Advertisement

பாதி வழியில் ரத்து

ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், திருத்தணி, சூலுார்பேட்டை ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு, காலை, 6:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், திருத்தணி - அரக்கோணம் இடையே, 14ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது சென்ட்ரலில் இருந்து சூலுார்பேட்டைக்கு, இரவு, 8:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை இடையேயும், 14ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது ஆவடியில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் ரயில், நிலையம் மாற்றப்பட்டு, சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்துக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement