Advertisement

காக்க, காக்க... மனநலம் காக்க! அரசு மருத்துவமனையில் புதிய பிரிவு துவக்கம்  வாரத்தில் இருநாட்கள் சிகிச்சை அளிக்கப்படும்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மன நலம் பாதுகாப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இங்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.

மனச்சிதைவு, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.என்ன பிரச்னை என்பதை உணர முடியாமல், பலரும் மன அழுத்தத்துடன் சிரமப்படுகின்றனர். மதிப்பெண் எடுக்க முடியாமலும்; கல்வி பயில முடியாமல் மாணவர்கள் திணறுவதுடன், வழி தவறி செல்வதும் தொடர்கிறது.

ஒரு சிலர், பிரச்னைகளை எதிர்கொள்ள மன தைரியம் இல்லாமல், தற்கொலைக்கு முயன்று வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். கர்ப்பிணி தாய்மார்களும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
மன நலம் பெற கவுன்சிலிங் பெற விரும்புபவர்கள், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அல்லது தனியார் மன நல டாக்டர்களை தேடிச் செல்லும் நிலையே உள்ளது.
இந்நிலையில், மனநலம் காக்கும் பிரிவு, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் துவங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது, ஏழு மாவட்டங்களில் இப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
அதில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் மனநலப்பிரிவு துவங்கப்பட்டது. இப்பிரிவுக்கு, மன நல மருத்துவர், மனோதத்துவ நிபுணர், சமூக ஆர்வலர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஒருவர் என நான்கு பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், வாரந்தோறும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிகிச்சை அளிக்கின்றனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட மன நல டாக்டர் கிருத்திகா கூறுகையில், ''பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், வாரத்தில் இரண்டு நாட்கள் சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்படும்.
இது மட்டுமின்றி, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், வால்பாறை, அன்னுார், மேட்டுப்பாளையம், சூலுார் அரசு மருத்துவமனைகளுக்கு, மாதம் ஒரு நாள் சென்று சிகிச்சை மற்றும்
கவுன்சிலிங் அளிக்கப்படும்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த பிரிவு துவங்கப்பட்டுள்ளது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும், சூழலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உணர வேண்டும். தங்களுக்குள் இருக்கும் பிரச்னை சாதாரணமானதாக இருந்தாலும், மனரீதியான பிரச்னை ஏற்படுத்தினால் தீர்வு காண்பது அவசியம்.

கல்லுாரிகள், பள்ளிகள், நிறுவனங்களில் மனநலம் குறித்த பயிற்சி, கவுன்சிலிங் அளிக்கப்படும். தேவைப்படுவோர் அரசு மருத்துவமனையை அணுகினால், பயிற்சிக்கான தேதிகளை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.அரசு மருத்துவமனையில் புதிய பிரிவு துவக்கம்வாரத்தில் இருநாட்கள் சிகிச்சை அளிக்கப்படும்
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement