Advertisement

சபரிமலை போராட்டம்: பெருகுகிறது ஆதரவு

சபரிமலை : சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பா.ஜ., கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி புறப்பட்டது. சபரிமலையில் பெண்களுக்கான தனி வசதி எதுவும் செய்யப்படவில்லை என தேவசம் போர்டும் அறிவித்துள்ளது.


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பா.ஜ., கூட்டணி சார்பில் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை தலைமையில் நேற்று பந்தளத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. இதில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அக்.15-ம் தேதி இந்த பேரணி கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைகிறது. அங்கு சபரிமலையை காக்க கோரி போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.


பந்தளத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் சுதாகரன், சபரிமலையில் பெண் போலீசை நியமிக்க கேரள அரசு முயற்சிக்கிறது, பக்தர்கள் நினைத்தால் ஒரு போலீஸ் கூட சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்படும், சபரிமலையை ஒரு சுற்றுலா மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது, பெண்களுக்கு சம உரிமை என்று கூறி இந்த தீர்ப்பை பினராயி அரசு கேட்டு பெற்றது, என் கூறினார்.


இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில்,
சபரிமலையில் பெண்களுக்காக எந்த சிறப்பு வசதியும் செய்யப்போவதில்லை. பெண் போலீஸ் நியமிப்பது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை, என்றார்.


தமிழகத்திலும் ஆதரவு :
நேற்று மதுரையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடந்தது. தேனியில் ஐயப்பா சேவா சமாஜம் மாநில பொறுப்பாளர் கணேசன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. தேவதானப்பட்டியில் அகிலபாரத ஐயப்பசேவா சங்க தலைவர் முத்துக்காமாட்சி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. திண்டுக்கல்லில் 'சபரியை காப்போம்' என வலியுறுத்தி ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஊர்வலம் நடந்தது.
Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • J.Isaac - bangalore,இந்தியா

  48 நாள் சாமி . மலை இறங்கி பம்பையில் குளித்த பிறகு ஆசாமி ஆகி விடுகிறார்கள் . வாழ்வில் மாற்றம் வரவில்லை என்றால் எத்தனை ஆண்டுகள் போனாலும் பிரயோஜனம் இல்லை . வாழ்வில் மாற்றம் இருந்தால் டாஸ்மாக் , லஞ்சம் , ஊழல் குறைந்திருக்கும் எல்லாம் மாய்மால வாழ்க்கையாகி விட்டது

 • J.Isaac - bangalore,இந்தியா

  சும்மா இருந்த சங்க உச்ச மன்ற நீதிபதி அவர்கள் ஓய்வு பெறும்போது ஊதிவிட்டு விட்டார் . கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் திட்டமிட்டபடி பிஜேபி பயன்படுத்திக்கொள்ளும் . சபரிமலையில் மட்டும் தானே பெண்கள் போகக்கூடாது . மற்ற ஊர்களில் ஆண்களும் பெண்களும் செல்லுகிறார்கள் . மத விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவது ஆபத்தானது . அரசியல் ஆதாயத்துக்காக ஆரம்பித்துவிட்டது பிஜேபி தான். மதங்கள் ஒருவனுடைய வாழ்வில் தீய பழக்கங்களிருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும் . மனிதநேயத்தை நற்பண்புகளை மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புகளை பொறுமையை வளர்க்க வேண்டும்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதை ஏற்றுக்கொண்டால் நாளை விபூதி வைப்பது தடை , குங்குமம் வைப்பது தடை , மஞ்சள் பூசுவது தடை , பூ வைப்பது தடை செய்யப்படும்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  நீதியரசர்களுக்கு,நன்றி இந்துக்களை ஒற்றுமைக்கு வழிகாட்டியதற்கு.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  ஐயப்பன் கோவில் நடைமுறை தெரிந்து மதிக்கும் பெண்கள் 10 முதல் 50 வயது வரை போகப்போவது இல்லை. நடைமுறை தெரியாதவர்களிடம் பக்தி இருக்கப்போவது இல்லை. நல்லதோ கெட்டதோ கோர்ட் தீர்ப்பை மதிப்பது நல்லது.

 • suresh - chennai,இந்தியா

  சராசரி மனிதனுக்கு தெரியற விஷயம் நீதிபதி ஏன் தெரியல தீர்ப்பு நிச்சயம் பிரச்னை வரும் ஏன் நீதிபதிக்கு தெரியல..... நிச்சயம் தீர்ப்பு மாறும் காலம் வரும் மத நம்பிக்கை நீதிமன்றம் வர கூடாது

 • siriyaar - avinashi,இந்தியா

  In future court may say that due to sabarimala government collection is reducing (TASMAC), also many jobloss for (Non veg hotels and non veg makers). So sabarimala fasting must be banned or sabarimala may be shut. This is making law and order situation government says no money ans can not implement 11th pay commision which make justice salary to 3 laks and bus driver salary to 1 laks per month. But sabarimala month very low collection of money so govt employees on strike so shutting sabarimala is important, already poor people taxed over 30 percentage of their salary to pay govt employees salary, also they collect money all jobs puplic wanted, even in temple they looting, still this govt staff including judges what they want. I hope we should reduce the GST to maximum 14 percent and all govt employer salary to half. Every one vote for that leader except the lazy corrupt govt employees.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  விரதமும் நாற்பத்தெட்டு நாள் போராட்டமும் நாற்பத்தெட்டு நாள்

 • suresh - omaha,யூ.எஸ்.ஏ

  வர்ற மகர ஜோதி அன்னிக்கு ஜோதி தெரிவது போல, இந்த பிரச்னையை தீர்த்து வைக்க அந்த சபரி மலை அய்யப்பன்தான் ஒரு தீர்வு சொல்லணும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  சம்பந்தப்பட்டவர்கள் பதவியை ராஜினாமா செய்யும் வரையில் ஓயாதுபோல் இருக்கிறது. இந்துக்கள் ஒன்றாக சேர இதற்க்கு வழி வகுக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நல்லது செய்திருக்கிறார்கள். வாழ்க.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இது பெண்ணுரிமை சம்பபந்தப்பட்ட பிரச்சினை இல்லை...நீதிமன்றம் பொறுப்பற்று மரபுகளை மாற்றுவது கேவலம்...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  ஆகம விதிகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது அப்படியே தலையிட்டாலும் அது ஆண்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும் , சபரிமலைக்கு போகும் எல்லா ஆண்களும் நாப்பத்தெட்டு நாள் விரதம் இருந்து போகுறதுல்ல ஆளாளுக்கு இஷ்டம் போல நாலு நாள் , 7 நாள் விரதம் இருந்து போறாங்க , நிறைய பேர் குடிய தற்காலிகமா மறக்க சபரிமலை போறாங்க பக்தியினால் இல்ல ,சுப்ரிம் கோர்ட் இதையும் தட பண்ணனும்

  • suresh - chennai,இந்தியா

   சாமி 7 நாளோ 48 நாளோ மாலை போட்ட விரதம் கரெக்டா இருப்பாங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement