Advertisement

'ரபேல் விமானம் வாங்கும் முடிவு எடுத்தது எப்படி'

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்களை வாங்கும் நடைமுறைகள் தொடர்பான விரிவான அறிக்கையை, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 58 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இந்நிலையில், காங்.,கை சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர், தெஹ்ஸீன் பூனாவாலா, ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாதது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை குறித்தும், அது தொடர்பாக விசாரணை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.எஸ்.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை, நாட்டின் பாதுகாப்பு கருதி வெளிப்படையாக தெரிவிக்க முடியாது,'' என்றார்.


இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவை எடுக்க மேற்கொள்ளப்பட்ட
நடைமுறைகள் குறித்த தகவல்களை, மத்திய அரசு, மூடப்பட்ட உறையில் வைத்து, 29ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். போர் விமானங்களின் விலை தொடர்பான தகவலை, அரசு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஒப்பந்தம் தொடர்பான முடிவு எடுக்க மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் முறையானவைதானா என்பதை தெரிந்து கொள்ளவே, அந்த தகவல்களை நீதிமன்றம் கேட்கிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு, அக்., 31ல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • murugu - paris,பிரான்ஸ்

  ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது மாட்டிக்கொண்டார் ஏழை தாயின் தவப்புதல்வன் ""மீடியாபார்ட்"" என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை மிக தெள்ள தெளிவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது அதுமட்டுமா நிர்மலாவின் பிரெஞ்சு விஜயத்தயும் கேள்விகேட்டு இருக்கிறது

 • sahayadhas - chennai,இந்தியா

  ஐயா ரபேல் காந்தி எவட .ஆள கானோம்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   ரபேல் மோசடி எங்கேன்னு சொல்லுமய்யா..

 • sahayadhas - chennai,இந்தியா

  துண்ட காணோம் துணிய காணோனு ஓட தொடங்கிட்டாங்க . ஆட்ட போடனுலாலும் சற்று உழைக்கனும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கோர்டுக்குத் தேவையான அறிக்கை குடுத்துடுவாங்க... அதான் அமைச்சர் பிரான்சுக்குப் பறந்திருக்கிறாரே.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  விலை தொடர்பான தகவலை எதனால் மூடப்பட்ட கவரில் வைத்து நீதிபதிகளிடம் அளிக்கக் கூடாது ? நீதிபதிகளின் மேல் நம்பிக்கை இல்லையா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மூடப்பட்ட உறையில்... விபரங்கள் இருக்குமா ? வேறு ஏதாவது இருக்குமா..?

 • tamil - coonoor,இந்தியா

  பிரதமர் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு அவருக்கே எதிராக அமைந்து விட்டது, தற்போது அதை சமாளிக்க அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, பிரதமர் நேர்மையானவர் என்பதற்காக அவர் தன்னிச்சையாக எல்லாம் முடிவு எடுக்க கூடாது,

  • Suri - Chennai,இந்தியா

   இங்கு நேர்மை காற்றில் எப்பொழுதோ பறந்துவிட்டது.

  • மாயவரத்தான் - chennai,இந்தியா

   சட்டப்படி இந்த விஷயத்தில் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்க உரிமை இருக்கிறது என்பது ஏற்கனவே வந்து விட்டது.

  • Anandan - chennai,இந்தியா

   நேர்மையானவர் என்றால் ஏன் மௌனம் காக்கிறார்? ஏன் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்?

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  மோடி முறையான நடவடிக்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு தனது நலனுக்காக மேற்கொண்ட ஒப்பந்தம் இது. நாட்டு நலன், தேச பாதுகாப்பு என்றெல்லாம் பேசியே முறைகேடு செய்துள்ளார்.

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  நாடாவது பாதுகாப்பாவது நமக்கு அம்பானிக்கு தொழில் முன்னேறணும் அப்படி இல்லை என்றால் விமானத்துறையில் அனுபவமில்லாத அம்பானிக்கு ஏன் இந்த காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது ,ஏற்கனவே உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு அம்பானி குழுமம் இருக்கவேண்டும் என்று நிர்பந்தித்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்று ஒரே பிரெஞ்சு பத்திரிக்கை செய்தி வெளி இட்டுள்ளது ,உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்டதும் பத்திரிக்கை செய்து வந்ததும் பாதுகாப்பு அமைச்சர் அவசரமாக பிரான்ஸ் ஓடுகிறார் எதற்கு ? எல்லாவற்றையும் முடி மறைக்கவே. பொய் சொல்லி சொல்லி நான்கு ஆண்டுகள் ஓடியாட்சி இனியும் பொய் சொல்லி மக்களைஏமாற்ற முடியாது.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அங்கே ஓடியும் பிரயோசனம் இல்ல.. அந்த அதிபர் அர்மேனியா போயி இருக்காராம். வெள்ளிக்கிழமை இரவுதான் திரும்புவார்னு சொல்றாங்க.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அடுத்த கேள்வி எந்த நாட்டை எப்படித்தாக்க இவ்வித விமானங்கள் பயன்படும்? அங்குள்ள சிறுபான்மையினரை தாக்காதலல்லவா ? போர்விமான எரிபொருளுக்கு ஜி எஸ் டி உண்டா? விமானிகளின் பாதுகாப்பு எப்படி? பெண்விமானிகள் ஓட்டினால் அவர்களுக்குவேண்டிய சகல வசதிகளும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பும் உண்டா? விமானிகள் தேர்வில் இடவொதுக்கீடு உண்டா? ஆபத்தான பகுதிகளுக்கு போர்க்களத்துக்கு இட ஒதுக்கீட்டின்மூலம் சேர்ந்தவர்களை அனுப்புவீர்களா? (இன்னும் வரும்).கேள்விகேட்கத்தானே பிறந்திருக்கிறோம் ?

  • Suri - Chennai,இந்தியா

   இங்கு சிறுபான்மையினர் எங்கிருந்து வந்தார்கள்? இங்கே இட ஒதுக்கீடு எங்கிருந்து வந்தது? ஆண் பெண் பேதம் எங்கிருந்து வந்தது? நீங்கள் எப்படிப்பட்ட மனது உடையவர், எப்படி விவகாரத்தை திசை திருப்புவீர்கள் என்பது இப்படிப்பட்ட கேள்விகளில் இருந்து தெளிவாகிறது. நீங்கள் ரொம்ப நல்லவர். இந்த நாட்டுக்கு ரொம்ப தேவையானவர்.

  • nandaindia - Vadodara,இந்தியா

   ஐயா சூரி, ரொம்ப பொங்க வேண்டாமே. அவர் கேட்ட கேள்வியில் என்ன தப்புள்ளது? அடுத்தடுத்து நடக்கப்போவைகளைதான் அவர் சொல்கிறார். அவ்வளவே. இந்த நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் நடக்கிறது? சபரிமலை விஷயத்தில் கோர்ட் எப்படி நடந்துகொண்டுள்ளது? மற்றவிஷயங்களில் (கற்பழிப்பு பிஷப், தகரமுத்து, முத்தலாக்) கோர்ட்டின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது என்பது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை என நினைக்கிறேன்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   எதுவும் கேட்ககூடாதுன்னு சொம்பு சொல்லுது ..

  • nandaindia - Vadodara,இந்தியா

   நல்லா கேள்வி கேட்கலாமே. ஆனா கேள்வி கேக்கணுமுன்னு கிறுக்குத்தனமான கேள்வி கேட்டா என்ன செய்யறது? அறுபது வருஷமா நடந்த தூங்குமூஞ்சி ஆட்சியை எவனும் கேள்வி கேக்கல. ஆனா நாலரை வருஷத்துல மட்டும் நாலாயிரம் கேள்விகள் நல்லா கேக்க தெரியுது . முந்திய ஆட்சியில இவங்க எல்லாம் எங்க இருந்தாங்கன்னு யாருக்குமே தெரியாது.

  • Anandan - chennai,இந்தியா

   கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை என்றால் இப்படி ரங்கு மாதிரி உளறத்தான் வேணும். ஐயோ பாவம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நீதிமன்றம் சரியான கேள்விகளையே கேட்டு இருக்கிறது.. நடைமுறைகள் எந்த அரசு வந்தாலும் வெளிப்படையாகவே இருக்கவேண்டும். அதே சமயம் இராணுவ ரகசியங்கள் நீதிமன்றத்துக்கு செல்வது நாட்டுக்கு நல்லதல்ல. 10 ஆண்டு காலம் முடிவுகளை எடுக்க முடியாமல் ஒரு அரசு திணறி இருக்கிறது என்றால் - அடிப்படையில் பெரிய தவறு இருந்திருக்கிறது... அதை கேள்வி கேட்க ஆள் இல்லை என்பது வெகு நெருடலான விஷயம்... ஆனால் போர்க்கால அடிப்படையில் தளவாடங்கள் வாங்கும் பொழுது பலர் வருகிறார்கள் - ஏனென்றால் அவர்களின் முக்கிய இலக்கு மோடி என்ற ஒரு செயல்படும் பிரதமர்.. அது தவிர இவர்களின் பின்புலம் பாக்கி மற்றும் சீன தூதுவர்களையும் எலும்புத்துண்டுக்கும் சாராய பாட்டில்களுக்கும் சந்திக்கும் கூட்டம்... இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கொலீஜிய நீதிமன்றம்... தேசவிரோதிகள் பலம் பெறுவது நாட்டுக்கு நல்லதல்ல...

  • Anandan - chennai,இந்தியா

   அண்ணாத்தே, உங்க தலீவர் ரிலையன்ஸை இனைக்கலேனா ஒப்பந்தமே போட முடியாதுனு மிரட்டித்தான் ஒப்பந்தமே போட்டாராம், பிரான்ஸ் பத்திரிகை கழுவி ஊத்தி இருக்காமே. யாரும் ஏசினா என்ன அத்தனையையும் தொடச்சி போட்டுட்டு அவனையும் திட்டுவீங்க.

  • nandaindia - Vadodara,இந்தியா

   //இதற்கிடையே பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை டஸ்சால்ட் நிறுவனமும்,இந்திய அரசும் மறுத்துள்ளது.// நைனா, மேல இருக்கற நியூஸ படிச்ச நீ கீழ போட்டுருக்கறத படிக்காம போயிட்டியே. நம்ம நக்கீரன் மாதிரி தான் மஞ்சள் பத்திரிக்கை அதுன்னு எல்லாரும் கழுவி கழுவி ஊத்தறாங்களாமே? படிக்கலயா? அது சரி ஒருத்தன் மேல சும்மாவே பழி சொல்லுறது நமக்கு புதுசில்லையே?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   நம்பிக்கையைப் பாராட்டனும். // இராணுவ ரகசியங்கள் நீதிமன்றத்துக்கு செல்வது நாட்டுக்கு நல்லதல்ல //

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   “பிரான்ஸ் பத்திரிகை கழுவி ஊத்தி இருக்காமே” - நக்கீரன் போல அங்கும் பத்திரிக்கை உண்டு... பிங் மொழிபெயர்த்ததில் பிரச்சினையாம்...

  • Anandan - chennai,இந்தியா

   //“பிரான்ஸ் பத்திரிகை கழுவி ஊத்தி இருக்காமே” - நக்கீரன் போல அங்கும் பத்திரிக்கை உண்டு... பிங் மொழிபெயர்த்ததில் பிரச்சினையாம்.// உலகத்தில் நாங்க மட்டுமே யோக்கியர்கள் என்று சுயபட்டம் தரித்து பெருமையா சுத்தி கிட்டு இருந்தீங்க இப்போ பாருங்க சாயம் வெளுத்து பொய் முட்டு குடுக்க வேண்டியாதாய் போச்சு. அடப்பாவமே.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  நாளைக்கு பாக்கிஸ்த்தானும் ரபேல் வாங்கிட்டா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே ரபேல் பலம் இருக்கும் , இதுக்கு நாம ரபேல் வாங்காமயே இருந்திருக்கலாமே ?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அவனுவோ இவ்வளவு காசு குடுத்து வாங்கணும்னா அமெரிக்காதான் பைப்பை தொறக்கணும். அதுக்கு பதில் வேணும்னா F16 தர்றேன் வாங்கிக்கோன்னு மெரட்டுவானுவோ .

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  விளக்கம் கேட்டு இருப்பது உச்ச நீதிமன்றம். எடுபிடி தேர்தல் கமிஷன் அல்ல என்பதை நினைவில் கொண்டு, மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement