Advertisement

ராஜஸ்தானில் கொள்ளையடிக்க மாத சம்பளம்; சிக்கியது கும்பல்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கொள்ளையடிக்க, மாத சம்பளம் வாங்கி வந்த ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.


கண்காணிப்பு :




ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், சமீபகாலமாக, மோட்டார் சைக்கிள்கள், மொபைல்கள், லேப்டாப்கள் உட்பட பல பொருட்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஜெய்ப்பூரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரே கும்பல் தான், இந்த திருட்டுகளில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது.


இந்நிலையில், ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில், ஒரு வீட்டில் கொள்ளை கும்பல் பதுங்கியிருப்பது, போலீசாருக்கு தெரிந்தது. அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், அந்த வீட்டில் சோதனையிட்டனர்.


படிக்காதவர்கள் :




இதில், மொபைல்கள், லேப்டாப்கள், தங்க சங்கிலிகள், மோட்டார் கைக்கிள்கள் சிக்கின. இது தொடர்பாக, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, அந்த கொள்ளை கும்பலின் தலைவன், ஆஷிஷ் மீனாவையும் கைது செய்தனர்.


இது குறித்து, போலீசார் கூறியதாவது: கொள்ளை கும்பலின் தலைவனாக, ஆஷிஷ் மீனா செயல்பட்டுள்ளான். கொள்ளையடிப்பதற்காக, வேலையில்லாத, படிப்பறிவில்லாத இளைஞர்களை தேர்வு செய்துள்ளான். இவர்களுக்கு, மாதம், ௧௫ ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி உள்ளான். இவ்வாறு போலீசார் கூறினர்.
Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • அருணா -

    வறுமையயை குற்றம் செய்ய விலை பேசுகிறார்கள். நிஜமான முன்னேற்றத்தை என்று காண்போம். யார் ஆட்சிக்கு வந்தால் இது மாறும். கடவுளே.

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    பிஜேபி ஆளும் மாநிலங்களில் வேலை வாய்ப்பை பெருக்கி இருக்கிறார்கள் ..

  • மணிமாறன் - trichy,இந்தியா

    சூப்பர் .. அங்கே இருக்கும் எம் எல் ஏ க்களும் எம்பீ க்களும் கூட அதைத்தான் மாத சம்பளம் வாங்கி கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள்...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ராஜஸ்த்தானில் வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது போல... ஆஷிஷ் மீனா தான் வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி போல ...... நல்ல முன்னேற்றம்...

  • S.AJINS - CHENNAI,இந்தியா

    ராஜஸ்தான் பி ஜே பி ஆட்சியின் சாதனை

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    ப்பூ.... இதென்ன பிரமாதம்....??? நம்ப ஊருல மாத சம்பளம் வாங்கிக்கிட்டு அதுவும் ரெண்டு மடங்கா உயர்த்தி வாங்கிக்கிட்டு அதுக்கு மேலயும் கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்காங்களே....

  • HSR - Chennai,இந்தியா

    நல்லா விசாரித்து பாருங்கள்..சம்பளம் இடைத்தரகர் குடும்ப கட்சி கொடுத்திருக்கும்.

    • HSR - Chennai,இந்தியா

      சின்மயி செய்தி ஏன் நீக்கிவிட்டீகள்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அட போங்க சார், ஏற்கனவே மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, எம்எல்ஏ., எம்.பி., மந்திரி என்று இருப்பது தெரியாதா?

  • sahayadhas - chennai,இந்தியா

    வட இந்தியாவில் கொலை கொள்ளை கற்பழிப்பு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது இதை ஐநாவும் சுட்டி காட்டி உள்ளது.

  • ஆப்பு -

    அடடே....வேலைவாய்ப்பு பெருகியுள்ளது என்பது இதுதானா?

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    //கொள்ளையடிக்க, மாத சம்பளம் வாங்கி வந்த ஆறு பேர் கும்பலை// போலி கார்பொரேட் மற்றும் வங்கிகள் இப்படி தானே செயல்படுது?

    • HSR - Chennai,இந்தியா

      த்ராவிஷ பார்டிகளை இப்போது கார்ப்போரட்டாக மாற்றி விட்டார்களா பூச்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement