Advertisement

ஜிடிபியை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு: பிரதமர் மோடி

புதுடில்லி: கடந்த காலாண்டில், நாட்டின் ஜிடிபி 8 சதவீதமாக உள்ளதாகவும், அதனை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பிரதிபலிப்புமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்நுட்பம் நம்மை ஒற்றுமைபடுத்தும் சக்தியாக திகழ்கிறது. அமைதியை எட்ட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இங்கு உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. இந்தியா தனது வரலாறை நினைத்து பெருமை கொள்கிறது. நமது வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பானது உலகம் முழுதும் பிரதிபலிக்கிறது.

பழமையான உறவுஉங்களின் ஆசிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறன். குஜராத் முதல்வராக நான் இருந்த போது, போஹ்ரா சமுதாயத்தினர் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடனான எனது உறவு பழமைவாய்ந்தது. இந்த அன்பு தான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்துள்ளது.

இந்த சமுதாயத்தினர் எனது குடும்பத்தினர் போல் உள்ளனர்.இப்பகுதி மக்கள் மஹாத்மா காந்தியுடன் இணைந்து போராடினர். நாட்டின் அமைதியில் போஹ்ரா சமுதாயத்தினர் முக்கிய பங்களிக்கின்றனர். இளைஞர்களின் முன் மாதிரியாக உள்ளனர். வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அமைதிக்காக நிறைய பணிகளை செய்துள்ளனர். ஏழைகளுக்கு முன்னேற்றம் காண உதவியுள்ளனர்.


முக்கியத்துவம்தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தூருக்கு முக்கிய பங்கு உள்ளது. நாட்டில் 90 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் முன்னெடுத்து சென்றனர். முதல்முறையாக இந்தியாவில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு அமைந்துள்ளது.

ஆயுஸ்மான் பாரத் திட்டம், 50 கோடி மக்களுக்கு உயிர்காக்கும் கருவியாக உள்ளது. 2022க்குள் அனைவருக்கும் வீடு என்பது அரசின் இலக்காக உள்ளது. தற்போது வரை 1 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. தூய்மை திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகிறோம். கடந்த காலாண்டில் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. இதனை 10 சதவீதமாக இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (61)

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  உங்கள் ஐந்து வருட ஆட்சியில் மொத்தமாக எல்லா ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 % GDP அடைவது தானே உங்களது லட்சியம் ? சூப்பர் அப்பு...

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  இத்தனை வருஷமா எந்த அணிய புடுங்கிக்கினு இருந்தாரோ??

 • கஞ்சிக்கு சிஞ்கி அடிப்பவன் - coimbatore,இந்தியா

  நீ henna வேணாலும் பண்ணிக்கோ சாமி. எங்களுக்கு மூணு வேலை கஞ்சி , கட்டிக்க கோவணம், இருக்க ஒரு சத்திரம் ஏற்பாடு பண்ணி கொடுத்துரையா புண்ணியமா போகும், நாங்களும் உசுரு இருக்கிற வரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கிற இடம் தெரியாம இருந்துடுறோம் சாமி. இந்த GDP inflation dificit fiscal எல்லாம் எங்களுக்கு தெரியாது அய்யா. உங்களுக்கு ஒட்டு போட்டதும் தண்ணி ஊத்தி ஊத்தி தெளிய தெளிய அடிக்கறீங்கய்ய. புதுமையா நாங்க உங்கள ஜெயிக்க முடியாது அய்யா. எங்களை விட்டிடு சாமி.

 • Modify India - Calgary,கனடா

  GDP 10 % ஏற்றம் என்றால் காஸ் டீசல் பெட்ரோல் ஆ?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   பெட்ரோல் விலை 100 என்றால் அதை 110 ஆக்குவார்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அரிசி முதல் பெட்ரோல் வரை ஆகாய உயரத்துக்கு விலைவாசிகள் ஏறிக்கொண்டே போகிறது. ஜிடிபி உயர்த்த இலக்கு என்று அவர் தான் பொய்களாக அள்ளி விடுகிறார் , சராசரி இந்தியனின் யதார்த்த வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எப்படி ஆரம்பிக்கிறது எவ்வளவு அவஸ்தைகளுடன் ஒவ்வொரு நாளும். நகர்கிறது என்பது பற்றி சற்றும் அறியாதவர் அவர் , அதனால் ஜிடிபி/ ஜிஎஸ்டி/ என்று சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார்.என்றால் கேட்பவர்களுக்கு கூடவா தெரியவில்லை?

  • vns - Delhi,இந்தியா

   மொத்த வியாபார விலைகள் மூன்று சதவிகிதம் குறைந்துள்ளது. பொய் கூறுவதற்கு உங்களுக்கு மனசாட்சி வேண்டாம்,

 • selvaraju - KUALA LUMPUR,மலேஷியா

  இன்னுமா இந்த நாடு உங்கள நம்புது ?

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  வேண்டாம் சார் GDP யை நீங்கள் GAS (G ) D டீசல் P பெட்ரோல் என தவறா புரிந்து கொண்டு மூன்றையும் அதுவம் ஏழை நடுத்தரமக்கள் அதிகம் உபயோகிப்பதால் வரலாறு காணாத வகையில் ஏற்றி எங்களை சந்தோச படுத்தியது போதும் இனி நீங்கள் இருக்கும் காலம் வரை இந்த GDP என்று இனி பேசமாட்டோம் வந்தே மாதரம்

 • JOE TARANTULA - Chennai,இந்தியா

  ஐயாவுக்கு பிடித்த நம்பர் பதினைந்து- பத்துன்னு தவறுதலா சொல்லிட்டார் போல. காது இருக்கில்ல கேட்டுக்கிடணும்.

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, உங்களிடம் (மோடி) பரிசு வாங்கிய மாணவி ஹரியானா மாநிலத்தில் பலபேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். போலீஸ் வழக்கு பதிவு செய்யக்கூட மறுக்கிறது. இதுதான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பிஜேபியின் யோக்கிதை.

 • பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா

  அடுத்த வடை ரெடி ஆகுது .....

 • மணிமாறன் - trichy,இந்தியா

  இவரை நம்பி கெட்டவர்கள் பாதி.. நம்பாததால் இவரால் கெட்டவர்கள் மீதி...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஊழல் பண்ணும் அதிகாரிகளை டிஸ்மிஸ் பண்ண சட்டம் கொண்டு வர வேண்டும் அப்பத்தான் நாடு முன்னேறும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மக்கள் சொல்வார்கள் நாங்கள் வளர்ந்து இருக்கோமா இல்லியா என்று தேர்தல் மூலம் ,

 • paunkumar - Tiruvannamalai,இந்தியா

  முதல்ல பெட்ரோல் விலை குறையும்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   அரசை தற்கொலை செய்ய சொல்றீங்க பெட்ரோல் வரிக்கு பதில் அரிசி பருப்புக்கு வரிபோட்டுடலாமா?

 • Murugan - Trichy,இந்தியா

  ஆன்டி இந்தியன்ஸ் வழக்கம்போல அழுவலாம்.

 • Sudhakar Subramaniam - chennai,இந்தியா

  BJP is treading the same path of Congress with regard to Fuel prices. After implementation of GST, Govt should have brought the fuel prices under GST. As of now the tax rate charged on fuel is 120% ( both Central and State taxes) and is still going up........ No where in the world such a percentage of tax is charged on the fuel. Both Centre and States have to apply their think tanks to reduce the fuel prices by Rs.15 per litre atleast...

  • vns - Delhi,இந்தியா

   BJP government is not treading KhanCross path. This government is not borrowing money to subsidize petroleum products. the GST is a federal and state government set up. Without State Governments nod, petroleum products cannot be brought under GST. And State Governments cannot let go the tax on petroleum products because of high cost of Pension payments to retirees. Unless the government stops pension, we cannot expect any reduction in petroleum prices. Each retiree is getting over Rs. 70,000 a month for not working.

 • ஆப்பு -

  10% வளர்ச்சி என்பது மிகவும் கடினமான ஒன்று...அதற்கு ஏகப்பட்ட மற்ற விஷயங்களைக் காவு குடுக்கணும். வளர்ந்த நாடுகளாலேயே முடியாத ஒன்று... ஆனா அச்சே தின் ஆத்தா ஹைன்...வாயால் வடை சுடுவோம் ஹைன்...என்பவரால் முடியாததில்லை.

  • vns - Delhi

   வளர்ந்த நாடுகளால் முடியாது அனால் வளரும் நாடுகளில் முடியும் மோடி நடத்தி காட்டுவார்.

 • JIVAN - Cuddalore District,இந்தியா

  நரியின் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்... ராச வேஷம் கழஞ்சு போச்சு டும் டும் டும்..

 • J.Isaac - bangalore,இந்தியா

  G-Gas D- Diesel. P- Petrol

  • yila - Nellai,இந்தியா

   என்னமா டிஸ்லைக் போட்டிருக்காங்க.....சூப்பர்.

 • krishnan - Chennai,இந்தியா

  GDP கணக்கை அதுக்கு ஏத்த மாதிரி மாத்திரத்து தானே.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   காங்கிரஸ் 2004முதல் 2014 வரை இரண்டுமுறை ஜி டி பி கணக்கிடும் முறையை மாற்றியபோது ஏன் வாயைதிறக்கவில்லை டூமீல்ஸ்?

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   அதனால் தான் டூமீல்ஸ் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள் அதை போன்று இவருக்கும் சென்ட் ஆப் பார்ட்டி நடத்தவேண்டியது தான் டூமீல்ஸ்

 • பாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா

  ஏற்கனவே பெட்ரோல் டீசல் டர்ரு. அமெரிக்க டாலர் விர்ரு. இதுல இந்த தொடர்ந்து விடாத வாய் சவடால்கள் வேறு. வெளியே அழகு உள்ளே எல்லாம் நாற்றம் எடுத்த அழுகிய நிலைமை நம் நாட்டின் தற்போதைய நிலைமை. காங்கிரஸ் ஐம்பது வருடத்தில் கூறு போட்டதை விட இரண்டு மடங்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் செய்து முடித்த அறிவாளிகளின் கூட்டம் தான் தற்போது ஆளும் பார தீய சனதா அரசு.

  • vns - Delhi,இந்தியா

   புரியுது உங்களுடைய கர்த்தர் உங்களை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறார் என்று.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த இலக்கையெல்லாம் மோடியால் மட்டுமே எட்டமுடியும் . சுயநலமில்லாமல் , ஊழலில்லாமல் செயல்படும் தலைவரால் மட்டுமே முடியும். கோமாளி ராஹுலால் ஒன்றும் நடக்காது.

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  இன்றய வடை நல்ல சூடாக இருக்கிறது . பிரதமர் தினமும் வடை சுடுவார். அதை எல்லாம் சீரியஸ்ஸாக எடுத்து கொள்ள தேவை இல்லை.

 • கும்பிடுரேனுங்கசாமி -

  G(Gas) D(Diesel) P(Petrol) முயற்சி செய்யாமலே 10% உயர்த்தீட்டீங்க. மேலும் 10% உயர்வு முயற்சியின் அடிப்படியிலேயா? அய்யா நீங்க ஏழை தாயின் மகனோ, இல்லையோ! நாங்கள் ஏழை அய்யா. நாங்க இந்த விளையாட்டுக்கு வரலையா. எங்கள விட்டுருங்க. நல்லா இருப்பீக. கும்பிடுரேனுங்க சாமி.

 • கும்பிடுரேனுங்கசாமி -

  G(Gas) D(Diesel) P(Petrol) முயற்சி செய்யாமலே 10% உயர்த்தீட்டீங்க. மேலும் 10% உயர்வு முயற்சியின் அடிப்படியிலேயா? அய்யா நீங்க ஏழை தாயின் மகனோ, இல்லையோ! நாங்கள் ஏழை அய்யா. நாங்க இந்த விளையாட்டுக்கு வரலையா. எங்கள விட்டுருங்க. நல்லா இருப்பீக. கும்பிடுரேனுங்க சாமி.

 • SB.RAVICHANDRAN -

  PM சார் சரியா சொல்லுங்க நாளைய Patrol விலையை தான அப்பிடி சொன்னீங்க

 • srikanth - coimbatore,இந்தியா

  GDP தான் நீங்க ஏற்கனவே 30 % ஏத்தீடீன்களே . G - Gas , D - Diesel , P -Petrol போன ஜூலை ல பெட்ரோல் ரேட் டெய்லி மாறும் னு திட்டம் போடப்ப அன்னிக்கு ரேட் 63 /லிட்டர் . இன்னிக்கு 83 /லிட்டர் . கணக்கு போட்டு பார்த்தீங்கன்னா நீங்க உயர்த்தின GDP 31 % வரும் . நீங்க சொல்லுற Gross Domestic Product பத்தி ஏழை மக்களுக்கு என்ன கவலை. அது சரி, உங்களுக்கு ஏழை மக்களை பத்தி என்ன கவலை. அதானி, அம்பானி இவுனுங்க தானே கட்சிக்கு நிதி கொடுக்கறாங்க

 • Mangalraj Mangal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு மோசமான நபரை தேர்ந்தெடுத்ததனால் நாடு நாசமாய் போனது போதும்

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டார்.. இனி வேறு யாராவது வந்து தான் சரி செய்ய முடியும்.. இன்னும் 8 மாதங்களுக்கு பேச்சு..பேச்சு..பேச்சு தான்...

  • yila - Nellai,இந்தியா

   ஏச்சும்....பேச்சும்....

 • மணிமாறன் - trichy,இந்தியா

  எது எடுத்தாலும் 100 தான்..இந்தியாவில் இப்போது....

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  பெட்ரோல்..100 .. டீசல்..100 .. ரூபாயின் மதிப்பு..100 .. GDP யம் 100 ஆக வாழ்த்துக்கள்...

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   காஸ்(G) Rs 1000, டீசல் (D) Rs 100 , பெட்ரோல்(P ) Rs . 100 இந்த GDP இலக்கு தான் அவரு சொல்லுறாரு.

  • vns - Delhi,இந்தியா

   பெட்ரோல் இன்றியமையாத பொருள் அல்ல.. நீங்கள் பெட்ரோல் வாங்காமல் மிதிவண்டியில் சென்றால் நீங்கள் கூறிய ஒன்றும் நடக்காது. செய்வீர்களா ?

  • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   உங்களுக்கு வேண்டிய அரிசி பருப்பெல்லாம் தலையில் சுமந்தா கொண்டு வருகிறீர்?

 • VPSELVAM - trichy,இந்தியா

  எப்போ ? 2030 ஆம் ஆண்டிலா அதுவரை ஓட்டிங் மெசின் பதவி தருமா

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சென்ற காலாண்டின்  8 . 3சதவீத ஜி டி உயர்வுக்கு சென்ற ஆண்டின் தற்காலிக ஜி டி பி குழப்ப சூழ்நிலையோடு ஒப்பிடப்படுவதே காரணம். வரும் காலாண்டின் ஜி டி பி  ஆறரை விழுக்காடே இருக்கும். மாநில அரசுகள் உள்ளாட்சிகள்  மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி பத்து விழுக்காடு வளர்ச்சி கனவே. போலிப்போராட்ட மாநிலங்களின் தேய்மானம் ஜி டி பி உயர்வை நிச்சயம் பாதிக்கப்போகிறது. நிதிப்பற்றாக்குறை கச்சாஎண்ணெய் வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. திமிர்பிடித்த அரபு நாடுகளை ஒடுக்காவிட்டால் அழிவோm.. 

  • Karthik - Chennai,இந்தியா

   போலி போராட்ட மாநிலம் தான் இன்றய வளர்ச்சி மாநிலம். நீங்க ஆளும் மாநிலங்கள் தன அடித்தளத்தில் உள்ளது. நூற்றிப்பத்து டாலருக்கு இருக்கும்போது எழுபது ரூபாய் எழுபது டாலர் இருக்கும்போது தொண்ணுறு ரூபாய் க்கு கொண்டு சென்றது யார்? உங்க வக்கற்ற அரசின் கொள்கை முடிவு மற்ற நாடே திட்ட வேண்டாம். திட்ட வேண்டும் என்றால் உங்கள் அரசை thittungal.

  • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   100 சதவீதம் பெட்ரோல் டீசல்க்கு வரி போட்டுவிட்டு எப்படி திமிர் பிடித்த அரபு நாடுகள் என்று சொல்கிறீர்கள்? இந்தியாவிலிருந்து பெட்ரோல் டீசல் வாங்கி விற்கின்ற காட்மாண்டு நாட்டில் நமது நாட்டை விட 23 சதவீதம் குறைவு

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   ரங்கையா போங்கய்யா

  • yila - Nellai,இந்தியா

   ஆரூர் எப்பவுமே ராங்குதான் ....

 • AR -

  போரா இஸ்லாமிய சமூகத்தினர் முன்புபோல இல்லை. சமயத்தலைவர் சையத்னாவின்   அராஜக அடக்குமுறை அடிப்படைவாத பிற்போக்கு வழியால் தடம் மாறுவதாக அதே சமுதாய முற்போக்கு சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். அரசியல்சட்டதைவிட தனிமனிதனின் உத்தரவுகள்  மேலானதாக இருக்கக்கூடாது. சட்டத்துக்குப்.புறம்பான (மதத்தலைவரின்)  உத்தரவுகளிலிருந்து  அம்மக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  புதிய இந்தியாவின் வழிகாட்டி மோடிஜி .. குறைந்தது அடுத்த 10 ஆண்டுகள் பிரதமராக இவர் இருக்க வேண்டும் தீயவை அகற்றி நல்ல வழியில் நம்மை இட்டு செல்ல .. வாழ்க வளமுடன்

  • Karthik - Chennai,இந்தியா

   இன்னும் பத்து ஆண்டா நினைத்தாலே தலை கிறுகிறு சுற்றுகிறது. போதும்டா சாமியோவ்

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  பெட்ரோல் 100, டீசல் 95, காஸ் 1500, $ 100 என்று சொல்லாத பல சாதனைகள் நோக்கி பாடு படும் மோடி தலைமையிலான அரசு, இன்னும் பல சாதனை புரிய உள்ளது.

 • mindum vasantham - madurai,இந்தியா

  ulakam muluvathum வளச்சியின்மையால் அவதிப்படும் பொது நாடு 8 % இக்க காலாண்டு , வளரும் நாடுகளிலே இது தான் அதிகம் ,

 • Sathishkumar Ramachandran - Chennai,இந்தியா

  G-Gas D-Diesel P-பெட்ரோல் will plan to increase 10%

 • SridharSambandham -

  எனது இலக்கு எல்லாம் நூறு ரூபாய்தான்.....

 • SridharSambandham -

  எனது இலக்கு பெட்ரோல் 100 ரூபாயும் டாலர் 100 ரூபாய் தான்

 • srikanth - coimbatore,இந்தியா

  2016 ல Demonetisation திட்டம் போது கூட பல கோடி கருப்பு பணம் இலக்கு அப்படினு சொன்னிங்க . நீங்க சொன்னதை நாங்களும் நம்புனோம் . இப்ப உங்க இலக்கு உங்களுக்கே ரொம்ப இழுக்க தேடி கொடுத்துடுச்சி. பாத்து இனிமே யாவது சுதாரிச்சிகிட்டு உங்க இலக்கை சொல்லுங்க. இல்லாட்டி அடுத்த வருஷம் நீங்க உங்க PM போஸ்ட் இழக்கவேண்டி வரும் .

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  வசைபாடுபவர்கள் வாழ்கன்னு அண்ணாதுரை வழியிலேயே அவிங்க அனுதாபிகளுக்கு அட்வான்சா சொல்லிடுவோம்...

  • Karthik - Chennai,இந்தியா

   நீங்க சொல்லிப்புடீங்க நாங்க வந்துட்டோம்ல. கவலை விடுங்க நாங்க பார்த்துகிறோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement