Advertisement

சாமியார் குற்றவாளி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடில்லி:ஹரியானாவை சேர்ந்த சாமியார் ராம்பால் மீது சுமத்தப்பட்ட இரண்டு கொலை வழக்குகளில், அவன் குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கான தண்டனை, அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.


ஹரியானாவில், உள்ள ஹிசார் மாவட்டத்தில், ராம்பால் என்ற போலிச் சாமியார், ஆசிரமம் நடத்தி வந்தார். இவருக்கு, பல மாநிலங்களிலும் பக்தர்கள் உள்ளனர்.'ஸ்தல்லோக்' என, அழைக்கப்படும் இவனது ஆசிரமத்தில், 2014ல், நான்கு பெண்களும், ஒரு குழந்தையும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, ராம்பாலை, போலீசார் கைது செய்தனர்.


சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தில், மேலும் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவருக்கு எதிராக, இரண்டாவது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.இந்த இரண்டு கொலை வழக்குகளின் விசாரணையும், ஹரியானா மாநிலத்தில் உள்ள, செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. மொத்தம், 80 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.விசாரணை முடிவடைந்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 'இரு கொலை வழக்குகளிலுமே, ராம்பால் குற்றவாளி' என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விபரங்கள், 16 மற்றும் 17ல், வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அதிரடிப்படை மற்றும் துணை ராணுவப்படையை சேர்ந்த 4,000 போலீசார், ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இவனுக்கா இவ்வளவு பாதுகாப்பு..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement