Advertisement

'எஸ்கேப்': கண்மாய்களை பார்வையிட்டு அமைச்சர்கள் ..வெள்ளம் பாதித்த பகுதியில் மக்கள் ஏமாற்றம்

மதுரை:மதுரையில் மழையால் கால்வாய்கள் வழியாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார் பார்வையிடாமல் சென்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட ஆனையூர் ஹவுசிங் போர்டு செக்டார் 1, 2 பகுதிகளில்
கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி பாதிக்கப்பட்டது.
சிலையநேரி கண்மாயில் இருந்து செல்லுார் கண்மாய் செல்லும் கால்வாயில் கூடல்புதுார்
செக்டார் 6 ல் குடியிருப்பு பகுதிகளில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்தது.
இங்கு நுாற்றுக்கணக்கான குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர்.
செல்லுார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ரோடு, கீழப்பனங்காடி உள்ளிட்ட
பகுதிகளிலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று இந்த பகுதிகளை அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன் பார்வையிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
காலையில் கூடல்புதுாரில் கலெக்டர் நடராஜன், மாநகராட்சி
கமிஷனர் அனீஷ்சேகர் சென்ற போது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சர்கள் அப்பகுதி செல்லாமல் செல்லுார் கண்மாய், வண்டியூர் கண்மாய்களின் மறுகால் பகுதிகளை மட்டும் ஆய்வு செய்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதி களில் அமைச்சர்கள் வரும் தகவல்களால் அந்த பகுதிகளில் கட்சியினர் மற்றும் மக்களும் தங்கள் குறைகளை முறையிட ஆர்வமுடன் இருந்தனர்.
அமைச்சர்கள் வேறு பகுதிகளில் ஆய்வு செய்ய சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்ற மடைந்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement