Advertisement

குஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம்

புதுடில்லி: குஜராத்தில் இருந்து பீஹார், உ.பி., மற்றும் ம.பி., தொழிலாளர்கள் விரட்டி அடிக்கப்படுவதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது.


2br

தொழிலாளர்கள் விரட்டியடிப்பு
குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர். கடந்த செப்., 28 ம் தேதி குஜராத்தில் ஹிமத்நகர் என்ற இடத்தில், 14 வயது சிறுமியை பீஹார் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இச்சம்பவத்திற்கு பிறகு, வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பல ஆயிரம் பேர் குஜராத்தை விட்டு பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களுக்கு ஓட துவங்கியுள்ளனர்.

காங்., பின்னணி அம்பலம்
இந்த தாக்குதல் தொடர்பாக, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஷத்ரிய தாகூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர்; காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறார்.இச்சூழ்நிலையில், கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக தனியார் 'டிவி' சேனல் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் தெரிய வந்த தகவல்:ஷத்ரிய தாகூர் சேனா அமைப்பின் காந்திநகர் மாவட்ட தலைவர் கோவிந்த் தாகூருடன், போனில் பேசியது ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிந்த் தாகூர் கூறுகையில், '' கலவரம் தொடர்பாக, எம்.பி.தாகூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காங்., கட்சி உறுப்பினர் எனினும் ஷத்ரிய தாகூர் சேனா சார்பில் கூட்டம் நடக்கும் போதும் அதில் கலந்து கொள்வார். அவர், தான் சார்ந்த கிராமத்தின் சேனா உறுப்பினர். அத்துடன் காங்., கட்சியிலும் இருக்கிறார். இதுபோல் பலர் உள்ளனர்,'' என்றார்.இதை ஷத்ரிய தாகூர் சேனா தலைவர் அல்பேஷ் தாகூரின் உதவியாளர் ஜெகத் தாகூரும் உறுதி செய்துள்ளார். காங்., தலைவர் எம்.வி.தாகூர் என்பவர், பிற மாநில தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும் என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ இந்த மாத துவக்கத்தில் வெளியானது.


Advertisement

வாசகர் கருத்து (57)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நாட்டில் நடக்கும் எல்லா கொலை, கொள்ளை, கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்பு, சாலை மறியல் எல்லாம் கான்-க்ராஸ் காரர்கள் டுமீல் போராளிகள், தீமுக்காவிடம் பயின்ற பாடங்கள். எல்லோரும் சேர்ந்து நாட்டை சீரழிக்கிறார்கள்.

 • வெ கெ பிசெபி டாண்டன் - அமித்சா தெரு, மோடி நகர் பாசிச மாவட்டம் , நரக நாடு ,இந்தியா

  குசராத்துல மட்டும் இல்ல இந்தியாவுல என்ன நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் மோடி மற்றும் பிசெபி.எந்த கெட்டது நடந்தாலும் அதுக்கு காரணம் காங்கிரஸ்.

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்படீன்னு நெனச்ச ஒரு புது ரத்தம் உடம்புல பாயிரப்ப, இந்த செய்தியை படிக்கும்போது இளைஞர்களெல்லாம் ரோட்டுல உக்காறத்தான் லாயக்கு அப்டீன்னு தோணுது... அறிவு முதிர்ச்சியோ தொலைநோக்கு பார்வையோ பரந்த மனசோ இல்லாம அதுக்கெல்லாம் சரிபடமாட்டாங்க போல..வயசானதுங்கதான் இப்படின்னா சிறுசுங்களும் இப்படித்தானா? ஒருவேளை அரசியலில் இதெல்லாம் சாதாரணமா?

 • ஆப்பு -

  அல்பேஷ் தாக்கூர்... பேருக்கு ஏத்த மாதிரி அல்ப புத்தி உடையவரா இருக்காரு... அவரோட பதவியப் பறிச்சு தூக்கி உள்ளே வையுங்க..

 • Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா

  பதவி வெறிபிடித்து அலைகிறது காங்கிரஸ்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எங்கு எங்கு கெட்டது நடக்குமோ அதற்கு காங்கிரஸ் தான் காரணமாக இருக்கும். 2002 கோத்ராவில் நடந்ததை மட்டும் வைத்துக்கொண்டு அல்ல நேரு வம்சத்திலே உள்ள விஷ அம்ச டி.என்.ஏ. அப்படி, அதை எப்படி மாற்ற முடியும். நிறைய விஷம் என்றாவது நல்லது செய்யுமா???ஆகவே காங்கிரஸ் என்னும் கார்க்கோடக விஷம் ஒருக்காலும் நல்லது செய்யாது.

 • arsath ali - ,

  பாஜகவின் கீழ்த்தரமான செயலாக இருக்கும்

  • Krishna - Trichy,இந்தியா

   ஹலோ பாமரன் ஜி ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வர்றீங்க போல

  • Anand - chennai,இந்தியா

   அட முட்டாள் மடையனே, நாடகம் அரங்கேற்றியது காங்கிரஸ் என்று ஊரறியும், ஆனால் உனது மூளையோ மழுங்கி கிடக்கும்போது எதுவும் மண்டையில் ஏறாது.

  • Subash Subash - Che,இந்தியா

   அவரை மன்னிச்சுடுங்க ..... காசுக்காக வேல செய்யும் கூலிப்படை அப்படித்தானே இருப்பாங்க

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் சாதியின் பெயரால் மற்றும் எல்லா வகையிலும் மக்களை பிரித்து தனிமைப்படுத்தி அதன் மூலம் தாங்கள் எப்போதும் ஆட்சியில் இருக்க / ஆட்சிக்கு வர அயராது உழைக்கும் அமைப்பு காங்கிரஸ் .. அதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு துணை கட்சி சப்போர்ட் .. இவர்கள் மக்களை முன்னேறவும் ஒற்றுமையாகவும் இருக்க ஒரு போதும் விட மாட்டார்கள்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இதுக்கு ஆலோசனை கொடுத்தது திமுக என்பது போக போக தெரியும்

 • Malaichaaral - Ooty,இந்தியா

  தமிழர்களை கொன்றதும் காங்கிரஸ் சீக்கியர்களை கொன்றதும் காங்கிரஸ் இப்போது வடமாநில மக்களை கொள்வதும் காங்கிரஸ்

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  வரவிருக்கும் ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என செய்தி வந்த போதே தெரியும் ,பாஜாக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் பிராடு வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று. காங்கிரஸ தாக்குவது என்றால் ஓடி வருவார்கள்

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\வரவிருக்கும் ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என செய்தி வந்த போதே தெரியும்///. முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும். பார்க்கலாம்.

 • rajan. - kerala,இந்தியா

  பிரிவினைவாதம் மதவாதம் பண்ணி எப்படியாவது ஆட்சி பீடத்தில் ஏறி மெகா ஆட்டைய போடா வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துடியாய் துடிக்கிறது என்பது தான் உண்மை. எனவே இந்த தேசிய குடும்ப கட்சி பப்பு & கோ கலைக்க பட வேண்டும்.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  ஏம்பா எங்களை ஆட்சியை அமர்த்தியிருந்தா எல்லாருக்கும் முன்னைப்போலவே "அறுவது வருஷமா மக்களுக்கு செஞ்சா மாதிரியே நல்லது" பண்ணியிருப்போம். நாங்க இப்ப எதிர்க்கட்சி. அதனால எங்களால கெடுதலை மட்டும்தான் செய்யமுடியும். இதுதான் இதுதான் இந்தியாவில் உள்ள கட்சிகளின் அடிப்படையான அரசியல் லாஜிக். இதுகூட உங்களுக்கு புரியவில்லையா? நல்லது செய்யவும் விடமாட்டீர்கள் கெட்டது செய்யவும் விட மாட்டீர்கள் என்றால் எப்படி. கொஞ்சம் மனசாட்சியோடு சிந்த்தித்து குற்றம் சாட்டுங்கள் மக்களே. (ஓகே தானே காங்கிரஸ் பாய்ஸ்?)

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //“I will sit on a fast on an indefinite Sadbhavana Fast on 11 October till false cases lodged against the Thakor community are not withdrawn. BJP workers have sent out messages and put out their numbers on social media, urging people to drive out north Indians. And the police is arresting our people. Those politicians sitting in north India need to be told clearly that Gujarat is a lot safer than their own states, that is why people come here to work.” Alpesh Thakor, Congress MLA// எது உண்மை ?

  • Raja - ,

   திரு. பூச்சி. அல்பேஷ் தாகூர் பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படக்கூடாது என்று உண்ணா விரதம் இருக்கப்போகிறாரா. till false cases lodged against the Thakor community are not withdrawn. என்று கூறி உள்ளார். குழப்புகிறீர்களே அய்யா.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இப்படி ஒரு கேவலமான பிழைப்பு இந்த இத்தாலி குடும்பத்திற்கு தேவையா ? இதைத்தான் கூட்டம் போட்டு பேசுகிறார்களா ? இந்த நாட்டில் கலவரம் செய்வது எப்படி என்று . இது தேச துரோகம்.

  • Anand - chennai,இந்தியா

   //இப்படி ஒரு கேவலமான பிழைப்பு// அதுதான் அவர்களின் தொழில் முதலீடு எல்லாமே.

 • karupanasamy - chennai,இந்தியா

  இதை சொடலை கண்டிக்காமல் இருப்பதால் திமுகவுக்கும் தொடர்பு இருக்கும்.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  பிஜேபி யை மக்கள் வீழ்த்த போவது தெரிந்தே ........எப்படியாவது வட மாநில தேர்தல்களில் காங்கிரெஸ்ஸை தோற்கடிக்க இந்த செய்திகள் எல்லாம் பரப்பப் படுகிறது...

 • Anand - chennai,இந்தியா

  காங்கிரஸ் எங்குள்ளதோ, அந்த இடத்தில் தீய சக்திகள் அனைத்தும் கும்மியடித்துக்கொண்டிருக்கும். காங்கிரஸ் விரைவில் அழிய வேண்டிய கட்சி.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நாற்காலிக்கு வர ஆசைப்படுபவர்கள் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் வரவேண்டும் என்பதற்காக நாட்டையே தீ வைத்து கொளுத்துகிறார்கள், கலாச்சாரத்தை சீரழித்து வருகிறார்கள், மக்களிடையே வெறுப்புணர்ச்சியை தூண்டி விடுகின்றனர், மொத்தத்தில் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் இருக்கவேண்டும், அப்போதுதான் மக்கள் ஆள்பவர்கள் சரியில்லை என்று இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று இவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசின் தங்கள் மிகவும் நல்லவர்களாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர், இதற்குத்தான் பல முறை நாம் வேண்டுவது இந்த ஆளுக்கு விடுமுறை கொடுத்து 25 ஆண்டுகள் ஓரம் கட்டி நாட்டை ஒரு நல்ல குடிமகன்களின் ஒப்படைத்தால் நாடு விளங்கும், ஜனநாயகத்தின் பயன்களை ஒரு சில குடும்பங்கள் மட்டுமே அனுபவித்து மக்களுக்கு நரக வாழ்க்கையை கொடுத்துக்கொண்டு வருகின்றனர், வந்தே மாதரம்

 • nandaindia - Vadodara,இந்தியா

  எங்கே நம் கான்க்ராஸ் ஜால்ராக்கள்

 • கோகுல்,மதுரை -

  இதே மாதிரியான வேலையை தான் ரபேலிலும் காங்கிரஸ் செய்கிறது. பதவிக்காக அது எந்த எல்லைக்கும் செல்லும். சிறுபான்மையிருக்கு பாதுகாப்பில்லை என்று அச்சுறுத்தியே அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்தது. இப்போது இனபிரச்சனை, மாநில பிரச்சனை என்று இன்னும் இறங்கி வேலை செய்கிறது. இன்னும் தெரு, குடும்பம் வரை சிண்டு முடித்து விடும். 60 வருடம் இந்தியாவை கொள்ளை அடித்தே பழகியதால், இப்போது அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. பதவியில் இருப்பது ஒரு போதை போல் ஆகி விட்டது. இவர்கள் அனைவரும் மறுவாழ்வு முகாமிற்கு செல்ல வேண்டியவர்கள்.

 • Anand - chennai,இந்தியா

  காங்கிரஸ் அழிந்தால் தான் நம் நாடு பல இன்னல்களில் இருந்து விடுபடும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  வடமாநில தேர்தல்களுக்காக மேற்கு மாநில பாஜக ஆட்சியில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தும் காங்கிரஸ் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

 • Ganesan Madurai -

  கான்கிரஸ் அப்பாவி தமிழர்களை கொன்ற கட்சி.

  • Anand - chennai

   ஆனால் போராளீஸ் ஆகிய நாங்கள் கான் க்ராஸ் க்கு தான் முட்டு கொடுப்போம். எங்களுக்கு கூலிதான் முக்கியம், நாடும், நாட்டு நலனும் முக்கியமல்ல.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  குஜராத்தில் வாழும் யாவரும் எந்த கட்சியினரும் தீண்ட தகாதவர்கள்.... தேசப்பிதா அண்ணல் காந்தி அவர்களை தவிர.....

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஏன்னா நாட்டை துண்டு போட்டு ஒங்க பங்காளிக்கு குடுத்தாருல்ல...?...நீயும் அங்கே போயிறலாமே..இங்க இருந்து எங்க உசுர வாங்குற.?

  • nandaindia - Vadodara,இந்தியா

   பார்றா, குஜராத்துக்கு சர்டிபிகேட்டு தர்றாரு அண்ணன். நான் சொல்லவா உங்கள் லக்ஷணத்தை.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   நாட்டை அஹிம்சை பேரை சொல்லி பிச்சி குடுத்தால் மட்டும் தான் தீண்டலாம்.

 • Ganesan Madurai -

  இப்படித்தான் 2002 கலவரத்தில் கான்கிரஸ் தான் இந்துக்களை முஸ்லிம்களை கொலை செய்து பழியை RSS மீதும் பாஜாகா மீதும் சுமத்தியது. இதில் பல நடுநிலை கான்கிரஸ் கழுவி பத்திரிகையாளர்களும் அடக்கம்.

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  மீண்டும் ஒரு முறை. குஜராத்தில் வன்முறை சம்பவம் என்று தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட அதே வேலையில் வடநாட்டு ஊடகங்கள் இதன் பின்னணியில் இருப்பது காங்கிரஸின் சட்டசபை உறுப்பினரான அல்பேஷ் தக்கோர் தான் என்று வெளிச்சமிட்டு காட்டியது. ராகுலும் எப்படியாவது பதவிக்கு வந்தால் போதுமென்று இதனை கண்டுகொள்ளவில்லை போலும். நன்றாக கவனித்தால் இந்தியாவில் எழும் பெரும்பாலான பிரச்சனைகள் 2014லிற்கு பிறகே தோன்றியது என்பது தெளிவுபடும். கடந்த சில தசாப்தங்களாக ஹிந்துக்களின் உணர்வுகளை ஏளனம் செய்து காங்கிரஸ் வோட்டுவங்கி அரசியல் நடத்திவந்தது. இதனாலேயே 2014லில் மக்கள் பாஜக வை தேர்ந்தெடுத்தனர். பெரும்பான்மையோரின் முக்கியத்துவத்தை காலம் தாழ்த்தி உணர்ந்த காங்கிரஸ் தலைவர் சிவ பக்தன் வேடம் பூண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஊழலில் புரையோடிக்கிடந்த பொழுதும் காங்கிரஸிற்கு ஆட்சியை பிடிக்க பெறிய சிக்கல்கள் எழவில்லை, ஆனால் வெகு காலமாக வஞ்சிக்கப்பட்ட ஹிந்துக்களின் ஒற்றுமையை இன்று உணர்ந்த காங்கிரஸ் இன்று ஒற்றுமையை குழைத்து குளிர்காயும் வேலையில் இறங்கியுள்ளது. இதனாலேயே தலித்துகளை ஹிந்துக்களிடமிருந்து (ஹிந்து மதத்திலிருந்து) பிரித்து வைக்கும் செயலையும் அவ்வப்பொழுது செய்துவருகிறது. குஜராத்தில் பல ஜாதி பிரிவுகளை ஆதரித்து அவர்களின் கூட்டணியில் பாஜகவை எதிர்த்து தோல்வியுற்று இனி குஜராத்திகள் தமக்கு வெற்றிவாய்ப்பை அளிக்கமாட்டார்கள் என்று உணர்ந்து அண்மையில் வரவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில்வைத்து வெளி மாநிலத்தவர்களை தாக்கி இந்த கீழ்த்தனமான செயலை அரங்கேற்றியுள்ளது. இதன்மூலம் வடநாட்டு மக்களை பாஜகவின் எதிரியாக ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க முற்படுகிறது. 2014லில் தோல்வியுற்ற பிறகு இந்தியர்களை பிரிக்கும் வேலையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது, ஹரியானாவில் ஜட்ட்ஸ் இன மக்களின் ஒதுக்கீட்டை ஆதரித்தது, ராஜஸ்தானில் குஜ்ஜர் இனமக்களின் ஒதுக்கீட்டை ஆதரித்தது, குஜராத்தில் பட்டேல் இனமக்களின் ஒதுக்கீட்டை ஆதரித்தது, கர்நாடகத்தில் லிங்காயத்தை தனி மதமாக அறிவித்தது, ஆந்திராவில் கப்யூஸ் இனமக்களின் ஒதுக்கீட்டை ஆதரித்தது. இதில் கவனிக்க வேண்டியவிஷயம் இத்தனை காலம் பதவியில் இருந்த காங்கிரஸ் தனது பதவிக்காலத்தில் இவற்றை நோக்கி ஒரு துரும்பையும் நகர்த்தவில்லை. 2014 லிற்கு பிறகு இனப்பிரச்சனைகளில் குளிர்காய்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பிறகும் காங்கிரஸ் இந்த ஒதுக்கீடுகளை ஆதரிப்பது கீழ்த்தனமான அரசியலாகும். எதிர்கால மக்கள் நலப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை முன்வைத்து 2019 தேர்தல்களை சந்திக்க சிந்திக்க விருப்பமில்லாத காங்கிரஸ் மக்களை ஜாதி அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் பிரித்து கலகங்களை உண்டுபண்ணி தேர்தலை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறது எனபது வேதனையான விஷயம். 2019 தேர்தல் என்பது பாஜகவின் இந்திய மக்கள் முன்னேற்ற திட்டத்திற்கும் காங்கிரஸின் பிரித்தாளும் தந்திரத்திற்கும் நடக்கும் மல்யுத்தமாகவே இருக்கும்.

 • Nagarajan S - Chennai,இந்தியா

  இதற்கு, சோனியா மற்றும் ராகுல் காந்தியின் பதில் என்ன?

  • Krishna - Trichy,இந்தியா

   சோனியா மற்றும் ராகுல் காந்தியின் பதிலிற்கு பிறகு வருவோம். முதலில் இங்கிருக்கும் காங்கிரஸ் அல்லக்கைகளின் பதில் என்ன.

  • sankar - trichy,இந்தியா

   சோனியா ராவுளின் பதில் சைநா பிரிட்டனிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் பதில் தருவோம்

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாட்டில் அத்தனை சீர்கேட்டிற்கும் காரணம் காங்கிரஸ் தான்...

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஹா ஹா.. இத வச்சி பொழப்ப கொஞ்ச நாள் ஓட்டலாம்னு நெனச்ச பப்புக்கு ஆப்பு.. கம்யூனிஸ்ட் ராசாவுக்கு ஆப்பு.. மோடியை திட்டலாம்னு கணக்கு போட்ட கான்+கிராஸ் கும்பலுக்கு ஆப்பு.. ஒருத்தர குற்றம் சொல்ல என்னெவெல்லாம் செய்றானுங்க.. அரசியல்வியாதிகள்

 • MANI DELHI - Delhi,இந்தியா

  சொல் புத்தி சுய புத்தி இதெல்லாம் ராகுலுக்கு தான் கிடையாது. உங்களுக்குமா. ரொம்ப முட்டு கொடுக்காதீங்க வலிக்க போகுது

 • anand - Chennai,இந்தியா

  பின்னால் இருந்து குத்துவது காங்கிரஸுக்கு புதிது அல்ல..ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள்

 • siriyaar - avinashi,இந்தியா

  Original congress is over when neghru become its shief now current congress is an another british indirect control tem.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  2002 குஜராத் கலவரத்தை தொடங்கியதும் இரண்டு சைடும் கோல் அடித்து விளையாடியதும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் தான். கோத்திராவில் ரயில் எரிப்புதான் கலவரம் தொடங்கியது, அந்த ஒரு கேஸை எடுத்து படிங்க, எல்லாமே காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு தொடங்கிய கலவரம் அது. குஜராத்தில் 2019 இல் எப்படியும் காங்கிரஸ் வெல்லமுடியாது என எல்லோருக்கும் தெரியும், அதனால் குஜராத் யூஸ் பண்ணி மற்ற மாநிலங்களின் பாஜக வோட்டை கெடுக்க குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் செய்யும் வன்முறை இது. பிரிவினை வாத கலவர அரசியல் என்றாலே அது ஆதி முதல் இப்போது வரை காங்கிரஸ் தான். ஆனால் கெட்டபெயர் மட்டுமே எப்போதுமே பாஜவுக்குத்தான் சென்று சேரும். மத, சாதி, மொழி, பிராந்திய, என காங்கிரஸ் பிரிவினை வாத அரசியலுக்கு பயன்படுத்தாத ஒன்று எதுவுமே இல்லை எனலாம். ஆங்கிலேயர் ஆரம்பித்த கட்சியில் டிவைட் அண்ட் ரூல் கொள்கை எப்படி இல்லாமல் இருக்கும்.

 • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  காங்கிரஸ் என்பது துரோகிகளின் கூடாரம்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  காங்கிரஸ் மட்டமான கட்சி. பதவியில் இருக்கும் போது ஊழல், கொள்ளை என்று சாதனை செய்தவர்கள். இந்த கட்சிக்கும் பலர் சொம்பு அடிக்கின்றனர். கலவரங்கள் இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகள் கழிந்தது இவர்களுக்கு உறுத்துகிறது. வரப்போகும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நாட்டில் கலவரத்தை உண்டாக்குகிறார்கள். இது போல தான் கர்நாடகத்திலும் கலவரத்தை உண்டாக்கினர். ஆட்சி கிடைக்க வாய்ப்பு கிட்டியபோது ஆள தெரியவில்லை, நாட்டை காட்டி கொடுத்து, கொள்ளை அடித்து சாதனை புரிந்தனர். இப்போது குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க சதி செய்கின்றனர். வெட்கம்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கலவரத்தை தூண்டி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி அரசியல் லாபம் பார்க்க துடிக்கிறது காங்கிரஸ் கட்சி.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கலவரக்காரர்கள் யார் என்று மக்கள் கண்டறிந்து அவர்களை நிராகரிக்க வேண்டும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இதில் பின்னணினாலும் பின்னணியிலிருப்பதில் எப்போதும் முன்னணி கான்க்ராஸ்தான்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The Congress party has kept Aappu it's self by such cheap ,dirty and nasty activities and earned the angry,anoid, and disrespect from the people of our country forever.It is very difficult to gain it's past glory hereafter in our country in coming days.

 • tamizh ,chennai -

  Dinamalar always posting news against Congress , and always BJP support .

  • வல்வில் ஓரி - Koodal

   நீ தமிழ் பின்னாடி ஒளியும் போதே உன் கொண்டை தெரியுது..அடேய்...நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா...தமிழ், தமிழன், திராவிடன்... ஆரியன்... இதுக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்து பிச்சை எடுத்தால் தான் வயிறு நிறையும் போல..?

  • Arasu - Ballary

   matter is very simple - is this news true or not just see that if you dont want to see such news please ignore. dont blame the news paper just because you dont like the contents even if it is true.

  • நக்கல் -

   This shows your slavery mentality.

  • nandaindia - Vadodara

   யார் சொன்னா என்ன? உண்மையா பொய்யா? அதை மட்டும் பார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement