Advertisement

ரபேல் விவகாரம்: பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி

பாரீஸ்: ரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சித்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்தார். பின்னர் ரபேல் விமான தயாரிப்பு ஆலைக்கு சென்றார்.


இந்த பயணம் குறித்து காங். கேள்வியெழுப்பியுள்ள நிலையில் அந்நாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்தியினை திட்டவட்டமாக மறுத்து அளித்த பேட்டி, ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது.இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்றார்.

ராகுல் ஹால் நிறுவன வருகை ரத்து
ரபேல் போர் விமான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நி்லையில் காங். தலைவர் ராகுல் வரும் 13-ம் தேதி பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வருகை தர உள்ளதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கர்நாடகா மாநில காங். தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ராகுலின் அந்த பயண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (110)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இந்தியாவின் வளர்ச்சிக்காக நாட்டை நல்ல முறையில் அரசாளும் பாஜக வாழ்க. அறுவது ஆண்டுகாலமாக மக்கள் பணத்தை சூறையாடிய கான்-கிரேஸ் சேற்றை வாரி இறைத்தாலும், மக்கள் அதை நம்பவில்லை. பப்புவுக்கு எந்த பொய்யையும் சொல்லி பிரதமராவது கனவு. அது பலிக்காது... பலிக்காது... காது...

 • Shiva Shiva - Trichy,இந்தியா

  இது தான் உங்க டக்கா

 • MOHAMED MANZOOR -

  இதுதான் பதிலடியா?

 • Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா

  ராகுலும் அவரது கட்சிக்காரர்களும் வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எப்படியாவது பாஜகவும் ஊழல் செய்துள்ளது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக புனைந்துள்ள பல கட்டுக்கதைகளில் ரபேல் விமானங்களை வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது என்பதும் ஒன்று மிகவும் அவசியமான பாதுகாப்பு தேவைகளில் கால தாமதமும் தரம் குறைந்த தளவாடங்களும் ஏற்கவே முடியாது என்பதை மிகவும் நல்ல முறையில் நரேந்திர மோதி அரசு செயல்படுத்தியுள்ளதை பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்க பாரதம்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ராகுல்ஜீ பேச பேச அவரின் திறைமை யின்மை வெளிப்படுகிறது .

 • Ramanathan Murugappan - Chennai,இந்தியா

  ஒரு கேள்வி .. பிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் இந்தியாவில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்ய ..திறமையற்ற ..தோல்வியடைந்த ..பல ஆயிரம் கோடிகளை கடனாக வைத்துள்ள அணில் அம்பானியை ஏன் தேர்வுசெய்ய வேண்டும் ..? எத்தனையோ திறமையான வெற்றிபெற்ற கடன் இல்லாத தொழில் அதிபர்கள் இந்தியாவில் உள்ளனரே? மஹிந்திரா , பிர்லா ...போன்றோர் இருக்கும் போது குஜராத்தை சேர்ந்த கடனாளியாய் தேர்ந்தெடுத்தது ஏதோ காரணத்திற்காக என்று எண்ணத்தோன்றுகிறதே ..

  • Vasu - Mumbai,இந்தியா

   dassault நிறுவனம் பல தடவை சொல்லியாச்சு. மஹிந்திரா வும் அவர்களது இந்தியன் பார்ட்னர். அணில் அம்பானி ஒரு screw தயார் பண்ணி கொடுக்க கூடாதா? 10000 பார்ட்ஸ் உள்ள விமானத்தில், ஏன் உட்கார லெதர் seat கூட தயார் பண்ணி தரலாம். யோசியுங்கள்.

 • Mano - Madurai,இந்தியா

  இவர் பேசாம பரம்பரை தொழிலான ஊறுகாய் விற்க போகலாம்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   . அவங்க படிப்பு, பேசும் திறன், செயல்பாட்டு திறமை, மொழிகளில் புலமை, - எங்கேயாவது உன்னால சமமாக நிக்க முடியுமா. மேலும் முதல் பெண் இந்தியா போன்ற பெரிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர். உலகமே ஒரு இந்தியப்பெண்மணியை பாராட்டும் போது உனக்கேன் இந்த வக்கிரம்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   தோத்திரம் ன்னு சொல்லுங்க...வாலாட்டுவான்..

  • masthan sombu - korukku pettai ,இந்தியா

   இங்க ஒரு மணிக்கு ரொம்ப எரிச்சல் போல.. பர்னால் வேணுமா மணி ? என்ன நீ வாங்குற கமிஷன் பணம் பர்னால் வாங்கவே சரியபோகிவிடும்.. கொஞ்சம் கூட போட்டு கேளு

 • raju - Madurai,இந்தியா

  உங்களுக்கு வெட்கமே இல்லையா . நாட்டு பற்று இல்லையா . இவன் யாரு பங்குதாரர்களை சேர்ப்பது பற்றி சொல்லுவதுற்கு. பாக்கிஸ்தான் வாசி பங்குதாரர்களாக இருந்தாலும் இதைத்தான் சொல்லுவீர்களா . முட்டாள்கள் நீங்கள் . ஏமாற்றுக்காரர்கள்

 • Sathiyanathan - Paris,பிரான்ஸ்

  What is this "pathiladi". Corruption and India are inseparable says one of the French news papers. The problem is that the Indian GVT has given this contract to Reliance. Nirmala Madam must give a proper answer. Surely Rahul will go to the court before next election wait and see

 • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

  Let Rahulji and Congress leaders ask the HAL management and staff as to why they are not able to even assemble ( mind you not produce)Tejas fighters fully fit for war even today? Why they are not able to keep up the promised production schedule of Tejas? What is the technical capability and infrastructure availability at HAL to produce Rafael aircraft? Are they able to produce spare parts for Tejas? If so why even after more than a year and a half, the Squadron is still housed in HAL factory and not in the IAF base at Sulur? Why even today the Tejas are piloted only by fully experienced master Test pilots? Can IAF afford to have only Test pilots flying them even during a war? Let Rahulji ask these questions when he visits HAL? He does not even know BHEL cannot manufacture Cell phones

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  காங்கிரெஸ்த்தான் முதலில் அண்ணார் அம்பானியின் ரிலையன்சுக்கு ஆப்செட் கொடுத்தாங்க. இந்த நிறுவனத்துக்கு ராணுவ தளவாட ஆப்செட் தயாரிக்கும் அனுபவம் 20 வருடங்கள் உள்ளது. அவுங்க குடும்ப பாகப்பிரிவினையால் இப்ப தம்பி அம்பானியின் புது நிறுவனத்துக்கு அது வந்து விட்டது. பதினஞ்சு நாளே ஆன நிறுவனம்னு ஒரு பச்சை பொய்ய எப்படி காங்கிரஸ் சொல்றாங்கண்ணே புரியலை. மீடியா கேள்வி கேக்காதவரை எவ்வளவு பொய் வேணா பரப்பலாம் என்ற மமதை-ஆணவம். பப்பு பொறுத்தவரை நண்பன் படத்தில் வரும் காமெடி போல வெளிநாட்டு காங்கிரஸ் இயக்குனர்கள் பேப்பரில் எது எழுதி கொடுத்தாலும் படித்து விடுவார், அறிவிலி. காங்கிரஸ் பேசிக் டிசைனே மக்களை பிரித்தாண்டு ஊழல் செஞ்சு தப்பி தவறி ஏதாவது மக்களுக்கு நல்லது செஞ்சாத்தான் உண்டு. தற்போதய உதாரணம், ரபேலில் ஆப்செட் க்ளாஸ் எடுத்துக்கோங்க, ஹால் (HAL ) செயல் திறன் பற்றாக்குறை உள்ளதாலும் தனியார் நல்லா செய்வாங்கன்றாதாலும் ஆப்செட் க்ளாஸ் ரபேல் கோரிக்கை வைத்ததால் கொண்டு வந்தாங்க நல்ல விஷயம்தான், ஆனால் எதனால் சம்மதிச்சாங்க? வதேரா நண்பரும் ரிலையன்சும் ஆப்செட் பார்ட்னராக அமர்த்துவதாக பிளான் செஞ்சு பண்ணினாங்க. இப்ப பாருங்க அந்த பிளேட்டை அப்படியே திருப்பி போட்டு பாஜகதான் ஆப்செட் கொண்டு வந்தாங்கன்ற தோரணையில் இப்ப போலி குற்றச்சாட்டு வெக்கிறாங்க. காங்கிரஸ் நாட்டின் சாபக்கேடு, நெடு நாளைய கேன்சர் வியாதி. காங்கிரஸ்-காங்கிரஸ் போலி மதச்சார்பின்மை சகாக்கள் இல்ல பாரதம் இருந்தா, அரசுன்ற பேர்ல ஒண்ணு இருந்தாலே போதும் நாம தானாகவே முன்னேற ஆரம்பிச்சுடுவோம்.

 • murali - Chennai,இந்தியா

  என் ராகுல்ராஜீவ் HAL நிறுவனத்துக்கு போவதை ரத்து செய்துவிட்டார்.

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  பப்புவும் அவரை ஆதரிப்பவர்களும் காளை மாட்டில் பால் கறக்க பார்க்கிறார்கள்.. மோடி ஊழல் செய்ய வாய்ப்பே இல்லை.. செய்யக்கூடியவராக இருந்தால் 3 முறை குஜராத் முதல்வராக இருந்தபோதே செய்திருப்பார்.. RSS காரர்களுக்கு தேசம் தான் முக்கியம்... இந்த விஷயத்தில் மோடி எதிர்ப்பாளர்கள் மண்ணை கவ்வ வேண்டியதுதான்......

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அதை இங்கேயிருந்தே சொல்லி இருக்கலாம்.

 • Shanu - Mumbai ,இந்தியா

  பிஜேபி அரசின் ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் வெளிவரும். இப்போ நம்ம நேரத்தை வீணடிக்க வேண்டாம். பலரிடம் ரெய்டு நடத்தி கருப்பு பணத்தை மீட்டு விட்டதா சொன்னார்கள். அந்த பணம் எங்கே? 4 வருடத்தில் பிஜேbjp கட்சியின் கையிருப்பு பணம் 1000 கோடி வந்தது எப்படி. ? இந்த ஊழல் அடுத்த ஆட்சியில் வெளிவரும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாங்க இதையெல்லாம் நம்ப மாட்டோம் , பப்புவின் மூளையில் உதிக்கும் கற்பனைகளை தான் நம்போவும்

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  பல ஆண்டுகளாக விமான தயாரிப்பு மற்றும் பராமரிப்பு துறையில் கைதேர்ந்த நிறுவனம் தான் HAL மிகவும் கடினமான சுகோய் போன்ற போர் விமானங்களையே வடிவமைக்கும் வல்லமை கொண்டது HAL ஆனால் டஸ்ஸால்ட் நிறுவனம் HAL க்கு திறமை போதாது அனுபவம் போதாது என சொல்லி விட்டு பத்து நாள் முன்பு தொடங்கபட்ட ரிலையனஸ் டிபன்ஸ் கு எதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்தது ? இதில் மோடி சிபாரிசு இல்லை என வைத்து கொள்வோம் ஆனால் அரசு நிறுவனத்தை ஒதுக்கி விட்டு அனுபவம் இல்லா ஒரு தனியாரை தேர்வு செய்த போது ஏன் மோடி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை டஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய பாதுகாப்பில் அக்கரை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஆனால் மோடிக்கும் அரசிற்கும் அக்கரை இருந்திருக்க வேண்டுமா இல்லையா ?

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

   HAL க்கு திறமை திறன் இல்லாமத்தான் தேஜஸ் நாப்பது வருஷமா தயாரிக்கிறாங்க இன்னமும் தயாரிக்கிறாங்க. இப்ப கொடுத்த ஆர்டரும் அஞ்சு வருடம் பின் தங்கி இருக்காங்க. இதே போல்தான் சுகோய், மிக் போன்றதும். வெறும் அசெம்புல் பண்ணவே பல வருடம் பின் தங்கி இருக்காங்க. உலகம் முழுவதும் இருப்பது இங்கேயும் தனியார் செஞ்சாத்தான் முன்னேற முடியும். இந்தியாவுக்கு எது நல்லதுன்னு இந்தியர்களுக்கு தெரியும். சம்பந்தமே இல்லாம நீங்க எதுக்கு இதுல வரீங்க.

  • மாயவரத்தான் - chennai,இந்தியா

   அன்பு சகோதரரே, சுகோய் போர் விமானத்தை HAL வடிவமைக்க வில்லை அது ரஷ்யா வடிவமைத்தது. HAL பற்றி டசல்ட் கூறியது என்வென்றால் நாங்கள் 5 வருடத்தில் முடிக்க கூடிய வேலையை HAL ஆட்களை வைத்து செய்தால் 15 வருடங்கள் ஆகும். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு அவ்வளவு வருடங்கள் வேலை செய்தால் எங்களுக்கு கட்டுபடியாகாது என்று கூறிவிட்டது. புரிகிறதா ? அரசு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களை நம் இஷ்டத்திற்கு வேலை வாங்க முடியுமா? அவர்களுக்கு கம்யூனிஸ்ட் சங்கங்கள் இருக்கிறது அதான் . 10 நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் தொடங்க படவில்லை டசல்ட், ரிலையன்ஸ், மற்றொரு நிறுவனம் இணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினார்கள் அதுதான் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

  • Nantha Nadarajan - Chennai,இந்தியா

   HAL நிறுவனம் நீண்ட நெடிய அனுபவம் உள்ளது, ஆனால் பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு எப்படியிருக்கும் நமக்கு சொல்ல வேண்டியதில்லை. HAL நம்முடைய மக்கள் வரி பணத்தை செலவு செய்யமட்டுமே, லாபம் சம்பாதிக்க முடியாது. டஸ்ஸால் செய்யப்போகும் முதலீட்டுக்கு யாரை கூட்டு சேர்ப்பது என்று டஸ்ஸால்தான் முடிவு செய்யமுடியம்.

  • மாயவரத்தான் - chennai,இந்தியா

   HAL க்கு கொடுக்கப்பட்ட ஆர்டர் 2010 குள் 40 தேஜஸ் விமானங்கள் தயாரித்து அளிக்க வேண்டும் என்பது. ஆனால் இன்றய தேதிவரை அது கொடுத்திருப்பது வெறும் 8 . இந்த யோக்கிதையில் அதனிடம் ரபேல் தயாரிப்பு பணியை கொடுத்தால் சீனா அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கி நம் நாட்டை முழுக்க ஆட்டைய போட்ட பிறகுதான் முதல் விமானத்தையே டெலிவரி தருவாங்க. ஆதலால் நிலைமையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு எதை பற்றியும் கவலை படாமல் முதலில் முழு விமானமாக 36 கொடுங்கள் என்று நம் பிரதமர் மோடி ஒப்பந்தம் போட்டதுதான் சரி.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "நீண்ட நெடிய அனுபவம் உள்ளது" - அதுதான் பிரச்சினை... ஒரு project எடுத்துக்கொண்டு ஆரம்பித்தால் அரை நூற்றாண்டுக்கு செய்வார்கள்... அதற்குள் நாம் தாத்தா ஆகிவிடுவோம்...

 • sahayadhas - chennai,இந்தியா

  நல்ல விளக்கம் கொடுத்திருக்கிங்க. அப்படியே 126 எப்படி 36 ஆக குறுகியது என்று கூறுங்களேன். சிறிய Jet ஆor விலைவாசியா?

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

   126 வாங்கினா அப்புறம் பைலட்டுக்கு சம்பளமே கொடுக்கமுடியாம போயிடும். 36 யிலேயே 126 கும் மேலான வலிமையை ஏர் போரஸுக்கு எப்படி கொடுக்கலாம்னு மூளைய யூஸ் பண்ணிதான் இந்த சிறப்பான ஒப்பந்தந்தை நிறைவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் பணத்தில் பாதியை இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன், DRDO HAL போன்ற அரசு நிறுவனங்கள் தவிர மஹிந்திரா, பஜாஜ், கோவை LMW, சாம் பிட்ரோடா கம்பெனி அணில் அம்பானியின் ரிலையன்ஸ் ஆகிய நிறுவங்களோடு கூட்டு சேர்ந்து இங்கு வேலைவாய்ப்பை பேருக்கும் திட்டம். உண்மையிலேயே இந்தியாவுக்கு செலவை மிச்சப்படுத்தி ஆகாய படைக்கு விரைவிலேயே உயிர் கொடுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தம் கமிஷனிலேயே பிறந்து அதிலேயே ஊறி திளைத்தவர்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தத்தை கண்டால் வெறுப்பு வருவது இயல்புதான். அவர்கள் கைகள் அரித்துக்கொண்டிருக்கும் ஐயோ கமிஷன் வீணாய்ப்போகிறதே ஆட்சியில் இருந்தால் அடித்திருக்கலாமே என்று.

 • vijayakkumar k s -

  அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை... காந்தி னு பேர் வெச்சுட்டு ஏமாத்திட்டு இருக்காங்க...சோனியா வீட்டுக்காரர் பேர் ராஜிவ்.அப்போ சோனியா ராஜிவ் னு தான் பேர் வைக்கணும்.. சோனியா காந்தி னு பேர் வெச்சு புருசனையே மாத்திவிட்டவங்க..இவன் பேரையும் ராகுல் ராஜிவ் னு மாத்தனும்.. பிராடு குடும்பம் மக்களை முட்டாள் ஆக்க பார்க்கராங்க.இனி ப்ரியங்கா ராபர்ட் வதேரா க்கு பையன் பிறந்தாலும் காந்தி னு பேர் முடியும்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  இந்திய கொம்பனியான HAL ஐ ந ஜௌ ஆரம்பித்து 15 நாட்களே ஆன நேம் போர்டு கம்பெனிக்கு பாதுகாப்பு தளவாடங்கள் சம்பந்தமான ஒப்பந்தங்கள் செய்கிறார்கள் என்றால் மக்களை எவ்வளவு மட்டமாக ஆளுகிறவர்கள் நினைக்கிறார்கள்? பதவி வெறி ஆட்டி படைக்கிறது

  • MANI DELHI - Delhi,இந்தியா

   இங்கதான் குசும்பு கருத்து. HAL நிறுவனம் நாட்டில் நஷ்ட கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம். ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் விமானங்கள் தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கான கட்டமைப்பு தேவை. 50 ஆண்டு காலம் பெயரளவில் அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கட்டமைப்பு, புதிய மாற்றங்களுக்கான தேவையான மாற்றங்கள் இதெல்லாம் HAL நிறுவனத்தில் நடந்ததா... மக்களும் கம்பெனியும் ஒன்றா.. தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மக்கள் எல்லாரும் மட்டமா. நீங்க சொன்னபடி HAL க்கு கொடுத்து இருந்தால் இந்தியாவில் உள்ள எல்லா Aeronautical பொறியாளர்களுக்கு அரசு வேலை கொடுத்துவிடுமா.. அப்புறம் உங்க சமூகநீதி எல்லாம் பாயும். ரிலையன்ஸ் கம்பனியில் திறமை உள்ளவனுக்கு வேலை கிடைக்கும். அதனால் மக்கள் மட்டம் இல்லை என்பது தான் நிதர்சனம். கோவத்தில் கண்டதெல்லாம் எழுதப்படாது.....நாட்டின் பாதுகாப்புக்கு எது நல்லதோ அது தான் நடக்கும். Government is for Governance

  • HSR - Chennai,இந்தியா

   நீ மட்டனானவந்தான் ..அப்புறம் வேற எப்படி நினைக்கிறது.

  • N.K - Hamburg,ஜெர்மனி

   நாற்பது விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் எட்டு விமானம் மட்டுமே தயாரித்துள்ளனர் HAL நிறுவனத்தினர். பொதுத்துறை நிறுவனங்களை தொழிற்சங்கங்கள் இந்த அளவுக்கு கெடுத்துவிட்டனர். அப்புறம் புலம்புவது.

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

   உங்களுக்கு சரியாக விளங்கவில்லை. HAL லிடம் கொடுத்திருந்தால் பழுதடைந்த விமானங்கள் வெளிவருவதற்கு மாமாங்கம் ஆகியிருக்கும். மேலும் விலையும் இருமடங்காயிருக்கும் இதில் இன்னும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று - விமானங்கள் முழுவதுமாக rafale யினால் தயார் செய்யப்பட்டு பறக்கும் நிலையில் நமக்கு அனுப்பப்படும். இதன் தயாரிப்பில் வேறு எந்த இந்திய நிறுவனமும் ஈடுபடவில்லை. ஆகவே தயாரிப்பு பணிகளை HAL ளிடமிருந்து எடுத்து நேற்று திறந்த புது கம்பெனியிடம் கொடுத்துவிட்டார்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. இரண்டு - HAL தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்றால் இந்த ஒப்பந்தமே வேண்டாம் என்று RAFALE UPA ஆட்சி காலத்திலேயே ஒதுங்கிகொண்டது. அப்போதே இந்திய அரசு HAL வேலைக்கு ஆகாது என்று அவர்களை ஒதுக்கி விட்டது. இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை மோடி அரசின் பங்கு கமிஷன் இல்லாமல் செலவை மிச்சம் செய்து RAFALE ஐ குறுகிய காலத்தில் விமானங்களை சப்ளை செய்ய நடவடிக்கை எடுத்ததுதான். மேலும் முந்தய ஆட்சியில் இருந்த அயோக்கியர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒம்பது வருஷம் ஊறப்போட்டு நம் விமான படையை மிக பெரிய ஆபத்துக்கு தள்ளிவிட்டனர். ஆகவே, விரைவாக விமானங்கள் நம் படைகளுக்கு வந்து அடைவது மிக முக்கியமான பாதுகாப்பு விஷயமாகிவிட்டது. இவ்வளவு விஷயமும் தெரியாமல் நீங்கள் கருத்து போட்டு இருந்தால் உங்களை மன்னிக்கலாம். இப்போதாவது தெரிந்து கொண்டு உங்கள் தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நம் நாட்டுக்கு தேவை நேர்மையான குடிமகன்கள். தேசதுரோகிகள் நிறையபேர் வேண்டுமென்றே அவதூறு பரப்பி நாட்டை குட்டிசுவராக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   செல்போன் வியாபாரி எத்தனை விமானங்கள் தயாரித்து உள்ளார் ? விமானங்கள் பெயர் கூட தெரியாது

  • MANI DELHI - Delhi,இந்தியா

   பூச்சி Jointventure அப்படின்னா தெரியுமா.. பணம், தொழில்நுட்பம், இது இரண்டும் சேர்வது. ஒரு JV க்கு ஒருவருடன் இந்த இரண்டில் ஒன்று இருந்தாலும் JV உருவாகி விடும். அம்பானிக்கு என்ன இருக்கிறது முன் அனுபவம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவேண்டியது பிரான்ஸின் JV பார்ட்னரின் வேலை. இங்கு நிறைய பேர் HAL லட்சணத்தை கழுவி ஊத்தி இருக்கிறார்கள். நன்கு படித்து பாருங்கள். ஏண்டா பாக்கி 70 கம்பெனிகளோட ஒப்பந்தம் போடறாங்களே ஏன் நீயும் ராகுலும் அவங்களோட அனுபவத்தை பத்தி பேசலை. உனக்கு ஏன் அம்பானி மேல் இவளவு ஆத்திரம். சரி இந்தியாவை எடுத்துக்குவோம். PWD ஒப்பந்தங்கள் தான் இங்க நல்ல பசையுள்ள வேலை. இங்க பெரிய PSU க்கெல்லாம் ஏன் வேல கொடுக்க வில்லை. அப்படியே தனியார் காரனுக்கு கொடுத்தா அவனோட அனுபவத்தை வெச்சு குடுத்தீங்களா. அம்பானிக்கு என்ன தெரியுமுன்னு அவருக்கே ஒரு போன் போட்டு பேச வேண்டியது தானே. ஓலைப்பாயில் மூண்ட கதையா ஒரே தேஞ்ச ரெகார்ட் அம்பானி அம்பானி . டேய் அவன் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குடும்பத்தை போய்க்கேள். உன்னோட பணமா கள்ள வியாபாரத்தை இந்தியாவில் காட்டாதே ....

  • nandaindia - Vadodara,இந்தியா

   யாருக்கு எதில் அறிவாற்றல் அதிகம் என்று யாருக்கும் தெரியாது. சிறு வயது ஜேம்ஸ் வாட் பாத்திரத்தின் மூடியை நீராவி தள்ளுவதை பார்த்து நீராவி எஞ்சினை கண்டுபிடிக்கவில்லையா? நாம் படித்தது தானே? அந்த கண்டுபிடிப்பு இன்று ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் வரை வளர்ந்திருப்பதை நாம் பார்க்கவில்லையா? கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. அவரது அறிவாற்றலை கண்டு நாம் வியக்கவில்லையா? ஒரு அரசனுக்கும் அணைக்கும் என்ன சம்பந்தம் என்று என்றாவது கேள்வி கேட்டதுண்டா? தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்நாளில் ஒரு செல்போன் வியாபாரி, அவர் சார்ந்த குழுமம் விமானங்களை தயாரிக்க முடியாதா? அவர்கள் தயாரிக்கும் விமானத்திற்கு சோனியா என்று பெயர் வைத்தால் ஒருவேளை நீங்கள் இதுபோலெல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்களோ என்னமோ?

 • A.Robet - chennai,இந்தியா

  இரண்டு நாளுக்கு முன் பாகிஸ்தான் சீனா விடம் ஆளில்லாதா போர்விமானங்கள் வாங்கியது அது குறித்த செய்தியில் அந்த விமானத்தின் செயல் திறன் பார்க்கும்திறன் பொருத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் தாக்கும் திறன் முதலியவை இடம் பெற்றிருந்தன இன்று எந்த ஒரு போர்விமானமும் சந்தைக்கு வரும் போதே அதன் திறன் குறித்ததகவல் கிடைக்கும் ஜஹில் என்ன ரகசியம் உள்ளது இது பாஜக வினருக்கு விலைதான் ரகசியம் தேசிய பாதுகாப்பு என்பதெல்லாம் ஊழலை மறைக்க பயன் படும் ஒரு கவசம்

  • MANI DELHI - Delhi,இந்தியா

   உணர்வு பூர்வமான இந்தியன் அதாவது பிறந்த மண்ணுக்கு எந்த வழியிலும் துரோகம் செய்யக்கூடாது என்பதால் எங்களுக்கு எங்களை பற்றி மட்டும் தான் கவலை. உனக்கு பாக்கிஸ்தான் என்ன பண்றான் என்பதை பார்க்கத்தான் நேரம்... நான் சொன்ன இந்தியனாக இருந்தால் இந்த கேள்வியே உங்களுக்கு வந்து இருக்காது

 • Saravanan - Chennai,இந்தியா

  இது காய் கறி வியாபாரம் அல்ல. இரு நாடுகளிடையே ஆன ஒப்பந்தம். மற்றும் நேரடி கொள்முதல். போபோர்ஸ் வாங்க க்வாட்டரோகி புரோக்கர் போல யாரும் கிடையாது. விலையையோ ஒப்பந்தங்களையோ மறைக்க முடியாது. பார்லியமென்டில் பல முறை விளக்கியும் அங்கு பப்பு கேள்வி கேட்காமல் மெளனமாக மொபைல் நோண்டிக்கொண்டு இருந்து விட்டு வெளியே வந்து கேள்வி எழுப்புகிறார். மல்லயா விற்கு கடன் கொடுத்தது காங்கிரெஸ். பிறகு அவனது சொத்துக்களை ஏலம் விட்டு கடன் வசூலிக்கும் மோடி மீது சந்தேகம் கொள்ளும் அதி புத்திசாலி அங்கு சாமிகள் நாட்டில் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என்ற நிலை பப்பு எடுத்ததில் தவறில்லை. துருக்கி நாட்டில் ஒரே ஒரு முறை அதிபரானவர் கோடானு கோடி செல்வம் சேர்த்ததை கண்டு கொண்டு, மக்கள் அவரை போராட்டம் செய்து பதவி விலக செய்தனர். இங்கோ பழைய பொருளாதார அமைச்சர் சொத்துக்களை அரசாங்கம் முடக்கினாலும் அந்த பழைய அரசுக்கு முட்டு கொடுப்பவர்களும் உள்ளனர். வாழ்க ஜன நாயகம்

  • Dynamo - Den Haag,நெதர்லாந்து

   ஆமாம், புரோக்கர் கிடையாது, பணம் அவங்க, அவங்க அக்கவுண்டிற்கு நேரடியாக போய்விட்டது....

 • Shanu - Mumbai ,இந்தியா

  பிரதமர் ஊழல் செய்தால் அல்லது மக்களுக்குக் கெடுதல் செய்தால் body fitting exercise செய்ய போய் விடுவார். Exercise video will be released soon

  • HSR - Chennai,இந்தியா

   போய் தண்ணிய குடி..ரபேல் காந்தி சீக்கிரம் ஆதாரங்களை சேர்த்து கேஸ் போடுவாருண்ணு பார்த்தா ..செரி இடைத்தரகர் பாமிலியேதான் வேணுமா?.. புரோக்கர்ந்நா நம்ம காம பேரரசு மாதிரி வருமா?அவர் ரசிகரான உனக்கு இதெல்லாம் சாதாரணமப்பா

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  பதிலடியை எங்கே தேடுவேன்....அட எங்கே தேடுவேன்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  பிஜேபி காரனுங்கள நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு மெகா ஊழலை மறைக்க முயல்கிறார்கள்...அதை விட.. ஆமாம்..ஊழல் செய்தோம் என்ற ஒரே உண்மையை சொல்லி விடலாம்...

  • Arasu - Ballary,இந்தியா

   புறங்கையை தான் நக்கினோம், இதற்கா 13 ஆண்டுகள் தண்டனை என்பது திரவிஷ கலாசாரம்

  • HSR - Chennai,இந்தியா

   செரி ஊயல் செய்தார்கள்.. போய் கேஸ் போடு

  • nandaindia - Vadodara,இந்தியா

   அப்படியே வைத்துக்கொண்டாலும், உங்கள் முன்னாள் வரி மந்திரியும் அவர் ஒல்லி மகனும் இத்தனை நடந்ததற்கு பின்னரும் நாங்கள் அப்பாவிகள் என்று யோகியர்கள் வேஷம் ஏன் போடுவானேன். ஆம் நாங்கள் கொள்ளை அடித்தோம் என்று ஒப்பு கொள்ளலாமே. செய்வார்களா உத்தமர்கள்?

  • நக்கல் - ,

   பப்புவும் அவரை ஆதறிப்பவர்களும் காளை மாட்டில் பால் கறக்க பார்க்கிறார்கள்.. மோடி ஊழல் செய்ய வாய்ப்பே இல்லை.. செய்யக்கூடியவராக இருந்தால் 3 முறை குஜராத் முதல்வராக இருந்தபோதே செய்திருப்பார்.. RSS காரர்களுக்கு தேசம்தான் முக்கியம்... இந்த விஷயத்தில் மோடி எதிர்ப்பாளர்கள் மண்ணை கவ்வ வேண்டியதுதான்...

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   நக்கலு....

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நெருப்பை மறைகலாம்... ஆனால் ..புகையை மறைக்க முடியாது..ஏற்கனவே புகைய ஆரம்பித்து விட்டது..ராகுல் மூலம் விரைவில் மக்களுக்கு தெரிய வரும்..

  • HSR - Chennai,இந்தியா

   இது பனிடா..உண்மை என்னும் ஆதவன் வரும்போது இது மறைந்து போகும்..

  • Sivak - Chennai,இந்தியா

   இதை கருத்து போடும்போது உனக்கே சிரிப்பு வரலே?

  • Anand - chennai,இந்தியா

   உனது முட்டாள் தலைவனுக்கு தான் பின்னாடி புகைய ஆரம்பித்துவிட்டது....

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

   மோடி என்ற பனி இப்போ ராகுல் என்ற ஆதவன் வருகையால் மெல்ல மெல்ல கரைகிறது....

  • N.K - Hamburg,ஜெர்மனி

   ராகுல் மூலம் ஒரு விஷயம் தெரியவருகிறது என்றால், அது முற்றிலும் நம்பகத்தன்மையற்ற ஒன்றாகத்தான் இருக்கும்.

  • Sanjay - Chennai,இந்தியா

   ராகுல் - யார் அவன்? அது சரி 2001 ஆம் ஆண்டு , பாஸ்டன் விமானநிலையம் , கையில் போதை பொருள் மற்றும் பல லட்சம் அமெரிக்கா டாலர்கள், எப் பி ஐ பிடி. இதற்க்கு பதில் உண்டா ஜெயந்தா ?

 • பாரதன். - ,

  போபர்ஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் விசாரணைக்கு வந்ததுள்ளது. இதையெல்லாம் மறைத்து கவனத்தைத் திசை திருப்பவே ரபேல் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் காங்கிரஸ் பரப்பி வருகிறார்கள். இதை மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால் முக்கியத்துவம் கொடுக்கவேயில்லை.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   இல்ல போபர்ஸ் ஐ வெளியே கொண்டு வந்ததே இதுக்குதான் ஜீஜி. வெளிநாட்டில் " ஜாக்கிரதை, ஒரு ரயில் இன்னொரு ரயிலை மறைக்கலாம்" னு சொல்லுவாங்க. ஒரு வகையில் ரெண்டுமே வெளிவந்தா நமக்கு நல்லதுதான்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ராகுல் அண்ட் காங்கிரஸ் பிஜேபி மோடி நிர்மலா கோலியாத்தை வீழ்த்திவிட்டு மேலுக்கு ஏறி நின்று கையை வெற்றி கோஷமிட்டு உச்சதிகாட்டுறார் . நிர்மலா பதிலுக்கு முனங்குகிறார் , மோடி பினாத்துறார் , பிஜேபி அனத்துறார்கள். ஒரு மிகசிறந்த புலனாய்வாளரை போல ராகுல் மோடியின் அந்தரங்கத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார் . தேசத்தை பிஜேபி எத்துறையிலும் சாய்த்துவிட்டதை ஊழலை மிக கண்ணியமாக வெளிப்படுத்தி காவிகளிடமிருந்து தேசத்தை மீட்டுள்ளார் .

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  இதில் மேலும் பல பூதங்கள் கிளம்பினாலும் ஆச்சரியம் இல்லை. நெருப்பு உள்ளே இருப்பதால் வெளியே புகை வருவதை இவர்களால் தடுக்க முடியுமா என்று பாப்போம்.

  • HSR - Chennai,இந்தியா

   பாபு நாங்க பயர் இஞ்சினுக்கு போன் பண்ணி அணைத்திடுவோம் ..நீ வெளையப்பாரு..

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் போர் விமானங்கள் இந்தியாவிற்க்கு அனுப்ப தயாராகி கொண்டு இருக்கிறது dassaault நிறுவனம் ..ஏற்கனவே ஏர் மார்ஷல் அங்கு சென்று இறுதிக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் என்ஜின் பரிசோதனை அனைத்தையும் பார்வையிட்டு உள்ளார் ...அதன் தொடர்ச்சியாக இப்போது பாதுகாப்பு அமைச்சர் சென்று உள்ளார் ...அதுவும் ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் என்பதால் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரும் சேர்ந்தே அங்கு சென்று பார்வையிட்டு வருகிறார்கள் ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த பதிலடியை இங்கே இருந்தே கொடுத்து இருக்கலாமே... அங்கே போய்தான் கொடுக்கணுமா...? பணம், நேரம்தான் விரயம்

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  ரபேல் போர் விமான கொள்முதலில் மோடி அரசு HAL ஐ வஞ்சித்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை தாரைவார்த்து என்று தவறான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க மீண்டும் மீண்டும் காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. ரபேல் விமான கட்டுமானத்திற்கு டஸ்ஸால் நிறுவனம் ரிலையன்ஸை 2012லேயே (காங்கிரஸ் காலத்திலேயே) offset partner ஆக அடையாளம் கண்டு கூட்டணிக்கு உடன்பாடு செய்தது. HAL ஐ மோடி அரசு வஞ்சித்தது என்று கருதினால் அது தவறு மாறாக மோடி அரசு 83 தேஜாஸ் போர் விமான கட்டுமான பணிகளை HAL க்கு வழங்கியுள்ளது. ரபேல் ஏன் HAL இற்கு புறக்கணிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள பல விஷயங்களை கவனிக்கவேண்டும். இந்திய அரசு, விமானம் கட்டும் நிறுவனம், இந்திய விமானப்படை இவை மூன்றும் தனித்தனி. அண்டை நாடுகளின் நிலவரத்தையும், தனது விமான கையிருப்புகளையும் அறிந்து, போர் மூண்டால் சமாளிக்க எத்தகைய விமானங்கள், மற்றும் அதன் எண்ணிக்கையை இந்திய விமானப்படை ஆராய்ச்சி செய்து தனது தேவையையும் அதற்கான காலவரையறையையும் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கும், விமானப்படை சுட்டிக்காட்டிய அதே விமானத்தை அதே காலகட்டத்திற்குள் கட்டுவதற்கோ, அல்லது கொள்முதல் செய்வதற்கோ இந்திய அரசு முற்படும். காலவரையறை மிகவும் முக்கியம், அதனுடன் சேர்த்து எந்தநேரத்திலும் அதிக அளவிலான விமானங்கள் பறக்கும் தருவாயில் இருக்கவேண்டும். (பல தருணத்தில் விமானம் பழுதுபார்த்தல் பணி முடிவடையாமலேயே நின்றுகொண்டிருக்கும்) இந்த தருவாயிலேயே ரபேல் விமானம் இந்திய விமானப்படையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேஜஸ் (HAL லின் தயாரிப்பு) புறணிக்கப்பட்டதற்கு காரணம் இதுவே, தற்பொழுது இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் தேஜஸ் இலகு ரக விமானத்தை உருவாக்க HAL நிறுவனம் 30 வருடங்களை எடுத்துக்கொண்டது, HAL ஒரு அரசு நிறுவனம், பணிகள் அரசு நிறுவனங்களில் எவ்வளவு வேகத்தில் நடக்கும் என்று எவரும் விவரிக்கவேண்டிய அவசியமில்லை. (பணியை விரைவாக அரசு மட்டும் சாட்டையை சுழட்டினால் பலனில்லை, இதனை காலம் மெத்தனத்தில் ஊறிய ஊழியர்களின் மனநிலையில் மாற்றம் உருவானால் மட்டுமே சாத்தியம்.) அதுமட்டுமல்லாமல் தேஜஸ் விமானம் பறக்கும் ஆற்றல் ஒரு மணி நேரம் மட்டுமே, ஆற்றல் தூரம் 400 கிமீவிற்கும் குறைவே, ஆயுதம் தாங்கும் திறன் 3 டன் மட்டுமே. தேஜஸிற்கு ஒத்த விமானமான F16 (பாக்கிஸ்தான் பயன்படுத்திவரும்) விமானத்தின் பறக்கும் ஆற்றல் 3 மணிநேரம், ஆயுதம் தாங்கும் திறன் 6டன். இதன் மூலம் HAL ஆல் குறிப்பிட்ட கால வரையறைக்குள் ரபேல் போர்விமானத்தை கட்டுவது சாத்தியமில்லை என்பது தெளிவு, அடுத்தது இந்திய விமானப்படை ஒரு விமானத்தை இயக்கும் பொழுது அதன் தரம் நம்பக தன்மை உடையதாக இருக்கவேண்டும் என்பதை விரும்பும், காரணம் அதில் முதலீடு செய்யும் பணம் மட்டுமல்லாமல் விமானியின் உயிரின் முக்கியத்துவத்தையும் கணக்கில் கொள்ளும் (திறமையான விமானியை உருவாகும் பணி சுலபமானது அல்ல, நேரமும் பணமும் அதிகம் செலவாகும்) அதனுடன் சேர்த்து தனக்கு அளிக்கப்பட்ட பணியில் தோல்வியுற்றுவிடக்கூடாது என்றும், தனக்கு அளிக்கப்பட்ட பணியை ( வான் எல்லையை பாதுகாக்கும் பணி) சிறப்பாக செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருக்கும். கடந்த காலத்தில் ரஸ்சியாவிடமிருந்து MIG வகை போர்விமானத்தை இந்திய அரசு கொள்முதல் செய்தது, அதன் ஒருபகுதியாக சில MIG வகை விமானத்தை HAL உள்நாட்டிலேயே கட்டியது, ஆனால் HAL லின் MIG விமானம் இந்திய விமானப்படைக்கு குடைச்சல் கொடுத்தது. இதனை ஒரு பாடமாக இந்திய விமானப்படை எடுத்துக்கொண்டது. ரபேல் விமானத்தில் இத்தகைய பிரச்சனை வரக்கூடாது என்பதினால் ரபேலின் பறக்கும் திறனின் உத்தரவாதத்தை இந்திய விமானப்படை கோரியது, HAL கட்டும் விமானத்திற்கு தன்னால் உத்தரவாதத்தினை அளிக்க முடியாது என்று டஸ்ஸால்ட் பின்வாங்கியது. HAL ஒரு இந்திய அரசு நிறுவனம் அதன் வேலை ஓட்டத்தை டஸ்ஸால்ட்டால் நிர்வகிக்க முடியாது. இதனால் தனியார் நிறுவனத்துடனான கூட்டுத்தயாரிப்பை டஸ்ஸால்ட் ஆதரித்தது. மேலும் 75% விமானங்கள் அதாவது கொள்முதல் செய்யப்படும் 36றில் 27 விமானங்கள் என்னேரமும் பறக்கும் தகுதியுடன் அடுத்த 10 வருடங்களுக்கு இருக்கவேண்டும் என்கிற அம்சத்தை மோடி அரசு சரத்தில் சேர்த்தது. மேலும் மோடி அரசு HAL இ கைவிடவில்லை. அடுத்த கட்ட விமானமான தேஜஸ் MK 1A போர்விமான (83 விமானம்) கட்டுமான பணிகளை HAL இற்கு மோடி அரசு வழங்கியுள்ளது. தொடரும்....

  • Suri - Chennai,இந்தியா

   2012 பேச்சுவார்த்தையில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியின் நிறுவனம் . அந்த நிறுவனத்தை முகேஷ் அம்பை மூடியே விட்டார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? இப்பொழுது உள்ள அம்பானி நிறுவனம் அணில் அம்பானியுடையது எனபதை அழகாக மறைக்கிறீர்கள்.HAL கட்டும் விமானத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற டஸ்ஸால் நிறுவனம் தான் மோடியின் பிரெஞ்சு பயணத்திற்கு 10 நாட்கள் முன் HAL உடனான ஒப்பந்தம் 95 % முடிவடைந்துவிட்டது என்று கருத்து கூறியது , அது எல்லா பத்திரிகையிலும் வந்தது என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? நான்கு வருடங்களாக ஆட்சி நடத்தும் ஒரு கட்சி தன் மேக் in இந்தியா கொள்கையை பல விதங்களிலும் முன்னிலைப்படுத்தியும் கூட HAL நிறுவனத்தின் தரத்தயோ வேகத்தையோ மேம்படுத்த ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? இவர்களுக்கு பிரெஞ்சு விமானம் வாங்கும் விஷயம் பதவி ஏற்ற நேரத்திலேயே தெரியும் என்பதும், HAL அந்த விமான ஒப்பந்தத்தில் பங்கு வகிக்கிறது என்பதும் தெரியாமலா இத்தனை காலம் ஆட்சி நடத்தினார்கள்? கோவா காரணம் காட்டி பரிக்கரை பாதுகாப்பு துறையில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு ஒரு தலையாட்டி பொம்மையை அந்த பதவியில் அமர்த்தியது உள்நோக்கத்துடன் தான் என்று பலரும் கூறும் கருத்து உண்மையாகிவிட்டதே

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   இந்தியா விமானப்படை 324 தேஜஸ் (உள்நாட்டு) விமானத்தை HAL இடமிருந்து கொள்முதல் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. முதல் பணியாக தேஜாஸ் மார்க் I மாடலில் 123 விமானங்களை இணைத்துக்கொள்ளும் எஞ்சியல்ல 201 தேஜாஸ் மார்க் II வகையாக இருக்கும். அதில் பறக்கும் திறன், ஆயுதம் தாங்கும் திறன் அதிகரிக்கப்படும், மேம்படுத்தப்பட்ட ரேடார்கள், எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். டஸ்ஸால்ட் மற்றும் ரிலையன்ஸ் கூட்டு நிறுவனம் ரபேல் உற்பத்தியில் மும்மரமாக இருக்கும் வேளையில் HAL தேஜஸ் உற்பத்தியில் மும்மரமாக இருக்கும். ரபேல் மொத்த ஒப்பந்தப்பணியில் 50% பணம் இந்தியாவிலேயே முதலீடு செய்யப்படும் என்ற அம்சத்தை மோடி அரசு ஒப்பந்தத்தில் இணைத்துள்ளது. சரியாக கூறவேண்டுமானால் ரபேல் விமானத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் கட்டுகிறது (ரிலையன்ஸ் அல்ல), அதன் உதிரிபாகங்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து (ரிலையன்ஸ் உட்பட 12 நிறுவனங்களிடமிருந்து) பெற்றுக்கொள்கிறது. மொத்த ஒப்பந்தப்பணியான 59,000 கோடியில் 30,000 கோடி இந்தியாவில் முதலீடுசெய்யப்படும். அதில் 9,000 கோடி DRDO (Defence Research Development Organisation) உள்நாட்டு தயாரிப்பான காவேரி ஜெட் என்ஜின் உற்பத்தியில் முதலீடு செய்யப்படும், 6,300 கோடி ரபேலில் பொருத்தப்பட்டிருக்கும் M88 என்ஜினை உற்பத்தி செய்யும் பணியில் safran நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும், safran நிறுவனம் உற்பத்தி செய்யும் எஞ்சின்களைத்தான் HAL பயன்படுத்தி வருகிறது. 6,300 கோடி ரபேல் விமானத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடார் கருவிகளை உற்பத்தி செய்ய thales நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். 8,400 கோடி ரூபாய் ஏர்ஃபிரேம் மற்றும் கணினி ஒருங்கிணைப்புகளை கவனித்துக்கொள்ளும் டஸ்ஸால்ட்-ரிலையன்ஸ் கூட்டு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும். safran, thales, Reliance இவை மூன்றும் மூலப்பொருட்களை 100றிக்கும் ஏற்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இதன் மூலம் பல இந்திய நிறுவனங்கள் பயன்பெறும். மேலும் காங்கிரஸ் அரசு டஸ்ஸால்ட் என்னும் நிறுவனத்திடமிருந்து ரபேளை கொள்முதல் செய்யவிருந்தது, ஆனால் மோடி அரசு (இந்திய அரசு) பிரெஞ்சு அரசிடமிருந்து கொள்முதல் செய்வதால் இதில் யாருக்கும் எந்த கமிசினும் கிடையாது. (இதனாலேயே ராகுலும் பிரான்ஸின் முன்னாள் பிரதமருமான francois ஹோலண்டேவும் குமுறுகின்றனர்) முக்கியமாக transfer of technology (கட்டுமான தொழில்நுட்பம்) பிரெஞ்சு அரசு இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளும். நேரிடையாக டஸ்ஸால்ட்டிடம் இருந்து (தனியார் நிறுவனத்திடமிருந்து) கொள்முதல் செய்தால் பிரெஞ்சு அரசின் ஒப்புதலின்றி டஸ்ஸால்ட் ஆல் கட்டுமான தொழிநுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளமுடியாது. வித்தியாசம் புரிகிறதா.

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   சூரி, 2012 பேச்சுவார்த்தையில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் முகேஷ் அல்லது அணில் ஆ என்பது இப்பொழுது பிரச்சனையா இல்லை HAL ஐ தவிர்த்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றது என்பது பிரச்சனையா. இதுவரை ஏன் காங்கிரஸ் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளிக்க சம்மதித்தது என்பதினை மறைத்துவந்தீர்கள். ஆகா 2012ஆம் ஆண்டு HAL ஐ புறக்கணித்து முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு தர தயாராக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இது நல்ல முயற்சி. HAL லிடமிருந்து டஸ்ஸால்ட் பின்வாங்கிய காரணத்தை மேலே ஏற்கனவே விவரித்துளேன், மறுபடியும் படியுங்கள். HAL நிறுவனத்தின் (எந்த அரசு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும்) தரத்தயோ வேகத்தையோ மேம்படுத்த அரசு சாட்டையை சுழற்றினாள் மட்டும் பத்தாது, ஊழியர்களின் மனநிலையும் மாறவேண்டும் (இது தனி தலைப்பு). பாரிக்கரை கோவா முதல்வராக விரும்பியது பாஜக அல்ல, அங்கு இருக்கும் அணைத்து இதர காட்சிகளே ஆகும், ஒரு வேலை பாரிக்கர் ராணுவ அமைச்சராகவே தொடர்ந்திருந்தால் மோடி அரசின் ரபேல் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பீரா. பிரான்ஸிடம் ரபேல் விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது பார்க்கரே ஆகும். Goa chief minister Manohar Parrikar on Saturday (9/12/17) accused former defence minister AK Antony of creating a "logjam" over the Rafale fighter jet deal and asserted that the acquisition of the French aircraft has given India a superiority over Pakistan in terms of air power. Parrikar was never against modi's Rafale deal

  • பாமரன் - ,

   ஜெகே... எப்போதும் தெளிவாக எழுதும் உங்களிடம் ஏன் இத்தனை தடுமாற்றம்...??? நடுநிலை தவறி நமக்கு விருப்பமானவருக்காக சிந்தித்தால் இப்படித்தான் ஆகும். நான் கேட்க நினைத்த பல விஷயங்களை சூரி கேட்டுவிட்டார். பதில் கிடைப்பது கடினம். விவரமான நீங்களும் ஒரு விமானத்தை (தேஜஸ்) டிசைன், வேலிடேஷன், டெஸ்ட், ட்ரையல் செய்து செயல்பாட்டுக்கு வருவதை .... இந்த ஸ்டேஜ் எல்லாம் கடந்து உபயோகத்தில் இருக்கும் ரஃபேல் உடன் ஒப்பிட்டு பேசுவது வேடிக்கை. இது அரசியல் வியாதிகள் செய்யும் வேலை. மேலும் ஏதோ மோடி வந்துதான் தேஜஸ் ஆர்டர் போட்டதாக சொல்வதும்....ஏதோ முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் ஒப்பந்தம் இப்போது அரசு ஒப்பந்தம் அப்பிடின்னு சொல்வதும்....ஸாரி அபத்தம். காங்கிரஸ் கொண்டு வந்த எல்லா திட்டங்களை காப்பியடித்து அல்லது கன்டினியூ செஞ்சி நாங்கள் சாதனை பண்ணிட்டோம்னு தண்டோரா போடும் சாதாரணமான பகோடான்னா இனிமேல் உங்களுக்கு சொல்ல ஒன்றுமில்லை. இந்த விஷயத்தில் தவறு நடந்து விட்டது... திருத்த வேண்டியுள்ளது... அவ்வளவுதான்... ஒத்துக்கிட்டு போறது நல்லது...

  • Sudhagar Ramaiah - Tiruvannmalai,இந்தியா

   Jk வின் கருத்துக்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது இதுபோன்ற கருத்துக்கள் கூற, குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொண்டாள் மட்டுமே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் உங்களின் தேச பற்றுக்கு தலை வணங்குகிறோம். அரசுகள் என்றால், அத்துறை சார்த்த தொழில்கள் மெத்தனமாகத்தான் இருக்கும். உதாரணத்துக்கு மத்திய அரசின் HAL , BSNL மற்றும் பல. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் cooptex , போக்குவரத்துத்துறை இப்படி மற்றும் பல. தமிழக Cooptex சிறுது காலம் லாபகரமாக இயங்கியது காரணம் சகாயம் போன்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் நிர்வாக திறமையால். இதே போன்று தூங்கிக்கொண்டிருந்த BSNL இன்று தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு டேட்டாக்களை அள்ளித்தருக்கிறது. இத்தேர்க்கு கரணம் பிரதமர் மோடி தான். அதே போன்றுதான் HAL நிறுவனமும். வருடத்திற்கு 7 விமானங்கள்தான் அதன் உற்பத்தி திறன். அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடும் HAL நிறுவனத்திடம் இருக்கிறது. இந்திய முன்னேறக்கூடாது என்று பல வெளிநாட்டு சக்திகள் HAL நிறுவனத்தில் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. ஆயிரம் தான் HALil மாற்றங்கள் கொண்டுவந்தாலும் , அநியாசக்திகள் மூலம் உற்பத்தி துவண்டு போகிறது. போர் விமான உற்பத்தி வெளிநாடுகளுக்கு கொடுத்து இதுநாள் வரை , நமது வேலைவாய்ப்பை இழந்தோம் . இதனாலேயே போர் விமான உற்பத்தி தனியாருக்கு கொடுக்க நிர்பந்தப்படுத்தப்படுகிறது.

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   பாமரன், நான் ரஃபேல் செயல் திறனை தேஜஸ் உடன் ஒப்பிடவில்லை, தேஜசின் timeline பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன். தேஜாஸ் 30 ஆண்டுகள் எடுத்தது என்பதிலேயே யாருடைய ஆட்சி காலத்தில் வந்த திட்டத்திற்கான பதில் இருக்கிறது. மோடி HAL ஐ உருவாக்கினார் என்று கூறவில்லை, ரஃபேல் தனியார் வசம் சென்றாலும் அடுத்த கட்ட (next generation) தேஜஸ் வேலை HAL இற்கு மோடி அரசு ஒதுக்கியுள்ளது. ரஃபேல் ஐ மோடி அரசு தேர்ந்தெடுத்து என்று கூறவில்லை ஒப்பந்தத்தில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறேன். காங்கிரஸ் கொண்டுவந்தது Dassault நிறுவனத்திற்கும் இந்திய அரசிற்கும் இடையிலான ஒப்பந்தம் அதனால் transfer of technology french அரசாங்கத்தின் ஒப்புதலின்றி முடியாது, மோடி அரசு செய்தது இரு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம், ஆதலால் இடைத்தரகர்கள் கிடையாது, கமிஷனும் கிடையாது என்று கூறுகிறேன்.

  • HSR - Chennai,இந்தியா

   ஜே கே சார் அருமை..ஆனால் நீங்கள் இவர்களிடம் பதிலுக்கு பதில் போடுவது உங்கள் நேரவிரயம் அன்றி வேறு ஒன்றும் இல்லை.உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. தங்களையும் அரசியல் பேச வைத்துடுவார்கள் திராவிட மட்டைகள்..பிணத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு ரபேல் கிடைத்தால் கசக்குமா என்ன..? உங்கள் பதிவை போட்டு விட்டு விடுங்கள்.பதில் கூறி தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் வேறு ஒரு நல்ல பதிவுக்கு தங்களை தயார் படுத்துங்கள் .அது எங்களுக்கு உபயோகமாக இருக்கும்...பாமரன் அண்ணன் மிக்க அறிவாளி..அவரிடத்தில் பேசி எங்களுக்கு கிடைக்கும் நல்ல பதிவுகளை வீணடிக்க வேண்டாம்..நன்றி

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   "முன்னே பின்னே பழக்கமே இல்லாதவனை வச்சி விமானம் செய்யும்போது" 30 , 40 வருஷ HAL அனுபவத்தை வைச்சி ஏன் நம்மால செய்ய முடியாது ? (ஒருத்தன் கூட தேஜாஸ் முக்கைகூட துடைச்சதில்லை.) அல்லது HAL ஐ ரிலையன்ஸ் மேற்பார்வையில் விடலாமே.

  • abdul rajak - trichy,இந்தியா

   ஒரு rafale விலை 1500 கோடி . பாகிஸ்தான் சீனா கூட்டு தயாரிப்பான J F block 3 thunder விலை 200 கோடி . இந்தியாவின் தேஜஸ் 150 கோடி . இந்த ரபாலே ஒன்றுக்கு பதிலாக 8 தேஜஸ் வாங்க முடியும் . போர் விமானங்கள் என்பது இப்போது DOG FIGHT கு தான் பயன் படும் . அப்படி இருக்க 4 தேஜஸ் சேர்த்தாலே RAFALEYAI வீழ்த்தி விட முடியும் . தேஜஸ் உள் நட்டு தயாரிப்பு .வேலை வாய்ப்பும் அதிகம் .

  • Suri - Chennai,இந்தியா

   jey key அவர்களே நீங்கள் பாரிக்கர் same side goal போடுவார் என்று எதிர்பார்த்தீரா? HAL இடம் இருந்து டஸ்ஸால் பின் வாங்க அரசியல் காரணம் தான் அன்றி வேறு காரணம் இல்லை. "மோடி HAL ஐ கைவிடவில்லை " : ஏன் MK ரக விமானத்தின் தரத்தை மட்டும் HAL தயாரித்தால் விமான படை ,ஏற்றுக்கொள்ளும் ஆனால் rafale தரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ? உள்ளடி உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளது. ஒப்புக்கொள்ளும் தயிரியம் தான் இல்லை. இதில் யாருக்கும் கமிஷன் கிடையாது என்று கூறும் நீங்கள் முன்னனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு மோடியின் நேரடி தலையீட்டில் ஒப்பந்தம் ஒதுக்கப்படுவதற்கு அம்பானி மோடியின் மாமனும் இல்லை மச்சானும் இல்லை. ஒரு சக குஜராத்திற்கு மற்றோரு குஜராத்தி செய்த பிரதி உபகாரமே அன்றி வேறில்லை. தேர்தல் செலவு, தனி விமான செலவு, கட்சி நிதி இது போன்ற விஷயங்களில் பீ ஜெ பீ அம்பானியிடம் இருந்து ஒரு நயா பைசா வாங்கவில்லை என்று அவர்கள் வணங்கும் ராமர் மீது சத்தியம் செய்வார்களா?

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   சுதாகர் உங்கள் ஆதரவிற்கு நன்றி. படிப்பதில் ஆர்வம் கொண்ட, பயின்று கொண்டிருக்கும் ஒரு சாதாரண நபர் நான். அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லை, இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை உண்டு. HAL Advanced Medium Combat Aircraft உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறது. முதல் சோதனை ஓட்டம் 2022 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்கலாம் எந்த அளவிற்கு போகிறது என்று.

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   சூரி ஜி, HAL இடம் இருந்து டஸ்ஸால்ட் பின் வாங்க அரசியல் காரணம் தான் என்றால் பெப்ரவரி 2012டில் தொடங்கப்பட்ட பேரம் ஏன் 2014லிற்குள் முடியவில்லை. முன்னனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு (ரிலையன்ஸ்) 2012டில் காங்கிரஸ் பரிந்துரை செய்ததை ஊழல் எண்ண அடிப்படையிலேயே அமைந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

  • Shekgar Ramamoorthy - Chennai,இந்தியா

   abdul rajak - trichy,இந்தியா, Please enlighten yourself, about fighter capacity and other details. Dont compare apple to orange.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "ஒரு விமானத்தை (தேஜஸ்) டிசைன், வேலிடேஷன், டெஸ்ட், ட்ரையல் செய்து செயல்பாட்டுக்கு வருவதை .... இந்த ஸ்டேஜ் எல்லாம் கடந்து உபயோகத்தில் இருக்கும் ரஃபேல் உடன் ஒப்பிட்டு பேசுவது வேடிக்கை" - நாலு வார்த்தை தெரிந்தால் ஏதோ ஏரோஸ்பேஸ் புலி போல வந்துவிடுவதில்லை ஆச்சரியம் ஒன்றும் இல்லை... HAL சுதந்திரம் வாங்கியதில் இருந்து தானே ஏதாவது ஒன்றை உருப்படியாக சாதித்தது உண்டா? ஒரு எலிக்காப்டர் கூட ஒழுங்காக வடிவமைத்து இயக்கம் திறமை இல்லை... பாதிக்கு மேல் ஓடாமல் நிற்கிறது... 40 வருடம் ஆனாலும் HAL அதே போலத்தான் இருக்கும்... தனியாருக்கு கொடுத்தால் தவிர திட்டம் வெற்றி பெறாது... போர் முனையில் ஆயுதம் வேண்டும்... வெட்டி அரசியல் தேவையில்லை... புறவாசல் வழியாக பாக்கிகளையும், சீனர்களையும் சந்திக்கும் ஒரு தறுதலைக்கூட்டத்தை வைத்துக்கொண்டு எப்படித்தான் இப்படி பொறுப்பில்லாமல் பேச முடிகிறதோ... நீ நல்லா வருவா...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   காசி ரஃபேல் ஒன்னும் புதிய வண்டி இல்ல.. 20 வருஷத்தை தாண்டிய டெக்னாலஜி... 20 வருஷமா எந்த ஒரு நாடும் வாங்காதது. அந்த தனியார் விமானத்தை இந்தியா, குவைத், ஈஜிப்ட், பிரெஞ் ராணுவம் நான்கும் இப்போதுதான் ஏறக்குறைய ஒரே சமயத்தில் முதன் முதலாக வாங்குகின்றன.

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  ஆட்சி மாறும்போது உண்மை வெளிவரும்

  • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

   கோத்ரா கேஸ் மாதிரியா? கோஆங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி.பாதை போனதாலும், மோடிக்கு பணம் ஏமாந்தவர்கள், மாற்று மதத்தினரின் ஆதரவு இல்லை என்பதாலும் கூவுகிறார்கள்.ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கும்.

 • nallavan - tiruchy,இந்தியா

  பதிலடியா ???கத்திய வச்சே முட்டுக்கொடுக்குறானுங்க .

 • krishnan - Chennai,இந்தியா

  ஊழல் மன்னன் வாய் திறக்க மாட்டாரா ?

  • nandaindia - Vadodara,இந்தியா

   மண்ணுமோஹனுக்கு வாயை திறந்து பழக்கம் இல்லையே???

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   மண்ணும் இதுவும் ஒன்னுதானா...

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  ஆமாம் என்று சொல்வதில் என்ன தயக்கம். தொழில் போட்டி CAPABILITY உருவாக்க புது நிறுவனங்கள் வருவது நல்லது. HAL கொடுக்காத வேலை வாய்ப்பை , புது நிறுவனம் aeronautical என்ஜினீர்களுக்கு கிடைக்கும். ஒரே ஒரு ஏர் இந்தியாவை மட்டும் நம்பி இருந்தால் இன்று இந்தியாவில் வான் பயணம் வேறு கதி ஆகி இருக்கும். பல ஆயிரம் பேர் திறமை வளர்த்து கொண்டு இருக்க முடியாது. பிஜேபி இன்னும் ஓப்பனாக இருக்கலாம்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்போ ஏர் இந்தியாபோல HAL ம் மூழ்கிடுமா..

 • kailawsh - Pollachi,இந்தியா

  அனுபவப்பட்ட தொழில்கள் அனைத்திலும் சொதப்பி, 45000 கோடி கடனில் மூழ்கிக்கொண்டிருந்த அணில் அம்பானி.' Reliance Defence ' என்கிற முன் அனுபவமே இல்லாத ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய சில நாட்களில் நாட்டின் பிரதமருடன் பிரான்ஸ் செல்கிறாராம். அங்கு ஒப்பந்தம் ஆகிறது. மோடி அவர்கள் பிரதமராக இல்லாதிருந்தால், ஒரு டீக்கடை வைக்கக்கூட அணில் அம்பானியை கூட்டு சேர்க்க மாட்டார். ஆனால் பிரான்ஸ் அரசு, அணில் அம்பானியை தேர்வு செய்கிறதாம். காதிலே பூ...

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  There cannot be smoke without fire,Congress,BJP both are the same working for some vested interest.we the people of this country are the fools who have to put up with all these hippocrits.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   You continue to be fool. Now we don't want to be.. Rahul has no issues to talk and his blabbering activity is felt as smoke by you. Relax and think. Vested interest for the last 50 years made you to see all are working for self benefit. This is your Optical Illusion. Correct yourself.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பொறுங்கடி ........பப்பு ஒன்னும் அவங்க அப்பா அம்மா மாதிரி கிடையாது. இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகத் தெளிவான திறமையான நேர்மையான அரசியல் தலைவர். எல்லோரும் வெவ்வேறு உப்புச்சபற்ற விஷயங்களை எடுத்து போராடிக் கொண்டிருக்கும் போது நாட்டின் பணத்தை திட்டமிட்டு கொள்ளை அடித்த ரபேல் விவகாரத்தை கையிலெடுத்து இன்று ஊழல் நடந்தது நூறு சதவீத உண்மை என்ற நிலையில் கொண்டு வந்த திறமையும் துணிச்சலும் ராகுல் மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சுயநல ஊடகங்கள் எத்தனை தான் மோசடிக்கு முட்டுக் கொடுத்தாலும் மக்கள் என்ன தான் மதவாத மூளைச்சலவைக்கு மயங்கினாலும் குன்ஹா போன்ற நல்லதொரு நீதிபதியின் கையால் ராகுலின் அதிரடியால் அடையாளம் காட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். எல்லோரும் எல்லாக் காலங்களிலும் தப்பி விடுவதில்லை.

  • Arasu - Ballary,இந்தியா

   திரு தங்கை ராஜ, பப்புவை உயர்த்த அவருடைய அப்பாவை தேவையில்லாமல் தாழ்த்திவிட்டீர்கள் கருப்பு வெள்ளையில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் கலர் டிவி கொண்டுவந்தார் குறைந்தது 6 கம்ப்யூட்டர் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுமதி கொடுத்தார் BPL LG போன்ற கம்பெனிகள் இந்தியாவுக்குள் வந்தன. காங்கிரஸில் இருந்த பழமை வாதிகளை விரட்டினார் (முலாயம் , கமலபதி திரிபாதி , ஜெகன்நாத் மிஸ்ரா போன்றோர்) ராஜீவின் போக்கில் 10 % தேறமாட்டார் இந்த பப்பு. இவருக்கு மோடி எவ்வளவோ மேல். நீங்கள் மோடியை வெறுக்கின்றீர்கள், போலிமத்த சார்பின்மை இணைக்கின்றது என்பதற்காக இவரை உயர்த்த அவருடைய அப்பாவை தாழ்த்த வேண்டாம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   “தெளிவான திறமையான நேர்மையான அரசியல் தலைவர்” - ஹெரால்டு வழக்கில் சிக்கி ஜாமீனில் மீன் பிடிக்கிறார்... இருந்தாலும் முட்டுக்கொடுக்கிறியே...

  • nandaindia - Vadodara,இந்தியா

   குன்ஹாவை பாராட்டியது போல் சர்காரியாவையும் பாராட்டி இருக்கலாம். ஏனெனில் 27000 சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது, அந்த சாக்குப்பைகளை எல்லாம் கரையான் தின்று விட்டது என்று சொன்னதை கேட்கவும் ஒரு துணிவு வேண்டுமல்லவா? அந்த துணிவிற்கு அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   காசிமணி பாஸ்கரன் சார்... .////இருந்தாலும் முட்டுக்கொடுக்கிறியே......//// முட்டுக் கொடுக்குறது நீங்களா... இல்ல.. நீங்க சொன்ன ஆளா...? “என்னமா கூவுறாய்யா.... காசு கொடுத்ததுக்கு மேலே கூவுறாய்யா... கொய்யால...”...ன்னு ஒரு படத்துல வரும் வடிவேல் காமடி போல இருக்கு..?

  • nandaindia - Vadodara,இந்தியா

   கருணாவின் கல்யாண சாவெல்லாம் சரி. ஆனால் எந்த தலைவர் இறந்த போதும் நிகழாத ஆறு அப்பாவிகளின் மரணம் உங்கள் தலைவர் இறந்த போது நிகழ்ந்துள்ளதை நீங்கள் மறந்து விட்டீர்களே? அதோடு ஆறடி நிலத்திற்காக கோர்ட் படி ஏறவேண்டி வந்ததையும் நாம் படிப்பினையாக எடுத்துக்கொள்ளலாமா?

 • HSR - Chennai,இந்தியா

  இடைத்தரகர்கள் இளவல் HAL சென்று விசாரித்து ஊழலை 007 போல கண்டுபிடிப்பது காலத்தின் கட்டாயம் .இதெல்லாம் அவருக்கு ஜுஜுபி.. எனவே இதெல்லாம் வேண்டாம்..காம பேரரசு செய்தியை ஏன் நீக்கிவிட்டீர்கள்? சின்மயி சிறப்புப்பேட்டியோடு உடனே வெளியிடவும்..

  • MANI DELHI - Delhi,இந்தியா

   நேத்திக்கு இளவரசர் HAL தொழிலாளிகளை பார்க்கப்போறோம் என்று சொன்னதும் அதை பலரும் ஒதுக்கியதாக செய்தி. இவன் அங்கேபோய் உண்டியல் குலுக்கிகளின் அணுகுமுறையை கையாளலாம் என்ற முயற்சியில் தண்ணியை ஊற்றி விட்டார்கள்

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அதுதானே அவங்க தெளிவாக சொல்லிவிட்டாங்க, ரிலையன்ஸ் நிறுவனத்தை கண்டிப்பாக சேர்க்கணும் என்று இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது என்று. அது பொய்யாக இருந்தால் Black and White ஆக இந்தியா விண்ணப்பித்த ஆவணங்களை வெளியிடலாம், இந்த சூழ்நிலையில் இந்த அம்மையார் பிரான்சிற்கு போனது தவறு.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   இராணுவ அமைச்சர் போகாமல் பட்புவா போவார்?

  • மணிமாறன் - trichy,இந்தியா

   நீ அவரை " பப்பு" " பப்பு" என்று சொல்ல சொல்ல அந்த பப்பு தான் தினம் ஒரு "ஆப்பு" வைத்து கொண்டிருக்கிறார்......அடுத்த தேர்தலில் பப்புவிடம் தான் பெரும் தோல்வியை காண போகிறார் மோடி

  • HSR - Chennai,இந்தியா

   நீ அவரை " பப்பு" " பப்பு" என்று சொல்ல சொல்ல அந்த பப்பு தான் தினம் ஒரு "ஆப்பு" வைத்து கொண்டிருக்கிறார்......அடுத்த தேர்தலில் பப்புவிடம் தான் பெரும் தோல்வியை காண போகிறார் மோடி/// ஆத்திரம் அறிவுக்கு சத்ரு. நீ சொன்னதை நன்றாக படித்து பார். டெய்லி ஒரு ஆப்பு வைக்கிறான் பப்பு யாருக்கு காங்கிரசுக்கு அதன் கூட்டணி கட்சிகளுக்கு. முட்டாள்தனமாக உளறி வரும் ஓட்டையும் எடுத்துக் கொள்கிறான். மோடி பப்புவிடம் அவனது தோல்வியை காண போகிறார் இந்த 44 கிடைக்காமல் போக போகிறது காங்கிரசின் வரலாற்றில் இதைப்போன்ற தோல்வி எப்போதும் இருக்காது.

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீங்கள் இறுக்கமாக மூட மூட மறுபடியும் மறுபடியும் ஏதோ நாற்றம் வந்து கொண்டே இருக்கிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement