Advertisement

பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த திட்டம்

புதுடில்லி : பணி இடங்களில், தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களில் பெண்கள் வெளியிட்டு வருவதால், பெண்களுக்கு பாதுகாப்பான, பணி இட சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.


அமெரிக்காவில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள், 'மீ டூ கேம்பெய்ன்' என்ற பெயரில், இணையதளத்தில் புகார்கள் கூறி வருகின்றனர். அதேபோல், நம் நாட்டிலும் பல பெண்கள், சமீப காலமாக, கடந்த காலத்தில் நடந்த பாலியல் புகார்களை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் உட்பட, பல பிரபலங்கள் மீது, இதுவரை புகார்கள் கூறப்பட்டுள்ளன.


இந்நிலையில், வெளியுறவு இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, எம்.ஜே.அக்பர் மீது, பெண் பத்திரிகையாளர், பிரியா ரமணி, பாலியல் புகார் கூறியது, அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்பர் மீது, இதுவரை, ஆறு பெண்கள் பாலியல் புகார்களை கூறியுள்ளனர்.


இந்நிலையில், பணி இடங்களில், தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களில் பெண்கள் வெளியிட்டு வருவதால், பெண்களுக்கு பாதுகாப்பான, பணி இட சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் கிளைகளை பரப்பியுள்ள, பிரபல குளிர்பான நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது.


அப்போது, நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், பெண் ஊழியர்களின் உடை தொடர்பாக, ஆபாச மாக பேசுவதாக, நிறுவன இயக்குனர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அதிகாரி, உடன் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.


'பெப்சி இந்தியா' நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, அதன் தலைவர், அஹமது எல் ஷேக் கூறிய தாவது: எங்கள் நிறுவனத்தில், 40 சதவீதம் பேர், பெண் ஊழியர்கள். பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தக்கூடாது என, ஆண் ஊழியர்களிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்.
இதற்காக, ஆண் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஆதித்ய பிர்லா குழுமத்தின் மனித வள பிரிவு இயக்குனர், சந்த்ரூப் மிஸ்ரா கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், பணி சூழல் அமைய வேண்டும். அதற்கு, தேவையான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஓட்டல் மற்றும் நுகர்பொருள் துறையில் ஜாம்பவானாக திகழும், ஐ.டி.சி., நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் விஷயத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.


சமூக வலைதள நிறுவனமான, பேஸ்புக், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில், தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, இணையதளத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது.


''பெண்களை துன்புறுத்துவது, பாகுபாடு பாராட்டல், பழிவாங்குதல் போன்றவை ஏற்க முடியாத விஷயங்கள்,'' என, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.


சட்டம் சொல்வது என்ன?




பணி இடங்களில், பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தினால் தண்டனை அளிக்கும் வகையில், 2013ல், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து, அந்த சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வரையறை விபரம்:

* நேரடியாக அல்லது மறைமுகமாக, பாலியல் ரீதியிலான நடத்தை

* பெண்களை தொடுதல், அவர்களை அத்துமீறி நெருங்குதல்

* பாலியல் ரீதியிலான தேவையை பூர்த்தி செய்யும்படி நிர்ப்பந்தம் செய்தல்

* பாலியல் ரீதியில் வார்த்தைகளை பேசுதல்

* ஆபாச படங்களை, பெண்களிடம் காண்பித்தல்.


10 ஆண்டு சிறை :




கடந்த, 2013ல், இயற்றப்பட்ட சட்டப்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் நிகழாத வகையில், பணி இடத்தை பாதுகாப்பானதாக வைத்திருக்கும் பொறுப்பு, அந்த நிறுவன உரிமையாளரையே சேரும்.



இதுகுறித்த விதிகள்:

* பாலியல் பலாத்காரம் தடுப்பு சட்டம் தொடர்பான விதிகள், அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்

* விதிமீறல்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும்

* குறைந்தபட்சம், 10 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில், பாலியல் புகார் குறித்து விசாரிக்க, உள்ளார்ந்த குழு அமைக்கப்பட வேண்டும்

* பெண் ஊழியர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

* பெண் ஊழியர்களை அத்துமீறி தொட்டால், 1 - 5 ஆண்டு சிறை

* பெண் ஊழியரை, அவருக்கு தெரியாமல் படம் பிடித்து, வெளியிட்டால், 1 - 7 ஆண்டு சிறை

* கீழ் நிலை பெண் ஊழியரிடம் பாலியல் உறவு வைத்தால், 5 - 10 ஆண்டு சிறை.

'அக்பர் பதவி விலகணும்' காங்., மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி, நிருபர்களிடம் நேற்று கூறிய தாவது: தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார்கள் குறித்து, அமைச்சர், எம்.ஜே.அக்பர் தக்க விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி, நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''இந்த விஷயத்தில் அமைச்சர் அக்பர் மவுனம் சாதிக்க முடியாது; இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்தே தீர வேண்டும்; இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

சோலி சொராப்ஜி மறுப்பு : முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி மீது, ஒரு பெண் வழக்கறிஞர், பாலியல் புகார் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து, சோலி சொராப்ஜி கூறியுள்ளதாவது: என் மீது புகார் கூறியுள்ள பெண், இதுபோல் பலர் மீது புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருப்பவர். அந்த பெண் கூறியுள்ள புகார்கள், ஆதாரம் அற்றவை. அவர் கூறியுள்ள புகார் எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவருக்காக வருந்துகிறேன். அந்த பெண் மீது, சட்ட நடவடிக்கை எடுத்து, அவரை கவுரவப்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • sahayadhas - chennai,இந்தியா

    பணி பெண்களுக்கு பாதுகாப்பை அரசே கெடுத்து விட்டது. பணி, அது சார்ந்த விளக்கம் அனைத்தும் Whatsapp ல் பரிமாறப்படுகிறது. நாளைடைவில் அது காதல் காமமாக மாறி விடுகிறது.

  • kannan - Madurai,இந்தியா

    இங்கு கருத்திடும் பல பேர் ஒரு தவறான கருத்தை முன் வைக்கிறார்கள். அது, " கள்ளத்தொடர்பு கொள்வது தவறில்லை என்று கோர்ட் சொன்னதாக" சொல்கிறார்கள். அவர்கள் கோர்ட் சொன்னதை தவறாக புரிந்து கொண்டவர்கள் என்று நினைக்கிறேன். கள்ளத்தொடர்பில் ஆண்களை மட்டும் குற்றம் சாட்டும் பிரிவை மட்டுமே நீக்க சொல்லியிருக்கிறார்கள். சரி இப்போ இந்த பாலியல் வழக்குக்கு வருவோம். பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டம் சரியானது தான் அதை சரியாக பயன்படுத்தும்போது. இந்த சட்டத்தை பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • Nisha Rathi - madurai,இந்தியா

      உண்மைதான் கண்ணன்

  • rajan. - kerala,இந்தியா

    UNLESS AND OTHERWISE YOU PERMIT NOBODY ELSE CAN SPOIL YOU IS A STRONG PHILASOPHY LAID UPON OUR TREDITIONAL CULTURE OF LADIES. BUT NOW IT IS BADLY TURNISHED. WHY? BOTH GERNDERS ARE WARMING-UP EACH OTHER WITHOUT MINDING THE CULTURE OF "DON'T MISS THE KISS & DON'T KISS THE MISS" THIS TOO PERMITED BY LAW? A MILLION DOLER QUESTION FOR THE MAN MADE SOCIETY.

  • rajan. - kerala,இந்தியா

    பாலியல் செய்கை தண்டனைக்குரியது - கள்ள தொடர்பு குற்றமில்லை என்பது இங்கு கூற்று. பாலியல் வன்செயல் எப்படி கள்ள தொடர்பில் இருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை முதலில் விளக்குங்கள் மைலார்ட். இதில் அரங்கேறுவது தனிப்பட்ட ஆண் பெண் உடல் மனம் சார்ந்த செய்கைகள் தானே. இதில் எந்த வகை செய்கை தண்டனைக்கு உட்பட்ட்து - உட்படாதது என்பதை உங்க சட்டத்தால் விளக்க முடியுமா. முதலில் பெண்கள் தரமாக உடை அணிந்து பணிக்கு செல்லுங்கள். மற்றவர்களை கவரும் வண்ணம் உடையணிந்து விட்டு அவன் என்னையே ஒருமாதிரியாக பார்க்கிறான் என்ற சூழல் உருவாகுவதை தடுங்கள். சபலம் என்பது பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தவிர்க்க முடியாதது என்பது இயற்கையின் படைப்பு சார்ந்த நியதி என்பதை இங்கு கனம் கோர்ட்டார் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் மைலார்ட். வடிவேலா உனக்கு எப்படியடா வசதி. போங்க அண்ணே விட்டு அந்த நீதியை விளாசிட்டீங்க போங்கண்ணே. என்னடா சொல்லுற அந்த திருச்சி கேஸுங்க விமான நிலையத்தில் விட்டு விளாசினாங்களே அதையாடா சொல்லுற.

    • P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா

      பாலியல் வன்செயல் - ஆண்/பெண் யாரோ ஒருவருக்கு உடன்பாடற்ற செயல். கள்ள தொடர்பு - இருவருக்குமே உடன்பாடான செயல்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கெட்ட பிறகு என்ன செய்வது... பால் திரிந்தது மாதிரிதான்

  • tamil - coonoor,இந்தியா

    பெண்களுக்கு பாதுகாப்பு என்கிற அடிப்படையில், இது பாராட்டவேண்டிய நடவடிக்கை, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன அவ்வப்போது வெடித்து சிதறுகிறது, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது தான் நாகரிகம் ,

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    பெண்கள் "அபாய நேர்வு" இருக்கும் பணிகளை தவிர்க்கலாம். பொதுவாக இந்த மாதிரி நிகழ்வுகள் ஊடகம், சினிமா போன்ற தொழில்களில் அதிகம் காணப்படுகிறது. பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையால் பாலியல் தொந்தரவு மற்றும் பலாத்காரத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அலோக் நாத்தை குறை கூறியவர் ஒரு முறை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பிறகு கூட அவரை சந்திக்கிறார், அவருடன் வேலை செய்கிறார் போலீசில் புகார் செய்யவில்லை . ஒழுக்கம் போனாலும் பிரபலமாகவேண்டும் என்கிற ஆசை. அப்படியென்றால் அது பலாத்காரம் ஆகாது. பெண்கள், ஆண்கள் இருக்கும் எல்லாத்துறையிலும் கால் வைக்கவேண்டும் அதுதான் பாலின சமத்துவம் என்று நினைப்பது தவறு. உடல், மன ரீதியான வேறுபாடு இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

  • rajan. - kerala,இந்தியா

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    MeToo போன்ற ஹாஷ்டாக்குக்களால் வரும் கெடுதல் என்ன தெரியுமா? தவிர்க்கமுடியாத வேலைகளைத்தவிர பெண்களை வேலைக்கு வைக்க நிறுவனங்கள் தயங்குவது தான் . இது ஆண் பெண் சமத்துவத்தையும் பெண்களின் பொருளாதார சுயசார்பையும் வளராமல் தடுக்கும் .நான் சார்ந்த நிறுவனங்களில் ஏற்கனவே மறைமுகமாக ஆண்கள் மட்டும் போதும் என கூறத்துவங்கி விட்டார்கள் .இத்தனைக்கும் அங்கு பெண்களே அதிக திறனுடன் பணிபுரிகிறார்கள்

  • siriyaar - avinashi,இந்தியா

    What supreme court of india says you should get approval from women or men before anything happen. Also ensure you should not spoil relationship with that partner until you dead. Else they will write comments here. There must be a time frame to it. Even wife will complain after making a baby when problem comes in due to other reasons. First of supreme court of india should be clear on this, they say mutual understanding all is ok. But after all is ok when understanding broken complaining how to accept as case. So better every one register a mutual understanding agreement in court and then do.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சட்டம் நன்றாகத்தான் இருக்கிறது.. நடைமுறைப்படுத்தினால் வீக்கான ஆண்கள் நிறையபேர் தண்டனை பெறுவர்... பல நேரங்களில் தாய்க்குலங்களின் கருணையால் பலர் இதுவரை தப்பித்து வருகிறார்கள்... பாலியல் குற்றவாளிகளை பொறி வைத்து பிடிப்பது மிக எளிது... சில வீக்கான பெண்கள் காரியம் சாதிக்க பெண்மையை பயன்படுத்திக்கொள்கின்றனர்...

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    காமப்பேரரசு முத்துவுக்கு இந்த விதிகளின் கீழ் என்ன தண்டனை கிடைக்கும்?....

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    இத்தன பாலியல் சம்பவங்கள் நடக்குது பால் வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்கார் ?

    • செங்குட்டுவன் - chennai,இந்தியா

      ஏன்? ஏன் இப்புடி? எவ்வளவு சீரியசான விஷயம்.. இதுல போய் காமெடி பண்றீங்களே.

  • SaiBaba - Chennai,இந்தியா

    எங்கள் நிறுவனத்தில் புகார் கொடுத்த பெண்ணை இடமாற்றம் செய்வார்கள், பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரிக்கு உயர் பதவி கொடுத்தார்கள். ஒரு கேஸ் மட்டுமல்ல, எல்லாப்புகார்களுக்குமே அப்படித்தான். கேட்டால் நாங்கள் தனியார், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிறார்கள்.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    திரை துறையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் துணிச்சலாக சொன்னது ஸ்ரீரெட்டி மற்றும் சின்மயி போன்ற வெகு சிலரே. இன்று நாம் பெரிதாக எண்ணி கொண்டிருக்கும் பல பெரிய நடிகைகள் உண்மையில் வாய் திறந்து சொல்ல இன்னமும் பயப்படுகிறார்கள். சொன்னால், ஸ்ரீ ரெட்டி போன்று இழிவுபடுத்த படுவார்கள் என்ற பயம் தான் காரணம். உரிய விசாரணை செய்யாமல், குற்றம் சொல்பவர்களை தான் இந்த சமூகம் சாடுகிறது. நிரூபிக்க முடியாத நிலையில் தான் இன்று சின்மயியும் உள்ளார். இது பெண்ணின் மானம் சம்பந்த பட்ட பிரச்சனை. உடனே சொல்வதற்கு முடியாது. ஏளனப்படுவதை யார் விரும்புவார்கள்? உடனே சொன்னால், சரியான தீர்ப்பு கிடைக்குமா? நிர்மலா தேவி விவகாரத்தில், ஆதாரம் வைத்திருந்தும் கூட, உடனே எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி பெண்கள், அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர நாலு மாதங்கள் எடுத்தார்கள். எதிர்பார்க்காத நிலையில் ஏற்படும் துன்புறுத்தலுக்கு பெண்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது. எப்போதும் பெண்கள் ஆடியோ மற்றும் கேமராவுடன் சுத்த முடியாது. உடனே ஆதாரத்தை எடுத்து நீட்ட. பல பெண்கள் ஒரு நபரை குற்றம் சாட்டும்போது, இந்த சமூகம் தான் உஷார் ஆக வேண்டும். பெண்களை ஏளனப்படுத்துவதை விட்டு, உரிய நபரை விசாரணை செய்வது நல்லது.

    • rajan. - kerala,இந்தியா

      பணத்திற்காக பெண்களே இங்கு முன்வந்து கவர்ச்சி தரிசனம் ஆட்டம் போட்டு மத்தவங்களை கிறங்க அடிப்பது எந்த வகை பாலியல் குற்றம் சாமியோவ். இங்கு குற்றம் குத்தாட்டம் போட்டு அரங்கேற்றப்படுவது சிந்தனைகளில் தானே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement