன்மை அடைந்துள்ளார்கள் . இது தான் உண்மை.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு

   'கான்' 'க்ராஸ்' காலத்துல பெட்ரோல் விலை ஏறும்போது இதே மோடிஜி (எல்லோரும்தான்) கத்தினாங்களே ?

  • rajan - erode

   அப்போ அருண் ஜைட்லி சொன்னது - பெட்ரோல் விலை உயர்வு பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்த கூடாது. அரசு தான் ஏற்கவேண்டும். சொன்னதை செய்யும் உண்மை வீரர்கள். 15 லட்சம் உண்மை நிதின் கட்கரி போட்டு உடைத்தார்.

  • Veeraputhiran Balasubramoniam - Chennai

   மக்களிடம் மறைந்த " ஊடகங்க்களால்" மறைக்கடிக்கப்பட்ட ஒரு விஷயம் . ஓவ்வொரு ஆண்டும் பண்டிகைகாலங்க்களில் இந்த கடத்தல் பேர்வழிகள் பௌர்ப்பு, வெங்க்காயம் போன்ற அன்றாட தேவயான உணவுப்பொருள்களை மறைத்டு வைத்து பண்டிகை காலங்க்களில் செயற்கை தட்டுப்பாட்டினை உருவாக்கி, விலை கிலோ 200 வரயில் விற்று மக்களின் உழைப்பினை கொள்ளை அடிப்பது வழக்கம் கடந்த ஆண்டிலிருந்து. இதனை ஊடகங்க்கள் ஊதி பெரிது படுத்தும் ஆனால் விலை உயரவில்லை என்பதனை எந்த ஊடக்மும் விளம்பரப்படுத்தவும் இல்லை அரசியல் எதிர் கட்சிகளும் பாராட்டவும் இல்லை. நாம் மோடிஅவர்களை ஏன் இதர்க்காக பாராட்டக்கூடாது சமூக வலை தளங்க்கள் மூலம் செய்யலாமே....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாலர வருசமா கொள்ளையடிச்சிட்டு இப்பந்தான் ஆலோசனைய நடத்தறானுவ ஆள கொஞ்சமும் லாயக்கில்லாதவனுங்க....

 • கோமாளி - erode,இந்தியா

  ₹65க்கு வரும்

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

   100 ML 65 க்கு வரும்..

 • rajan. - kerala,இந்தியா

  மத்திய அரசு இங்கு பெட்ரோலுக்கு மாற்று தீர்வாக எலக்ட்ரிக் வாகனங்களை முன்னெடுக்க வேண்டும். அது சார்ந்த தொழில் நுட்பத்தை உடனடியாக இந்தியாவில் கொண்டுவர வேண்டும். வாகனங்களின் விலையையும் அது சார்ந்த சலுகைகளையும் அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுசூழல் பாதிப்புகளையும் விபத்துக்களையும் தவிர்க்கலாம். குறிப்பாக இன்றைய பெட்ரோல் வாகனங்களை DUEL ஸிஸ்டெமாக E -மோட்டார் வாகனங்களாய் கன்வெர்ட் செய்யும் தொழில் நுட்பம் அறிமுக படுத்த பட வேண்டும். இது ஓன்று தான் விரைவான தீர்வாக அமையும். அரசு இந்த முடிவை அமல் படுத்த வாழ்த்துக்கள்.

 • HSR - Chennai,இந்தியா

  ஹேய். சிங்கம் களத்தில் இறங்கி விட்டது..சூப்பர் . அடுத்தது ரபெல்தான். பப்புவ சும்மா காட்டு காட்டுண்ணு காட்டப்போரார்.. ஹாஹாஹா

 • rajan. - kerala,இந்தியா

 • srikanth - coimbatore,இந்தியா

  நாங்க தேர்தல் வரும்போது தான் மக்களை பத்தி சிந்திப்போம். மத்த நேரங்கள்ல எந்த நாட்டுக்கு போகலாம் இன்னு மட்டும் தான் சிந்திப்போம்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஊழல் தலைவர்களின் சொத்துக்களை முடக்கி அரசு கஜானாவில் சேருங்கள் , நாட்டின் பொருளாதாரம் உயரும் கடுமையான நடவடிக்கை தேவை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பணக்காரர்களுக்கு வரியை கூட்டுங்கள் ஏழைகளுக்கு வரியை குறையுங்கள்.

 • Sriram - Chennai,இந்தியா

  Election வருதுல ஆலோசனை பண்ணாம என்ன பண்ணுவ... குறைக்கற வழிய பாரு ...

 • R Sanjay - Chennai,இந்தியா

  இத்தனை வருடங்கள் விட்டு விட்டு இப்போது மட்டும் எதற்கு இந்த பெட்ரோல் குறைப்பு நாடகம்? எல்லாம் தேர்தல் பயம். ஆனால் என்ன செய்தாலும் பிஜேபிக்கு தோல்வி நிச்சயம்

 • tamil - coonoor,இந்தியா

  பிரதமருக்கு மக்கள் மீது இருக்கும் அக்கறையை காட்டுகிறது, எவ்வளவு பெரிய மனசு

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  நாட்டில் 100 கோடி பேர் அரசியல் அறிவோ , பொருளாதார அறிவோ , உலக அறிவோ இல்லாதவர்கள் தான் அப்படி இருக்க மோடியின் செயல் , இந்தியாமீது கடந்த 4 ஆண்டுகளில் உலகநாடுகள் கொண்டுள்ள மதிப்பு உயர்வு இந்திய அரசியல் கரட்சஸிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கு உள்ள பண நெருக்கடி ( பணம் செல்லாது என அறிவித்ததனால் ) இது எதுவுமே புரியாது விளக்கியும் புரிய வைக்க முடியாதவை. படித்தவர்களுக்கு கண்ணால் பார்க்கமுடியாத போது உணரமுடிய வில்லை . அப்படி இருக்க ..... நாம் கருத்தது தெறிவிப்பவர்களை குற்றம் சொல்ல முடியாது. மேலும் சைனா இந்தியாவிடம் கூட்டு வியாபாரத்திற்கு அழைப்பதுவும் ஏன் என்று புரிய வைப்பது கடினம் தான். அமெரிக்கா கூட மிரட்டுவது மட்டுமே செய்ய முடியும் ன்ஹாம் எதிர்த்ததால் அமைதியாகத்தான் இருக்கும் , பாக்கிஸ்த்தானின் பண நெருக்கடி பணம் கொடுக்க யாரும் முன் வர தைரியம் இல்லாமல் அமையாக் கொடுக்க மறுப்பதன் காரணம் என பல உலக விஷயங்கள் மறைமுகமாக இந்தியாவின் வளர்ச்சி அளிக்கும் மறைமுக மிரட்டல் தான் . 2019 மக்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என் பாப்போம் . தமிழகத்தில் எதிர் கட்சிகள் எப்படி அறிக்கைவிட்டு எதற்குமே ஆதாரம் கொடுக்க முடிய வில்லையோ அதே போல் மத்தியில் ரஃபேல் பற்றி ஒரு புரளியை விட்டு விட்டு அமைதியாக இருப்பார்கள் புதிதாக 5 ஆண்டுகளில் ஒரு விஷயம் கூடவா ஊழலை பற்றி யாருமே மாட்டவில்லை ??????

 • manoharan - TIRUVALLUR,இந்தியா

  பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்வதேசப்பிரச்சனை, அதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று பல அமைச்சர்கள் கூவினார்களே. அப்பறம் எதற்க்காக இந்த ஆலோசனை. ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். தேர்தல் பரப்புரைக்காவது போகலாமே. நாலு ஓட்டுகளாவது கூடுதலாக விழுமே.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  காங்கிரஸ் மேல பழிபோட்டு இன்னும் எவ்வளவு விலை ஏத்தலாம் என்று ஆலோசனை செய்வார்கள் .

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   உனக்கு புளி கரைக்குது போல...எங்கே விலையை குறைச்சிரக்கூடாதே ன்னு...

  • masthan sombu - korukku pettai ,இந்தியா

   புளி யாருக்கு கரைஞ்சி இப்ப நாடகம் ஆடுறானுகன்னு மக்களுக்கு தெரியும்..... மூளை இல்லாத பிஜேபி சொம்புகளுக்கு எப்படி தெரியும் ?

 • Panneer - Puduchery,இந்தியா

  தலைமைக்கு போட்டியே இல்லை ? இன்னும் ஒரு 5 ஆண்டுகள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியது தான். கின்னஸ் ரெகார்டும், உலக பணக்காரர்களும் உருவாவதில் இந்திய சாதனை படைக்கும் . உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு .

  • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   Panneer - puduchery,இந்தியா :- உலக பணக்காரர்களை உருவாக்கியது காங்கிரஸ்தான். கடன்களை அள்ளி அள்ளி கொடுத்தது காங்கிரஸ். அவர்கள் கடனை அடைக்காமல் காலம் தாழ்த்திய போதெல்லாம் உபரியாக கடன் கொடுத்து அதன் மூலம் பழைய கடனை அடைத்து .. தொடர்ந்து வங்கிகளின் பணம் தொழிலதிபர்கள் கையிலேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டு தாராள மனப்பான்மை காங்கிரசுடையது. பணக்காரர்கள் அடைக்காமல் ஏமாற்றி வந்த கடன்கள் இப்போது தான் கறாராக வசூலிக்க படுகிறது. ஆனால் அதெல்லாம் உன்னை மாதிரி நொள்ளைக்கண்ணுக்கு தெரியாது.

  • Subramaniam Ramesh - madurai,இந்தியா

   கடன் கொடுத்தது என்னவோ காங்கிரஸ்தான் ஆனால அந்த கடனை கட்ட வேணாம்னு சொன்னது அநேகமா உங்க கட்சியாதான் இருக்கும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அரசாங்கம் ன்னா இப்டி இருக்கோணும்.

  • Subramaniam Ramesh - madurai,இந்தியா

   எப்படி?

  • masthan sombu - korukku pettai ,இந்தியா

   பிஜேபி சொம்புகள் என்ன கருத்து போட்டாலும் மாமூல் அள்ளி தரணும்.

 • Susainathan -

  election purpose only reduced wherever bjp rulings that place other places they not reduced because why only wise people understand

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா....வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா....

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  நா இன்னிக்கீ நல்லா லூதி வச்சிருKN . யே பெரு பிரஸ்ட் ல படீங்க அப்டீ வந்தூவச்சீறும் மாநில அரசுகள், மத்திய அரசு கலால்வரி குறைப்பை அடுத்து, தங்கள் பங்குக்கு லிட்டருக்கு, 2.50 ரூபாய் விலை குறைப்பு நடவடிக்கை போல, தமிழகம் பின்பற்ற வில்லை. மாறாக, 'நிதி நிலை குறித்து ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்படும்' என்ற முதல்வர் கருத்து, பா.ஜ.,வை அடியொற்றி செயல்படவில்லை என்று காட்டுகிறது.அதற்காக, 2004ல், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததால், லோக்சபாவில் அதிக தோல்வியை அடைந்தது என்ற கருத்து, இன்று தேவையில்லை. தமிழகம் முற்றிலும் மாறுபட்ட அரசியலை, இன்று சந்திக்கிறது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு, தமிழகத்திற்கு வருவாயைக் குறைக்கவில்லை. மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு செயலாக்கம் பெறுகின்றன. காவிரி நீர் தாவா முடிவுக்கு வந்தது, இலங்கை அரசுடன் மத்திய அரசு கொண்டிருக்கும் புதிய நட்புறவால், நமது மீனவர்களை துன்புறுத்துவது அல்லது சிறைப் பிடிப்பது ஆகிய செயல்கள் குறைந்திருக்கின்றன. தமிழகத்தில் சில சிறிய கட்சிகளும், 'தேசம் பாதுகாப்போம்' என்ற கருத்தை ஏற்கத் துவங்கி உள்ளன. இந்த சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் வரும் முன்பாக, அ.தி.மு.க., தன்னை ஸ்திரப்படுத்தி, வலுவாக நிலை நிறுத்தும் முயற்சியில் செயல்படுவதாக கருதலாம். அந்த அடிப்படையில், பிரதமரைச் சந்தித்த தமிழக முதல்வர் செயல், அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது

  • Kumar - Chennai,இந்தியா

   ஆஸ்திரேலியா நந்தினி திவ்ய பாரதி, நடிப்புடா எதோ தமிழ புதுசா கத்துக்கிடுற கொழந்தைன்னு பலர் நம்புறாங்க. ஆனா, முதல் வரிய பாதி படிச்சிட்டு அப்புறம் படிச்சா ….. ஏனப்பா பெண் படமும் பெண் பெயரும் போட்டுக்கிட்டு ….நல்ல தமிழ்ல எழுதுங்க ….. கருத்து நல்லாயிருக்கு.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஆட்சிக்கு வரும்போது என்ன விலை இருந்ததோ அதே விலையை தற்போது நடைமுறைப்படுத்த ஆலோசனை நடைபெறுகிறதோ...

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இப்போதைக்கு பாஜக மட்டுமே பெட்ரோலை ஜீ எஸ் டீயில் கொண்டு வர ஆதரிக்கிறது. இப்போது கூட அவர்கள் மாநிலத்தில் எல்லாம் வரி குறைத்து உள்ளார்கள். ராஜ்ய சபை பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் பெட்ரோலை ஜீ எஸ் டீயில் கொண்டு வர முடியாது. பாஜக அல்லாத கட்சிகளும் காங்கிரஸ் சும் இரட்டை வேடம் போடுகிறது. ஆனால் சில டுமீளர்களுக்கு எல்லாத்துக்கும் எப்போதும்போல மோடி ஒயிக தான்

 • J.Isaac - bangalore,இந்தியா

  4.5 ஆண்டு நாடகத்தின் கிளைமாக்ஸ்

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  (மறுபதிவு )இங்கு உள்ள அனைவர்க்கும் ஒரு தகவல் எண்ணெய் வளம் மிக்க நாடுகள் ஆன சவூதி , கத்தார் , எமிரேகம் போன்ற இடத்தில கடந்த மூன்ற ஆண்டுகளில் 2016-2018 இந்தியாவில் உயர்ந்ததை விட அதிகமாகவே உயர்ந்து உள்ளன , அதற்கான காரணம் என்ன வென்று உங்கள் யுகத்துக்கு விட்டு விடுகிறேன். சவுதியில் 2016-1l-0.9 SAR, 2018-1l-2.03SAR,ஏற்றம் 125%, கத்தாரில் 2016-1l-1.35QAR, 2018-1l-2.05QAR, ஏற்றம் 46%, எமிரேகத்தில் 2016-1l-1.69AED, 2018-1l-2.61,ஏற்றம் 54%, இந்தியாவில் (சென்னையில்) May 2014-1L-Rs74.60, Oct 2018-1L-Rs85.70,ஏற்றம் 15%, எரிபொருள் சிக்கன நடவடிக்கையும் மற்றும் மாற்று வழிகளை ஆராய்ந்து எடுத்து செல்வதே வரும் காலத்தில் சிறந்த தீர்வாக இருக்க முடியும். வளைகுடா நாட்டில் எரிபொருள் உயர்வுக்கும் மோடி தான் காரணாம் சொன்னாலும் நம்புவாங்க நம்ம மூளை சலவை அடைந்த குரூப்

  • Subramaniam Ramesh - madurai,இந்தியா

   அட நீ சும்மா இருப்பா, படமே இப்பதான் கிளைமாக்ஸ் வந்துருக்கு.. நீ வளைகுடாவிலேயே இருப்பா...

 • Siva - Aruvankadu,இந்தியா

  தமிழ் நாடு அரசு இலவசத்தை நிறுத்தி டாஸ்மாக் குறையுங்கள். டாஸ்மாக் நோயாளிகள் உடல் நலம் தேறி மனநலம் தேறி உழைத்து வாழ சத்து மாத்திரை வழங்குங்கள்.. அல்லது தினம் ஒரு இலவச அவித்த முட்டை வழங்கி தமிழனை மப்பு தூக்கத்தில் இருந்து தெளிய வையுங்கள்...

 • Santhosh -

  It is not so. Central reduced 2.50 rupees, BJP ruling parties who are about to face next election reduced by 2.50 rupees. Immediately after 2 days, Election commission announced the dates for election... எங்கேயா இடிக்குதே??

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  தேர்தல் வரப்போகிறது அல்லவா. கும்பகர்ணன் உறக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்.

 • முகமது அலி -

  விலை யேற்றம் அரசுக்கு சம்மந்தமே இல்லை என்று சொன்னவுங்க எப்படி குறைத்தார்கள்.

  • வல்வில் ஓரி - Koodal

   எப்படி ன்னா நீ தினமும் நியூஸ் பேப்பர் படிக்கோணும்...பெட்ரோல் விலையில் என்னென்ன காம்போனென்ட்ஸ் இருக்கு ன்னு தெரிஞ்சிக்கிடனும்....எந்த காம்போனென்டுக்கு யார் பொறுப்பாளி ன்னு ம் தெரிஞ்சிக்கிடனும்...அப்புறம் ... வந்து அரசாங்கத்தை கேள்வி கேக்க கூடாது...இதை எல்லாம் செஞ்சால் மட்டும் தான் உனக்கு எப்படி விலை குறையுது ...கூடுது ன்னு தெரியும்.

  • Veeraputhiran Balasubramoniam - Chennai

   படித்தாலும் தொடர் விளைவுகள் புரியாது , புரிய வைக்கவும் முடியாது . நேரில் வந்தால் புரிய வைக்க முயற்சி செய்யலாம் அவ்வளவுதான்

 • Siva - Aruvankadu,இந்தியா

  Gst க்குள் கொண்டு வாருங்கள்...

 • chails ahamad - doha,கத்தார்

  தேர்தலுக்குள் இன்னும் பல ஆலோசனைகளை பிரதமர் நடத்துவார் என்பதை நம்புவோம் , தற்காலிகமாக எதையாவது குறைத்தாலும் தேர்தலுக்கு பின்பாக வைக்கின்ற ஆப்பு பற்றியும் ஆலோசிப்பார்கள் என்பதையும் நம்புவோம் . மக்களிடம் விழிப்புணர்ச்சி இருந்தால் இன்றைய நயவஞ்சக ஆட்சியாளர்களிடம் இருந்து விடுபட முடியும் என்பதை காலங்கள் நிருபிக்கும் .

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   பூனை பாலுக்கு அழுவுது......ஹா ஹா..ஒரு விஷயம் கவனியுங்க..."தேர்தலுக்கு பின்பாக..".....அப்போ இவரே ஒத்துக்கிறாரு...கங்கிராஸ் காணாம போயிரும் ன்னு...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சீக்கிரம் எதையாவது செய்யுங்கப்பா , கை காசெல்லாம் தீயா கருக்குது. வெளியில எங்காவது போகணும் எனறால் பயமா இருக்கு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement