Advertisement

விழிப்புணர்வு:மழைக்கால பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கு. ரெயின்கோட் பயன்படுத்த அறிவுறுத்தல்

திட்டக்குடி:மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆவினங்குடி பி.எஸ்.வி., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி நிர்வாகி கீதாசெல்வன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மணிமொழி வரவேற்றார். நிகழ்ச்சியில், வரும் மழைக் காலங்களில் பெற்றோர்கள், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்வதோ, தொடுவதோ கூடாது. மழை நேரங்களில் மரத்தின் அடியில் ஒதுங்க கூடாது. மழை நேரங்களில் வெளியே வரும் மாணவர்கள் மழைக்கோட்டு, குடைகளை பயன்படுத்த வேண்டும்.கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், பராமரிப்பு இல்லாத பழுதடைந்த கட்டடங்கள் அருகே செல்லக்கூடாது. விடுமுறை நாட்களில் நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், நீர்தேக்க தொட்டிகள் அருகே மாணவர்கள் செல்லாமல் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து பள்ளி சார்பில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement