Advertisement

ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்

மாஸ்கோ : விண்ணில் செலுத்தப்படட ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறானதை தொடர்ந்து அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அவசரமாக தரையிறங்கி உயிர் தப்பினர்.


ரஷ்ய ராக்கெட்டான 'சோயுஸ்',நிக், ரோஸ்கோஸ்மோஸ் என்ற இரண்டு விண்வெளி வீரர்களுடன் கஜகஸ்தானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராக்கெட்டிலிருந்த பேலிஸ்டிக் வாகனம் மூலம் வீரர்கள் இருவரும் அவசரமாக தரை இறங்கி உயிர் தப்பினர்.


ஏவப்பட்ட இடத்திலிருந்து 450 கி.மீ தொலைவில் வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    யானைக்கு அடி சறுக்கி விட்டது...

  • Murugan - Mumbai

    இவரு உண்மையிலே இப்படித்தானா இல்ல இப்படித்தான் உண்மையிலேயா நந்தினி அம்மாவைச் சொல்லவில்லை

  • அருணா -

    இறைவனுக்கு நன்றி. நல்ல வேளை.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வாழ்த்துக்கள்.. ஆண்டவனுக்கு நன்றி சொல்லவேண்டும்...

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    ப்டீ போயீ அப்டீ வந்துட்டங்கலமா. புசாணிகா சுத்தீ போடலியமா. வஸ்த்தூ சென்ஜீ வச்சிருகலமில்ல.

    • raghavan - Srirangam, Trichy,இந்தியா

      புசாணிகா வலுக்கித்தான் ராக்கெட்டு கோணலா மேல போச்சம்மா.

    • Nalam Virumbi - Chennai,இந்தியா

      நந்தினி அம்மா உயிரோட வந்துட்டாங்கல்ல ....இனி திருஷ்டி சுத்திப் போடணும்.

    • N.K - Hamburg,ஜெர்மனி

      அடியே நந்தினி திவ்ய பாரதி, செய்தி படிச்சுட்டு புரிஞ்சுகிற அளவுக்கு தமிழ் தெரியுதில்ல, அப்புறம் ஏன் கருத்து எழுதுறப்போ தமிழ கொலை பண்ற? செந்தமிழில் எழுதவேணாம், பேச்சுவழக்கு தமிழ்லயாவது எழுதலாமே. வேணும்னு பண்ற மாதிரிதான் தெரியுது. பேர் மட்டும் திவ்ய பாரதி. சரிதான், திராவிடர்கள் வளர்த்த தமிழ் இப்படித்தான் இருக்கும் போல

    • Jaya Ram - madurai,இந்தியா

      யாரும் தமிழை வளர்க்க முடியாது ஏனென்றால் அது என்றும் செழிப்படைந்த மொழிதான், ஆனால் உங்களை மாதிரி பணக்காரர்களாலும், மேல் சாதிக்காரர்களாலும், உருவாக்கப்பட்ட ஆங்கிலக்கல்வி மோகமே இந்நிலைமைக்கு காரணம் ஏனென்றால் அன்று கெளரவத்திற்காக அரசுப்பள்ளிகளை புறக்கணித்தீர்கள் அதன் விளைவு தனியார் பள்ளிகள் பெருகி அதில் ஆங்கிலக்கல்வி மோகத்தினை ஏற்படுத்தி இன்று சாதாரண குடிமகன்கள் கூட தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை கெளரவ குறைச்சலாக கருதுகிறார்கள், ஏற்கனவே தமிழ் மீடியத்தில், அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள் தான் சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள் கான்வென்ட் படித்து சாதனை படைத்தவர்களின் பட்டியல்களை வெளியிடுங்கள் பார்க்கலாம் எல்லாம் உடல் உழைப்பு இல்லாமல் அதிக சம்பளம் பெறுவதற்கும் வெளிநாட்டு மோகத்திற்கும் அடிமையானவர்கள் இங்கே படித்தவர்கள் எல்லாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement