Advertisement

மதுரையில் 10 நாட்களில் கொட்டி தீர்த்த மழை 124.2 மி.மீ.,:இனியாவது அதிகாரிகள் 'அலர்ட்' ஆவார்களா

மதுரை:மதுரை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சராசரியாக 124.2 மி.மீ., மழை பெய்துள்ளது. வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் பொதும்பு உட்பட பல பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

அதிகபட்சமாக அக்.,4ல் 11.55 மி.மீ., 6ல் 8.11, 7ல் 10.67, 8ல் 42.69, 9ல் 29.90 மி.மீ., மழை பதிவாகியது. மழைக்கு வாடிப்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கலா என்பவர் இறந்தார். மின்னல் தாக்கி 17 ஆடுகள் பலியாகின. 19 வீடுகள் சேதமடைந்தன. இதில் உசிலம்பட்டியில் மட்டும் 12 வீடுகள் சேதமானதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையால் பல பகுதிகளில் ரோடுகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டன. ரோடு இருந்த அடையாளமே இல்லை. துாங்கா நகரம் துாசி நகரமாகிவிட்டது. பத்து நாள் மழைக்கே தாங்காத மதுரை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டினால் என்னவாகுமோ என மக்கள் அச்சப்படுகிறார்கள். இனியும் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மழை நிவாரணப்பணிகளில் கொஞ்சம் தேர்தலாம் என்னும் நல்ல எண்ணம் காரணமாக இருக்கும்

  • S.AJINS - CHENNAI,இந்தியா

    நீர்மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement