Advertisement

டில்லி அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை

புதுடில்லி : டில்லி போக்குவரத்து துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான, கைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான, 16 இடங்களில், வருமான வரித்துறையினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில், கைலாஷ் கெலாட், போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.குற்றச்சாட்டு:
இவரது குடும்பத்தார், 'ரியல் எஸ்டேட்' மற்றும் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, டில்லி மற்றும் ஹரியானாவில் உள்ள குர்கானில், அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான, 16 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதுகுறித்து, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுடன் நட்பு வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சோதனைகளை எங்கள் மீது ஏவி விடுகிறார்.மன்னிப்பு :
என் வீடு மற்றும் என் அமைச்சரவையில் உள்ள சத்யேந்தர், மணிஷ் ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் எதுவும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தொந்தரவு செய்வதற்காக, டில்லி மக்களிடம் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அவனுவனுக்கு என்ன சம்பாத்தியம் செய்தாலும் செலவு போக ஒண்ணு ரெண்டு இடத்துக்கே சிங்கி அடிக்க வேண்டியிருக்கு, அப்படி என்ன பெரிய தொழில் செஞ்சான் 16 சொந்த இடத்தில் அதிரடி சோதனைக்கு

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  கைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான, 16 இடங்களில்??? ஏண்டா அவன் அவன் சம்பாதிச்சதில் ஒண்ணு ரெண்டு இடத்துக்கே சிங்கி அடிக்குது???இவனுக்கு 16 இடத்தில் அதிரடி சோதனையா???உள்ளே போடுங்க, விசாரணை ஒரு வாரம் ஒரு வாரம் மட்டும் செய்யுங்க, பிறகு இவனை சொர்க்கத்திற்கு அனுப்பி விடுங்கள், அது தான் சிறந்த முடிவு.

 • Mohan Nadar - Mumbai,இந்தியா

  இவர்கள் ஆளும் மாநிலங்களில் வருமான வரி துறை மூடப்பட்டு விட்டதா??

 • Indhuindian - Chennai,இந்தியா

  இந்தியா அரசியல் சட்டம் முன்பு எல்லோரும் சமம் ஆனால் அது ஒரு சிலரை கட்டு படுத்தாது - அரசியல் வாதிகள், பத்திரிகைகாரர்கள், பத்திரிகை முதலாளிகள், வக்கீல்கள் போன்றோர் இவர்களை சோதனை செய்வதோ, தேவை என்றால் அர்ரெஸ்ட் செய்வதோ சட்ட விரோதம் அல்லது அரசியல் பஷி வாங்கும் செயல். அவர்கள் சட்ட விரோதமான செயல்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் அதில் ஈடுபடமாட்டார்கள் அதற்க்கு துணை போகமாட்டார்கள். ஆகவே இவர்களை சீண்டாதீர்கள் சீண்டினால் அவர்களுடைய கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து பஷி வாங்குகிறல்கள் என்று எல்லா டிவி களிலும் கூப்பாடு போடுவார்கள்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  காலிஸ்தான் அமைப்பின் பினாமி இந்த ஆம் ஆத்மி கட்சி என்று ஒரு பேட்டியை ஒரு ஆங்கில தொலைகாட்சியில் வெளியிட்டு இருந்தார்கள். அதில் தமிழகத்தில் உள்ள பல லட்டர் பேடு கட்சிகள் ஆம் ஆத்மியுடன் கூட்டு. எல்லாம் ஒரு லிங்க் தான். ஆனால் பேசினால் தவறு.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நேர்மை என்றால் அது பிஜேபி ஆளும் அரசுகள் மட்டுமே...

 • sahayadhas - chennai,இந்தியா

  CBI , மற்றும் tax துறைகள் China பொம்மை போல் ஒடுகிறது .

 • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

  இந்த வருமானவரி சோதனைகளில் இருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு உள்ளதா?

 • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

  கடந்த நான்காண்டுகளில் இந்த வருமானவரி சோதனை பாஜக ஆளும் மாநில அமைச்சர் வீடுகளில் ஒரு முறை கூட நடத்தப்பட்டதில்லையே, அவர்கள் அனைவரும் நேர்மை புத்தர்களா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏதோ பழியை போட ஒரு வழி பார்க்கிறார்...

 • tamil - coonoor,இந்தியா

  வருமான வரி சோதனை என்பதெல்லாம் ஒரு தமாஷ் என்று ஆகிவிட்டது, ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது, ஏற்கனவே நடந்த சோதனைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இதுபோன்ற சோதனைகளை யார் நம்ப போகிறார்கள்,எல்லாம் ஏமாற்றுவேலை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  16 இடங்களில் சொத்துக்களை வைத்து இருக்கும் இவன் ஆம் ஆத்மியா? அக்கிரமாக இல்லை?

  • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

   நிதின் கட்கரியின் சொத்துக்கள் எவ்வளவு எத்தனை இடங்களில் தெரியுமா நண்பரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement