Advertisement

ஊராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப தொடரும் இழுபறி! விண்ணப்பங்களுக்கு மீண்டும் பரிசீலனை

உடுமலை;ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி தொடரும் வகையில், விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலனை செய்து, பட்டியல் அனுப்ப, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் உள்ள, 265 ஊராட்சிகளில், செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு நடப்பாண்டு துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காலியிடங்களால், பணிச்சுமை அதிகரிப்பதோடு, அரசுத்திட்டங்களை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டுமென கோரிக்கை எழுந்தது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் பெறப்படுவேதோடு, பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் முடங்குகின்றன.

நடப்பாண்டில், பணியிடங்கள் கட்டாயம் நிரப்பப்படும் என எதிர்பார்த்தனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும், 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கான நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக பின்பற்றப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் மாநில அளவில், மீண்டும் இப்பணிகள் நிறுத்தப்
பட்டது. கடந்த மாதம், வேறு சில மாவட்டங்களில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலனை செய்து, தகுதியான விண்ணப்பங்களை மட்டும் அனுப்பவும், அதற்கான காரணங்களை குறிப்பிடவும், மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, உடுமலை ஒன்றியத்தில், விண்ணப்பங்கள் சரிபார்க்கும்
பணிகள் துவங்கியுள்ளது.

காலிப்பணியிடங்கள்

உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 8; குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளுக்கு, 7; மடத்துக்குளத்தில், 11 ஊராட்சிகளுக்கு, 5, பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதனால், பல்வேறு பணிகள் தொய்வடைந்து, சில கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளன.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    கோர்ட்டுக்கு லீவு விடும் போது கண்டிப்பா போஸ்டிங் போட்டுடுவாங்க...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement