Advertisement

விமானத்தில் மொபைல் போன் சேவை: ஒரு மாதத்தில் அறிமுகம்

புதுடில்லி: விமானத்தில் செல்லும் போது, மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தும் சேவை, அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.


விமானங்களில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாக, மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு, 'டிராய்' என்ற, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைகள் அளித்தது. இந்த பரிந்துரைகளை ஏற்று, விமானத்தில், மொபைல் போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது.


இதுகுறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க துவங்கிய பின், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவது தொடர்பாக, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.


இதற்கு, தொலை தொடர்பு நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கான விதிகள் உருவாக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. சட்ட அமைச்சகம் அனுமதி அளித்த இரு வாரங்களில், உரிமம் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, அக்டோபர் முதல், விமானத்தில், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  மனிதன் முதன் முதலில் தடவியது விலங்குகளை, பிறகு பெண்களை, இப்போ கடைசி கடைசியாக மொபைலை தடவி தடவியே இவன்/இவள் வாழ்க்கை கழிகின்றது. அது இந்த பிளேனில் இல்லையென்றால் பைத்தியம் பிடித்து அலைவார்கள் என்று தான் இந்த நல்லெண்ண நடவடிக்கை.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  சற்று நேரமாவது வளவள பேச்சு தொல்லை இல்லாமல் இருந்த ஒரே இடம். அதுவும் போச்சா

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  போனில் சொல்லுவது போல திமுக ஒழிக என்று சுடலைக்கு முன்னால் கூட இனி சாடையில் சொல்லலாம்...

 • Anvardeen - chennai,இந்தியா

  கண்டிப்பாக அனுமதிக்க கூடாது .. பேசியே கொல்லுவானுக

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவன் பாடு திண்டாட்டம் தான் . வளவளவெனப் பேசி உயிரெடுப்பான். வேண்டுமென்றால் .சிலவிமானங்களில் சிகரெட் பிடிக்க தனியிடம்போல இதற்கும் ஒதுக்குபுறமாக ஒரு ரூம் கொடுக்கலாம் ..

 • Viswam - Mumbai,இந்தியா

  நிம்மதியா இரண்டு மணி நேரம் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு உட்காருவதில் ஆப்பு. என்ன சங்கடம் ஆரம்பிக்கப்போகுதோ தெரியலையே ஆண்டவா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அமைதியான சூழ்நிலை இனி மாறும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  விமானம் இனி சந்தைக்கடையாக இருக்கும்...

 • ஆப்பு -

  இவிங்க கையில் ஒண்ணும் கிடையாது...அமெரிக்கா, ஐரொப்பாவுல அனுமதிச்சாங்கன்னா இங்கேயும் அனுமதி....ஏதோ விமானத்தையும், டெலிபோனையும், இண்டர்நெட்டையும் இவிங்களே கண்டுபிடிச்ச மாதிரி கூவுறாங்க.

 • லூயிஸ்சோஃபியா -

  அங்க ஒரு இடத்தில் தான் நிம்மதியாக பயணம் பண்ண முடிஞ்சுது.. இனி வழ வழ வென பேசி பக்கத்து சீட்டு காரர் பேசி அறுக்க போகிறார்

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  அலுவல் நிமித்தமாக பயணம் செய்பவர்களுக்கு இணைய சேவை மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட நினைப்பவர்களுக்கு இது ஒரு தொந்தரவே. அப்போதாவது இந்த போனும் இன்டர்நெட்டும் இல்லாமல் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடவிடாமல்....

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  விஷப் பரீட்சை...... செல் பேசிக் கொண்டே விமானம் ஓட்டப் போகிறார்கள்.....

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Payanikal paathukaapu athaivida mukiyam aiyaa

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  அயல் நாடு செல்லும் விமானங்களில் மொபைல் போன் இன்டர்நெட் உபயோகப்படுத்த முடியாது,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement