Advertisement

'சிக்னல்' கோளாறு 3 ரயில்கள் ரத்து

சென்னை: 'சிக்னல்' கோளாறால், தாம்பரம் - கடற்கரை இடையே, மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.தாம்பரம் - கடற்கரை புறநகர் மின்சார ரயில் பாதையில், சைதாப்பேட்டையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த வழியில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள், ஒன்றன் பின் ஒன்றாக, சைதாப்பேட்டை வரை வேகம் குறைத்து இயக்கப்பட்டன.சிக்னல் கோளாறை சரி செய்ய தாமதமானதாலும், பாதையில் உள்ள பல நிலையங்களில் ரயில்கள் நின்றிருந்ததாலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இயக்க வேண்டிய, மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இதனால், கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.சிக்னல் சரி செய்யப்பட்டு, காலை, 9:15 மணிக்கு, தாம்பரத்தில் இருந்து, மீண்டும், மின்சார ரயில் போக்குவரத்து துவங்கியது.இதனால், தாம்பரத்தில் இருந்து, முதலில் புறப்பட்ட ரயிலில், பயணியர் நெருக்கடி அதிகம் இருந்தது. அனைத்து பெட்டிகளிலும், பயணியர் படியில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்தனர்.ரயில்கள் ரத்து மற்றும் 30 நிமிடங்கள் தாமதத்தால், அலுவலக நேரத்துக்கு செல்ல முடியாமல், ஆயிரக்கணக்கான பயணியர் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement