Advertisement

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தம்பதி

கும்மிடிப்பூண்டி : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய தம்பதியின் செயல், பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


ஆந்திர மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர், கே.வி.சுப்பாராவ், 74. அவரது மனைவி பிரமிளா ராணி, 65. இவர்களுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, சூரப்பூண்டி கிராமத்தில் உள்ளது.அந்த நிலத்தை, அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, பத்திரப் பதிவு செய்து, தானமாக நேற்று வழங்கினர். தற்போதைய சந்தை மதிப்பு படி, அந்த நிலத்தின் மதிப்பு, எட்டு கோடி ரூபாய்.


நிலத்தை தானமாக வழங்கிய சுப்பாராவ் கூறியதாவது: என் தந்தை கிருஷ்ணய்யா, 1974ல், புற்றுநோயால் இறந்தார். அந்த சமயத்தில், புற்றுநோய்க்கு போதிய மருத்துவ சிகிச்சை வசதி இல்லை. அப்போது அறிதாக இருந்த, புற்றுநோய், தற்போது பரவலாக காணப்படுகிறது. அடையாறு புற்றுநோய் மையம், மனிதாபிமான அடிப்படையில், நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சையை சிகிச்சையை, சேவையாக வழங்கி வருகிறது. அந்த மையத்திற்கு, எங்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், 40 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளோம். இவ்வாறு, சுப்பாராவ் தெரிவித்தார்.


உடன் பிறந்தவருக்கு கூட, 1 அடி இடத்தை விட்டு கொடுக்க மறுக்கும், சுயநலம் மிக்கவர்கள் வாழும் இந்த கால கட்டத்தில், எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய தம்பதியை பலரும் பாராட்டினர்.
Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அந்த பகுதி அரசியல்வாதி ஆட்டயம் போடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

 • vns - Delhi,இந்தியா

  "hats off " என்றும் கூறும் மாயாக்களின் அறிவை நினைத்து சிரிக்கிறேன். மற்றவர்களை நகல் செய்தெ வாழ பழகிவிட்டவர்களுக்கு தாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரிவதில்லை. தமிழகத்தில் யார் தொப்பி (hat ) போட்டுக்கொள்கிறார்கள் அப்புறம் யார் தொப்பி எடுப்பதை மற்றவர்களுக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறார்கள் . வீண் பகட்டும் அறியாமையும்தான் தமிழகத்தில் உள்ளன. அறிவுள்ளவர்கள் ஒரு சதவீதம் தமிழகத்தில் இருப்பார்களா என்பதே சந்தேகம் தான்

 • Endless - Chennai,இந்தியா

  பரந்த மனம் கொண்ட பெரியவர்கள் திரு கே.வி.சுப்பாராவ் ஐயா, மற்றும் திருமதி பிரமிளா ராணி அம்மையார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டு, அப்படியே எல்லாம் வல்ல இறைவனிடத்தில், இவ்விரு புண்யாத்மாக்களுக்கும் பூரண ஆசீர்வாதத்தையும் அனுகிரஹத்தையும் வழங்குமாறு பிராத்திக்கிறேன் ....

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  நில அபகரிப்பு கும்பலுக்கு இந்த நிலம் இருக்கும் விவரம் தெரிந்திருந்தால், முன்பே பிடுங்கி பட்டா செய்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் விவரம் தெரியாமல் இருந்துவிட்டனர். அதனால் என்ன, இப்போதைக்கு அந்த நிலத்தில் இப்போதைக்கு கட்டிடம் கட்டப்போவதில்லை, கொஞ்சம் நாள் கழித்து ஆக்ரமிப்பு செய்துகொள்ளலாம்.

 • Rm N Narayenen - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் மிகவும் பெரிய மனம் வேண்டும் கடவுள் அவர்களுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும்

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு பலத்த ஆசிர்வாதங்களும் ஒத்தாசையும் வரும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்வோர் மத்தியில் தமது இடத்தை பொது இடமாக ஆக்கி தருவோர் ஆரோக்கியமாக வாழ்ந்திட அவர்கள் வம்சமும் ஆசிர்வதிக்கப்பட்ட ஆண்டவர் கிருபை செய்வாராக

 • Indhuindian - Chennai,இந்தியா

  வாஷக நீ எம்மான்

 • Balasubramaniam - COIMBATORE,இந்தியா

  மனம் வேண்டும் ... தொலைநோக்கு சிந்தனை ...விசால மனம் ....இவர் போல் வாழ வேண்டும் ..

 • munusamyganesan - CHENNAI,இந்தியா

  ஹாய், இவ்விரு தம்பதிகள் வாழ்க பல்லாண்டு இவ்வையகத்தில். இவர்களின் புகழ் ஓங்குக. இவர்களே நுற்றாண்டின் மிகவும் சிறந்த தம்பதிகள் இவர்களுக்கு என் சார்பாகவும், என்னுடைய குடும்பத்தார் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.கடவுள் இவ்விரு தம்பதிகளை ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.

 • balakumaran - chennai,இந்தியா

  வாழிய நலம்

 • V.Sivamoorthy - Karur,இந்தியா

  Hats off sir

 • mm -

  super couple hats off to u

 • ருத்ரா -

  நிலத்திற்கு தான் மதிப்பு. இவர்கள் கருணையின் மதிப்பை அளவிடவே முடியாது. உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

 • palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ

  மனிதன் இறந்த பின் தன்னுடன் எடுத்து செல்லக்கூடியது செய்த தர்மம் என்பதனை உணர்ந்து செய்த நல்ல செயல் இது. தங்களையும், தங்களின் தலைமுறையையும் இந்த நல் செயல் காக்கும்.பல நூறாண்டு வாழ்க நாள் வாழ்த்துக்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உலகம் உள்ளளவும் உங்கள் பெயர் நிலைத்திருக்கும் உத்தம தம்பதிகளே

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  கோவிலுக்கு கொடுத்தால் அரசியல் வாதிகள் அமுக்கி விடுவார் என்று, நல்ல வேலை செய்து இருக்கின்றனர். வாழ்த்துக்கள்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  Hats off to these couple...

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மாதம் தவறாது மழை பெய்வதற்கான காரணம் தெரிகிறது.

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  போட்டோவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? முனைவர் ஏ வி லக்ஷ்மணன் பெற்று கொள்கிறார் அந்த தான பத்திரத்தை என்று மட்டும் தெரிகிறது. நிர்வாக இயக்குனராக நீண்ட காலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரே நிறுவனத்தில் சேவையாற்றி வருகிறார்கள் பலர் அந்த நிறுவனத்தில். உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறவேண்டியர்கள், மற்றும் நிறுவனம். கும்மிடி பூண்டி நிலத்தை வைத்து கொண்டு இவர்கள் என்ன செய்ய போகிறார்கள். அந்த எட்டு கோடி ரூபாய்க்கு சில மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்த்திருக்கலாம் அல்லது இலவச சிகிச்சை பிரிவை அங்கே துவக்கி இருக்கலாம். அந்த மருத்துவமனைக்கு தேவை ஏழை நோயாளிகளுக்கு என்று சிறப்பான வார்டுகள் தான். நிறைய செவிலியர்களும், டெக்னீசியன்களும் அவர்களுக்கு தரமான பயிற்சிகளும் நல்ல சமபலமும் தான் இன்றைய தேவை என்பதை அனைவரும் அறிவர். தானம் செய்வோர் இதையும் கருத்தில் கொள்வது நலம். ஏழை நோயாளிகளின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே. நோயாளிகளுடன் துணைக்கு வரும் ஏழைகளுக்கு தங்குவதற்கு இடமில்லாமல் அவர்கள் ஐ ஐ டி சுற்று பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து கடின வாழக்கை வாழ்கிறார்கள். இலவச தாங்கும் விடுதிகள் பராமரிப்புகள் தான் இன்றைய தேவை அங்கே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement