Advertisement

புதிய குற்றச்சாட்டு: ரபேல் நிறுவனம் விளக்கம்

புதுடில்லி: ரபேல் போர் விமானம் வாங்க, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டியது கட்டாயம் என்ற புதிய குற்றச்சாட்டுக்கு, ரபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


2br

புதிய குற்றச்சாட்டு




பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று ராகுல் கூறி வருகிறார்.




இதை, டசால்ட் நிறுவனமும், பிரான்ஸ் அரசும், மத்திய அமைச்சர்களும் மறுத்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டில் செயல்படும்,'மீடியாபார்ட்' என்ற இணைய தள இதழ் நேற்று புதிய குற்றச்சாட்டை முன் வைத்தது. டசால்ட் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளன. அதில், ' 36 விமானங்கள் விற்பனைக்கான ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்றால், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க வேண்டும். இது கட்டாயம், கடமையாக்கப்பட்ட ஒன்று' என்று கூறப்பட்டுள்ளதாகவும், அந்த இணைய தள இதழ் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி, இந்தியாவில் புது புயலை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.




டசால்ட் நிறுவனம் விளக்கம்




இப்பிரச்னை குறித்து டசால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



ரபேல் விமானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில், 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக ஒரு நிறுவனத்தை பங்குதாரராக நியமிக்க வேண்டும். இது குறித்து, எங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லோய்க் சிகாயன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிற்சங்களிடம் மே 11ம் தேதி விளக்கம் அளித்துள்ளார்.




வெளிநாட்டு நிறுவனத்தை பங்குதாராக நியமிப்பது குறித்து தொழிற்சங்கங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டப்படி கட்டாயம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக டாசல்ட் - ரிலையன்ஸ் என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம 2017 ம் ஆண்டு பிப்., 10ம் தேதி உருவாக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர பி.டி.எஸ்.எல்., டெப்சிஸ், கைனடிக், மகிந்திரா, மைனி மற்றும் சாம்டெல் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 100 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவது குறித்து பேச்சு நடந்து வருகிறது.



இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





பத்திரிகையாளர் கருத்து




'லீ மான்டி' என்ற பிரெஞ்ச் நாளிதழின் தெற்கு ஆசிய பத்திரிகையாளர் ஜூலியன் போய்சவ் என்பவர் இப்பிரச்னை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், பிரான்ஸ் நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் நிர்வாகம், முக்கிய முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழிற்சங்களுக்கு தெரிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி, பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல், இந்தியாவில் கட்டப்பட உள்ள தொழிற்சாலை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் பிரான்ஸ் தொழிலாளர் சட்டம் குறித்தது. அதற்கும் அனில் அம்பானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர பி.டி.எஸ்.எல்., டெப்சிஸ், கைனடிக், மகிந்திரா, மைனி மற்றும் சாம்டெல் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்போதான் இதை சொல்லுகிறீர்கள்...

  • Suri - Chennai,இந்தியா

    அணில் அம்பானியின் நிறுவனம் ஒரு யோக்கியமான, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்த விதமான முறைகேடுகளில் சிக்காமல், வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி கொடுத்து, defaulter லிஸ்டில் இல்லாத நிறுவனம் என்று இங்கு அவர்களுக்கு ஆதரவாக கூக்குரலிடும் எந்த ஒரு நபரும் ஒப்புக்கொள்வார்களா? அப்படிப்பட்ட கேவலமான பின்புலம் உள்ள ஒரு நிறுவனம் கம்பெனி ஆரம்பித்த சில நாட்களிலேயே இவ்வவளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தத்தை யாரின் அழுத்தத்தின் பேரில் வழங்கினார்கள்? இந்த நிறுவனம் பீ ஜெ பீ க்கு எத்தனை கோடி கட்சி நிதி கொடுத்திருக்கிறார்கள்? எதற்க்காக பீ ஜெ பீ கட்சிகளின் தேர்தல் நிதியை வரைமுறைப்படுத்தும் சட்டத்தை இந்த கால கட்டத்தில் ஏன் மாற்றினார்கள்? ஏன் தனிப்பட்ட மற்றும் நிறுவனங்கள் வழங்கும் தேர்தல் நிதி உச்சவரம்பை இதே கால கட்டத்தில் தளர்த்தினார்கள்? இவையெல்லாம் கேட்டால் உடனே ஆன்டி-நேஷனல் முத்திரை குத்துவார்கள். வசை பாடுவார்கள், நாகரீகமில்லாமல். இதே கால கட்டத்தில் தான் பீ ஜெ பீ கட்சிக்கு நாட்டிலேயே அதிக கட்சி நிதி கிடைத்தது. மோடி பணம் தனக்காக வாங்கவில்லை என்றால் கட்சிக்காக வாங்கினாலும் குற்றமே. பின் அவரை உத்தமர் என்று தூக்கி பிடிப்பதை நிறுத்துங்கள். அவர் எதோ நாட்டை காக்க வந்த தெய்வம் போல ஒரு போலி சித்தரிப்பு. இதை தான் சகிக்க முடியவில்லை. பீ ஜெ பீ ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி கிடையாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஊழல் கட்சி என்றால் அதே தராசில் பீ ஜெ பீ ஒன்றும் குறைந்தது இல்லை. என்ன வித்தியாசம் அங்கு தனிப்பட்டவர்கள் பயனடைவார்கள் இங்கு கட்சியும் பலனடையும். இதை போன்ற சட்ட வரைமுறைகளை தளர்த்தினால் ,ஊழலை எதிர்ப்போம் என்று கூக்குரல் இடுவதில் பயன் இல்லை . லோகபால் என்ன நிலைமையில் உள்ளது? ஆட்சி முடியப்போகிறது. என்ன செய்தார்கள் அந்த லோக்பால் நடைமுறைப்படுத்துவதில்? ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? ஏனென்றால் இப்படி rafale போன்ற விவகாரத்தில் அவர்கள் விழி பிதுங்கிவிடும் என்பதனால், அவர்களின் சாயமும் வெளுத்துவிடும் என்பதால். இந்த நாடு உருப்படவே படாது, இப்படிப்பட்ட போலி அசாமிகளாலும் , தனிப்பட்ட சுயவிளம்பர பிரியர்களாலும். இதில் இந்த நிர்மலா இப்பொழுது என்ன காரணத்துக்காக பிரான்ஸ் செல்கிறார்? அதிலேயே தெரியவில்லையா அவர்கள் நிலைமை. அனைத்தையும் சரிக்கட்டவும் , damage control செய்யவும் செல்கிறார். அசிங்கம் பிடித்தவர்கள். அனைத்துக்கும் பதில் சொல்லும் காலம் வரும். தலை விதி மாற்றும் சரியில்லை.

  • Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா

    அப்பாடா, பெருங் கூலிபடையே அமர்த்தியுள்ளார் மோடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்பது தெளிவாகிறது விமானம் வாங்கியது தவறில்லை, அதனை மூன்று மடங்காக விலை உயர்த்தி, தனியாரை உள்புகுத்தி வாங்க வேண்டிய கட்டாயம் மோடிக்கு எதனால் ஏற்பட்டது என்று இந்த மோடியின் கூலிப் படை உணருமா? உணர்ந்தால் அதை இங்கே தெரிவிக்குமா?

  • HSR - Chennai,இந்தியா

    இடைத்தரகர் குடும்பக்கட்சி இளவல் இதையெல்லாம் சரி செய்து இந்தியாவை காப்பார்..

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    உண்மையை பொய்யாக்க பாடுபடும் கான்-க்ராஸ் பப்பு செய்யும் ஜாலவித்தை தான் என்னே?? அவர்கள் எதையும் சரியாக செய்வதில்லை. உண்மை என்றால் கிலோ என்னவிலை என்பார்கள். இவர்கள் தீமுக்கவில் ஊறிய மட்டைகள்தானே.

  • Ganesan Madurai -

    இவனது கான்கிரஸ் ஆட்சியில் வெடித்த குண்டுவெடிப்பில் இறந்த CRPF மற்றும் ராணுவ வீர்கள் எத்தனை எத்தனை? இன்று வரை ஒரு குண்டு வெடிப்பு இல்லை. இன்று ராணுவம் பதிலடி கொடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என்பது இந்த சைக்கோ பெயில் ப்பபூ யாராவது சொல்லவும்.

  • Ganesan Madurai -

    எப்படி எல்லாம் பொய் பேசி கேவலப்பட்டாலும் எவ்வளவு விளக்கமாக விளக்கினாலும் பப்பூ நாளைக்கும் அதே "அம்பானி 30 ஆயிரம் கோடி" பொய் சொல்லாம இருக்க போவது இல்லை. ஒரு தெளிவு இல்லாமல் சிந்தித்து எதையும் புரிநிது கொள்ளும் பக்குவம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி தனது 5000 கோடி ஊழல் வழக்கு பெயில் விஷயத்தை மக்கள் நினைத்து பார்க்க்கூடாது என்பதற்காக பிரதமரை வசைபாடும் இவன் எந்த அனுபவம் அடிப்படையில் அந்த பதவியில் அமர தகுதி உடையவன்?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்றால், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க வேண்டும். இது கட்டாயம், கடமையாக்கப்பட்ட ஒன்று' என்று (மேலும் அது compulsory என்று மூன்று தடைகளும் கூறப்பட்டுள்ளது ) தாஸால்ட் நிறுவனம் தனது ஆவணத்தில் அதுவே குறித்துள்ளது. இதை மீடியா பார்டோ அல்லது வேறு யாருடைய கண்டுபிடிப்பும் இல்லை.

    • HSR - Chennai,இந்தியா

      சரிடா அது டாசால்ட் குடுத்ததுண்ணு நீயே சொல்லுற.. அத்தைதானெடா நாங்களும் சொல்றோம்..

  • Vasantharaman -

    When frech govt and Dassualt co made it clear that Dessault has freedom to chose its partner for offset and govt of india has no role in this why opposition and MSM are spreading lies just quoting a french media website news. when Govt india in parliament cleared that price of basic fighter jet is 9 of upa draft bill ( UPA did not finalize contract ) weaponised jet price is less 20 why ppl are making so much unnecessary noise. HAl was given Rs 22000 cr /ur business while upa period it was only rs 10000cr, HAL contract is with tejas and sukhoi jets. HAL was supposed to produce 14 tejas jets only producing 8 jets. Also ambani given delhi metro and mumbai metro contract during congress led upa govt without any experience Nobody making noise that time. Rafale deal is govt to govt contract and there is no corruption

  • G Mahalingam - Delhi,இந்தியா

    சாம்டெல் காங்கிரஸ் காரனின் தொழிற்சாலை . இதை ராகுல் என்ன சொல்ல போகிறார்.

  • murugu - paris,பிரான்ஸ்

    ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது மாட்டிக்கொண்டார் ஏழை தாயின் தவப்புதல்வன் ""மீடியாபார்ட்"" என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை மிக தெள்ள தெளிவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது அதுமட்டுமா நிர்மலாவின் பிரெஞ்சு விஜயத்தயும் கேள்விகேட்டு இருக்கிறது

  • rajan. - kerala,இந்தியா

    தேசிய குடும்ப கட்சி காங்கிரசின் பப்பு & கோ ரபேல் ஒப்பந்தத்தை வைத்து அரசியல் ஒட்டு வங்கி ஆதாயம் பெறவும் அவிங்க கூட்டாட்சியின் மெகா ஊழல்களை மறைத்து ஆட்சி பீடத்தை ஆர்ப்பரிக்க துடிக்கிறது என்பது மட்டும் தான் உண்மை. இப்படியே போனால் இந்த ஊழல் கட்சி நாட்டையே அந்நிய சக்திகளுக்கு சாசனம் பண்ணிவிடுவாங்க. உஷாராகிக்கோங்க மக்களே.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    இத்தனை நாள் இவர்கள் ஆட்சி செய்தபொழுது நடந்த ஊழல்களை பிரகணட படுத்த மோடி இவ்வளவு பிரயாசை படவில்லை. ஆனால் இவர்களுக்கோ இந்த ராபில் விமான பேரத்தில் தங்களின் ஆட்களுக்கு கிடைக்கவேண்டிய பங்கு கிடைக்காமல் போனதில் வயிற்றெரிச்சல் , இந்திய அரசை இவ்வளவு கேவலப்படுத்த இவர்களுக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் . இரவு பகலாக தினம் தினம் எதையாவது கூறி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்திய பாதுகாப்பை பலவீன படுத்த , அரசை அவமான படுத்துவதே இவர்களின் நோக்கம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கூரை இல்லாத பல்கலைக்கழகத்துக்கு 1000 கோடி அள்ளிக்கொடுத்த வள்ளல் நம்ம நரேந்திர மோசடி. அம்பானியின் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒரு சரித்திரம். அது போலத்தான், ஒரு ஆணி கூட பிடுங்காத நிறுவனத்துக்கு லட்சம் கோடி ஒப்பந்தம். பிரெஞ்சு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஏன்னா ஒரு கூரை கூட இல்லாத விமான உற்பத்தி தொழிற்சாலைன்னா என்னவென்றே புரிந்திருக்காது.. மோசடி தர்பாரில் சாக்கடையில் என்ன தான் பிரெஞ்சு பெர்ஃப்யூம் போட்டாலும் ஊழல் நாற்றம் போகப்போவதில்லை.

    • HSR - Chennai,இந்தியா

      டேய் போடா..உங்க கேள்விக்கு பத்ல் கெடச்சாச்சில்ல..சும்மா சைக்கோ மாதிரி கற்பன பண்ணிகிட்டு. ..ஆமா காம பேரரசு செய்தில உன்ன ஆளையே காணம்..

    • மாயவரத்தான் - chennai,இந்தியா

      நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் உங்கள் காங்கிரேசின் 10 ஆண்டு முடை நாற்றம் எடுத்த ஊழலை ஆட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள். அதை கழுவ முயற்சி செய்யுங்கள்,சோனியா குடும்ப பிடியில் இருந்து காங்கிரசை விடுவிக்க முதலில் போராடுங்கள். குடும்ப ஆட்சிகளில் இருந்து கட்சிகள் விடுபட்டால்தான் நேர்மையான ஜனநாயகம் நாட்டுமக்களுக்கு கிடைக்கும்.

    • vasanth - ,

      When frech govt and Dassualt co made it clear that Dessault has freedom to chose its partner for offset and govt of india has no role in this why opposition and MSM are spreading lies just quoting a french media website news. when Govt india in parliament cleared that price of basic fighter jet is 9 of upa draft bill ( UPA did not finalize contract ) weaponised jet price is less 20 why ppl are making so much unnecessary noise. HAl was given Rs 22000 cr /ur business while upa period it was only rs 10000cr, HAL contract is with tejas and sukhoi jets. HAL was supposed to produce 14 tejas jets only producing 8 jets. Also ambani given delhi metro and mumbai metro contract during congress led upa govt without any experience Nobody making noise that time. Rafale deal is govt to govt contract and there is no corruption

  • கோகுல்,மதுரை -

    டசால்ட்டு, பிரஃஞ்ச் அரசாங்கம், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எல்லாரும் சேந்து கழுவி கழுவி ஊத்தினாலும், சுடச்சி விட்டுட்டு மறுபடியும் ஊழல்ன்னு சொல்வாரு.... சிரிப்பு தான் வருது.... ரீல் அந்து ரொம்ப நாளாயிச்சு.....

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மாப்பிள்ளை அவரு தான்.. ஆனா சட்டை அம்பானியோடது..

    • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

      சட்டை கொடுத்ததே சோனியா அன்னே.

  • Tamil Vaanan - Madurai,இந்தியா

    கம்யூனிசத்தை ஆழமாக நம்பியிருந்த சீனாவே இன்று நாலு படி இறங்கி வந்து தனது வீம்பினை குறைத்துக்கொண்டு முன்னேறிவிட்டது. எல்லாமே அரசிடம் தான் இருக்க வேண்டும் என்ற கொள்கையை தளர்த்தி தனியார்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அந்த நாடு அடைந்த பலன்கள் ஏராளம் ஏராளம். சிறிய பொம்மை சாமானிலிருந்து, ராணுவ ஆயுத உபரிபாக தயாரிப்புகள் வரை அங்கு தனியார்கள் பங்கு கொண்டுள்ளனர். நாட்டின் முக்கிய பாதுகாப்பு விஷயங்களில் ராவுலை விட மோதியை தாராளமாக நம்பலாம். நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களில் வந்து சுடும், குண்டு வைக்கும் பயங்கரவாதிகளுக்கு கிலி ஏற்பட்டது பிஜேபியால் தானே ஒழிய காங்கிரெஸ்சால் அல்ல. யார் ஆட்சி செய்தாலும் விலைவாசி என்றுமே ஏறிக்கொண்டே தான் போகும், அது எந்த ஜென்மத்தில் குறைந்தது? 70 ரூபாக்கு விற்ற பெட்ரோல் குறைந்து 60 ரூபாய்க்கு விற்றதாக வரலாறில்லை. 1000 ரூபாய்க்கு விற்ற தங்கம் குறைந்து 900 ரூபாய்க்கு விற்றதாக வரலாறில்லை. நாட்டுப் பாதுகாப்பு என்பது ராணுவ வலிமை மட்டுமல்ல, அது நாட்டுக்கடனிலும் கூட பிரதிபலிக்கும். காங்கிரஸ் விட்டு சென்ற கடன்களை கணக்கில் கொண்டு பார்த்தால், பிஜேபி எவ்வளவோ நாட்டிற்கு உருப்படியாக செய்துள்ளது. மதவெறி, ஜாதி வெறி, இனவெறி கொண்டவர்கள், முக்கியமாக தேசத்தில் அக்கறையற்றவர்கள் மட்டுமே மோதியை தூற்றுவார்கள். பாபர் மசூதி விஷயத்தில் முஸ்லிம்களும், வெளிநாட்டு மதமாற்ற பண வருகை முடக்க விஷயத்தில் கிறித்தவர்களும் மோதியை இகழ்வர் என்பது இன்றய நிலையில் ஒரு சாதாரண குடியானவன் கூட அறிவான். உண்மையான தேச பக்தன் இகழமாட்டான். எல்லாருடைய கையிலும் காமெரா இருக்கும் இந்த காலத்திலேயே கிருத்துவர்கள் செய்யும் அட்டூழியங்கள் இன்று youtube முழுதும் நிரம்பி வழிகிறது என்றால், பத்து வருடங்களுக்கு முன் இவர்கள் என்ன அளவுக்கு அட்டூழியங்களையும் துரோகங்களையும் நமக்கு செய்திருப்பார்கள். யார் என்ன சொன்னாலும், மோதி தான் உண்மையான தேச பக்தன். இந்துக்களது ஒட்டு பிஜேபிக்கு தான். அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    பிரான்ஸ் போன அம்மா எழுதி கொடுத்த வசனம் .

    • rajan. - kerala,இந்தியா

      பப்புவின் லாலி பாப் போபர்ஸ் அகஸ்ட்டா ஊழல் வசனத்தை அடிக்க வாய்ப்பே இல்லையே.

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    Knowing that they are targeting the government some journalists in France join in the chorus giving fodder to these people here.

  • Jai Hinth - chennai,இந்தியா

    உப்பை திண்ணவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும் இல்லையெனில் தொண்டை வெந்துவிடும் , ரஜினி படத்தில் மிளகாய் திண்றமாதிரி

  • Balaji - Bangalore,இந்தியா

    ராகுல் பாமர மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்க முயற்சிக்கிறார். ராகுல் ஒரு பப்பு ?

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    ரபேல் காந்தி சொல்றது தான் உண்மை ...ஆங் ..

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      நரேந்திர மோசடி சொல்றது தான் உண்மை.. ஆங்..

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      ஹா ஹா..புள்ளையாண்டன் .இந்துபுரம் காண்டாயிட்டன்..

    • செங்குட்டுவன் - chennai,இந்தியா

      //நரேந்திர மோசடி சொல்றது தான் உண்மை.. ஆங்.....// புரிஞ்சா சரி.

    • HSR - Chennai,இந்தியா

      செங்குட்டுவன்..மண்டை சிவக்கும் அளவுக்கு குட்டுவாங்கியவனோ..?.. செம்மையாக இன்னும் குட்டுகள் வாங்க வாழ்த்துக்கள்.

  • Kumar - Chennai,இந்தியா

    அப்படியானால் சட்டபூர்வமான திருட்டு வேலை நடந்துள்ளது என்கிற சந்தேகம் வருகிறதே. ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்? அதுவும் புதிதாய் உருவாக்கி? பூசி மெழுகும் நடவடிக்கை நடக்கிறது. ராகுல் காந்தி சொல்வதில் உண்மை இருக்குமோ? இப்பவும் வாசகர் பலர் முழு மூச்சுடன் முட்டு கொடுக்க வேண்டுகிறேன்.

    • rajan. - kerala,இந்தியா

      சட்ட பூர்வமான ஊழல் அரங்கேற்றுவதில் காங்கிரஸ் பப்புவையும் தமிழக திராவிட கட்சியையும் மிஞ்ச இப்போதைக்கு யாருமில்லையே. எங்கயாச்சும் ஒரு ஊழல் வழக்கில் இவிங்களை தண்டிக்க முடியாத அளவுக்கு நீர்த்து போன சத்தத்தை வைதுல்லே ஜனநாயக நாடகம் ஓடுது இங்கே.

  • nandaindia - Vadodara,இந்தியா

    ஹா ஹா ஹா. இதை விட ஒரு சாட்டையடி பப்புவிற்கோ, கான்க்ராஸ் அடிவருடிகளுக்கோ இதற்கு முன் கிடைத்திருக்காது என நினைக்கிறேன். பாவம், மோடிஜி முகத்தில் கரியை பூச நினைத்து அவர்கள் முகத்திலேயே கிலோ கணக்கில் பூசிக்கொண்டது தான் மிச்சம். மணிமாறனும், ஆப்புவும், மைந்தனும், மற்ற சிறுபான்மை நரிகளும் இப்போது எங்கே ஓடி ஒளிந்துகொள்வார்களோ பாவம்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    ஒரு அறிவாளி, ஒரு அறிவாளி (அதாவது மூடக்கழுதைகள்) இந்தியாவில் சிந்திப்பதேயில்லை. ஓகே. ஊழல் நடந்திருக்கின்றது???எவ்வளவு கோடி???சும்மா அடிச்சு விடவேண்டியது ஏதோ ஒரு குத்து மதிப்பாக ரூ.2 .5 லட்சம் கோடி என்று டீல் ரூ.36 ,000 கோடியாக இருந்தாலும். இதையும் மீறிய ஒரு சரியான அணுகல் இல்லை என்றால் அவர்களை அந்த இடத்திலேயே என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். ரபேல் விமானம் டெக்கனிகளாக நல்லதா அதை விட அதே விலையில் வேறு நல்ல விமானம் உள்ளதா. அதை சொல்லாமல் நீ லஞ்சம் வாங்கினாய், அவன் லஞ்சம் வாங்கினான் என்று உளறிக்கொண்டே இருப்பது. பப்பு உன்னிடம் இப்போது ரூ. 82 .4 லட்சம் கோடி சொத்து இருக்கின்றதே அது என்ன நீ வியாபாரம் செய்து சம்பாதித்ததா???சொல். அப்போ அப்போ வெளியூர் போறியே எதற்கு??உனது இருப்பில் இன்னும் பணம் போட்டது சென்று விட்டதா என்ன நிலையில் உள்ளது என்று பார்க்கத்தானே??? அப்படி இருக்கும் பொது உனக்கு பணம் லஞ்சம் அடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இந்த உளறலை நிப்பாட்டு. டப்பா போபோர்ஸ் பீரங்கிக்கே செய்த ஊழல் எவ்வளவு???

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் ஓட்டை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். நேர்மையாக நடந்து கொண்டதால் விரைவாக முடிவுகளை எடுக்க முடிந்தது. வில்லங்கம் வரும் என்று தெரிந்தோ என்னவோ நேரடியாக அரசுகளுக்கு இடையில் மோடி ஒப்பந்தம் போட்டுள்ளார்... ஆகவே நீதி மன்றம் தலையிடும் பட்சத்தில் எல்லா ஆவணங்களையும் சரி பார்த்து விட முடியும்..

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    சிக்கல் மேல் சிக்கல்... தாஸால்ட் நிறுவனத்தால் தாங்கள்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை முழு சுதந்திரத்துடன் தேர்ந்தெடுத்தோம் என சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அங்கே உள்ள தொழிற்சங்கங்களும் அந்த கம்பெனியின் போர்ட் உறுப்பினர்களும் சேர்ந்து இந்தியாவில் மூழ்கும் நிலையில் உள்ள மற்றும் எந்த விதமான அனுபவமும் இல்லாத ஒரு கம்பெனியுடன் எப்படி ஒப்பந்தம் செய்தீர்கள் என கேட்டு பிச்சி கடாசிடுவாங்க... அநேகமா ஒரு தனி மனித தவறாக நடந்த இந்த விஷயம் புயலை கிளப்பப்போவது இந்தியாவில் மட்டுமல்ல பிரான்சில் கூடத்தான்னு தோணுது ... இப்போ இந்த டீல் கேன்சல் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிகிட்டே போகுது...வேறென்ன சொல்ல... (இதை வருத்தத்துடன்தான் எழுதுகிறேன்... ஆனாலும் நம் பக்தாஸ் நீ ஒரு அந்நிய கைக்கூலி சந்தோஷப்படுன்னு வைவாங்க...)

  • sankar - trichy,இந்தியா

    பி.டி.எஸ்.எல்., டெப்சிஸ், கைனடிக், மகிந்திரா, மைனி மற்றும் சாம்டெல் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனிமே பப்புவின் பருப்பு வேகாது

  • MANI DELHI - Delhi,இந்தியா

    பப்பு பாய் பப்பு பாய் விளக்கம் போதுமா. இன்னும் மோடியே வந்து சொல்லனுமா. இதவிட என்னடா வேணும் 50 சதவீதம் இந்தியாவில் முதலீடு பண்ணப்போறாங்க. கிட்டத்தட்ட 100 நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் வியாபாரம் வழங்க போகுது. நம் நாடு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏண்டா இந்தியாவ இப்படி ஒழிக்கணுமுன்னு முடிவு பண்ணி கேள்வி கேட்டுட்டு திரியறீங்க.... இனிமே கொஞ்சம் நிம்மதியா இரு என்ன.

  • siriyaar - avinashi,இந்தியா

    But because of this agreement india get power full jets that may be threat to china. Also india getting local manufacturing plant it very dangerous for america. So they asked thier local agents(congress and communists) to trouble so that all collapse, naturally thier local agents creating problem, they have established links in our legal and political tem just modi can not win them. Either keep quiet like MMS earn and leave, if dont want to earn leave the job. India is a slave and remain going to be slave raghul will never let india develop. He ask nirmala why going paris at high time, but we can not ask raghul why he went to pattaya as bachelor.

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    இது பற்றி தமிழக காமெடியன் கருது சொல்லுவார் பாருங்கள் அதுவும் ஒரு காமெடிதான்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    பொறுமையாக பப்புவின் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் ........

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement