Advertisement

அய்யப்ப பக்தைகள் சத்திய பிரமாணம்

சென்னை: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 50 வயது வரை, செல்ல மாட்டோம்' என, சென்னையில் இன்று, அய்யப்பன்பக்தைகள் சத்திய பிரமாணம் எடுக்கின்றனர்.'கேரள மாநிலம், சபரிமலையில் உள்ளஅய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது, அய்யப்ப பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள்,அய்யப்பன் கோவில்நிர்வாகத்தினர், பக்தர்கள் என, பல தரப்பினரும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று, சென்னைவள்ளுவர் கோட்டத்தில், இந்து அமைப்புகள் சார்பில், இன்று மாலை, 3:00 மணிக்கு, போராட்டம் நடைபெறுகிறது.இது குறித்து, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர், ரவி கூறியதாவது:அய்யப்பன் குருசாமிகள், சென்னை அய்யப்பன் கோவில் நிர்வாகிகள், அனைத்து இந்து ஆன்மிக அமைப்புகள், துறவியர் சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.இதில், அய்யப்பன் கோவிலின் பாரம்பரியம், அதன் வழிபாட்டு முறை குறித்து, இந்து மத பெரியோர் பேச உள்ளனர். போராட்டத்தின் நிறைவில், ஆயிரக்கணக்கான பெண்கள், '50 வயதுக்கு முன், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாட்டோம்' என, சத்திய பிரமாணம் எடுக்க உள்ளனர்.வரும், 17ம் தேதி, கேரளாவின் நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில், பெண்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement