Advertisement

போஃபர்ஸ் பீரங்கி ஊழல்: இன்று விசாரணைக்கு வருமா ?

புதுடில்லி: கடந்த 1986-ஆம் ஆண்டில் மத்தியில் காங். ஆட்சியின் போது சுவீடனைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு ரூ. 1,437 கோடியில் பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரூ. 64 கோடி வரை லஞ்சம் கைமாறிய விவகாரத்தை 1990-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் 2005-ம் டில்லி உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த பிப்ரவரியில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அப்போது அஜய் அகர்வால் என்பவர் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரியிருந்தார்.இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் செய்திகள் வெளியாயின. ஆனால் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. .

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இதை இன்னுமா நினைவில் வைத்து இருக்கிறீர்கள்... எப்பிடியும் இந்த சினிமா இன்னும் நூறு ஆண்டுகள் ஓடும் இல்லையா...

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    உண்மையான ரபேல் ஊழல் விவகாரத்தை திசை திருப்ப எப்போதோ செத்துப்போன போபர்ஸ் பூச்சாணடிக்கு புத்துயிர் கொடுக்க பிரயத்தனம் செய்வது புரிகிறது.

  • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

    அவசரமே இல்லை. மேலும் சில காலம் எடுத்துக்கொண்டு வழக்கை விசாரித்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள், இறந்து விடக்கூடிய நிலை வரும். அப்போது எளிதாக வழக்கை முடித்துவிடலாம்.

  • Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா

    இது உண்மையைக் கண்டறியவா? மக்களின் பணம் வீணடித்தோரை தண்டிக்கவா? நிச்சயமாக இல்லை? ராஃபேல் விமான ஊழலில் சிக்கித்தவிக்கும் மோடியின் அரசினை காத்திடும் நோக்கில் ராகுலின் வாயை அடைக்கும் முயற்ச்சியே

  • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

    1986 இல் நடந்த சம்பவம்... 2005 இல் முடிவடைந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை. 2018 இல் மேன்முறையீட்டு விசாரணைக்கு வருமா என்று கேள்வி. அப்படி என்ன அவசரம் 2036 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். இதுதான் இந்திய நீதித்துறை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement