Advertisement

மொபைல், சிம் கார்டு கைதியிடம் பறிமுதல்

பூந்தமல்லி:பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியிடம் இருந்து, மொபைல் போன், சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.அம்பத்துாரில், இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட, 18க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்கு அருகே, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இதனால், சிறை வளாகம் முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சிறை துணை கண்காணிப்பாளர் கோதண்டராமன் நேற்று, சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள, சூளைமேட்டைச் சேர்ந்த விஜய் தண்டபாணி, 42, என்பவனிடம் இருந்து, மொபைல், சிம்கார்டு மற்றும் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக, பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பரில், இதே சிறையில், கைதிகளிடம் இருந்து மொபைல் சார்ஜர், புளு டூத் ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கைதிகளிடம் தொடர்ந்து, மொபைல் பறிமுதல் செய்யப்பட்டு வருவது, சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement