Advertisement

போலீஸ் டைரி

வாலிபர் கொலை செய்த மூவர் கைதுகோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, சுந்தர், 35, என்ற கூலி தொழிலாளி, நேற்று முன்தினம், மர்மநபர்களால், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார், சுந்தரை கொலை செய்த, திருவள்ளூரைச் சேர்ந்த பிரகாஷ், 23, மதுரையைச் சேர்ந்த வேலுராஜ், 35, மதுரவாயலைச் சேர்ந்த கருப்பையா, 28 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.விசாரணையில், இவர்கள் அனைவரும், சுந்தருடன் கூலி தொழில் செய்து வந்ததும், பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், கொலை நடந்ததும் தெரியவந்தது.பேருந்து கண்ணாடி உடைப்புகொருக்குப்பேட்டை - விவேகானந்தர் இல்லம் செல்லும், தடம் எண், 32 பி வழித்தட பேருந்து, நேற்று காலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இதில், பள்ளி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். அவர்களை, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கண்டித்து உள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், திருவல்லிக்கேணி, தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில், பேருந்து நின்ற போது, கல்வீசி பின்புற கண்ணாடியை உடைத்து, தப்பிச் சென்றனர். திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.நுாதனமாக கார் திருடிய இருவர் கைதுகொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார், கண்ணதாசன் நகர் பகுதியில், நேற்று மதியம், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி, சோதனையிட்ட போது, ஆர்.சி., புத்தகம், காருக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரின் காரையும், கொடுங்கையூர், தென்றல் நகரை சேர்ந்த முஸ்தபா, 24 என்பவரின், கார் ஆர்.சி., புத்தகத்தை திருடி வந்தது, தெரியவந்தது. இது தொடர்பாக, பெரிய கொடுங்கையூர், ஜம்புலிங்க தெருவைச் சேர்ந்த சரவணன், 25, அவரது அண்ணன் பாஸ்கர், 28, ஆகியோரை, போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.போலீசாக நடித்து நகை பறித்தவன் கைதுவில்லிவாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் பிரதீப், 25. நேற்று முன்தினம் இரவு, அவரது பெண் தோழியுடன், இ.சி.ஆரில் உள்ள ஒரு தியேட்டருக்கு, படம் பார்க்க சென்றார். இருவரும், சாலை ஓரம் நின்றபோது, 'போலீஸ்' என, அறிமுகம் செய்த நபர், பிரதீப் அணிந்திருந்த, 7 சவரன் நகையை பறித்து, இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றான்.பிரதீப் சத்தம் போட, படம் பார்க்க வந்தோர், அவனை துரத்தி பிடித்து, கானத்துார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், விருத்தாச்சலம், சின்னகப்பம் குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன், 37, என தெரிந்தது.போலீசார், அவனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.நுாதன முறையில் ரூ.55 ஆயிரம் திருட்டுகீழ்பாக்கம், கார்டன் காலனியைச் சேர்ந்தவர், பிரேம்குமார், 43. இவர், நேற்று மதியம், 2:30 மணிக்கு, பூக்கடை, 'ஈவினிங்' பஜாரில், பொருள்கள் வாங்க வந்தார். ஓட்டுனர், கண்ணன், 32, காரில் இருக்க, பிரேம்குமார் மட்டும், பூக்கடைக்கு சென்றார்.அவ்வழியே வந்த, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், காரில் இருந்த கண்ணனிடம், '10 ரூபாய் கீழே கிடக்கிறது' எனக்கூறி, கவனத்தை திசை திருப்பி, காரில் இருந்த, 55 ஆயிரம் ரூபாய் இருந்த பணப்பையை திருடி தப்பினார்.ஓய்வு பெற்ற பெண் நீதிபதியிடம் பண மோசடிவளசரவாக்கம், ஸ்ரீதேவி கார்டனை சேர்ந்தவர், கண்ணகி, 62; ஓய்வு பெற்ற நீதிபதி. இவர் செய்த பணிகள் குறித்தும், செய்து வரும் சேவைகள் குறித்தும், இணையதளம் தயாரிக்க, வடபழனி, கிருஷ்ணன் காலனியைச் சேர்ந்த சிவா என்பவனை நாடி உள்ளார்.இதற்காக, 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால், சிவா இணையதளத்தை முறையாக வடிவமைக்கவில்லை என, கூறப்படுகிறது.இதையடுத்து, இணையதளம் வடிவமைப்பதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக, சிவா மீது கண்ணகி, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement