Advertisement

நாட்டுப்புற ஆடற்கலை பயிற்சிப்பட்டறை: 100 மாணவியர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, நாட்டுப்புற ஆடற்கலை பயிற்சிப் பட்டறையில், 100 மாணவியர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம், அவ்வை அறக்கட்டளையும் இணைந்து, மண்ணின் மனம், தமிழக நாட்டுப்புற ஆடற்கலை பயிற்சிப் பட்டறையை, நேற்று நடத்தின. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். திருவையாறு தமிழய்யயா கல்விக்கழக இயக்குனர் கலைவேந்தன் பேசினார். இதில், அனைத்துத்துறையைச் சேர்ந்த, 100 மாணவியருக்கு, கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டன. பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற, மாணவ, மாணவியருக்கு நாட்டுப்புற ஆடற்கலைத் திலகம் என்ற விருதும், சான்றிதழும், சிறப்பாக பயிற்சி பெற்ற, பத்து மாணவியருக்கு பதக்கமும் வழங்கப்பட்டன.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement