Advertisement

ஏர் இந்தியா விமானம் சுற்றுசுவர் மீது மோதல்: 130 பயணிகள் தப்பினர்

திருச்சி: திருச்சியில் இருந்து துபாயிக்கு புறப்பட்ட விமானம், சுற்றுச்சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மோதல்
திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் இருந்த ஏடிசி டவர் (போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனை தொடர்ந்து விமானம் மும்பைக்கு சென்றது.


விபத்து தவிர்ப்பு4 மணி நேரத்திற்கு பின் மும்பை யில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டாலும் 130 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
சம்பவம், நடந்த இடத்தில் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார்.


சஸ்பெண்ட்இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கை: விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது முடியும் வரை விமானி மற்றும் துணை விமானி சஸ்பெணட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து டிஜிசிஏவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அவர்களுக்கு, அங்கிருந்து துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும், அதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.


விசாரணைசுற்றுச்சுவர் மீது விமானம் மோதிய இடத்தை, திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன், திருச்சி எம்.பி., குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் விபத்து அதிகாலை 1.19 மணிக்கு நடந்தது. பயணிகள் பாதுகாப்பு கருதி, விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. அவர்கள் மாற்று விமானம் மூலம் துபாய் அனுப்பி வைக்கப்படுவார்கள். சம்பவம் நடந்த பின், உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது.இயக்குவதில் பிரச்னை ஏதும் இல்லை என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால், மற்ற விமான சேவைகளுக்கு பாதிப்பு இல்லை. திருச்சியில் நடந்த சம்பவம் குறித்து, டிஜிசிஏவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகே யார் மீது தவறு என்பது தெரிய வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  இடித்த அந்த வினாடி விமானம் குலுங்கியிருக்கும். பிரெஸ்டிஜ் பார்க்காமல் விமானி விமானத்தை திருச்சியிலேயே இறக்கியிருக்க வேண்டும்.

 • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

  இடித்தது தவறு, ஆனால் தாமதமாக இறக்கியது சரியே, எரிபொருள் குறைந்த பின்னரே பாதுகாப்பாக இறக்கமுடியும்..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நான் ஒரு முறை கூட இண்டிகோ தவிர வேறு நிறுவன விமானங்களில் பயணித்ததில்லை ..... இண்டிகோவிலும் வருடம் ஒரு முறை மட்டுமே ....(கொல்கத்தாவிலிருந்து சென்னை வரை, பிறகு ரிட்டர்ன்) .....

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இடித்தது விமானிகளுக்கு தெரியாமற்போனது ஆச்சரியம்தான். வட்டமிட்டு திரும்ப இறங்கி இருக்கலாம்.

 • someshwar dutta - warsaw,போலந்து

  ஏர் இந்தியாவில் நான் பயணம் செய்து உள்ளேன். அதில் செல்வது உயிருக்கு உத்தரவு இல்லை. எல்லா பயணிகளின் இறுதி ஆசையை கேட்டுவிட வைக்கும். யாரும் அதி பயன் படுத்த வேண்டாம்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..குட்டி சுவரொன்று பிளைட்டின் டயர் பட்டு நிற்கும் உடைபட்டு..மேல பறக்கணும் படையப்பா..விமானியின் மைண்ட் வாய்ஸ்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  என்ன தைரியத்தில் மும்பை சென்றார்கள் என்று புரியவில்லை... மதுரை அல்லது சென்னைக்கு சென்று இறக்கியிருந்தால் பரவாயில்லை... எப்படியோ எல்லோரும் உயிர் தப்பினார்கள் என்பது மகிழ்ச்சியே...

 • abdul rajak - trichy,இந்தியா

  புதுக்கோட்டை ரோடு அந்த இடத்தில மிகவும் குறுகலாக இருக்கும் . எனவே சூட்டோடு சூடாக மொத்த காம்பௌண்டையையும் இடித்து விட்டு கொஞ்சம் உள்ளயே தள்ளி கட்டவும் . ரோடு அகல படுத்தி கொள்ளலாம் .

 • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

  மோதிய பின்பு யார் பறக்க அனுமதி குடுத்தது? நான்கு மணிநேரத்தில் துபாய்க்கு செல்லாமல் ஏன் மும்பைக்கு போகணும்? மும்பைக்கு ஒரு மணிநேரத்தில் போகலாமே. கணக்கு இடிக்குதே பைலட் டாஸ்மாக் பக்கம் போனாரா?

  • Gsanky - Bangalore,இந்தியா

   எமர்ஜென்சி தரையிறக்கத்திற்கு எரிபொருள் அளவு குறையும் வரை வானில் பறக்க வேண்டும் என்பது விதி. பைலட்டின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரை ஏளனம் செய்யாதீர்கள்.

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  ஓசியில குடுத்தால் கூட ஏர்-இந்தியாவை வாங்க யாரும் தயாராக இல்லை. டாடா நிறுவனமாக இருந்த இந்த கம்பெனியை அரசுடைமையாக்கி நாசம் செய்துவிட்டார்கள். டிவிஎஸ், ஜெயவிலாஸ் போன்ற தனியார் நிறுவனங்களிலிருந்து போக்குவரத்து துறையை கட்டுமரம் அரசுடைமையாக்கி நாசம் செய்ததுபோல்.

  • Krishna Prasad - Chennai,இந்தியா

   இதுதான் கட்டுமரத்தின் மாபெரும் சாதனை

  • மெய்யாலுமா - Paris,பிரான்ஸ்

   மதுரையில் டி.வி.எஸ், ஜெயவிலாஸ், கோவையில் ஏ.பி.டி, சேலம் LRN என அந்தந்த பகுதிகளில் பல பல பஸ் முதலாளிகள் இருந்தனர். லாபம் வரும் ரூட்டில் மட்டுமே பஸ் இயக்குவார்கள். மலை/தொலை கிராமங்களுக்கு சேவை இல்லை. கலைஞர் எல்லா கிராமங்களுக்கும் பஸ் விட சொன்னார்.

  • nandaindia - Vadodara,இந்தியா

   ஆம். அந்த காலத்தில் டிவிஎஸ் பேருந்துகள் வரும் நேரத்தை பார்த்து கடிகாரத்தின் நேரத்தை நாங்கள் சரி செய்து கொள்வோம். அத்தனை சரியாக அன்று அவைகள் இயங்கி வந்தன என்று என் தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன். ஆட்டையை போட வேண்டுமென்றால் அரசுடமை செய்ய வேண்டியது அவசியமில்லையா?

  • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

   பஸ் முதலாளி ஒழுங்காக பஸ் போக்குவரத்தை மட்டும் பார்த்திருந்தால் எந்த கேடும் இல்லை. குறிப்பிட்ட எல்லா பயல்களும் பண்ணையார்களே... பண்ணையார்த்தனம் எகிறிப்போய், காங்கிரஸ்-ஐ ஆதரித்து, தி.மு,க வுக்கு ஓட்டுப்போடக்கூடாது,என்று வெற்றிலை சத்தியம் வாங்கியது,தி.மு.க வுக்கு ஓட்டுப்போட்டால் பஸ்ஸில் ஏற்றமாட்டோம் என்று பயணிகளை மிரட்டியது ஆகியவற்றின் அடிப்படையில் திரு.கலைஞர் செய்த அருமையான செயல் தேசியமயம். இவர்கள் பிரச்சினை செய்தது 1968 -தேர்தலில், அறிஞர் அண்ணாவுக்கு எதிராக. ஆனால் கருவறுக்கப்பட்டது 1971 -72 இல் கலைஞர் ஆட்சியின் போது..போதுமான அவகாசம் கொடுத்தும், திருந்தாத காரணத்தால் செய்தது இந்த தேசியமயம்.....தவறு பஸ் முதலாளிகள் மீது....அரசு மீதல்ல...

  • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

   நானும் ஒரு மிகச் சிறிய கிராமத்திலிருந்து வந்தவன் தான். அந்த கிராமங்களுக்கு, பேரூந்துகள் தேசியமான போது, ஆரம்ப காலங்களில் இரவு ஒன்பது மணிக்கு ஒரு முறை கடைசி சேவை என்று வந்து போகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த கிராமங்களுக்கு வந்த பேரூந்து இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். கேட்டால் " வருவாய் இல்லாத" அனைத்து சேவைகளையும் நிறுத்துமாறு கூறிவிட்டார்கள் என்று பதில் கூறுகிறார்கள். இதுவே தற்போது இருக்கும் நிலை. நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் இரவு நேர அரசு பஸ் சேவையும், அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. நீங்கள் ஒரு கிராமத்தில் சென்று பார்த்தால் இது தெரியும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சாதுர்யம் என்று சொல்லாதீர்கள்... பிளைட்டை எடுக்கும் முன்பே இதையெல்லாம் சாதுரியமாக செக் செயது இருந்தால் இதை முன் கூட்டியே தடுத்து இருக்கலாம் இல்லையா

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  விமானியின் தவறு

 • Sudhakar S - Chennai,இந்தியா

  அதெப்படி, சுவரை இடித்த பின் அந்த விமானத்தை மும்பைக்கு செல்ல அனுமதித்தார்கள்? எந்த விதமான எப்படி பயணிகள் ஒத்து கொண்டார்களோ தெரியவில்லை. உண்மையில் ஏர் இந்தியா விமானத்தில் செல்வதென்றால், நம் உயிருடன் ஊர் போய் சேர்வோமா என்பது நிச்சயமில்லை. மிகவும் மோசமான நிர்வாகம்.

 • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

  இதில் பாராட்ட பட வேண்டியவர்கள் ..அந்த தடுப்பு சுவரை தரமில்லாமல் கட்டிய காண்டராக்டர்கள் தான் .. ஒருவேளை அவர்கள் 100 % சதவிகிதம் உறுதியாக கட்டியிருந்தால் ..அந்த 130 பேரின் நிலைமையும் கேள்விக்குறிதான் ..

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   கரெக்ட். சுவரை கட்டிய காண்டராக்டர்கள் சாதுரியத்தால் விமானம் தப்பியது..130 பயணிகள் உயிர் தப்பினர், இதுதான் சரியான செய்தி.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  Correct..இது வீரமணியின் தவறுதான் ..அடே...தவறு னு சொல்லும்போது விமானி ஆட்டோமேட்டிக்காக வீரமணியா மாறுதே?

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  ஏற்கனவே ஏர்-இந்தியா திறமைவாய்ந்த() நிறுவனம் என்று பெயர் எடுத்துள்ளது. ஏனைய அரசு நிறுவனங்களுக்கு போட்டியாக நஷ்ட்டம் மட்டுமே இந்த நிறுவனம் கணக்கு காட்டி வந்து, மொத்த பங்கு மூலதனத்தையும் அழித்தாகி விட்டது. தற்போது சம்பளம் வழங்ககூட நிதி இல்லை. அப்படிப்பட்ட நிறுவனத்தில் பயணம் செய்ய, அரசு அதிகாரிகளே (உயிரை பணயம் வைத்து ) செல்கின்றனர். விமானத்தினுள் கிழிந்த உட்காரும் சீட்டுகள், எலி தொந்தரவு, மூச்சை அடைக்கும் நாற்றம், சேவை மனப்பான்மை இல்லாத பணியாளர்கள், தற்போது கட்டுப்பாட்டை இழக்கும் அளவிலான பராமரிப்பு என்னே விமான நிறுவனம். அரசு இந்த நிறுவனத்தை வைத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

 • Pats - Coimbatore,இந்தியா

  அதெல்லாம் சரி. அங்க வெல்ல மண்டிக்கு என்ன வேலை? ஏ.டி.சி., காம்பௌண்ட் சுவர் கட்ட காண்ட்ராக்ட் எடுக்க போயிருப்பாரோ?

 • HSR - Chennai,இந்தியா

  ஏங்... க திருச்சில மோதிட்டு மும்பைக்கு போய்டுச்சா?..விவரமா போடுங்க

  • HSR - Chennai,இந்தியா

   சின்மயி செய்தியை ஏன் நீக்க்கிவிட்டீர்கள்

 • raja - Trichy,இந்தியா

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Take off செய்யும் பொழுது சுற்றுசுவர் இடிக்க வாய்ப்பு உள்ளது இடித்து விட்டு நான்கு மணி நேரம் பறந்துள்ளது பயணிகளுக்கு நல்லகாலம் தான். விமானியின் தவறு போலதான் தெரிகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement