Advertisement

வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு

புதுடில்லி : வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார்.


பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல 24 மாநிலங்களின் ஐகோர்ட்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.


இத்தகைய பணிச்சுமையில் நீதித்துறை இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (28)

 • ஆப்பு -

  தூங்காம கேசுகளுக்கு தீர்ப்பளித்தா போறும். ரிடையர் ஆறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி நாலு, அஞ்சு தீர்ப்பு அளித்து புரட்சி பண்ண வேண்டாம்.

 • Kamalakannan Paramasivam - Chennai,இந்தியா

  கோடை விடுமுறை தேவையில்லை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த தலைமை நீதிபதிக்கு, குடும்பம் விசேஷம் சொந்த பந்தம் எதுவுமே கிடையாதா? இல்லை இவருக்கு தலைவலி காய்ச்சல் எதுவும் வராதா? இவரது உறவினர்களுக்கு உடல்நிலை பிரச்சனை களே வராதா?? நடைமுறை சிக்கல்கள் பற்றி கூடவா இவருக்கு தெரியாது ? கஷ்டம்.

  • Sakthi Natraj - surath,இந்தியா

   உங்களுக்கு என்ன பிரச்னை

 • Roy Roy -

  time frame for trail and judgement must be made, judges with long pending cases must not be promoted or retirement benefits must be withheld

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  நீங்கள் சொன்னால் கேட்பார்களா?

 • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

  எத்தனை வழக்குகள் போலியாக உள்ளவை. எத்தனை வழக்குகள் பொய்யாக உள்ளவை. உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏன் வருடம்தோறும் ஆய்வு செய்யவில்லை. மக்களுக்கு தெரிந்த வகையில் மாவட்டத்தில் ஒரு சில வக்கீல்கள் போலியாக மற்றும் பொய்யாக வழக்குகள் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இதை தடுக்க உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருடம்தோறும் மாவட்ட நீதிமன்ற பதிவு வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  எனது 55 ஆண்டு வாழ்க்கையில் கோர்ட் நடைமுறை பற்றி எதுவும் தெரியாதால் கருத்து கூற தேவை இல்லை என்று நினைக்கிறேன்.. ஆனால் இந்திய மக்கள் தொகையில் சுமார் 100 கோடி பேர் என்னை போல் ஒருவர் என்று நினைக்கிறேன்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்...

 • ganapati sb - coimbatore,இந்தியா

  அவசரத்திற்கு விடுப்பு எடுப்பதை யாரும் தவிர்க்கமுடியாது ஆனால் அளவுக்கு அதிகமாக இருக்கும் நீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை போன்றவற்றை நீக்குங்கள்

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  MR ராதா சொன்ன மாதிரி, பல வக்கீல்கள் 25 வருஷம் பொய்யா சொல்லிட்டு நீதிபதிகளாக வந்து உட்காருகிறார்கள்... இவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்... ஒழுக்கம் தனி மனித விஷயம்... அது இருந்தாலே எந்த தொழிலையும் ஒழுங்காக செய்வான்... அந்த மாதிரி பலரும் செய்யும்போது ஒரு நல்ல சமூகம் உருவாகிறது... அந்த ஒழுக்கம் நீதி துறைக்கு மிக மிக அவசியம்... வாழ்க்கைக்கு தேவையானதை படிக்காமல் தேவையில்லாததை படித்து கொண்டிருக்கிறோம்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சம்பளத்துடன் தினமும் 4 மணி நேரம் ஓவர்டைம் செய்யச்சொல்லவேண்டும். கோடை விடுமுறை தேவையில்லை. விடுமுறையில் கைவைப்பது தவறு... நீதிபதிகளுக்கு குடும்பம் இல்லையா?

 • siriyaar - avinashi,இந்தியா

  How many vaaitha per case, even for accepting the case money to be paid, deps up on the money power cases are going and results are coming. Even you need help goes to puplic through media but some time you people thinking greater than god. First of all you people should learn dharma and follow it. IPC is responsible for most crimes in india your illegal relation verdict leads to many sucides and murders.

 • Pure stream - Nagarcoil,இந்தியா

  இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஒரு விவாகரத்து கேஸுக்கு தீர்ப்பு சொல்ல பத்து வருஷம் ஆவுது. அதுவரை வக்கீல் திங்கட்டும் இங்குற நல்ல எண்ணம் ஜூட்ஜுக்கு. வக்கீல் கிட்ட இருந்து ஒரு சுமால் கட்டிங் ஜூட்ஜுக்கு. இது தான் எல்லாவித கேஸுக்கும்ம் நடக்குது. இத ஏழாவது படிக்குற பையன் அறிவான். நம்ம நாடு முன்னேறது கஷ்டம் தான்.

 • GMM - KA,இந்தியா

  வார நாட்களில் நீதிபதிகள் விடுமுறை தவிர்க்க முடியாது. சிவில் வழக்கு வக்கீல் மூலம் (பணத்துக்கு)நீட்டிக்க படுகின்றன. நீண்டகால வழக்கில், வாதிகள் பண கஷ்டம், நோய், வேலை பளு காரணமாக சொத்தை காக்க முடியாது. சில வழக்கில் கால அளவு வேண்டும். எனது பாட்டி சொத்து வழக்கில் காலதாமதம் (1963 முதல்)காரணமாக தனியாக வீட்டில் வாழ்ந்து , மாடு கொட்டகையில் இறந்தார். உயர் அதிகாரிகள் தன் துறை குறையை தீர்க்க முடியும்.

 • venkatan - Puducherry,இந்தியா

  வார இறுதி நாட்களில் வேலை செய்தால் மட்டும் வழக்குகளின் தேக்கம் குறைய போவது இல்லை.ஒவ்வொரு நீதிமன்றங்களும் நெடுநாளைய வழக்கு,சிறிய வழுக்கு,சிவில்,கிரிமினல் வழக்கு என்பனபோன்று பிரித்து கெடு நிர்ணயித்தும்,சமாதான் போன்ற திட்டமிட்டு வழக்குகளை பைசல் செய்ய வேண்டும்.நீதிபதிக்குழுக்கள் அமைத்து கேஸ்களின் எண்ணிக்கையை விரைந்த தீர்ப்புகள் மூலம் குறைக்கலாம்.விரைவு தீர்ப்பு முகாம்கள் நடத்தலாம்.வக்கீல்களை ஒத்துழைக்க சொல்லலாம்.வேண்டாத ஒத்திவைப்பு மற்றும் வைதாக்களில் தயவு கூடாது.இப்படி பல.. பல முயர்ச்சிகள்...

 • mark - Trichirapalli,இந்தியா

  Menmayana thakka karuthuruvai peradan makkal neethy thuraiku selkindranar avvaru irukayil asura vegathil nadanthera vya vellai asamandamaga valakadam vidamaga irukakudadu enbatharkaga sollirukar megavum parattavum

 • Mal - Madurai,இந்தியா

  When prime minister (not minding about critics) is working hard and sincerely, it spreads across all departments. After 70 years of freedom, people are ning to work for the nation. Best wishes rangan sir.

 • narayanan iyer - chennai,இந்தியா

  இது மாத்திரம் போதாது. நீதிமன்றம்/ நீதிபதிகள் எக்காரணத்தைக்கொண்டும் இரவில் செயல்படக்கூடாது. எப்படிப்பட்ட வழக்கானாலும் (எல்லோரும் சட்டம் படித்தவர்கள்தானே) மூன்று மாதத்திற்குமேல் இழுக்கக்கூடாது .பலவருடங்கள் ஏன் இழுக்கவேண்டும் .? ஆகவே தயவுசெய்து இதுபோன்ற உத்திரவுகளையும் வழங்கவேண்டும் .

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  நல்ல முடிவு. பாராட்டுக்கள் அய்யா. ஆனால் நீதித்துறையில் இன்னும் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. தேவையற்ற வாய்தாக்கள் ஒழிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு வழக்கு நடக்கிறதென்றால், அதற்க்கு தேவையான எல்லா தகவல்களையும் சம்பந்தப்பட்டோர் எடுத்து வர வேண்டும். அதை விடுத்து, நீதிமன்றத்தின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் பெற்று வர ஒரு மாதம் அவகாசம் அளிப்பது தவறானது. இப்படியே வழக்கை இழுத்துக்கொண்டு போவது என்பது பழக்கமாகி விட்டது. அதை நிறைய பேர் தவறாகவும் உபயோகிக்கிறார்கள். அதே போல் தீர்ப்பளிப்பதற்கும் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும். இன்றைக்கு தீர்ப்புகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. அதை யாரும் கேள்வி கெட முடியாது. அதனால் ஒரு கேடு கெட்ட அரசு ஆட்சியில் தொடர்கிறது. இதுவா ஜனநாயகம்? இதுவா நீதி? எனவே சம்பந்தப்பட்டோர் அனைவரும் தங்களை இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் காலம் திருத்தும்.

 • Sivak - Chennai,இந்தியா

  அந்த இஸ்கூல் பசங்களுக்கு விடற மாதிரி ஆண்டு விடுமுறை விடறீங்களே ... அத மொதல்ல நிப்பாட்டுங்க .... கொஞ்சமாவது உருப்படும் ...

 • MANI DELHI - Delhi,இந்தியா

  முதலில் ஸ்கூல் மாதிரி கோடை விடுமுறை விடுவதை நிறுத்தினாலே பல வழக்குகள் தீர்க்கப்படும்....

 • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

  ஐய்யா அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடமுடியுமா.

 • K. Pitchaimani - Madurai,இந்தியா

  நீதி மன்றங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்குளாக அதிகரித்தால் மட்டுமே சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

 • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

  எத்தனை வழக்குகள் போலியாக உள்ளவை. எத்தனை வழக்குகள் பொய்யாக உள்ளவை. உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏன் வருடம்தோரும் ஆய்வு செய்யவில்லை. மக்களுக்கு தெரிந்த வகையில் மாவட்டததில் ஒரு சில வக்கீல்கள் போலியாக மற்றும் பொய்யாக வழக்குகள் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இதை தடுக்க உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருடம்தோரும் மாவட்டநீதிமன்ற பதிவு வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 • பாரதன். - ,

  தலைமை நீதிபதி அவர்களே! உங்களுக்கு தலை வணங்குகிறேன். அவசர வழக்கு, பொதுநல வழக்கு, ரபேல் வழக்கில் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை என எல்லாவற்றிலும் அசத்தலான செயல்பாடுகள். நன்றி ஐயா.

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  தசரா விடுமுறை-குழந்தைகள் போல கோடைவிடுமுறையும் இருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி விரைவாக வேண்டும் என்று நினைக்க, ஏமாற்றியவர்களோ வழக்குகள் தேங்கி நிற்க சந்தோஷ படுகிறார்கள்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  கோடை கால விடுமுறை கிருஸ்துமஸ் விடுமுறைனு இன்னமும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் நடப்பது போல லீவு விடறீங்களே ... ஒரு சின்ன கேஸ் கூட குறைந்தது மூணு வருஷம் ...

 • thiru - Chennai,இந்தியா

  பொதுமக்கள் வழக்குகளை விசாரிக்க தனியே ஒரு அமைம்பினை உறுவாக்கினால் ஒழிய தேங்கி இருக்கும் பழைய வழக்குகளுக்கு விடிவு காலம் பிறக்காது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement