Advertisement

'டவுட்' தனபாலு

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்: காங்கிரஸ் ஆட்சி, ஊழல் ஆட்சி யாக நடந்ததே, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய முக்கிய காரணம்.


டவுட் தனபாலு: இதே பல்லவியை, இன்னும் எத்தனை காலத்துக்கு பாடுவீங்க... ஆட்சிக்கு வந்து, நாலேகால் வருஷம் முடிஞ்சிடுச்சு... காங்., ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களில், எத்தனை ஊழல்களை நிரூபித்து இருக்கீங்க என்ற, 'டவுட்'டுக்கு, என்ன பதிலைச் சொல்லப் போறீங்க...!


---


தமிழக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: டிசம்பருக்குள், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு, மத்திய அரசு நிதி ஒப்புதல் வழங்கும்.


டவுட் தனபாலு: அறிவிப்பு வெளியான உடனேயே, 'எய்ம்ஸ் அமைய, நாங்க தான் காரணம்'னு, அமைச்சர்கள் ஆளாளுக்கு தம்பட்டம் அடிக்க ஆரம்பிச்சீங்க... உதயகுமாருக்கு, பாராட்டு விழாவெல்லாம் நடந்துச்சு... இனியாவது, 'இந்தத் திட்டம், மத்திய அரசு மனசு வைத்ததால் வந்தது'ன்னு, நிலவரத்தை சொல்லிப் பழகுங்க... இல்லாட்டி, டிசம்பருக்குள் நிதி ஒப்புதல் கிடைப்பதும், 'டவுட்' தான்...!


---


தமிழக, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு: பருவமழை காரணமாக, இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. எப்போது நடந்தாலும், அ.தி.மு.க., வெற்றி பெறும்.


டவுட் தனபாலு: ஒதுக்கீட்டு முறையை சரியாகப் பின்பற்றணும்னு, வழக்கு போட்ட, தி.மு.க.,வைப் பார்த்து, 'உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ததே, நீங்க தான்'னு, இன்றைக்கு வரைக்கும், குற்றஞ்சாட்டுறீங்க... மழையைக் காட்டி, தேர்தலை தள்ளிப்போடணும்னு கோரிக்கை வைத்ததே, தமிழக அரசு தானே... இதற்கு மட்டும் ஏன், தேர்தல் கமிஷன் மீது பொறுப்பை சாட்டுறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement