Advertisement

ஆட்சியை கவிழ்க்க பா.ஜ. முயற்சி: குமாரசாமி அலறல்

பெங்களூரு: எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி எனது அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்

கர்நாடகாவில் காங், மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் குமாரசாமி அளித்த பேட்டி,
எனது ஆட்சியை கவிழ்க்க பா.ஜ. பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதற்கான முயற்சியில் இறங்கியுள்ள பா.ஜ. முக்கிய தலைவர் ( எடியூரப்பா) காங். மற்றும் மதச்சார்பற்ற எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிட முயற்சித்து வருகிறார்.. தற்போது விலை பேசப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. வரும் தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்க்க வேண்டும் என நாள் குறித்துள்ளனர். இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை. எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

குமாரசாமியின் குற்றச்சாட்டினை பா.ஜ. மறுத்துள்ளது. இது குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த ஆர்.அசோக் கூறியது, குமாரசாமியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஏதோ உளறுகிறார். ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • sethu - Chennai,இந்தியா

  திறமைக்கு கிடைத்த பதவி அல்ல ,அதனால இப்படித்தான் இவரால் ஆட்சி செய்ய முடியும்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  இது உண்மையில் நடந்தால் நல்லதே .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அது என்ன 38 முதல்வர், 78 சேவகர்கள், அது நடக்காது இதைத்தான் இப்போது மீது மெதுவாக காங்கிரஸ் செய்கின்றது. இந்து எதிர்ப்பு இந்து கட்சிகள், பாவாடைகள், பச்சைக்கல் காலையில் எழுந்ததும் பல் விளக்க தண்ணீர் இல்லையா - மோடி ஒழிக, பி.ஜெ.பி ஒழிக, பாசிசம் ஒழிக, ஆர்.எஸ்.எஸ். ஒழிக என்று சொன்னால் தான் அவர்களுக்கு அன்றைய பொழுது விடியும் அந்த மாதிரி மனோவியாதி பிடித்தவர்கள் எதற்கெடுத்தாலும் பி.ஜெ.பி பேர் சொல்லவேண்டும் என்று வேண்டுமென்றே சொல்வது போல இருக்கின்றது இந்த கொமாரு சொல்றது.

 • நக்கல் -

  இவர் மனைவி, "இன்னும் தூங்குங்க, மணி காலீல ரெண்டுதான் ஆகுது.. பதவி எடுத்த நாளிலிருந்து தினம் கெட்ட சொப்பனம்... எடுப்பா அந்த தொடப்பத்தை, நாலு வாங்கினா சரியாயிடும்".

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கிருஷ்ணரை நினைத்து கம்சன் அன்றாடம் பயந்து செத்ததை நினைவுபடுத்துகிறார் குருமாசாமி. இவரால் ஆட்சிக்கும் பிரயோசனமில்லை, மக்களுக்கும் பிரயோசனமில்லை.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பூதம்

 • nandaindia - Vadodara,இந்தியா

  எப்போதும் போல உங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு நீங்களாக கவிழப் போகிறீர்கள். இதில் தேவையில்லாமல் பாஜகவை இழுப்பானேன்? அது சரி, இது ஒன்றும் உங்களுக்கு புதிதல்லவே?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இன்றைய கர்னாடக அரசு முன்கூட்டியே கவிழ்ந்தால் அல்லது கவிழ்க்கப்பட்டால் பாஜக -வுக்குத்தான் நஷ்டம் ...... அதனால் தான் காங்கிரஸ் இதுவரை பிய்த்துக் கொள்ளாமல் யோசிக்கிறது ..... அது இந்த அறிவாளிக்கும், இவரை ஆதரித்து இங்கே கருத்தெழுதிய அறிவாளிகளுக்கு புரியவில்லை .....

 • Anand - chennai,இந்தியா

  குலாம் நபி ஆசாத்திடம் ஐடியா கேளு..

 • sankaseshan - mumbai,இந்தியா

  அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேய் .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  /பாசிசம்னா அரேபியாவில் இருக்கும் ஜனநாயகமா?/ இல்லை சார். இப்போது பீஜேபீ வளர்ச்சி என்ற பேரில் செய்கிற ஒவ்வொரு செயலும் தான் பாசிசம். ஆங்கிலத்தில் Fascism. Forcible suppression of opposition, opinions and expression of feelings, by dictatorial attitude.

 • அருணா -

  இவர் ஒண்ணு அழுவாரு இல்ல அலறுவாரு. உருப்படியா ஒண்ணும் தானாகவே யோசிக்க மாட்டாரு.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  Hope he is a seasoned politician. Even a common man knows that congress will not do anything till Lok Sabha elections. Things will change only during lok sabha election seat sharing or after the elections in Karnataka politics.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தங்கக் கனிவதை தடியால் அடித்து கனியவைப்பது முட்டாள்தனம்.பாஜக அதனை செய்யாது பார்லிமென்ட் தேர்தலில் படுதோல்வியடைந்து காணமல்போகப்போவது உங்க கட்சி .மீண்டும் மத்தியில் இதே ஆட்சி என்றால் ஒரு எம் எல் ஏவும் உங்களோடு இருக்கமாட்டார் சகோதரர் உட்பட .

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இவன் தான் மல்லையாவை காசுவாங்கிக்கொண்டு MPஆக்கியவன் மல்லையா நாட்டை விட்டு ஓடிட துணை நின்றவன்.ஆட்சியை காப்பாற்றிட முதலை கண்ணீர் வடிக்கிறான்.

 • rajan. - kerala,இந்தியா

  உங்களை கவிழ்க்க தான் கூடவே இருக்கிற காங்கிரஸ் கோமாளிங்களே போதுமே. புதுசா வெளிய இருந்து இன்னும் யாரு வரணுமாம். இதுக்குதான் பதவி சுகத்துக்கு குறுக்கு வழியில ஆசைப்பட்டால் இப்படியெல்லாம் குப்பை கூட வேண்டி வருமே.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அடிக்கும் முன்பே குழந்தை அழுவது போல இருக்கிறாரே

 • sankaranarayanan - Irving-Dallas,யூ.எஸ்.ஏ

  உனக்கே உன் ஆட்சியின் மேல் நம்பிக்கை இல்லை. பா ஜா காவை ஏன் குறை சொல்றே? காங்கிரஸ் கட்சி என்னிக்கு காலை வருமோ என்று பயத்துடன் வாரா வாரம் டெல்லி சென்று பப்புவை நமஸ்கரித்து வருகிறாய். இன்னும் என்ன கவுரவம் உனக்கு? ஆட்சியை விட்டுவிட்டு உன் நாற்காலியை கவனித்தால் - உனக்கு நித்ய கண்டம் பூர்ண ஆயுசு. நீ நம்பிய பப்பூவே உன்னை காலை வாரிவிட்டு - கேலிகூத்தாக ஆக்கி விடப்போகிறான் சிக்கிரம்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  காங் கவிழக்கபோகிறது, இதில் பிஜேபி எங்கே வருகிறது. மக்களால்,ஒதுக்கப் பட்டவர்கள் வஞ்சகத்தால்,ஆட்சிசெய்கி றார்கள். கவிழப்பதில் தவறில்லை. அரண்டவனுக்கு எதைபார்த்தாலும், பிஜேபி மட்டும்தான் குடும்பகொத்தடிமைகளுக்கு, கண்களுக்கு தெரியும்.

 • N Parthiban - Thanjavur,இந்தியா

  When father was removed as PM who was only 2 digit MPs, JDS did not learn lessons from congress. Now it's the turn of son. In this country most of central and state governments were either dismissed or removed by congress in the past. This congress is anti people and anti democracy party. Would wonder if dmk is removed. His days are numbered

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பாசிச சக்திகள் தங்கள் ஆதாயத்திற்காக எந்த எல்லைக்கும் போவார்கள். வேலி தாண்ட விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Maanam ketta Congress thayavil thaan née kulir kaaykiraai thakuthi illaatha pathavi

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தானே கவிழ்வதை கவிழ்க்க தனியாக ஆள் தேவை இல்லை...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  நேற்று வரைக்கும் காங்கிரஸ் கட்சின்னு சொன்னீங்க... இப்போ பாஜக வா...??

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  இவர் கட்சி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை அடக்க வக்கில்லை. பாஜக மீது பழி போடுகிறார். இவரே தன்மானத்தை அடகு வைத்துதான் முதல்வராகும் பார்

 • Karthik - Chennai,இந்தியா

  தானாக எப்படி கவிழும் நாங்க தான் அப்படி தாங்கி பிடிப்போம். நான் சொன்னது அடிமை ஆட்சி பற்றி. அதனால எங்களுக்கு தாங்கி பிடிக்கவும் தெரியும். அதே போல பீகார் போல கவுக்கும் தெரியும். நாங்கள் பல கில்லாடிகள்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  கி கி கி குமாரசாமி அன்னே நீங்க போன பாதை தப்பு, உங்கப்பாரு கிட்ட கேளுங்க சகவாச தோஷத்தை பத்தி சொல்லுறாரு அவரு

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  தானாகவே கவிழ போற ஆட்சியை பா.ஜ எதுக்கு கவிழ்க்கணும் ? மாமா இப்படி எல்லாம் உடான்ஸ் விட கூடாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement