Advertisement

ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு; திமுக நிபந்தனைக்கு காங்., சம்மதம்?

வடமாநிலங்களில் ஏற்பட்டு வரும் அரசியல் சூழ்நிலையால், தமிழகத்தில் அமையவுள்ள அரசியல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேரத்தில், காங்கிரஸ் மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கத் துவங்கியுள்ளது.


தி.மு.க.,வுடனான காங்கிரசின் கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனாலும், இதுகுறித்த திரைமறைவு பேச்சு, இறுதிக்கட்டத்தில் உள்ளது. 'இம்முறை நாங்கள் அதிக தொகுதிகளில் போட்டியிடப் போவதால், ஒற்றை இலக்கத்தில் தான் உங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியும்' என, தி.மு.க., தரப்பு, தெளிவாக கூறிவிட்டது.


இதனால் தான், தி.மு.க.,வுக்கு மாற்றாக, சில யோசனைகளை, தமிழக காங்கிரஸ் தலைமை
முன்வைத்தது. இருப்பினும், இதை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் புறக்கணித்து விட்டனர். தி.மு.க., தலைமையின் மிக முக்கிய உறவினர், சமீபத்தில் டில்லியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அகமது படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நடந்த பேச்சில், சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.


'டில்லி அரியணைக்கான போட்டியில், நாங்கள் இல்லை. தி.மு.க.,வின் வெற்றி, காங்கிரசுக்கு தானே பயன்படப்போகிறது. எனவே, தொகுதிகளின் எண்ணிக்கையை பார்க்க வேண்டாம். வெற்றி தான் முக்கியம்' என, தி.மு.க., தரப்பில் சுட்டிகாட்டப்பட்டது. தமிழகத்தில், தொகுதி எண்ணிக்கையை காட்டிலும், கூட்டணி யாரோடு என்பது தான் முக்கியம் என, சோனியா மட்டுமல்லாது, அகமது படேல், குலாம்நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களும் உறுதியாக இருந்தனர்.


இந்த நேரத்தில், பரிசோதனை முயற்சிகள் வேண்டாம். ஓட்டு வங்கி, உள்கட்டமைப்பு என எல்லா வகையிலும், ஏற்கனவே நிரூபணம் ஆன கட்சி, தி.மு.க., தான். மேலும், 2019 தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணியை ஏற்படுத்துவோம் என கூறினாலும், சமீபத்திய பல நிகழ்வுகள், அதற்கு நேர் எதிராக உள்ளன.தேசியவாத, காங்., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி ஆகிய கட்சிகள், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், கூட்டணி அமைக்க மறுத்து விட்டன. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், தி.மு.க.,வையும் இழந்தால், தேசிய அளவில், காங்கிரசின் மீதான இமேஜ், இன்னும் மோசமாகும்.


எனவே, இழுபறியை மேலும் நீட்டிக்காமல், தி.மு.க., தரும் தொகுதிகளை பெற்று, இதே கூட்டணியில் போட்டியிடலாம்; மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு, காங்கிரஸ் மேலிடம் வந்து விட்டது. விரைவில், அதற்கான அடுத்த கட்ட நகர்வுகளை காணலாம். இவ்வாறு அந்த வட்டராங்கள், தெரிவித்தன.


- நமது டில்லி நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (63)

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  shameless beggars

  • கதரவுடும் பிஜேபியை வெறுப்போர் சங்கம் - பாவப்பட்ட மக்கள் தெரு, டாலர் டவுன் நகர்,பெட்ரோல் விலை ஏற்ற மாவட்டம்,நொடிந்தவூர்,இந்தியா

   பாஜக ஆட்சியில் மக்களின் நிலையை விடவா இந்த பெக்கர்ஸின் நிலைமை?

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  Rajiv Gandhi கொலை வழக்கில் திமுகவின் பங்கு என்னன்னு ஜெயின் கமிஷன் அறிக்கை கொடுத்தது .இந்த அப்பாவி பிள்ளை Rahul இப்போ ஸ்டாலின் சொன்னதை எல்லாமே கேட்பாரா?

 • nanbaenda - chennai,இந்தியா

  பாவம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஒற்றை இலக்கமா அல்லது ஒரே சீட் டா?எதுக்கும் சரி,ஏனென்றால் நாங்க கர்நாடகாவில் செஞ்சதை பார்த்தீங்கல்லே? குமாரு காலிலே majority வச்சுக்கிட்டு விழுந்தோமில்லே? எங்களுக்கு ஒரு கண்ணு ,ஒரு கை(எங்க சின்னமே அதுதானே?) ஒரு காலு போனாலும் பரவ நஹி,பிஜேபி க்கு தோல்வி வேணும்,செய்வீர்களா ஸ்டாலின்?

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

   பிஜேபி வந்துட்டு நாடு நன்னாயிருக்கவே கூடாது என்ற பரந்த மனம்

 • rajan. - kerala,இந்தியா

  இரு பெரும் குடும்ப கட்சிகளின் உலகளாவிய ஜோக்கர்களின் கயிறு இழுப்பு போட்டி தமிழகத்திலே உச்ச கட்டம் ஆவ போவுதுடா வடிவேலா. தயார் ஆகிக்கோ. எத்தினி பேர் டெபாசிட்டை இவிங்க இரண்டு பேரும் அடிச்சு காலி பண்ணி சீட் கொடுக்கிறோம்னு கட்சிக்கு கோடிக்கணக்கான பணத்தை வசூல் ராஜா பாணியிலே கட்சி கொடியை காட்டி கறந்துடுவானுங்க கூத்தாடி பசங்க ஊழல் வித்தகர்கள்.

 • jagan - Chennai,இந்தியா

  சமூகங்கள் படி சீட்டு குடுக்க பட வேண்டும். நாயக்கர் வாள் எல்லோரும் குல பெயரை எடுக்க சொன்னதே தமிழ் வாழை மட்டைகளை குழப்பதான்...இப்போ, சைக்கோ, சுடலை , விஜயகாந்த, சுப வீ , சத்யராஜ் போன்ற பல தெலுங்கர்களும்/ கன்னடர்களும் தமிழன் எண்டு கதைக்கலாம்.... குல பெயர் இருந்தால் தான் யார் நிஜ தமிழன் எண்டு எல்லோருக்கும் விளங்கும்.... உதாரணத்திற்கு சத்யராஜ் போன்றோர் ஒரு கன்னட கவுடா வகையை சார்ந்தவர்கள் (கொங்கு கவுண்டர்கள் பூர்வீகம் தெற்கு கர்நாடகம், கங்க வமிசத்து அரசர்களின் சிப்பாய்கள் ) , அவன் எப்பிடி தமிழன் என்று கூற முடியும்? எனவே எல்லோரும் குல பெயரை தங்கள் பெயருடன் சேருங்கள், அப்போ தான் எவ்ளவு நிஜ தமிழன் உள்ளான் என்று புரியும்...சைகோ ஒரு கவர நாயுடு. சுப வீ ஒரு தெலுங்கு செட்டியார், மதிமாறன் ஒரு மலையாளீ நாயர் ...குல பெயர் சேருங்கள், உங்க வண்டவாளம் தெரியும்

  • sundara pandi - lagos ,நைஜீரியா

   ஹீ ஹீ ஹீ அப்படியே வீர வன்னியர் , கார்காத்த வெள்ளாளர் இவங்கல்லாம் தமிழர்தானான்னு கொஞ்சம் பாருங்க ஜெகன் ஜீ

 • Nisha Rathi - madurai,இந்தியா

  மானங்கெட்ட காங்கிரஸ்க்கு இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   மானம் கேட்ட கான் கிராஸ் மட்டும் அல்ல......தங்களது பதவி வெறிக்காக பெரும்பான்மை இந்தியர்களை மொத்தமாக விற்று விட்ட தேசீய துரோகிகள் என்று கூறுங்கள்.

  • Dharma - Madurai,இந்தியா

   தினமலர்ல news படிக்கணும்னு பாத்த, இவங்கிய ரெண்டு பெரு மூஞ்சியையும் காலங்காத்தால பார்க்கணுமே?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  திமுகவுடன் கூட்டணி என்பது வெற்றி பெற அல்ல. எனவே டெபாசிட் கிடைக்க போவதில்லை. எனவே வேட்பாளர்களுக்கு காசாவது மிச்சமாவது என காங்கிரஸ் நெனைத்துவிட்டது என்பதே உண்மை

 • C.Elumalai - Chennai,இந்தியா

  எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன். காங் மைன்ட் வாய்ஸ்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ஒற்றை என்று சொல்லியது ஒரு சீட்டைதான்.... ஹி ஹி ஹி ....

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  கட்டுமரம் இல்லாதது கான்கிராஸூக்கு வசதியா போச்சுது. இதே கட்டுமரம் மட்டும் இப்போ உளுத்து போகாம இருந்திருந்தா கான்கிராஸூக்கு "இதயத்தில் இடம்" கொடுக்கிறேன்னு சொல்லியிருப்பாா், பாவம் பச்சை மண்ணு சுடலையை ஏமாத்தி ஒற்றை இலக்கத்தில் சீட் வாங்க நிக்கிறாய்ங்க கான்கிராஸ் கயவாளீஸ்

  • SARAVANAN G - TRICHY,இந்தியா

   நீ இதெல்லாம் விட்டுட்டு, நோட்டாவை முந்த எதாவது வழி இருக்கான்னு பாரு ?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அப்போ அரசர் தனுசுகோடி ஆதித்தன் அல்போன்ஸ் ஜோதிமணி பிரபு கிருஷ்ணசாமி போன்றோருக்கு அல்வாவா

 • karthi - chennai,இந்தியா

  காங்கிரஸுக்கு 4 தொகுதிகளும் தமாகா வுக்கு 3 தொகுதிகளும் கொடுத்தால் போதுமானது. திமுக, காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட், கமல், மதிமுக, விசிக, முஸ்லீம் கட்சி - இந்த கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளது. இதற்க்கு எதிரான கூட்டணியாக, அதிமுக, பாஜக, ரஜினி, புதிய தமிழகம், பாமக அல்லது தேமுதிக, தனியரசு, முஸ்லீம் கட்சி - ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. மூன்றாவது அணியாக தினகரன் தலைமையில் கருணாஸ், அன்சாரி ஆகியோரின் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. போட்டி திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் இடையே இருக்கும். இது பொதுமக்களின் கணிப்பு.

  • Arasu - Ballary,இந்தியா

   ஓரளவிற்கு சரியான கணிப்பு, தாமாக அநேகமாக தினகரனுடன் செல்லலாம் காங்கிரஸ் உடன் இருக்காது. தினகரன் அதிமுகவுடன் ஐக்கியமாக வாய்ப்பு உண்டு.

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  தொங்குன பாலு,ப.சி ,சுதர்சனம்,வசந்த குமார்,இவிங்களுக்கு எல்லாம் சீட் கன்பார்ம் ஆயிடும்...ஏன்னா இவிங்க எல்லாம் அவ்வளவு பணம் வச்சி இருக்காங்க...நல்லா செலவு பண்ணுவாங்க....ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 20 கோடி செலவு செய்யற வகையறாவுல இவிங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மூன்று அணிகள் நிச்சயம் , 20 சீட்டுக்கள் எந்த அணி பெரும் என்பது கேள்வி குறி

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தினமலர் சொன்ன நவகிரக கூட்டணியில் காங்கிரஸ் ஆறு சீட்டுக்கள் என்பது நிஜம் தானா? போட்டி போட தலைவர்கள் ரெடி, ஓட்டுக்கள் போட மக்கள் தயாரா ???

 • R Sanjay - Chennai,இந்தியா

  காங்கிரஸ் இந்த பொழப்புக்கு... எல்லாவற்றிலும் ஊழல் செய்த கட்சி அல்லவே அதனால் எல்லாவற்றிக்கும் விட்டுக்கொடுத்து போவார்கள்.

 • sugumaran - chennai,இந்தியா

  பப்புவிற்கு தான் ஜெயிக்காவிட்டாலும் மோடி தோற்கவேண்டும்,அது மம்தாவோ, மாயாவதி, அகிலேஷ், கெஜ்ரிவால், ஜிக்னேஷ், ஹர்திக் படேல், குமாரசாமி, ஷரத் பவார், ஸ்டாலின், திருமா.வைகோ, சீமான், மோகன் லாசருஸ், மற்றும் தீவிரவாதிகளா,நெக்ஸால் அமைப்போ,யாராவது எங்களிடம் கூட்டணிக்கு வந்தால் இதில் ஒருவரை பப்பு பிரதமர் ஆக்குவேன்.

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆம் ஒருவேளை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட்டால் ஒரு வருடத்திற்குள் ஊழல் குற்றச்சாட்டு மத்திய (திமுக) அமைச்சர் பதவி விலகல் என்று அறிவிக்க சொல்லி பின்னர் இந்த பேரத்திற்க்கான பதிலை சுடலைக்கு கொடுக்கலாம்

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  காங்கிரசுக்கு இதை விட்டால் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தி மு க வுடன் கூட்டணி வேண்டாம் என்று போவது கொஞ்சமாவது மானம் மரியாதை காப்பாற்றப்படும்

  • Arasu - Ballary,இந்தியா

   அதெல்லாம் காங்கிரஸ் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளும் அநேகமாக மாயாவதி மற்றும் அகிலேஷ் காலில் விழுந்து நான் பிரதமர் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறியதாவது கூட்டணி அமைப்பர். தற்போது காங்கிரஸின் ஒரே குறிக்கோள் மோடி தோற்கவேண்டும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யானை சிறுத்து விட்டது...

 • tamil - coonoor,இந்தியா

  காங்கிரசுக்கு வேறு வழியில்லை, ராஜீவ் காந்தி காலத்தில் தைரியமாக மூப்பனாரை முன்னிறுத்தி காங்கிரஸ் தனியாக களம் கண்டது அது அப்படியே தொடர்ந்திருந்தால் இன்று காங்கிரஸ் ஒரு வலிமையான இயக்கமாக இருந்திருக்கும்

  • AXN PRABHU - Chennai ,இந்தியா

   சரியாக சொன்னீர்கள் ... ராஜிவ் காந்தி அழிந்து விட்ட அதிமுகவை வளர்த்தெடுத்தவர். உயிரை கொடுத்து ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கியவர். அவர் அப்படி செய்யாமல் இருந்து மூப்பனார் கையில் முழு அதிகாரம் கொடுத்திருந்தால் அதிமுக முடிந்து போயிருக்கும். காங்கிரஸ் வளர்ந்திருக்கும்.

 • sridhar - Chennai,இந்தியா

  ஒட்டு வங்கி. உள்கட்டமைப்பு எல்லாம் திமுகவில் சூப்பர். 2014 தேர்தல் போல்..... மீண்டும் ஊத்தி மூடிக்கொள்ளட்டும்.

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   திரு ஸ்ரீதர் அவர்களே....தாங்கள் எழுதிய கருத்துக்களைத்தான் மொத்த தமிழக மக்களும் ஆதரிப்பார்கள். அனைவரும் ......இந்த 186000 கோடி ஊழல் கும்பலுக்கு தக்க பாடம் புகட்ட சரியான தருணத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள். நிச்சயம் நிச்சயம் ஊத்தி மூடிக்கொள்ளும்.

  • ramesh - chennai,இந்தியா

   தற்போது ஆளும் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களை ஆதரிக்கும் தாங்கள் சார்ந்த கட்சி என்பதால் தங்களை போன்றோர் இருக்கும் வரை கொள்ளை அடிப்பவர்களுக்கு கவலை இல்லை.

  • Anand - chennai,இந்தியா

   உங்கள் ஆசை நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும்.

  • Arasu - Ballary,இந்தியா

   திரு ரமேஷ், அவமதிப்பவனை விட திருடன் மேல். இத்தேர்தலில் போலி மத சார்பின்மை ஒழியவேண்டும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தினகரன் ஆர் கே நகரில் சசியின் படத்தையே காட்டாமல் பிரச்சாரம் செய்தது போல திமுகவும் ராகுலை பிரச்சாரத்துக்கு கூப்பிடாமல் இருப்பார்களோ?

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  ஒற்றை இலக்க எண் ஒன்றா அல்லது ஒன்பதா என்பது இனிமேல் தான் தெரியும்.

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  பஜனை செய்ய மடத்தை தேடும் நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ள நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. தேசிய பாரம்பரியம் உள்ள இந்த கட்சி தமிழகத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு, அதன் தலைவராக இருந்தவர்களே காரணம். மக்களை விட்டு விலகி சென்று, ஒரு வட்டத்திற்குள் கட்சியை நடத்தியதே இதற்குக் காரணம்.

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   பஜனை மடம் ன்னு எல்லாம் சொல்லி எங்க சாமிய வெறுப்பேத்தாதீய

  • madhavan rajan - trichy,இந்தியா

   தி மு க காரர்கள் கூட கருணாவின் சமாதியில் பஜனை செய்யவில்லையா? அதுவும் பஜனை மடம்தான். சுடலைக்கு அடிக்கும் ஜால்றா சத்தம் கேட்கவில்லையா?

 • கணபதி -

  ஊழல் கட்சிகள் ஒன்றாக இணையப்போகின்றன. மக்கள் முன்யோசனையுடன் செயல்படவும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஒரு தேசிய அரசியல் கட்சி பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நல்ல கட்சியாக மக்களுக்கு பணியாற்ற வேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது. ஆனால் பாவம் கழுதை கட்டெறும்பாக தேய்ந்துவிட்ட கான்-க்ராஸ் குடும்ப கட்சி, இப்படி ஒரு நிலைமைக்கு வரவேண்டாம். இவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதும், ஊழலில் திளைத்திருந்தது. எதிர் கட்சியாக மிகவும் கேவலமாக செயல்படுகிறது. பாஜக தான் எப்பொழுதும் மக்கள் நலனில் நாட்டம் கொண்டுள்ள கட்சி.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மோடி எதிர்ப்பு வேண்டும் என்றால் எல்லா ஓட்டுக்களையும் இலவசமாக போடவேண்டும் என்றால்க்கூட பப்புவுக்கு ஓகே... தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட தேவையில்லை... பாராளுமன்றத்தில் ஓசி MP க்களை வைத்து இருக்கும் திமுக மோடி எதிர்ப்பாம்...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  தலைப்பே இல்லாம ஒரு செய்தி மொட்டை கடுதாசி மாதிரி

 • mindum vasantham - madurai,இந்தியா

  ivainga rendu perayum seththe வச்சு முடிக்கணும் , இலங்கை தமிழர் அங்கே சாக மந்திரி பதவி பெற்று கொள்ளையடிக்க சக்கர நாற்காலியுடன் சென்ற நினைவுகள் இன்றும் உண்டு

 • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

  காங்கிரசுக்கு ஒற்றை இலக்கம் என்று இரண்டை கொடுக்காதீர்கள் , அதிகம், ஒன்றே போதும்.

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இன்னமும் என் இவர்கள் டெல்லி செல்கிறார்கள். அவர்கள் இங்கு வருவது தான் முறை. வந்து கூட்டணிக்கு முயற்சிக்கலாம்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   தீட்டு ஒரு வருஷம்.

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வடக்கே காங்கிரசின் ஓட்டுக்கள் தான் மாநில பிராந்திய கட்சிகள் இழுத்து கொள்ளமுடியும் என்ற நிலை இருப்பதால் காங்கிரசை தவிர்க்கவே முயல்கிறார்கள். காங்கிரஸ் தனது ஓட்டுக்களை இழந்து விட்டது. தாமரையிடம் இருந்து ஓட்டுக்களை பறிப்பது சுலபமல்ல என்று தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரசை திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகளுடனும் இணைய விடாமல் செய்தாலே போதும் என்று நினைக்கிறார்களாம். தமிழகத்தில் வெற்றி என்பது தேசிய கட்சிகளுக்கு தேவையற்றதாக இருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு இரு கட்சிகளுமே கூட இணைந்து யார் மேலே ஆட்சிக்கு வருவார்களையோ அவர்களுக்கு தருவதற்கு தயாராக இருப்பார்கள் என்று தெரிகிறது. இவர்கள் நிலை சற்று தாழ்ந்து தான் இருக்கிறது. மத்தியில் யார் ஆட்சி அமைத்தால் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதே இருவரின் நிலை. பின்னாளில் சங்கடம் இல்லாமல் ஆதரவு தருவதற்கு இரு பெரிய கட்சிகளும் காங்கிரசை விட்டு விட்டால் நலம் என்று தாமரை நினைக்கலாம். காங்கிரஸ் இதை மனதில் வைத்து கொண்டு பெயரளவிலாவது ஒட்டி கொள்ளவேண்டும். எத்துணை சீட்டுக்கள் என்பது முக்கியமல்ல, சீட்டுக்கள் கிடைக்கவே இல்லையென்றாலும் கூட்டணியில் பங்கேற்றாலே அவர்களுக்கு நலம் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் பரவலாக அவர்களுக்கு 1 . 7 முதல் 2 .3 சதவீதம் தான் இருக்கிறதாம். மக்களுக்காக என்ன போராடினார்கள் என்று தெரியவில்லை அவர்கள். எத்துணையோ பிரச்சினைகள் இருக்க எதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ட்வீட் மட்டும் செய்தால் போதுமா. ஒட்டு வழங்கும் தாய்மார்கள் யார் தான் அதை படிக்கிறார்கள்.

  • Arasu - Ballary,இந்தியா

   மிஸ். மலரின் மகள் தினகரன் காங்கிரஸ் இணையவும் வாய்ப்புக்கள் உண்டு. நீங்கள் சொன்ன 1 . 7 முதல் 2 .3 சதவீதம் maters a lot to DMK. காங்கிரஸ் முரண்டு பிடித்து நாங்கள் தினகரனுடன் இணைகிறோம் என்றால் நஷ்டம் (சிறிதாவது) திமுகவுக்கு தான். GK வாசன், காங்கிரஸ் மற்றும் தினகரன் இணைந்தால் திமுகவிற்கு பெரிய நஷ்டம் ஏற்படும்

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மூன்று சீட்டுக்கள் அதிக பட்சமாக தரலாம். அவர்கள் கேட்கும் தொகுதியில் கன்னியாகுமரி தொகுதி தரலாம்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   கன்னியாகுமரிக்கு தெற்கே நல்ல செல்வாக்குண்டு அங்கு கொடுக்கலாம்

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   கன்னியாகுமரி தொகுதி பொன்னாரின் கோட்டை...

  • SARAVANAN G - TRICHY,இந்தியா

   இந்த முறை பெரியதாக விழும், அவர் கோட்டையில் ஓட்டை ...............

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஐந்து தொகுதிக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பது, தினகரன் மற்றும் பழனியின் ஒன்றுபட்ட அதிமுகவிற்கு வெற்றியை கொடுப்பது போன்றது. எப்படியும் தினகரன் அமுமுக மற்றும் பிஜேபி அதிமுக (பழனி மற்றும் பன்னீர்) லோக்சபா தேர்தலுக்கு முன் ஒன்றாக இணைந்துவிடுவார்கள். தினகரன் மற்றும் பழனி இணைய மறுத்தால், ஸ்டாலினுக்கு கொண்டாட்டம் தான். அதனால் மோடி தினகரனை அதிமுகவில் இணைய சொல்வார். அதற்கு பிரதிபலனாக தினகரனின் ஒரு எடுபிடி முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆவார். பன்னீர் கழட்டிவிடப்படுவார். இணையாவிடில், வருமானவரி துறை வரும். சிறை செல்ல நேரிடும். சசி ஷாப்பிங் செய்ய மாலுக்கு செல்ல முடியாது.

  • Arasu - Ballary,இந்தியா

   இந்த யோசனை நன்றாக இருக்கின்றது, டில்லியில் இருப்பவர்களுக்கும் தினகரனுக்கு புரியவேண்டும். அப்படியே மேலும் சில கட்சியினரையும் இந்த கூட்டணியில் இணைத்தால் திமுகவுக்கு வேட்டு வைக்க நன்றாக இருக்கும்

  • Shekar - Mumbai,இந்தியா

   சசி ஷாப்பிங் சென்றது காங்கிரஸ் ஆண்ட மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைத்துறை. இதில் ராகுல் சித்தராமையா சம்பந்த பட்டுள்ளார்கள். இதில் மோடி எப்படிவரமுடியும். விபரம் தெரிந்து கதை விடவும்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  குஸ்பு நக்மா நிக்க ரெண்டு சீட்டு குடுத்தா போதும்..... வேற எதுவும் தேறாது.....

  • Arasu - Ballary,இந்தியா

   இவர்களும் தேறமாட்டார்கள்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அவுங்களுக்கு நாலு சீட்டு தேவை ..

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   வல்வில் ஓரி - Koodal,இந்தியா : அவுங்களுக்கு நாலு சீட்டு தேவை ..... அவிங்க நிக்க ரெண்டு சீட்டு போதும். உக்காரத்தான் ஆளுக்கு ரெண்டு மூணு சீட்டு வேணும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement