Advertisement

அரக்கோணம் ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை - அரக்கோணம் - கூடூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு, நாளை இரவு, 9:45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு, அதிகாலை, 1:20 மணி மற்றும் 4:20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், 14ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு, அதிகாலை, 3:45 மணிக்கும், கடற்கரை நிலையத்துக்கு, காலை, 4:00 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், 14ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு, அதிகாலை, 4:00 மணிக்கும்; சூலுார்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, இரவு, 11:00 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், 14ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, அதிகாலை, 12:15 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு, அதிகாலை, 2:45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், 15ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement