Advertisement

எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி

எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கியில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.


கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த, தொழில் அதிபர் விஜய் மல்லையா, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர், பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய்
கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.


இவர்கள் மீது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிகளில், கடந்த ஆறு மாதங்களில் நடந்த வங்கி பண மோசடி குறித்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த, சந்திரசேகர் கவுட், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது கேள்விக்கு, வங்கியின் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 669 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம், 723 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நடந்த, 660 மோசடி சம்பவங்களில், 4,832 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எஸ்.பி.ஐ.,யில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வங்கி மோசடிகள் எந்தக் கட்சி ஆட்சியிலும் நடப்பவைதான் என்று ஏற்கனவே சொல்லி வந்துள்ளேன் ...... இந்தக் கலாச்சாரத்தைத் துவக்கி வைத்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி ......

  • தலைவா - chennai,இந்தியா

   எஸ்.பி.ஐ.,யில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆப் கி பார் மோசடி சர்க்கார் ஹே.

 • mayavan - Chennai,இந்தியா

  ஐயோ ஐயோ எப்படி வங்கிகளில் கடன் வாங்குவது தெரிமால் பொய் விட்டதே. மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆயிருக்கலாமே

  • தலைவா - chennai,இந்தியா

   குறைந்த பட்சம் மோடியுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் அல்லது அவருடன் வெளி நாட்டிற்கு தொழில் முனைவோராக சென்று இருந்தால் முன்னுரிமை. முயற்சி செய்யவும்.

 • N.K - Hamburg,ஜெர்மனி

  "இவனை வேலைய விட்டு தூக்கிட்டு, உடைஞ்ச பொருளுக்கெல்லாம் உங்கப்பனா காசு குடுப்பான்" என்பது போல் இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால் பாஜக ஆட்சி தொடரவேண்டும். புதிய திவால் சட்டம் கொண்டுவந்தது, உத்திரவாதம் அளிப்பவரின் சொத்தையும் முடக்குவது போன்ற நடவடிக்கைகள் இந்த ஆட்சியில்தான். காங்கிரஸ் காலத்தில் "இவையெல்லாம் வாராக்கடன்" என்று அறிவிக்கக்கூடவில்லை. இந்த ஆட்சி தொடர்ந்தால் தான் இதற்கு விடிவு, ஆட்சி மாறினால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை அதுவும் ராகுல் எல்லாம் பிரதமர் ஆனால் கஷ்டம்.

  • தலைவா - chennai,இந்தியா

   ராகுல் எல்லாம் பிரதமர் ஆனால் கஷ்டம் ...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வெறுமனே 6 மாதத்தில் ரூ. 5 ,555 கோடி என்றால் மாதத்திற்கு ரூ. 925 கோடி என்று வைத்துக்கொள்ளலாமா. அப்போ இவ்வளவு வருடத்தில் ஆரம்பம் முதல் இன்று வரையில் எவ்வளவு கோடி??????இது எல்லாமே ரவுல் வின்சி குடும்பத்திற்கு சென்று விட்டதா என்ன????

 • Jaya Ram - madurai,இந்தியா

  இதற்க்கு காரணம் மத்திய அரசினை ஆண்ட அரசுகள்தான் காரணம் என்று சொல்லிவிட்டு போங்களேன் கழுத்தை விட்டையிலே முன்விட்டை ,என்ன பின் வீட்டை என்ன எல்லாம் வீட்டைத்தானே இதில் மற்றவர்கள் மோசடி பற்றி சொல்லுகிறார்கள் இவர்கள்

 • sahayadhas - chennai,இந்தியா

  SBl ஆ அல்லது Private finance Company ஆ திவாலாகி போகுமா?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பிறகென்ன அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்கள் , உடனடியாக அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள் அப்படியே வழக்கும் பதியுங்கள். வங்கி நடத்த தெரியாமல் லஞ்சம் வாங்கி கொண்டு கடன் கொடுத்துவிட்டு இப்போது மோசடி நடந்துள்ளது என்று சொன்னால் விட்டுவிடுவோமா ?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அதுக்காகத்தான் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் எ.டீ.எம் மில் பணம் எடுக்கலாம்னு முன்னக்கூடிய அறிவிப்பு கொடுத்தாச்சு மறுமுறை எடுத்தால் இருபது ரூபா கட்டணம் வசூலிச்சு இந்த பணத்தை சரிகட்டிடுவோம் ஏமாந்தவன் சாமானிய வாடிக்கை யாளன் தான்

 • P.Rengaraj - maduai,இந்தியா

  Before concluding or making comment on an issue of bank fraud as said in the news, the following must be considered. 1. Whether the said fraud loan accounts / bank cheating cases were properly reported by banks to RBI as per the required format when it was detected during the last six months 2. Whether the said fraud cases/ bank cheating cases were detected only during last six months and reported to RBI 3. Whether the said fraud cases were loan accounts sanctioned previously but subsequently known a fraud cases while following up for recovery 4. Whether such fraud cases / bank cheating cases were sanctioned against adequate collateral security like land, building, business stock, commercial premises etc. 5. Whether bank officials are involved for not following up non performing loans which turned out loss accounts or fraud cases etc. There are number of factors to determine about fraud loan account. Just by the statement given during RTI will not tell all the truth. The number of cases also mentioned therein. They must be sanctioned previously but subsequently turned out NPA / Loss / Fraud account. The officials involved must be punished. What RBI does with its VETO power? Mere blaming the present government will not solve the problem.

 • sahayadhas - chennai,இந்தியா

  SBI ஆ அல்லது Private Finance ஆ ஒடி போகுமோ? 2 லட்சம் போட்டுள்ளேன்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இன்னும் 6 மாசம்தான் இருக்கு..

  • sankar - trichy,இந்தியா

   தம்பி இன்னும் ஆறு வருஷம் இருக்கு . தப்பிக்க முடியாது திருடர்கள்

  • vinu - frankfurt,ஜெர்மனி

   சரியாக கண்ணை திறந்து பார். இன்னமும் 6 மாதம் தான்.

 • christ - chennai,இந்தியா

  இதன் நஷ்டம் மறைமுகமாக மக்கள் தலையில் ஏற்றப்படும் .

  • தலைவா - chennai,இந்தியா

   இப்பல்லாம் எங்க அண்ணே மறைமுகம் எல்லாமே நேரிடையாகவே மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்..... கேட்டால் வோட்டு போடவே மக்கள் பணம் கேட்கிறார்களாம் அந்த பணத்தை எல்லாம் எப்படி கொடுப்பது என்கிறார்கள்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Is this fraud also due to Congress reign?

  • vinu - frankfurt,ஜெர்மனி

   During BJP govt only

 • smoorthy - bangalore,இந்தியா

  எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் இந்த தேசிய வங்கிகள் அது எப்படி கோடி கணக்கில் கடன் கொடுக்கிறார்கள் / சாதாரண மனிதன் உதாரணமாக ஒரு 20000 ரூபாய் கடன் கேட்டால் அவனை என்ன பாடு படுத்துகிறார்கள். இந்த வங்கியாளர்கள்/ ஓன்று நினைக்க தோன்றுகிறது இந்த வங்கியாளர்கள் % அடிப்படையில் கோடிகளில் கடன் கொடுத்து உள்ளார்கள் போல் தெரிகிறது / அரசியல் வாதிகளுக்கும் கண்டிப்பாக இந்த கடன் கொடுப்பதில் பங்கு இருக்கும் என என்ன தோன்றுகிறது. இது வரை கோடி கணக்கில் கடன் வாங்கிய எந்த பெரிய மனிதனை இந்த அரசு கைது செய்து வழக்கு போட்டு உள்ளது. எல்லாம் கண் துடைப்பு நாடகம் தான். கடைசியில் paper to paper அட்ஜசுட்மென்ட் செய்து கணக்கை முடித்து விடுவார்கள். இது தான் இந்தியாவில் வரலாறு

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ஆரியர்கள் கையில் அதிகாரம் சிக்கினா இப்படி தான் .

  • N.K - Hamburg,ஜெர்மனி

   ஆரியர்கள் கையில் மட்டும் இருந்தவரை ஒழுங்காக இருந்தது. பூச்சிமருந்து குடித்தவர்கள் சிலர் கெடுத்துவிட்டனர்

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பது காங்கிரஸா , பிஜேபியா?... நிதி மந்திரி யார் ? சிதம்பரமா, அருண் ஜெட்லீயா? எனக்கு ஒண்ணுமே புரியலா.. புதிய இந்தியா , புதிய இந்தியான்னு தினம் ஒருத்தர் கூவிட்டு இருக்கார் ... எங்க வரிப்பணம் எல்லாம் இப்படித்தான் சூறையாடப்படுகிறதா ? ..முந்தைய நிதி மந்திரி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தேன்.. எப்படா காங்கிரஸ் ஒழியும் என்று இருந்தேன்.. ஆனால் சிதம்பரம் போட்ட ஒரு வரியையும் இப்போதைய பிஜேபி நிதி மந்திரி குறைக்கவில்லை ... அதைவிட அதிகமாக வரிபோட்டு மக்கள் பணம் ரத்தம்போல் உறிஞ்சப்பட்டு, யார்யாருக்கோ கொடுக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது ... சேவை வரி என்ற ஒன்றை கொண்டுவந்தவர் சிதம்பரம் , இன்று அவரைவிட அதிகம் சேவை வரி வசூலிக்கிறது பிஜேபி அரசு ... பெட்ரோலிய பொருட்களில் மட்டும் எவ்வளவு வரி அரசுகளுக்கு செல்கிறது ... ஆனால் ரோடுகள் இன்னும் குண்டும் குழியுமாகத்தான் உள்ளது ... தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திற்கும் சுங்கச்சாவடி கட்டண கொள்ளை ... காங்கிரஸ் ஆரம்ப காலங்களில் எவ்வளவோ நல்ல திட்டங்களை கொண்டுவந்து இந்த நாட்டை கட்டமைத்தார்கள் .. நீங்கள் ஐந்தே வருடத்தில் எங்களை திருவோடு எந்த வைத்துவிடுவீர்கள் போல் தெரிகிறது ... இனியாவது நல்லது செய்ய பாருங்கள்

 • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

  கான் கிராஸ் இத்தாலி பப்பு மூர்க்கன்கள் அறுபதாண்டு ஊழல் ஆட்சியில்தான் அத்தனை வங்கி மோசடிகளும் நடந்தன. கலியுக கிருஷ்ணாவதார ஆட்சியில் அவை வெளியே கொண்டு வரப்படுகின்றன. அதற்காகவே கிருஷ்ணாவதாரத்துக்கு உலக அளவில் மக்கள் கடன்பட்டுள்ளனர், கலியுக கிருஷ்ணாவதார ஆட்சியில் ஊழல் மோசடி எல்லாம் ஒழிந்துபோய்விட்டன

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அரசு வங்கி டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பில்லை என்ற வதந்தி சென்றாண்டு பரப்பப்பட்டது . அதன் பின்னணியில் முத்ரா கடனால் பாதிக்கபட்ட பல தனியார் நிதிநிறுவனங்களும் கந்துவட்டிக்காரர்களும் இருந்தனர். கம்யூ போன்ற்வர்களுக்கு பெரும் கையூட்டும் கொடுக்கப்பட்டது இப்போது மீண்டும் புதுப்புது மாயாஜாலங்கள்

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   செல்லம் செய்தியை படித்துவிட்டுட்டு பதில் போடு , இந்த தகவலை சொல்லியது கம்யூனிஸ்ட் இல்லை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சிறந்த நிர்வாகம் என்று வாய் கிழிய பேசியவரின் ஆட்சியில் ஜஸ்ட் 6 மாதத்தில் 5555 கோடி அம்பேல் இதை ஏன் இப்படி எடுத்து கொள்ளக்கூடாது பிஜேபி ஆட்களுக்கு வசதியாக பணம் பட்டுவாடா நடக்கிறது என்று. ஏனெனில் பிஜேபி பக்தால்ஸ் அடிக்கிற செம்பு தூக்குவதை பார்த்தால் பெரிய பணம் அவர்களுக்கு செல்வது போல் தெரிகிறது அதனால் தான் கொடுக்குற காசுக்கு மேல் கூவுவாதது போல் தெரிகிறது

  • Asokan - Thanjavur,இந்தியா

   இங்கே வந்துள்ள செய்திக்கு தொடர்பில்லாத பதில் தேவையில்லை. பிஜேபி ஆட்சியில் இவ்வளவு மோசடி நடந்தது எப்படி? ஏன்? கான் கிராஸ் என்று பழைய ஊளையிடல் வேண்டாம். நடப்பது அனைத்தும் பிஜேபியின் கையாலாகாத ஆட்சியின் விளைவுகள். ஒரு பக்கம் தமிழ்நாட்டில் நடக்கும் பல ஆயிரம் கோடி ஊழல், லஞ்சம், கொள்ளை தொடர்பான ரைடுகள், அதற்கு மேல் நடவடிக்கை இல்லை. மோசமான, கேவலமான ஊழலில், லஞ்சத்தில், கொள்ளையில் உழலும் ஒரு கேடுகெட்ட அரசுக்கு ஆதரவு வேறு. எங்கும் அதிகார துஷ்பிரயோகம், டீசல், பெட்ரோல், சமையல் வாயு விலை ஏற்றம் இப்படி ஒவ்வொன்றாக மக்கள் விரோத ஆட்சி செய்யும் கையாலாகாத அரசு இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. மக்களின் கோபமும், வெறுப்பும் அளவுகடந்த நிலையில் உள்ளது. கான் கிராஸ் ஊழல் என்றால் இந்த ஆட்சி கையாலாகாத ஊழல் ஆட்சி. அநேகமாக இதுவே பிஜேபியின் இறுதி ஆட்சியாக இருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த ஆட்சி முடிவதற்கு அனைத்து வங்கிகளும் காலிதான்

  • rajan. - kerala,இந்தியா

   முந்தைய ஆட்சி காலத்திலேயே அத்தனை செப்பிடி வித்தைகளும் ஆடி அரசு கஜானா முதல் வங்கி கஜானா வரை ஊத்தி முடிச்சுக்கிட்டு தானே உலக பொருளாதார நிபுணர்கள் நாங்கள் தான் என சொல்லியே அத்தனை பேரும் வெளியேறினாங்க. இன்னிக்கு ஒவ்வொரு ஊழலும் பந்தய குதிரை மாருதி வெளியே பாய்ந்து வருகிறது.

  • R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா

   ஆட்சிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மொத்தம் கடன்களில் அரசியல் சிபாரிசில் கொடுப்பது வேண்டுமானால் முப்பது சதவீதம் இருக்கலாம் .... மிச்சம் எழுபது சதவீதம் அதிகாரிகளின் வூழல்களால் சூறையாடப்பட்டிருக்கும் ... இப்போது நடந்துள்ளது என்று சொல்லமுடியாது .... இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ... காலம் காலமாக நடப்பது இப்போது ஒவ்வொன்றாக வெளியே வருகிறது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அரசுப்பணியை சோம்பேறியாக ஜாலியான வேலையாக பார்க்கும் மனோபாவம் தான் காரணம். என்று அதனை ஒரு தேசசேவையாக நினைத்து வேலைசெய்யத் துவங்குகிறார்களோ அன்றுதான் விடிவுகாலம்

  • Mohan - Neyveli,இந்தியா

   அரசு வேலையை எதற்கு தேச சேவையாக பார்க்க வேண்டும். அதை வேலையாக பார்த்து வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக வேலை பார்க்கலாமே

  • Asokan - Thanjavur,இந்தியா

   வங்கி மோசடி நடந்துள்ளது இந்த வருடம். அதற்கான நேரடி பதில் இல்லையே. பிஜேபி எந்த காரணம் சொல்லியும் தப்பமுடியாது. இதற்கு முன்பு நடந்த பல ஆயிரம் கோடி மோசடிகளைக்கூட கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கலாம். ஆண்டு இறுதியில் தனியார், பொதுத்துறை வங்கிகள் தங்களது ஆண்டிறுதி அறிக்கையை கணக்கு தணிக்கை செய்து அதன் இறுதி அறிக்கையுடன் சேர்த்து ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கும். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கியின் ஆண்டு அறிக்கையுடன், கணக்கு தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான குறிப்புகளை தீர ஆய்வு செய்து சந்தேகம் இருந்தால் தணிக்கைக்கு உட்படுத்தி அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் கவர்னரின் குறிப்புடன் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். இந்த நடைமுறைகள் நடந்து எந்த மோசடியும் கண்டுபிடிக்கப்படாமல் அலட்சியமாகவோ, வேண்டுமென்றோ விட்டுவிட்டால் அதற்கு முழு பொறுப்பும் நிதி அமைச்சர்தான். அத்துடன் ஆளும் கட்சியும் அதற்கு கூட்டுப்பொறுப்பு. மல்லையா, நிரவ் மோடி கடன்கள் கான் கிராஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டவை என்று காரணம் சொன்னதுபோல் இப்போது நடந்துள்ள பல ஆயிரம் வங்கி மோசடிக்கு முழு பொறுப்பும் ஆண்டுகொண்டிருக்கும் ஆளத்தகுதியில்லாத அரசையே சாரும். ஒவ்வொன்றாக நடக்கும் மோசடி நஷ்டத்தை சரிசெய்ய வங்கிகளின் நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து சாதாரண மக்களின் சேமிப்பில் கை வைக்க இந்த அரசு முயற்சி செய்யலாம். காரணம் அடக்குமுறை ஆட்சியில் மக்கள் தங்கள் கோரிக்கையை வெளியில் சொல்ல அனுமதிக்கப் படுவதில்லை. அடுத்த தேர்தல்வரை அவர்கள் அனைத்து சிரமங்களையும் சகித்துக்கொண்டு காத்திருக்கின்றனர். பிஜேபிக்கு வரும் தேர்தலில் மரண அடி காத்திருக்கிறது என்பது நிச்சயம். அடுத்தமுறை மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரும்வரை கட்சியின் செலவுகளுக்கு இருக்கவே இருக்கிறது அம்பானி, அதானி, வேதாந்தா இத்யாதிகள்....

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   இந்த பேங்க் இல வேலை செய்யுற கூட்டம் யாரு அதிகம் எல்லோருக்கும் தெரியும்

  • sankar - trichy,இந்தியா

   இந்த காலாண்டில் ஓடியவர்கள் என்றால் . எப்போவோ கடன் வாங்கி அவன் ஏறகன்வேய ஓடி இவர்கள் பல முறை செய்து கடைசியா இந்த காலாண்டில் அவனை ஓடியவனாக அறிவிக்கிறார்கள் . இதே போல் ஒவ்வ்ரு காலாண்டும் வரும் .

 • tamil - coonoor,இந்தியா

  இதுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்றெல்லாம் சொல்லக்கூடாது, அரசு எடுக்கும் பலவிதமான நடவடிக்கைகளால் பெரிய அளவுக்கு பலன் இல்லை என்பது தான் உண்மை

  • Asokan - Thanjavur,இந்தியா

   //இதுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்றெல்லாம் சொல்லக்கூடாது// அது ஊழலோ ஊ...ழ....ல்...... இது மெகா ஊழல்....லஞ்சம்....கொள்ளை, ஆணவ , அராஜக ஆட்சி.....

 • krishnan - Chennai,இந்தியா

  ஜூலை முதல் செப்டம்பர் வரை பிஜேபி ஆட்சி இல்லேயா ?

  • Asokan - Thanjavur,இந்தியா

   //ஜூலை முதல் செப்டம்பர் வரை பிஜேபி ஆட்சி இல்லேயா ?// இருந்தது... ஆனால் எங்களுக்கு தெரியாமல் கான் கிராஸ் ஆட்கள் வங்கியை ஏமாற்றிவிட்டனர். உண்மையை சொன்னா நீங்க நம்பனும்...

  • sankar - trichy,இந்தியா

   ஜூலை முதல் September என்பது அவர்கள் இந்த தகவலை சொல்லும் காலம் அவ்வளவேய லோன் வழங்க பட்ட வருடங்லாய் பாருங்க . அதே காங்கிரஸ் ஆட்சி தான்

 • sagar saritha - Chennai,இந்தியா

  நம்பமுடியவில்லையே ஜூன் வரை ஒரு தொகை, செப்டம்பர் வரை நடந்த மோசடி தொகை அதை விட பல மடங்கா? SBI should publish the list of amounts lost under various circumstances for quarter ed september, 2018. The amount of such huge "fraud" in a single quarter is disturbing. How has this escaped the attention of media till now?

 • R.Nagarajan - CHENNAI,இந்தியா

  ஆமாண்டா ஏழைகள் பாவம், அவர்கள் வயிற்றில் அடித்தால் இப்படித்தான் ஆகும். மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்று எத்தனை கோடியை மக்களிடம் இருந்து ஆட்டயப்போட்டு மோசடிப் பேர்வழிகளிடம் கொடுக்கிறதுக்கு நீங்க எதுக்கு வங்கி நடத்தணும். மூடிட்டு போங்க.மக்களாவது நிம்மதியா இருப்பாங்க

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  This information exposes that there are still loopholes are there in banking - questioning the role of RBI and Ministry of Finance plugging such loopholes.This being the case, there is no meaning in blaming UPA for amazing NPA.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  புதிய சட்டத்தினால் பல பழைய வராக்கடன்கள் வெளிச்சத்துக்கு வருகிறது...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பழசுபத்தி இப்போ பேசல காசி.. இது புதுசு... லலித் மோடி, நீரவ் மோடி, மல்லையா................. இதுக்கெல்லாம் பின்னால இந்த நடப்பு வருஷத்தைப் பத்தி பேசுறாங்க ஜீஜி.

  • Asokan - Thanjavur,இந்தியா

   //புதிய சட்டத்தினால் பல பழைய வராக்கடன்கள் வெளிச்சத்துக்கு வருகிறது..// இந்த வருட ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடந்துள்ள மோசடி 5555 கோடிகள். இந்த ஆண்டு நடந்த இந்த மோசடிக்கு கான் கிராஸ் காரணம் இல்லை? இல்லை இருக்கும்....கான் கிராஸ் கட்சிக்காரர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர் என்று கூப்பாடு போட பிஜேபி அல்லக்கைகளுக்கு அறிவுரை சொல்லவில்லையா?

 • Princey - Edison,யூ.எஸ்.ஏ

  வங்கி மோசடி என்பதை பார்க்கும்போது வங்கி அதிகாரிகளே மோசடி செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   உடந்தையாத்தான் இருக்கனும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  உலகத்துலயே ஏ டி எம்முக்குன்னு தனி ரூம் கட்டி ஏ சி எல்லாம் போட்டு அதுல நாய்களை படுக்க வெச்சுருக்குறது நம்ம எஸ் பி ஐ தான் , ஏ டி எம் மட்டும் வேல செய்யாது, ஒரு ஏ டி எம்ம ஒழுங்கா வெச்சுக்க தெரியல அதான் வரவன் போறவன் எல்லாம் மோசடி செய்யிறான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement