Advertisement

காத்திருந்த நகை வியாபாரி தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: 'திருட்டு நகை வாங்கியதாக, நகை வியாபாரியிடம், போலீசார் விசாரணை நடத்திய விவகாரத்தில், மனுதாரருக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, நகை வியாபாரி முத்து, மாநில மனிதஉரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், நகை கடை நடத்தி வருகிறேன். 2010 செப்டம்பரில், மாலை, 6:30 மணிக்கு, வண்ணாரப்பேட்டை போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு, இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருக்க கூறினர்.இன்ஸ்பெக்டர், இரவு, 11:00 மணிக்கு வந்தார். அவரிடம், காரணம் கேட்டப்போது, நான் திருட்டு நகை வாங்கியதாக கூறினர். அதுபோன்று நான் வாங்கவில்லை என, தெரிவித்தேன். பின், இரண்டு வெள்ளை தாளில், கையெழுத்து வாங்கி அனுப்பினர்.எனக்கு, நீரிழிவு நோய் இருப்பதாக கூறியும், சம்பந்தமில்லாமல், என்னை காத்திருக்க வைத்த போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், 'போலீசார், மனித உரிமைமீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மனுதாரருக்கு, 1 லட்சம் ரூபாயை, எட்டு வாரத்தில், தமிழக அரசு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    காலை 11 மணிக்குத்தான் ஆஜராகச் சொல்லி நோட்டீஸ் தந்து வந்தவர்களை மாலை 5 மணிக்குக் கூட கூப்பிடாது வாய்தா போடும் நீதிமன்றங்களுக்கு அபராதம் விதிப்பது யார்.?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement