Advertisement

ரபேல் விவகாரத்தில் என்ன தான் நடந்தது: அம்பலப்படுத்திய பிரான்ஸ் பத்திரிகை

பாரீஸ்: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை பிரான்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியயுள்ளது.

பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்க, 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


இந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது இந்த ஒப்பந்த விவகாரம் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே .உள்ளது. இவ்வாறு மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • அழகர்சாமி எட்டையபுரம் -

    நாம் நாட்டு தனியார் பங்களிப்பு இருந்தால் குற்றமா,நல்லதுதானே.

  • VOICE - CHENNAI,இந்தியா

    ஆசியாவின் பணக்காரன் இப்படிதான் உருவாகுகிறார்கள் இந்தியாவில். வடஇந்திய பல அரசியல் கட்சிகளின் கறுப்புப்பணம் முழுவதும் இவர்களிடம் தான் உள்ளது என்றும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என சொல்லப்படுகிறது. இது எந்தளவு உண்மை என்பது தெரியவரலாம் தெரியாமலும் போகலாம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சென்ற அரசு ஆண்ட காலத்திலுமே அம்பானிகளைத்தான் முன்னிறுத்தினார்கள். இந்த ஒப்பந்தத்தில் விடுபட்டது வத்ராவின் நண்பர் மட்டுமே. துரிதமாக செயல்பட்டு விமானங்களை வாங்கிய முடிவு செய்தது சீன ஆதரவு கம்மிகளுக்கும், பாகிஸ்தான் ஆதரவு நேரு குடும்பத்துக்கும் பலத்த எரிச்சல்.. தவிரவும் அவர்களால் கமிஷன் அடிக்க முடியாமல் போனது இன்னுமொரு பெரிய சோகம்... சென்ற அரசு ஆட்சியில் இருந்த பொழுது வந்த செய்திகளை வைத்தே மோடியை அசைத்துப்பார்க்கலாம் எண்று கிளம்பிய இவர்கள் கேவலத்திலும் கேவலமானவர்கள்... நீதிமன்றம் மற்றும் CBI என்று சென்று இருப்பது கம்மிகள்தான்... 2019 இல் மோடிக்கு மிக எளிதாக வெற்றி கிடைத்து விடும் போல இருக்கிறது...

  • Sandru - Chennai,இந்தியா

    இந்த லட்சணத்தில் இந்தியாவில் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று ஊளை இடுகிறார்கள் குஜராத் கொள்ளையர்கள்.

  • Anandan - chennai,இந்தியா

    இப்போ பிஜேபி ஆதரவாளர்கள் என்ன சொல்ல போறாங்க? இவரு கார்ப்பரேட் நலனுக்கு வேலை செய்றாரு. மக்கள் பணத்தில் வெளிநாட்டிற்கு சுற்றிவிட்டு கார்பரேட்டுக்கு வேலை செய்றாரு. வெட்கமே இல்லாமல் கூஜா தூக்குது ஒரு கூட்டம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement