Advertisement

ரூ.1.50 கோடி மோசடி: போலீசார் அறிவிப்பு

சென்னை: 'பொதிகை சிட் பண்ட் நிதி நிறுவனத்தில், பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்கலாம்' என, போலீசார் அறிவித்து உள்ளனர்.சென்னை, சோழிங்கநல்லுார், அம்பத்துார் மற்றும் வேலுார் ஆகிய இடங்களில், பொதிகை சிட் பண்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.இதன் இயக்குனர்களாக, ஜஸ்டின் ராஜன், அவரது மனைவி சகாய விஜில் ஆகியோர் செயல்பட்டனர். இவர்கள், பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற, 1.50 கோடி ரூபாயை மோசடி செய்து தலைமறைவாகினர்.புகாரை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆக., 4ல், ஜஸ்டின் ராஜனை கைது செய்தனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.இந்நிலையில், இந்த மோசடி குறித்து, போலீசாருக்கு இதுவரை, 166 பேரிடம், 1.25 கோடி ரூபாய் சுருட்டியதற்கான புகார்கள் வந்துள்ளன.இந்த நிறுவனத்தில், பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், கிண்டி, சிட்கோ வளாகத்தில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர், மோகனேஸ்வரியிடம் புகார் அளிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 22504332 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம் என, போலீசார் நேற்று, அறிவித்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement