Advertisement

மின்னணு வர்த்தகம் ரூ.2.37 லட்சம் கோடியை தாண்டும்

புதுடில்லி: இந்தியாவில், மின்னணு வர்த்தகமானது வரும் டிசம்பர் மாதத்திற்குள் ரூ.2.37 லட்சம் கோடியை தாண்டும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் மற்றும் ஐஎம்ஆர்பி கன்டர் சார்பில் நடந்த ஆயவில், டிஜிட்டல் வணிக சந்தையில், போக்குவரத்து துறையானது 54 சதவீதம் எட்டியுள்ளது. ஆன்லைன் மூலம் பஸ், ரயில், விமான பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. போக்குவரத்தை தாண்டி, இணையத்தில் பொருட்களை விற்பனை செய்வது மற்ற சேவைகளும் மின்னணு வர்த்தக முறையில் செய்வது அதிகரித்து வருகிறது.


அத்யாவசிய பொருட்கள் வாங்குவது, உணவு பொருட்கள் விநியோகம், சினிமா டிக்கெட்முன்பதிவு ஆகியவையும் மின்னணு வர்த்தகம் உயர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2017 இறுதியில் 29 கோடி பேர் மின்னணு வர்த்தக முறையில் ஈடுபட்டனர். மின்னணு வர்த்தகமானது வரும் டிசம்பர் மாதத்திற்குள் ரூ.2.37 லட்சம் கோடியை தாண்டும். மொபைல் இணையங்களுக்கான கட்டணம் தொடர்ந்து குறைந்து வருவதால், இனி வரும் காலங்களில், இந்தியாவில் ஆன்லைன் முறையில் வணிகத்தில் ஈடுபடுவது அதிகரிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • yila - Nellai,இந்தியா

    paytm போன்ற ஆன்லைன் கமிஷன் கொள்ளையும் எவ்வளவு என்று சொல்லி விடுங்களேன்.....

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வர்த்தகம் எளிதுதான்... ஆனால் ஏமாற்றுதலும் அதிகமாக இருக்குமே

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    முன்பு என்ன தலையில் தூக்கி கொண்டு கீரை கீரை என்று தெரு தெருவாக நம்மவூர் எளியவர்கள் விற்றார்கள் ... இப்போது பிளிப்கார்ட், அமேசான் என்னும் பெரும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் கம்ப்யூட்டரில் வீடு வீடாக விற்கிறார்கள்... என்ன ஒரே கவலை... இந்த திமிங்கிலங்கள் நடுவே சிறு மீன்கள் வாழமுடியுமா...என்பதே...?

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    அமேசான் வணிகம் செய்தது போன வருடம் 177 பில்லியன் டாலர் சேல்ஸ் (12 ,56 ,700 கோடி) ஆனால் ப்ராபிட்-லாபம் 1.9 பில்லியன் டாலர் (ரூ. 13 ,528 கோடி) அதாவது 14 வருட வணிகத்தின் பிறகு இப்போ தான் நொண்டி நொண்டி 1 .07 % லாபத்தை எட்டி உள்ளது. ஆனால் ஒரு சாதாரணனும் இந்தியாவில் பிக்ஸ்ட் டெபாசிட் செய்தால் வரும் லாபம் இண்டெர்ஸ்ட் என்னும் பட்சத்தில் 7 .25 % . இதிலிருந்து தெரிவது மின்னனு வர்த்தகம் என்று நாம் சொல்வதெல்லாம் வேஸ்ட். அதனால் ஒன்றும் லாபம் இல்லை இந்த மாதிரி வணிகர்களுக்கு. லட்சக்கணக்கான கோடியில் வியாபாரம்.உண்மை ஆனால் லாபம் 100 கோடியில்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    Patym போன்றவற்றை பகிஷ்கரியுங்கள் உங்களுக்கு நஷ்டமே பீம் UPI போன்றவற்றுக்கு மாறுங்கள் . அரசுக்காவது பலன் கிடைக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement