Advertisement

தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை மீட்பு

வளசரவாக்கம்: பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை, புதரில் வீசி சென்ற பெண் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.போரூர் அடுத்த காரம்பாக்கம், ஆற்காடு சாலையில், மாநகராட்சி மின்சார சுடுகாடு உள்ளது. அங்குள்ள மழைநீர் வடிகால் அருகே, நேற்று முன்தினம் இரவு, குழந்தையின் அழுகுரல் கேட்டது.அப்பகுதியில் உள்ள ஒரு கடையில், காவலாளியாக பணிபுரிந்து வரும், ரவி என்பவர் சென்று பார்த்தார். அப்போது, பிறந்து, 2 நாட்களே ஆன பெண் குழந்தை, தொப்புள் கொடியுடன், புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.புதரில் இருந்து குழந்தையை மீட்ட ரவி, காரம்பாக்கத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவலர், ரத்னகுமார் குழந்தையை மீட்டு, சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.அங்கு, குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை வீசியது யார் என, வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர்.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்த போது, பெண் ஒருவர், டிராவல் பேகில், குழந்தையை எடுத்து வந்து, புதரில் வீசிவிட்டு, உடன் வந்த ஆண் நபருடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.ஆக., 15ல், பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தையை, வளசரவாக்கத்தில் உள்ள கால்வாயில் இருந்து, பொதுமக்கள் மீட்டு, அதற்கு சுதந்திரம் என பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement