Advertisement

துப்பாக்கி திருட்டு நடிகர் புகார்

சென்னை: நடிகர் ஒருவரின்,'ஏர் கன்' துப்பாக்கி திருடுபோய் விட்டதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூரைச் சேர்ந்தவர், சமுத்திரம். இவர், நேற்று பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:விஷால் நடித்த சண்டைக் கோழி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளேன்.உரிமம் பெற்று, 'ஏர் கன்' வகை துப்பாக்கியை வாங்கினேன். அதை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு கொடுத்து வந்தேன்.அக்., 9ல், துப்பாக்கியை, தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள, திருமண மண்டப பொறுப்பாளர், ஆறுமுகம் என்பவரிடம் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு சென்றேன்.மறுநாள் வந்து கேட்ட போது, துப்பாக்கி திருடுபோய் விட்டதாக தெரிவித்தார். என் துப்பாக்கியை கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement