Advertisement

பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மகன் கைது

புதுடில்லி: டில்லியில் இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மகனை போலீசார் கைது செய்தனர்.


டில்லியில் பிபிஓ அலுவலகம் ஒன்றில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பரவின. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க டில்லி போலீஸ் கமிஷனருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணையில், அந்த வாலிபர், டில்லியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரின் மகன் ரோகித் சிங் தோமர் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணை நண்பர் அலுவலகத்திற்கு அழைத்து பலாத்காரம் செய்ததும், போலீசில் புகார் தெரிவிக்க போவதாக அந்த பெண் கூறியதைத் தொடர்ந்து, அவர் தாக்கியது தெரியவந்தது. செப்.,2ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. தோமரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    அவனுக்கு அந்த அளவுக்குத் தைரியம் ஏற்படுத்தியது எது என்று காவல்துறை புரிந்து கொண்டு, மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும் .....

  • Ravichandiran - CUDDALORE,இந்தியா

    மீடியா செய்தியால் உண்மை தெரிந்தது, இல்லாவிட்டால் எஸ் ஐ மகனல்லவா, பொய் என்று சொல்லி அந்த பெண்ணையே கைது செய்திருப்பார்கள். அங்கேயும் தி.மு.க தொண்டன் இருக்கிறான் போல..

  • Indhiyan - Chennai,இந்தியா

    பெண்ணை உதைத்தவனை விட 4 மாதங்களாக பணத்தாலும், அதிகாரத்தாலும் சும்மா உட்கார்ந்து இருந்த குறிப்பிட்ட போலீஸ்காரர்கள் கேடு கெட்டவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பெண்ணை உதைத்தவனைவிட்டு விட்டு அந்த போலீஸ்காரர்களை ஜெயிலில் போட்டால் தான் அடுத்து இதுமாதிரி இன்னொரு நிகழ்வு இருக்காது, இல்லாவிட்டால் தொடரும். காக்கி சட்டையை போடும்போது உடம்பு எரியவேண்டாம் ? ச்சீ ச்சீ

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    காவல் துரை உறவின் அதிகாரத்தை கையில் துவசம் செய்யும் அய்யோக்கியங்களை கடுமையாக தண்டித்தால் மீண்டும் ஒரு தறுதலை உருவாக மாட்டான்

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    தலை நகரில் பெண்கள் பாதுகாப்பு பற்றி விரும்ப தகாத செய்திகள் வருவதால் காவல் துரை மெத்தனமாக இருக்க கூடாது

  • ஆப்பு -

    பிரம்படி வைத்தியம் கொடுங்க....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement