Advertisement

ரூ.4.50 கோடிக்கு கால்நடை விற்பனை

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், நேற்று நடந்த சந்தையில், 4.50 கோடி ரூபாய்க்கு, கால்நடைகள் விற்பனையாயின.


ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை, நேற்று கூடியது. மொத்தம், ௪௦௦ பசுக்கள், ௪௦௦ எருமைகள், ௨௫௦ கன்றுகள் விற்பனைக்கு வந்தன. பசுக்கள், 16 முதல், 34 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. எருமைகள், 18 முதல், 38 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. கன்றுகள், ௨,௦௦௦ முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.


கர்நாடகா, ஆந்திரா, கேரளா, கோவா, மஹாராஷ்டிர மாநில வியாபாரிகள் வழக்கம் போல் வந்தனர். இதனால், பல வாரங்களாக இருந்த, தேக்கநிலை மாறி, 95 சதவீத கால்நடைகள், 3.50 கோடி ரூபாய்க்கு விற்றதாக, கால்நடை சந்தை மேலாளர் முருகன் கூறினார்.


இதேபோல, ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை நேற்று நடந்தது. மொத்தம், ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    யாரும் இந்த பக்கமே வரவில்லை. இது எதைக் காட்டுகிறது? இங்கே வரும் எவருமே விவசாயி/ தொழிலாளர் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement