Advertisement

மருத்துவமனை வாகனங்கள் பராமரிப்பில்...அலட்சியம்: தள்ளுவண்டியாக மாறும் அவலம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு பிரிவு வாகனம் பராமரிப்பு இல்லாததால் தள்ளுமாடல் வாகனமாக இருப்பதால் கிராமபுற மக்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு, கர்ப்பிணிகள் பராமரிப்பு, காசநோய்பிரிவு, நடமாடும் சிகிச்சைப்பிரிவுகள் உள்ளன.
இப் பிரிவுகளில் உள்ள பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று நோயாளிகளுக்கு சேவை செய்ய தனித்தனி வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் செல்லும் மருத்துவமனை பணியாளர்கள், டாக்டர்கள் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவார்கள்.
'தள்ளு மாடல்': இந்த சிறப்பு பிரிவு வாகனங்கள் தினந்தோறும் அதன் ஓட்டுனர்களால் பராமரிப்பு செய்யப்பட வேண்டும்.

இதனை முறையாக செய்யாததால், வாகனங்கள் பழுது ஏற்படுகின்றன. பல வாகனங்கள் அவசர காலத்திற்கு இயக்கபட முடியாத நிலையில்செயல்பட்டு வருகின்றன. நேற்று தேசிய பார்வை இழப்பு தடுப்பு பிரிவின் சார்பில் உள்ள வாகனம் இயக்க முடியாத நிலையில் இருந்ததால், இதனை தள்ளி விட்டு, இயக்கும் நிலயில் உள்ளது.

காலாவதியான வாகனங்கள்: இதில் பல்வேறு வாகனங்கள் குறிப்பிட்ட அளவு கி.மீ., கள் இயக்கப்பட்டவுடன் அதனை மாற்றம் செய்து புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் காலாவதியான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உதிரி பாகங்கள் முறையாக வழங்கப்பட்டு உரிய நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் அரசு மருத்துவமனையில் 'தள்ளுமாடல்' வாகனங்களாக மாறி விடுகின்றன.
மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற வாகனங்களின் பராமரிப்பு செய்வதிலும், காலாவதியான வாகனங்களை மாற்றம் செய்வதிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement