Advertisement

பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி : கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 50,000 பேர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க செப்.,15 ம் தேதி கடைசி தேதி என மத்திய உள்துறை அமைச்சகம் நிர்ணயித்திருந்தது. இதுவரை மொத்தம் 49,992 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017 ம் ஆண்டு 35,595 பரிந்துரைகளும், 2016 ல் 18,768 பரிந்துரைகளும், 2010 ல் 1313 பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உயரிய விருதுகளுக்கு நாட்டின் எந்த மூலையில் இருப்பவரின் பெயரும் பரிந்ரைக்கப்படலாம் என்ற வகையில் எளிமைபடுத்தப்பட்டதே பரிந்துரைகள் அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் சராசரி குடிமகனும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை அளிக்கலாம் என மாற்றம் செய்யப்பட்டதால் ஆன்லைன் மூலம் பரிந்துரைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • ஆப்பு -

  அச்சே தின் ஆனே வாலா ஹைன். நோட் பந்தியில் சிக்கி சீரழிந்த ஒவ்வொருத்தனுக்கும் பத்ம விருது குடுக்கலாம் ஹைன். பிரதான் மந்திரிக்கீ நோட் பந்தி யோஜனாவுலே 100 கோடி மக்களுக்கு விருது கிடைச்சிருக்கு ஹைன்...மஸ்தான் பெருமிதம் அடையலாம் ஹைன்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கலைஞருக்கும் ஜெ வுக்கும் பாரத ரத்னம் வழங்கி அந்த பட்டத்தின் மதிப்பை மிகவும் உயர்தனும்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  மெரீனாவில் முரசொலி படிக்கும் ஒருவரை தவிர இதர 49999 பேருக்கும் விருது கொடுக்கலாம்......

 • yaaro - chennai,இந்தியா

  சென்ற முறை பிரபலம் ஆகாத பல சமூக சேவகர்கள் திறமையாளர்களுக்கு குடுக்க பட்டதால் , மோடி அரசை நம்பி விண்ணப்பம் போடுவது பல முறை அதிகரித்து உள்ளது. மோடி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே இது. வெறுப்பவர்கள் வயித்தெரிச்சலை தணிக்க , மோடி அவர்கள் குடுத்து ஜன அவுஷதியில் விலை குறைவான மருந்துகளை வாங்கிக்கலாம்

 • S.Ganesan - Hosur,இந்தியா

  நாட்டில் கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்களுக்கு கூட பத்ம விருதுகளும் , பாரத ரத்னா விருதுகளும் வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கூக்குரலிட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இது பெரிய ஆச்சர்யமில்லை.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  விருதைத் திருப்பிக் கொடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டால் என்ன செய்வது ??

 • Siva - Aruvankadu,இந்தியா

  பத்ம விருது டாக்டர் பட்டம் போல..... எனக்கு டாக்டர் பட்டம் வேண்டாம்.. கம்பவுண்டர் பட்டம் போதும் .. யார் தருவார் அந்த கம்பவுண்டர் விருது அல்லது பட்டம்...

  • vns - Delhi,இந்தியா

   காம்பௌண்டர் என்பது ஒரு தகுதி, விருதும் அல்ல பட்டமும் அல்ல. தகுதி படித்துதான் வரும் யாரும் ஒருவரை தகுதியுள்ளவராக மாற்ற முடியாது. அவரவரே உழைத்தால் தான் முடியும். தமிழகம் உழைப்பில்லாமல் முன்னேறப்பார்க்கிறது.. வெட்கக்கேடு.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்த அறிவு ஜீவிகள் என்று ஒரு குழு இருக்குமே அவர்களை பாராட்டி கொடுக்கலாமே

 • chails ahamad - doha,கத்தார்

  சாதி சமய நோக்கற்ற மக்கள் நல உழைப்பாளர்களை அடையாளம் கண்டு பத்ம விருதுகள் அளிக்கப்படுவதே இந்தியர்களின் பெருமைக்கு உரியதாக இருந்திடும் என்ற நிலைகளை தாண்டி , ஆளுபவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றிடுபவர்களை அடையாளம் கண்டு வழங்குகின்ற விருதாக பத்ம விருதுகள் உருப் பெற்றுவிட்டதால் , அந்த விருதுகளுக்கு ஊழலில் , சாதி பற்றில் , வன்முறை கலாச்சாரங்களில் முன்னிலை பெற்றவர்களை பத்ம விருதுக்கு பரிந்துரைக்கும் அவலங்களை, நாமும் நாட்டு பற்றாளர்களில் ஒருவராய் காணும் துர்பாக்கியத்தை பெற்றுள்ளோம் என்பதை மன வேதனையில் குறிப்பிடுவதை தவிர்க்க இயலவில்லை . வாழ்க பாரதம் .

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  பத்மா விருதுகள் தனக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு மட்டும் குறிப்பாக தங்களை துதி பாடும் ஆட்களுக்கு அர்பன் நக்ஸல்களுக்கு மட்டும் காங்கிரஸ் கொடுத்து கொண்டிருந்தது. என்ன செஞ்சாங்கன்னு காங்கிரஸ் கொடுத்ததுன்னு மக்களுக்கு நல்லா தெரியும். இப்போது அந்த நிலை தலை கீழாக மாறி உள்ளது. கேள்வியே படாத உண்மை தகுதி உள்ள சாமானியர்களுக்கு மட்டும் பாஜக இப்போது கொடுக்கிறது. போன வருட லிஸ்ட் பாருங்க புரியும். அதனாலேயே இந்த விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளது.

 • HSR - Chennai,இந்தியா

  உடனே ஒரு அவார்டு பார்சல்...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  உண்மயிலே கூறவேண்டுமானால் எல்லாமே எட்டு சுரைக்காய். வந்தே மாதரம்

 • Indhuindian - Chennai,இந்தியா

  Padma awards have no relevance more so when awarded posthumously - not in the year of the demise of the awardee but several decades later- like Ambedkar et al. Some of the awardees get them awarded by recommending themselves as Bharat Ratna - Jawaharlal Nehru et al. The list includes several economic offenders and even those with criminal charges. It is high time these awards are abolished with retrospective effect. Otherwise clamour for these awards by politicians using their political muscle power, industrialists using their money and others flexing their muscles. If found necessary, it is better to fix the number of awards each year and e auction them with the awards giving to the highest bidder. By this process the Central Government would earn substantial revenue and could reduce it deficit. Government should every year provide the entire list since inception and notify the tax evaders and criminals.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement